லேபிள்கள்

வியாழன், 16 ஏப்ரல், 2020

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா...?

காலை உணவு எப்போதும் ஆரோக்கியமும், ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருக்கவேண்டும். காலை நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது  உடலுக்கு மிகவும் நல்லது.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதில் அமிலத்தன்மை இருப்பதால் குடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். காலை நேரத்தில் ஏதேனும் உணவை சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவதே நல்லது.  
 இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சோர்வு, மலச்சிக்கல், மன அழுத்தம், நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குகிறது. வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹீமோக்ளோபின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்குகிறது.  
வாழைப்பழத்தில் பொட்டாஷியம், மக்னீஷியம், இரும்புச்சத்து, ட்ரிப்டோபான், வைட்டமின் பி6, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள்  அதிகமாக இருக்கிறது.  
25 சதவிகிதம் சர்க்கரையும், 89 கலோரிகளும் உள்ளது. வாழைப்பழத்தில் சர்க்கரை இருப்பதால் உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கிறது. ட்ரை ஃப்ரூட்ஸ், ஆப்பிள் மற்றும் மற்ற பழங்களுடன் வாழைப்பழத்தை சாப்பிடலாம். மக்னீஷியம் மற்றும் கால்சியம் இதய ஆரோக்கியத்தை  பாதுகாக்கிறது.
  பொதுவாகவே, வெறும் வயிற்றில் எந்த பழங்களையும் சாப்பிடுவது நல்லதல்லஓட்ஸ், வாழைப்பழம், நட் பட்டர் மற்றும் மேப்பிள் சிரப் சேர்த்து சாப்பிடலாம். இதனை காலை உணவாக சாப்பிட ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்
 பெர்ரீஸ், வாழைப்பழம் இரண்டையும் சிறு துண்டுகளாக வெட்டி, ஸ்கிம்டு மில்க் உடன் சேர்த்து சாப்பிடலாம். வாழைப்பழம், நட் மில்க், கோகோ பௌடர் ஆகியவை சேர்த்து க்ரீமியான ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம். இது உங்களை நிறைவாக வைத்திருக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இறப்புக்கு பின்னர்மனிதர்கள் கண் தானம் அளிப்பது போன்று ரத்த தானம் அளிக்க இயலாலதது ஏன்?

மனித உடலிலுள்ள திசுக்களின் இறப்பு , நீக்கவியலாத மாற்றங்களைத் தோற்றுவித்து விடுகிறது. இறப்புக்...

Popular Posts