லேபிள்கள்

வியாழன், 3 ஜூன், 2021

மகிழ்ச்சிகரமானவாழ்வு

நமது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும் சந்தோசமாகவும் இருக்க வேண்டுமென்று உலகில் உள்ள அனைவரும் அசைப்படுகிறோம். அதற்கான வழிகளைத் தேடுகிறோம் பணம் படைத்தவர்கள் அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள், அதிகாரம் படைத்தவர்கள் அதற்காக தங்களது பதவி, பட்டங்களை அனைத்தையும் செலவழிக்கவும் தயாராக உள்ளார்கள்.

ஆனாலும் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியில்லை என்பதை அறியமுடிகிறது இதற்கு காரணம் மகிழ்ச்சியைக்குறித்த அவர்களின் கண்ணோட்டம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிலர் பணத்தால் மகிழ்ச்சியைப்பெறலாம் என்று எண்ணுகிறார்கள். அந்த பணத்தைத்தேடி இருக்கும் சந்தோசத்தைக்கூட தொலைத்துவிடுகிறார்கள்.
வேறு சிலர் அதிகாரத்தால் செல்வாக்கால் மகிழ்ச்சியைப்பெறலாம் என்று எண்ணுகிறார்கள். அதற்காக காலத்தையும் பொருளாதாரத்தையும் பெருமளவு செலவழித்து வாழ்க்கையைத்தொலைத்து விடுகிறார்கள்.

இன்னும் சிலர் ஆரோக்கியம் தான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியம் என்று கூறி அதையே குறிக்கோளாகவைத்துள்ளார்கள்.

உண்மையில் மகிழ்ச்சி என்பது மனிதனின் உள்ளத்தோடும், ஆன்மாவோடும் தொடர்புடையதாகும். அதற்கும் மேற்கூறிய காரணங்களுக்கும் எந்தத்தொடர்புமில்லை எனவே நாம் பணமும்,பதவியும் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும்.

அல்லாஹ் கூறுகிறான், ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம். அன்றி (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். (அல்குர்ஆன் 16:97)

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். அறிவிப்பாளர்அபூ ஹுரைரா(ரலி) நூல் ஸஹீஹுல் புஹாரி 6446

செல்வமும் மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று தான் எனவே தான் அல்லாஹ் வாழ்க்கைத் தேவையின் ஒன்றாக செல்வத்தையும் வைத்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான், "கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையனிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும்பொழுதும், (மேய்ச்சலுக்காக) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவற்றில் உங்களுக்கு அழகுமிருக்கிறது. (அல்குர்ஆன் 16:5,6)

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால்) உங்களுடைய அலங்காரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும், (அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள், மேலும், பருகுங்கள், (ஆனால்) வீண் விரயமும் செய்யாதீர்கள்; ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான். (அல்குர்ஆன் 7:32)

ஸஅது பின் அபீ வகாஸ் رضِي الله عنْه அவர்கள் அறிவித்தார்கள் அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் கூறினர்கள்
நான்கு விஷயங்கள் மனிதனுக்கு மகிழ்ச்சியைத்தருவதாகும் நல்ல மனைவி,விசாலமான வீடு,நல்ல அண்டைவிட்டுக்கார்,நல்ல வாகனம் நான்கு விஷயங்கள் மனிதனின் மகிழ்ச்சியின்மைக்கு காரணமாகும் மோசமான அண்டைவிட்டுக்கார், தீய மனைவி, நெருக்கடியான வீடு, மோசமான வாகனம் என்றும் கூறினார்கள். நூல் ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 4032

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ளவற்றை அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் பட்டியலிட்டார்கள் இத்தகைய வாழ்க்கை யாருக்கு அமைகிறதோ அவர் தான் இவ்வுலகில் அனைத்து வளங்களையும் பெற்ற மிகவும் மகிழ்ச்சியான மனிதர் ஆவார்.

நிலையான மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் இஸ்லாம்

உலகில் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க மனிதனுக்கு வழிகாட்டும் மார்க்கமல்ல இஸ்லாம், மாறாக நிலையான நிரந்தரமான வாழ்க்கையாக உள்ள மறுமையின் மகிழ்ச்சிக்கும் வழிகாட்டக்கூடிய மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது.

ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம். அன்றி (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். (அல்குர்ஆன் 16:97)

மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்வின் இன்பம் வெகு சொற்பமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் 9:38)

இன்னும், "அல்லாஹ் உனக்குக் கொடுத்ததிலிருந்து (தர்மம் செய்து) மறுமை வீட்டைத்தேடிக்கொள், மேலும் இம்மையில் உன் பங்கை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தவாறு நீயும் உபகாரம் செய், பூமியில் நீ குழப்பத்தையும் தேடாதே! (ஏனென்றால்), குழப்பம் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் விரும்பமாட்டான்" (என்று அவனின் சமூகத்தார் கூறினார்). (அல்குர்ஆன் 28:77)

மகிழ்ச்சிக்கான காரணங்கள்

இம்மை, மறுமையின் மகிழ்ச்சியை அடைவதற்குரிய வழிகள்

1,நம்பிக்கையும் நற்செயல்களும்:
ஆணாயினும், பெண்ணாயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை (இம்மையில்) நல்ல வாழ்க்கையாக வாழச்செய்வோம். அன்றி (மறுமையிலோ) அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். 16:97

2,எதிர்காலத்தைக்குறித்த அச்சத்தை கை விட்டு நிகழ்காலத்தில் செய்யும் அமலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது:
அல்லாஹ்வின் தூதர்
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் கூறினார்கள் உனக்கு பயன் தரக்கூடிய வற்றில் நீ ஆற்வம் காட்டு,அல்லாஹ்விடம் உதவி தேடு இயாலாதவனாகி விடாதே உனக்கு எதாவது நேர்ந்து விட்டால் நான் இவ்வாறு இவ்வாறு செய்திருந்தால் என்று கூறாதே ஏனென்றால் இப்படியிருந்திருந்தால் என்று கூறுவது ஷைத்தானின் செயலுக்கு வழிவகுத்துவிடும். நூல்: ஸஹீஹ் முஸ்லிம்

3,அல்லாஹுவை அதிகம் நினைவுகூருவது:
அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன, (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவு கூர்வதால் இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கெர்ளவீர்களாக! 13:28

மனிதனின் மன நிறைவிற்கும் கவலையின்மைக்கும் முக்கிய காரணம் அல்லாஹுவை அதிகம் திக்ரு செய்வதாகும்.

4,அல்லாஹ்வின் தூதர் صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அவர்கள் கூறினார்கள்

வாழ்க்கை வசதிகளில் உங்களைவிட கீழ் நிலையில் உள்ளவர்களைப் பாருங்கள் உங்களைவிட மேல் நிலைகளில் உள்ளவர்களைப்பார்க்காதீர்கள் அது அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட்க்கொடையை அற்பமாக கருதாமல் இருக்க ஏற்றமானதாகும். நூல் ஸஹீஹ் முஸ்லிம்

நிலையில்லா உலகில் கிடைத்ததைக்கொண்டு போதுமாக்கிக்கொள்வோம். நிலையான மறுமையில் நாம் விரும்பும் அனைத்தையும் தர அல்லாஹ் தயாராக இருக்கிறான்.

http://www.islamkalvi.com/?p=124089


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது
www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

ஏ.சி வாங்கப் போறீங்களா? இந்த விஷயங்களை மறந்து விடாதீர்கள்!

உடலை சுட்டெரிக்கும் வகையில் வெயில் தாக்கம் எவ்வளவு இருந்தாலும் அதை சமாளிக்க நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் ஏ.சிதான். அதை நாம் சரியான ம...

Popular Posts