லேபிள்கள்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

நரம்பை பலப்படுத்தும்இஞ்சி

"(இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்". (அல்குர்ஆன் - 76:17)
இஞ்சி, மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிக காற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ. மழைபொழியும் மலைப் பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது.
இஞ்சியின் மருத்துவக் குணங்களை அறிந்து, தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்னென்ன நோய் விலகும் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துக் காட்டியுள்ளன.


இஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது!
·                     நரம்பை பலப்படுத்தும் இஞ்சி
·                     இதயநோய் வராது
·                     தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படாது
·                     இதயத்தை பலப்படுத்தும்
·                     பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட காரணமான ரத்த கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.
இஞ்சியில் இருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகிய மருந்துப் பொருள்கள், உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியும் தரக்கூடியவை.

இஞ்சி, வலிப்பு நோயை குணப்படுத்தும் என புகழ் பெற்ற டென்மார்க் ஓடன்ஸ் பல்கலைக் கழகம் சமீபத்தில் தனது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது.
சமீபத்தில், இந்தப் பல்கலைக் கழக மருத்துவமனையில் 35 இதய நோயாளிகளுக்கு சோதனை ரீதியில் இஞ்சி மருந்து தினமும் கொடுக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் ஆச்சரியப்படும் வகையில் அந்த நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
காது நோய் ஏற்படாமல் தடுக்க இஞ்சிப் பொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என இந்தப் பல்கலைக் கழகம் ஏற்கெனவே நிரூபித்துள்ளது.
மயக்கம், தலைசுற்றல் நோய்களுக்காகக் கொடுக்கப்படும் ஆங்கில மருந்து 'டிரம்மைன்' ஆகும். இந்த மருந்தைவிட இஞ்சிப் பொடி நல்ல பலனைத் தருகிறது என பிர்காம் பல்கலைக்கழகம் 1982–ம் ஆண்டிலேயே கண்டுபிடித்தது.
இதயத்துக்கு இஞ்சி நல்லது என ஜப்பான் டாக்டர்கள் ஏற்கெனவே கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். இதயத்துடிப்பை குறைக்க விலை உயர்ந்த 'பீட்டா' ஆங்கில மருந்தை இப்போது பயன்படுத்துகின்றனர். அதைவிட இஞ்சி சிறந்த மருந்தாக உள்ளது.
இதயத்துக்கு ரத்தத்தை ஒழுங்காக அனுப்பப் பயன்படுத்தப்படும் 'டிஜிடாலிஸ்' மருந்தைப் போலவே, இஞ்சியும் ரத்தத்தை ஒழுங்காக இதயத்துக்கு அனுப்புகிறது என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள் சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
பக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும் ரத்த உறைதலைத் தடுக்க இஞ்சி மருந்தாக உள்ளது என கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரண காய்ச்சல் இருந்தாலும், இருமலுக்கும்கூட இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தலாம் என ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.
உணவில் நாம் தினமும் இஞ்சியை சேர்த்துக்கொண்டால், எந்த நோயும் அணுகாது. நீண்ட ஆயுள் வாழலாம். அவரவர் விருப்பப்படி இஞ்சியை பயன்படுத்திக்கொள்ள, பயனுள்ள சில மருத்துவ குறிப்புகள் இங்கே உங்களுக்காக...
இஞ்சியை பொடி செய்து, டீக்கு பதிலாக இஞ்சி டீகூட குடிக்கலாம் என வெளிநாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்போது இஞ்சியிலிருந்து சாறு, இஞ்சி சர்பத், லேகியம், இஞ்சி தைலம் ஆகிய மருந்துகள் செய்யப்படுகிறது.
பசியை உண்டாக்கும் இஞ்சிச் சாறு
இஞ்சியை மேல் தோல் நீக்கி அரைத்து, நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிச் சாறும். உணவு செரிமானம் ஆகாமல் ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு இஞ்சிச் சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றித் தடவி வர குணமாகும்.
இஞ்சிச் சாறும், வெங்காயச் சாறும் சம அளவு கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவற்றை நிறுத்தலாம்.
இருமல் குணமாகும்
இஞ்சிச் சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து, வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.
உடல் வலிமைக்கு இஞ்சி-தேன் ஒரு காயகற்பம்
இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊறவைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.
வயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி
இஞ்சிச் சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக்கொண்டு, தேவையானபோது 5 கிராம் எடுத்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி முதலியவை குணமடையும்.
உடல் நலம் காக்க இஞ்சிக் குடிநீர்
இஞ்சி, திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி), ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனப்பொடி ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் எல்லாவற்றிலும் வகைக்கு சமஎடை அளவு வாங்கி, அரைத்து கலந்து வைத்துக்கொள்ளவும். வேண்டும்போது, ஒரு ஸ்பூன் பொடியை நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சவும். பின்பு காலை - மதியம் - மாலை 50 மில்லி அளவு வேளைக்கு ஒருமுறை சாப்பிட பித்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும்.
வாத நோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய்
இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான் சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மில்லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு, வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர, வாத நோய் குணமாகும்.
தலைவலிக்கு இஞ்சி
மூக்கில், ஓரிரு சொட்டுகள் இஞ்சிச் சாறு விட்டால் தலைவலி குணமாகிவிடும்.
பல்வலிக்கு இஞ்சி
இஞ்சித் துண்டை பல்வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்த்தால் வலி மட்டுப்படும்.
தொந்தி குறைய இஞ்சிச் சாறும் தேனும்
வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதைக் குறைத்தால், இதய நோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு, தொந்தி ஒரு முக்கியக் காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதைப் பிரச்னை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாகக் கருதப்படும் தொந்தியைக் குறைக்க, இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
செய்முறை
500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயிட்டு எரிக்கவும். சுண்டியதும் இறக்கிவிடவும். சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு நிமிடம் எரித்து இறக்கி பத்திரத்தப்படுத்தவும்.
சாப்பிடும் முறை
காலை சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக் கரண்டி அளவு 40 நாள்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொந்தி குறையும். அத்துடன் உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியம். பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது.
குறிப்பு
சாப்பிடும் சமயம், சிலருக்கு உஷ்ணமாக வயிற்றுப்போக்கு ஆகலாம். அப்படிப்பட்டவர்கள், இஞ்சி மருந்து அளவை மிகக் குறைவாக சாப்பிடுவது நல்லது.
மஞ்சள் காமாலை, ஆஸ்துமாவுக்கு இஞ்சி ஜூஸ்
நான்கு டீஸ்பூன் அளவுள்ள இஞ்சிச் சாறுடன் சிறிது உப்பு மற்றும் சில துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் தண்ணீர் சேர்த்தால் இஞ்சி ஜூஸ் ரெடி. இதைக் குடித்தால், மஞ்சள் காமாலை, ஆஸ்துமா, சளி ஆகவை குணமாகும்.
புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு
தொடர்ந்து, மேற்சொன்ன இஞ்சி ஜூஸை தினமும் அருந்துபவர்களுக்கு, நாக்கு மற்றும் தொண்டையில் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் பலத்திற்கு இஞ்சி லேகியம்
தேவையான பொருள்கள்
இஞ்சிச் சாறு 1 லிட்டர், மிளகு 25 கிராம், பூண்டு 25 கிராம், வெந்தயம் 25 கிராம், அதிமதுரம் 25 கிராம், ஏல அரிசி 25 கிராம், ஓமம் 25 கிராம், சர்க்கரை 1175 கிராம், நெய் 300 கிராம்.
இஞ்சியைத் தவிர எல்லாவற்றையும் நாட்டு மருந்துக் கடையில் வாங்கிக்கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி இடித்து பிழிந்து வடிகட்டி மண்சட்டியில் மூடி வைத்துக்கொள்ளவும். வெள்ளைப் பூண்டை தோல் உரித்து, பசும்பாலில் அவித்து பின்பு அரைத்துக்கொள்ளவும். மிளகு, ஜீரகம், ஓமம் இவற்றை இடித்து மண்சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து இடித்து, சல்லடையில் சலித்து வைத்துக்கொள்ளவும்.
வெந்தயத்தை நீரில் கழுவி வெயிலில் காயவைத்து பொடியாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை பொடியாக்கிக்கொள்ளவும். சர்க்கரையை 250 மில்லி பசும்பாலை ஊற்றி சட்டியில் வைத்து காய்ச்சவும். இளகியவுடன் இஞ்சிச் சாற்றை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு, மற்ற மருந்துப் பொருள்களைப் போட்டு, இளகல் பதத்தில் இறக்கி, நெய் ஊற்றிக் கிளறி வேறு பாத்திரத்தில் வைக்கவும்.
மருந்தின் காரம் அதிகமாக இருந்தால், மொத்த மருந்தில் மேலும் 150 மில்லி நெய் சேர்த்துக்கொள்ளவும்.
சாப்பிடும் முறை
காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட, வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் அகலும். உடலும் பலம் பெறும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 26 நவம்பர், 2020

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுங்கள்!

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் என்பது. பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், தேவையான நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும். அதைத் தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும்; தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும்.

மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்ற சந்தேகமும் ஏற்படலாம். உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை. சிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால் சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான். மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட அந்தப் பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடலாம்.


பிறந்த குழந்தைக்கு முதல் உணவாக டாக்டர்கள் பரிந்துரை செய்வது அதன் தாய்ப்பாலைத்தான். அதில் இல்லாத சத்துக்களே கிடையாது. தாயிடம் இருந்து முதன் முதலாக கிடைக்கும் பாலை சீம்பால் என்கிறார்கள். பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், எளிதில் அந்தக் குழந்தையை எந்த நோயும் தாக்காது.

நீண்ட நாட்களுக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று ஆராய்ச்சிகளே நிரூபித்துள்ளன. இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது. ஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும் போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது. இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. இவை கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால், இன்றைய அவசர உலகில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே நேரம் இல்லை. அதனால் விரைவிலேயே புட்டிப்பாலுக்கு தாவி விடுகிறார்கள். அத்துடன், தாய்ப்பால் சுரப்பும் அவர்களிடம் குறைந்து போய் விடுகிறது. அவர்கள், மனதை அமைதியாக வைத்திருந்தால் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் சுரப்பில் பிரச்சினையே இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தாய்ப்பால் சீராக சுரக்க வேண்டும் என்றால், அந்த தாய்க்கு முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும். அதன்பின், குழந்தையானது மார்புக் காம்பை சுவைக்கும் போது புரோலாக்டின், ஆக்ஸிடோஸின் ஆகிய இரு ஹார்மோன்கள் அவர்களது உடலில் சுரக்கின்றன. புரோலாக்டின் பால் சுரக்க உதவுகிறது. இதே போல், ஆக்ஸிடோஸின் பால் சுரப்பித் திசுக்களில் இருந்து பாலை வெளியில் கொண்டு வருவதற்கு உதவுகிறது.
பிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதைத் தவறாக எண்ணக் கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்டத் தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர் போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும். வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற அவசரம் - பதட்டம், மன நெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே... உங்கள் மனதை எப்போதும் ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள்.

மேலும், ஒவ்வொரு தாய்மார்களும் தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு சில டிப்ஸ்:

1. தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

2. குழந்தையானது மார்பக காம்பை நன்றாக சப்பிப் பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பைத் தனது வாயால் சரியாகப் பற்றி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

3. குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பிப் பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.

4. தாய்ப்பால் குடித்த குழந்தைக்குத் தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக் கூடாது.

5. குழந்தையைப் படுக்க வைக்கும் போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக் கொள்ள வேண்டும்.

- நெல்லை விவேகநந்தா.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 23 நவம்பர், 2020

பிரா - அறிய வேண்டிய உண்மைகள்


பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெருகூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள், அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்பகத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்பகத்தை தாங்கி நிறுத்துவது, முன்னழகை இன்னும் கவர்ச்சிக்கரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டதுதானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலைதான் உள்ளது. ஆனால், திருமணம் ஆகிவிட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறிவிடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம்தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.

அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?



- இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.

முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...

டி-சர்ட் பிரா
இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? - இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.

டீன்-ஏஜ் பிரா
டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.

புல் போர்ட் பிரா
வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.

நாவல்டி பிரா
திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா
விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.

மெட்டர்னிட்டி பிரா
கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.

நர்சிங் பிரா
கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.

கன்வர்டபுள் பிரா
பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.

இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.

அடுத்ததாக, சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக்க உதவும் பிராக்கள்...

மினி மைஸர்
இவ்ளோ பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.

பேடட் பிரா
அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்... என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.

புஷ் அப் பிரா
சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.

அண்டர் ஒயர் பிரா
இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.

கியூட் வெட்டிங் பிரா
மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.

மெசக்டமி பிரா
கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.

இனி, பிரா தொடர்பான சில சந்தேகங்களும், அதற்கான பதில்களும்...
கேள்வி:
 அணிந்து வருவது தவறான பிரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

பதில்:
 உங்கள் உடலில் பிராவின் ஸ்ட்ராப் பதிந்த இடங்கள் சிவந்து போய் காணப்பட்டால் நீங்கள் அணிந்திருக்கும் பிரா இறுக்கமானது, அதாவது தவறான சைஸ் என்பதை தெரிந்து கொள்ளலாம். முதுகு பக்கம் உள்ள ஸ்ட்ராப் ஒரே இடத்தில் இருக்காமல் மேலே ஏறிக்கொண்டு வந்தாலும் நீங்கள் சரியான பிராவை அணியவில்லை என்று அர்த்தம். மார்பகத்தின் அளவைவிட, பிராவின் கப் சைஸ் சிறிதாக இருந்தால் மார்பகம் ஒன்றின் மேல் ஒன்று இருப்பது போல் இரண்டாகத் தோன்றும். அதனால், இதுவும் தவறான சைஸ் பிராதான்.

கேள்வி:
 மார்பகங்களின் கீழே கறுப்பாக உள்ளது. ஏன் இப்படி ஏற்படுகிறது?

பதில்:
 தவறான சைஸ் பிராவை அணிந்தால் இந்த பிரச்சினை வரும். அணியும் பிராவின் சைஸை மாற்றுவதுதான் இதற்கு சரியான தீர்வு.

கேள்வி:
 கொழுக்மொழுக் என்று உள்ள பெண்கள் (36 சைஸ் உள்ளவர்கள்) எலாஸ்டி' ஸ்ட்ராப் வைத்த பிரா அணியலாமா?

பதில்:
 நிச்சயம் அணியக் கூடாது. உங்களது மார்பகம் இன்னும் தளர்வடையவே இது வழி வகுக்கும்.
கேள்வி: முதுகுவலி வர பிராவும் காரணமாக இருக்கலாமா?

பதில்:
 கண்டிப்பாக. தோள் பட்டை வலி, முதுகு வலி வந்தால், உங்கள் பிரா சைஸ் சரியானதுதானா என்பதை உறுதி செய்யுங்கள். சரியில்லை என்றால், சரியானதை தேர்வு செய்யுங்கள். இல்லையென்றால், டாக்டரிடம் செல்லுங்கள்.

கேள்வி:
 கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிரா அணியலாமா?

பதில்:
 இது தவறான அணுகுமுறை. கறுப்பு ஆடைக்கு ஒயிட் பிராவும், வெள்ளை நிற ஆடைக்கு கறுப்பு நிற பிராவும் அணிந்தால், அந்த பிரா பளிச்சென்று பிறருக்கு தெரியும். அதனால், பிளாக், ஒயிட் பிராக்களுடன் ஸ்கின் கலர் பிராவையும் வாங்கி வைத்து, அணியும் ஆடைக்கு ஏற்ப மாற்றி மாற்றி அணிந்து அழகு பாருங்கள். புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு என்றே கவர்ச்சியான விதவிதமான கலர்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவர்கள் அதை அணிந்து என்ஜாய் பண்ணலாம். இளம்பெண்கள் விரும்பினால், இந்த வகை பலர் பிராக்களை அணிந்து அழக பார்க்கலாம்.

கேள்வி:
 இரவில் பிரா இல்லாமல் தூங்கலாமா?

பதில்:
 பெரும்பாலான பெண்களுக்கு இந்த சந்தேகம் உள்ளது. இரவில் பிரா அணியலாமா? வேண்டாமா? என்பது உங்கள் சவுகரியத்தைப் பொறுத்ததுதான். 34 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவுகளில் மார்பகம் கொண்ட பெண்களுக்கு, கனமான மார்பகத்தால் அவை தளர்ந்துபோய்தான் இருக்கும். இவர்கள் பிராவுடன் உறங்குவதே நல்லது. அதை விட்டுவிட்டு, பிரா இன்றி உறங்கினால் மார்பகம் இன்னும் தளர்ந்து போய்விடும். சில பெண்கள், பகல் முழுவதும் பிரா அணிந்திருப்பதால், இரவில் அதை கழற்றி விடலாமே என்று எண்ணுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வேண்டுமானால் பிராவை கழற்றி வைத்துவிடலாம். சிறிய மார்பகம் உள்ளவர்கள் இரவில் பிரா அணிய வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அணிந்தாலும் பிரச்சினை இல்லை.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts