அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இந்த உலகத்தில் வாழ , ஒரு இருப்பிடம், உணவு, உடை , தண்ணீர் இவைகள் போதும்! இவைகளில் ரொம்ப முக்கியமானவை உணவும், தண்ணீரும் தான்! மற்ற இரண்டும் இல்லாவிட்டால் சிரமம் தான், ஆனால் சமாளித்து கொள்ளலாம்... ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவும், தண்ணீரும்தான் இந்த இரண்டும் இல்லை என்றால் , நிச்சயமாக மனிதன் உயிர் வாழமுடியாது!
இந்த உலகத்தில் பெரும்பாலும் மக்கள்கள் வறுமையிலும் , கஷ்டத்திலும் தான் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை! அந்த வறுமையை போக்க , கஷ்டத்தை நீக்க அந்த நாட்டின் ஆட்சியாளர் தான் பொறுப்பாளியாக இருக்கிறார் ! ஆனால், அங்கே என்ன நடக்கிறது ? சாமானிய மக்கள்களுக்கு நன்மையை நாடாமல், ஒரு சிலருக்காக மட்டும் நன்மையை நாடக்கூடிய ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் , ஆகையால் அங்கே ஒரு பக்கம் அநீதி நடக்கிறது. ஒரு நாட்டில் , அங்கே பல மதத்தினர்கள் இருந்தபோதிலும் , ஆட்சி செய்யக்கூடியவர்கள் எல்லோருக்கும் சமமாக , நேர்மையாக, சமத்துவமாக நடக்க வேண்டும், மாறாக நிச்சயமாக அங்கே நிறைய குழப்பங்கள், அநீதிகள் , அநியாயங்கள், நேர்மையன்றி ஆட்சி நடப்பதற்கான நிறைய சாத்தியங்கள் இருக்கிறது!
இன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்! அங்கே ஒரு சர்வாதிகாரம் ஆட்சி தான் என்பது பெரும்பாலும் மக்களுக்கு தெரியும், புரியும்! மக்களை பாதுகாக்கக்கூடிய ஒரு அரசு , இப்பொழுது அந்த அரசு சாகடித்துக்கொண்டு இருக்கிறது . மக்கள்கள் வாழ்வாதாரத்துக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்! இந்த கேடுகெட்ட அரசு , அவர்களை அப்படி ஆக்கிவிட்டார்கள்! சில அப்பாவி மக்கள் என்ன செய்வது ? எங்கே போவது ? என்று தெரியாமல் , அவர்கள் வீதியிலே உலாவருகிறார்கள்! அவர்களுக்கு உண்ண உணவு இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை . அகதிகளாக ஆக்கப்பட்டது போல் அவர்கள் சொந்த ஊருக்கு நடை பயணமாக பல கிலோ மீட்டர் தூரம் குழந்தைகளுடன் செல்வதை பார்க்கும்போது , கண்களிலிருந்து கண்ணீர் வருகிறது. நாம் ஒருவிதமான வலியை உணர்கிறோம்! நாம் அவர்களின் நிலையில் இருந்திருந்தால் , நாம் அவர்களைப்போல் மன உறுதியாக இருந்திருப்போமா என்று சொல்லமுடியாது! இந்த நிலைக்கு யார் காரணம் ? யார் பொறுப்பாளி ? உங்களுக்கு தெரியும் !
நம்மில் சிலர் வசதிகளுடன் வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் இப்பொழுது வீட்டில் முடங்கி இருப்பதை பார்க்கிறோம்! (அவர்கள் மட்டும் அல்ல, உலகமே அப்படிதான் இருக்கிறது) நான் என்ன சொல்ல வருகிறேன்... வசதியில் இருப்பவர்கள் , புலம்பிக்கொண்டு , சலித்துக்கொண்டு ஒருவிதமான மன உளைச்சலுடன் பொழுதை கழிப்பார்கள் . இந்த நிலையே அவர்களுக்கு இப்படி இருக்கிறது என்றால், மேலே கூறியுள்ளேனே , அவர்களை கொஞ்சம் இவர்கள் எண்ணி பார்க்க வேண்டும்! '' அவர்களைவிட அல்லாஹ் நம்மை நல்ல நிலைமையில் வாழ வைத்திருக்கிறான். அதற்காக நாம் அல்லாஹ்வுக்கு நிச்சயமாக நன்றி உள்ளவர்களாக மாறவேண்டும்! நமக்கு கீழே இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம் வரவேண்டும் என்பதற்காக நான் சொல்ல வருகிறேன்! இதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்! ஆட்சியாளர்களை நாம் எவ்வளவுதான் குறைக் கூறிக்கொண்டே இருக்கமுடியும். அவர்களை காரி துப்பினாலும் , அவர்கள் அதை துடைத்துக்கொண்டு போயிக்கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை என்ன செய்ய முடியும்?
ஒரு மனிதனுக்கு ரொம்ப முக்கியமான வாழ்வாதாரம் அதுவே நம் இந்திய தேசத்தில் அது கேள்வி குறியாக ஆகிவிட்டது???.
ஒருபோதும் மதங்கள் மனிதர்களை பக்குவப்படுத்தாது , சரியாக வழிகாட்டாது ! மதம் பிடித்த யானை போல் , மதம் வெறி பிடித்த மனிதர்கள் ஒருவொருக்கொருவர் அழித்து கொள்வார்கள்! இஸ்லாம் அது மதம் அல்ல அது ஒரு சிறந்த மார்க்கம் ! மனிதர்களுக்கு வழிகாட்டக்கூடிய மனிதர்களை புனிதர்களாக ஆக்கக்கூடிய மார்க்கம் தான் இஸ்லாம் மார்க்கம்!
அன்பான மாற்று மத சகோதரர்களே /சகோதர்களே! சிந்தியுங்கள்! உண்மை எது ஆராய்ச்சி செய்யுங்கள்!
திருமறை குரான் அது எல்லோருக்கும் பொதுமறை! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லோருக்கும் பொதுவான தூதர்! அவர்களின் வாழ்க்கை வரலாறை படியுங்கள்! அப்பொழுதுதான் உங்களுக்கு தெரியும், புரியும்!
சத்திய பாதை இஸ்லாம் .
http://islam-bdmhaja.blogspot.com/2020/03/blog-post_31.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக