லேபிள்கள்

திங்கள், 17 பிப்ரவரி, 2020

முகத்தில் உள்ள அழுக்களை நீக்கி பொலிவாக்கும் அழகு குறிப்புகள்.:

அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு சூப்பரான அழகு பராமரிப்பு பொருள் என்றால், அது தேன் தான். ஏனெனில் தேனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமம் நன்கு அழகாக மாறும். வேண்டுமெனில், தேனுடன் சிறிது தயிர் மற்றும் சந்தனப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் ஜொலிக்கும்.
வேப்பிலையை அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பப்பாளியைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்துளைகள் அடைக்கப்பட்டு பருக்கள் வராமல் தடுக்கும். அதற்கு பப்பாளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பால் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். அதற்கு பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், முகம் பொலிவோடு காணப்படும்.
தக்காளியில் லைகோபைன் என்னும் சருமத்தைப் பாதுகாக்கும் பொருள் உள்ளது. எனவே தக்காளியைக் கொண்டு, தினமும் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts