தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை இருக்காது.
பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய்யை தேய்த்து குளித்து வரலாம். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது
வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
மருதாணி இலையை அரைத்து, அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து இந்த கலவையை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து பின்பு குளித்தால் பொடுகு மறையும்,
தேங்காய் எண்ணெய்யுடன் வேப்ப எண்ணெய்யும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக