லேபிள்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

வறட்டு இருமலை போக்கும் இயற்கைமருத்துவ குறிப்புகள்...!!


வறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம். இருமலை நிரந்தரமாக குணப்படுத்த சில இயற்கை மருத்துவத்தை பார்ப்போம்.
எலுமிச்சை: எலுமிச்சை சாற்றை மிதமான சூடுடன் கூடிய நீரில் கலந்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளது, சளி தொல்லை இருக்கும்போது உடலுக்கு வைட்டமின் சி மிகவும் அத்தியாவசியம்.
தூதுவளை: சளி, இருமலுக்கு தூதுவளை சிறந்த மருத்துவ உணவு. தூதுவளை இலைகளை காயவைத்து பொடியாக்கி வைத்து கொள்ளலாம். ஒரு ஸ்பூன் தூதுவளை  பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
புதினா: வறட்டு இருமலுக்கு நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ அல்லது சூப் செய்தோ சாப்பிடுவதால் வறட்டு இருமலில் இருந்து எளிதில் விடுபடலாம்.
திப்பிலி: திப்பிலியை பொடியாக்கி அதில் சிறிதளவு எடுத்து ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், சளி, வரட்டு இருமல் மற்றும் தொண்டை கமறல் குணமாகும்.
மிளகு, மஞ்சள் பால்: இளஞ்சூடான பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து குடித்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமாக போய்விடும்.  வறட்டு இருமலும் குறையும். இது இருமலுக்கு கைகொடுக்கும் வைத்தியம்.
சீரகம்: 10 கிராம் பொடி செய்த சீரகத்துடன் பொடி செய்த பனங்கற்கண்டை சேர்த்து இரண்டும் சம அளவில் கலந்து காலை, மாலை என இருவேளை சூடான நீரில்  கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் ஏற்படும்சின்ன சின்ன நோய்களை தீரக்க கூடிய சில எளிய மருத்துவக்குறிப்புகளை இங்கேபார்ப்போம்

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட ...

Popular Posts