லேபிள்கள்

செவ்வாய், 3 மார்ச், 2020

சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் !! ஒரு தவகல்..

1.)தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும்.
எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது.
இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில்
சாப்பிடவேண்டும்.
2.)வாழைப்பழத்தைத் தயிர், மோருடன் கலந்து
சாப்பிடக்கூடாது. வாழைப்பழம்
சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது.
3.)பழங்களைத் தனியேதான் சாப்பிடவேண்டும்.
சாப்பாட்டுடன் சேர்ந்து
சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
4.வெண்ணெயுடன்
காய்கறிகளைச் சேர்த்துச்
சாப்பிடக்கூடாது.
5.) மீன், கருவாடு சாப்பிட்ட உடன் பால், தயிர் சாப்பிடக்கூடாது.
அவ்வாறு மீறி உண்டால் "வெண் மேகம்" போன்ற நோய்கள் வர வாய்ப்பு
உள்ளது.
6.)உடல் மெலிந்தவர்கள், புழுங்கலரிசிசாதம் சாப்பிட வேண்டும்.
7.)உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு
உண்பது நல்லது.
8.)ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய்,முள்ளங்கி ஆகியவற்றைச்
சாப்பிடக்கூடாது.
9.)மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிககாரம், மாமிச உணவு
ஆகியவற்றை உண்ணக்கூடாது.
10.)நெய்யை வெண்கலப்
பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக்கூடாது.
11.)காலையில் வெறும் வயிற்றில் காப்பி, டீ குடிக்கக்கூடாது.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, டீ போன்றவைகளைக்
குடிக்கலாம்.
12.)அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய்,
ஊறுகாய்ஆகியவற்றைச்சேர்த்துக்கொள்ளக்கூடாது.
13.)பெண்கள் வீட்டிற்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள்,அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச்சேர்த்து கொள்ளக்கூடாது.
14.)தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய்,புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு,அதிக காரம், அதிக புளிப்பு,கொத்தவரங்காய், பீன்ஸ்
ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.
15.)கோதுமையை நல்லெண்ணெயுடன்
சமைத்துச் சாப்பிடக்கூடாது.

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.
2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.
3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.
4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.
5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.
6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும். 7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
7. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.
8. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். 10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
9. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
சேற்றுப் புண்:
இது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும். இது ஒரு வகையான பங்கஸ் தொற்று.
*அரைக்கப்பட்ட மருதாணி இலையை தொடர்ந்து இந்த இடங்களில் பூசி வர இது குறையும்.
*அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூளை இட்டு வர, இது குறையும்.
*அல்லது, சிறிதளவு வேப்பெண்ணெயை காய்ச்சி சேற்று புண்ணில் தடவி வர சேற்று புண் குறையும்.
· ஊமத்தன் இலைச்சாறில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலம், குப்பைமேனி பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை கலந்து சேற்றுப்புண் பாதிக்கப்பட்ட இடத்தில் போட வேண்டும். இதனை சேற்றுப்புண் பாதிக்காமல் தற்காப்புக்காகவும் பயன்படுத்தலாம்.
*அல்லது, இதற்கு ஆங்கில மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் இந்த கிரீம்களை வாங்கியும் தடவலாம். Clotrimazole, Imidazole, Miconazole, Econazole, Terbinafine
1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. தொண்டை கரகரப்பு சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்….
ஏலக்காயில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
சியே ஏற்படுவதில்லை, சாப்பிட ‌‌பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், ‌தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், சி எடுக்கும். ‌ஜீரண உறுப்புள் சீராக இயங்கும்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், ளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பி‌‌ட்டாலே, குத்திரும்பல், தொடர் இருல் குறையும்.
வா‌‌ய் துர்நாற்றம் ஏ‌‌ற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிச்சனை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.
சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள் !! ஒரு தவகல்..


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts