லேபிள்கள்

செவ்வாய், 26 நவம்பர், 2019

இதுவரை தெரிந்திராத வெள்ளரியின் உயரிய குணங்களை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

வெயிலுக்கு இதமான வெள்ளரியில் அதிக நன்மைகள் உள்ளன. வைட்டமின் பி சத்துள்ள இந்த வெள்ளரியில் நீர்சத்து அதிகம் உள்ளது.

100 கிராம் வெள்ளரியை அப்படியே சாப்பிட்டால் நமக்கு,
கார்போஹைடிரேட் – 3.63 கிராம்
சர்க்கரை – 1.67 கிராம்
நார்ச்சத்து – 0.5 கிராம்
கொழுப்புச்சத்து – 0.11 கிராம்
புரோட்டின் – .65 ராம்
விட்டமின் பி1 – 0.027 மில்லி கிராம்
விட்டமின் பி2 – 0.033 மில்லி கிராம்
விட்டமின் பி3 – 0.098 மில்லி கிராம்
விட்டமின் பி5 – 0.259 மில்லி கிராம்
விட்டமின் பி6- 0.040 மில்லி கிராம்
விட்டமின் இ – 2.8 மில்லி கிராம்
கால்சியம் – 16 மில்லி கிராம்
இரும்புசத்து – 0.28 மில்லி கிராம்
மெக்னீசியம் – 13 மில்லி கிராம்
பாஸ்பரஸ் – 24 மில்லி கிராம்
பொட்டாசியம் – 147 மில்லி கிராம்
சிங்க் 0.20 மில்லி கிராம் போன்ற சத்துக்கள் சத்தமின்றி வந்து சேரும்..
வெள்ளரியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரஷர் சமநிலைப்படும். நெஞ்சக எரிச்சல், வயிற்று எரிச்சல், அல்சர், வாயுத்தொல்லைகளும் குணமடை யும். மேலும் வெள்ளரி, கேரட் கலந்த ஜூ�ஸ குடித்து வந்தால் வாத சம்பந்தமான நோய்கள் குணமடையும். கண்களைச் சுற்றி வெள்ளரி துண்டுகளை வைப்பதன் மூலம் கண் எரிச்சல் மாறுவதுடன் வீக்கமும் குணமடையும்.
உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. கண் எரிச்சலில் இருந்து நம்மை காக்கிறது. வெள்ளரியை சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும். கேன்சர் வராமல் தடுக்கிறது. தலைவலியில் இருந்து காக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை வெள்ளரிக்கு உண்டு. தோல் மற்றும் முடியை பாதுகாக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது வெள்ளரி. இதுபோன்ற ஏராளமான நன்மைகள் கொண்ட வெள்ளரியை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 23 நவம்பர், 2019

பல் # என்றதும், பல்லை புடுங்கலாமா?


சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா? ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.
$# பல் # சொத்தை பற்றி யோகா ஆசிரியர் சுப்ரமணியம் கூறுகிறார்.
1. பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.

2. மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.
3. காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.
4. பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும்.
5. அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.
6. ப‌ல் தே‌ய்‌ப்பது ம‌ட்டு‌ம் மு‌க்‌கியம‌ல்ல.. வாயை ந‌ன்கு கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இ‌ர‌வி‌ல் படு‌க்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு உ‌ப்பு‌த் த‌‌ண்‌ணீ‌ரா‌ல் வா‌யை கொ‌ப்ப‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.
7. ஈறு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌டாம‌ல் இரு‌க்க, ஈறுகளு‌க்கு ந‌ல்ல ர‌த்த ஓ‌ட்ட‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த‌ப் பகு‌‌தி‌க்கு‌ம் ர‌த்த ஓ‌ட்ட‌ம் குறையு‌ம் போதுதா‌ன் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌கிறது. கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்களை ந‌ன்கு கடி‌த்து மெ‌ன்று சா‌ப்‌பிடுவது ஈறு‌ப்பகு‌திகளு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.
8. அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வத‌ற்கு‌க் கூட சொ‌த்தை‌ப் ப‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில அறுவை ‌சி‌‌கி‌ச்சைகளை செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். சொ‌‌த்தை‌ப் ப‌ல்லை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு‌‌த்தா‌ன் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வா‌ர்க‌ள். ‌நீ‌‌ரி‌ழிவு என‌ப்படு‌ம் ச‌ர்‌க்கரை ‌வியா‌தி‌க்கு இரு‌க்கு‌ம் அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் சொ‌த்தை‌ப் ப‌ல்லு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.
9. சா‌ப்‌பிடு‌ம் போது ந‌ன்கு ‌மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் உண‌வி‌ல் அ‌திகள‌வி‌ல் உ‌மி‌‌ழ்‌நீ‌ர் சே‌ர்‌‌ந்து உணவு செ‌ரிமான‌த்‌‌தி‌ற்கு உத‌வு‌கிறது. அதே‌ப்போல சா‌ப்‌பி‌ட்டது‌ம் வாயை ந‌ல்ல த‌ண்‌ணீ‌ரி‌ல் கொ‌ப்ப‌ளி‌த்து அ‌ந்த ‌நீரை து‌ப்‌பி‌விட‌க் கூடாது. முழு‌ங்‌கி‌விட வே‌ண்டு‌ம். இதுவு‌ம் செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.
10. அ‌ந்த கால‌த்‌தி‌ல் சா‌ப்‌பி‌ட்டு முடி‌ந்தது‌ம் வெ‌ற்‌றிலை பா‌க்கு போடுவா‌ர்க‌ள். வெ‌ற்‌றிலை‌க்கு செ‌ரிமான‌த் ‌திறனு‌ம், ச‌ளியை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தியு‌ம் உ‌ள்ளது. வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு‌ப் போ‌ட்டா‌ல் அ‌ந்த சாறையு‌ம் து‌ப்‌பி‌விட‌க் கூடாது.
11. தா‌ய், த‌ந்தைய‌ரி‌ல் இருவரு‌க்கோ அ‌ல்லது யாரேனு‌ம் ஒருவரு‌க்கோ ‌ப‌ல் சொ‌‌த்தை இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளை‌க்கு‌ம் ப‌ல் சொ‌த்தை க‌ண்டி‌ப்பாக வரு‌ம். அதனை த‌வி‌ர்‌க்க முடியாது. அ‌ப்பாவை ‌விட, அ‌ம்மா‌வி‌ற்கு ப‌ல் சொ‌த்தை இரு‌ந்தா‌ல் குழ‌ந்தை‌க்கு வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.
12. ப‌ல்சொ‌த்தை‌க்கு ச‌ர்வா‌ங்காசன‌ம், ‌சிரசாசன‌ம் செ‌ய்தா‌ல் ‌பி‌ர‌ச்‌சினை குறையு‌ம். ‌சிரசாசன‌ம் செ‌ய்யு‌ம் போது ப‌ல் சொ‌த்தை மாறுவது க‌ண்கூடாக‌த் தெ‌ரியு‌ம். பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது எ‌ன்பா‌ர்க‌ள். ‌கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.
13. த‌ற்போது சொ‌த்தை‌ப் ப‌ற்க‌‌ளி‌ன் வே‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து சொ‌த்தையை ச‌ரி செ‌ய்யு‌ம் முறை வ‌ந்து‌ள்ளது. அ‌தி‌ல்லாம‌ல் ஒரு ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துவது‌ம் ந‌ல்லது. ஏ‌ன் எ‌னி‌ல் ‌கீ‌ழ்‌ப்ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதனா‌ல் மே‌ல் ப‌ல் இற‌ங்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்கவே செ‌‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்த‌ப்படு‌கிறது.
14. ப‌ற்களு‌‌க்கு ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிகளை அதாவது கேர‌ட், வெ‌ள்‌ள‌ரி‌க்கா‌ய் போ‌ன்‌ற‌வ‌ற்றை‌க் கடி‌த்து மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி ‌கிடை‌க்கு‌ம்.
15. ஆ‌‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் ப‌ற்‌றி:
ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன். வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.
பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும். பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும். தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும் என்கிறார் பல் டாக்டர் கைலின்.
சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.
பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது பல் சொத்தை வாயில் தொந்தரவை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ள லாம். வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடன் கண்டறிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயிருடன் காப்பாற்றி விட முடியும். இந்த வேர் சிகிச்சையின் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம். சிறு வயது குழந்தைகளுக்கு கடைவாய்ப்பல் சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல் 12 வயது வரை அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கும் வேர் சிகிச்சை உள்ளது.
பொதுவாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் ஏற்கனவே உடலில் உள்ளவர்களுக்கும் அதற்கான அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் வேர் சிகிச்சை செய்யப்படும். வேர் சிகிச்சையின் பின்னர் பல்லில் வலி மற்றும் சேதம் எதுவும் இன்றி நார்மலான பல் போலவே பயன்படுத்தலாம். இதே போல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும்.
பாதுகாப்பு முறை: சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும். மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தேர்வு செய்வதும் அவசியம். பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும். பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும். கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும். -ஸ்ரீதேவி
பாலக்கீரை சூப்: ஒரு கட்டு பாலக்கீரை, பெரிய வெங்காயம்- 1, தக்காளி- 1, பூண்டு-2 ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு சீரகம், மிளகு அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு தாளித்து தக்காளி, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, சீரகம் – மிளகுத்தூள் சேர்க்கவும். இத்துடன் கீரை, மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் நேரத்திற்கு வேக வைத்து, பின் கடைந்து சூப்பாக அருந்தலாம். இதில் வைட்டமின், மினரல் சத்துகள் உள்ளன.
ரெசிபி
வெண்டை பிரை: வெங்காயம், தக்காளி, ஒரு டேபிள் ஸ்பூன் பூண் டுத் துருவல் ஆகியவற்றை எண் ணெயில் வதக்கி மசித்துக் கொள் ளவும். இத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பேஸ்ட் போல பிசைந்து, 10 வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கி உள்ளே ஸ்டப் செய்யவும். தோசை கல்லில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் வெண்டைக்காய் பிரை செய்யலாம். இதில் வைட்டமின் சி சத்து உள்ளது.
காலிபிளவர் கட்லட்: ஒரு காலிபிளவர் பூ கட் செய்து உப்புத் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்யவும். அரை கப் முட்டைக்கோசை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, கரம்மசாலாத் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி உருண்டை பிடித்துக் கொள்ளவும். கான்பிளவர் மாவு, ரொட்டித்தூள் ஆகியவற்றில் உருட்டி தட்டி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும். இந்த கட்லட்டில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.
டயட்
பொதுவாக 30 வயதுக்கு மேல் பல காரணங் களால் பல் பாதிப்பு அதிகரிக்கிறது. மேலும் சிறு வயது முதல் கால்சியம், அயோடின் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக் குறைபாட்டினால் பற்கள் விரைவில் வலுவிழக்கின்றன. இவற்றை தடுக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின்-சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி , எலுமிச்சை, பப்பாளி, திராட்சை இவ ற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, மீன், கீரை வகைகள், முட்டைக்கோஸ், காளிபிளவர், அடிக்கடி சேர்க்கவும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இனிப்பு, உப்பு, காரம் குறைத்து கொள்ளவும். சூடாகவும், காரமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். அப்படி சாப்பிட நேர்ந்தால் உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். இனிப்பு சாப்பிட்ட பின் கண்டிப்பாக பிரஷ் செய்யவும். வயதாகும் போது எதிர்ப்பு சக்தி குறைபாட்டின் காரணமாகவே பல் தேய்மானம் மற்றும் பல் இழப்புகள் ஏற்படும். பல்லை சுத்தமாகப் பராமரித்தல், சத்தான உணவு ஆகியவையே பல் ஆரோக்யத்தை பாதுகாக்க உதவும், என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
* பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப் புகள் குறையும்.
* ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
* நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.
* கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.
* கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.
* கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 21 நவம்பர், 2019

இரவு நேரங்களில் உண்ண வேண்டியவை உண்ண கூடாதவை !!

இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், குறைவான அளவில், எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதனால் நன்கு தூக்கம் வரும். தினமும் இரவில் எந்தெந்த உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைத் தவிர்க்க வேண்டும், எந்தெந்த உணவுகளைக் குறைவாகச் சாப்பிடவேண்டும்? தெரிந்துகொள்வோமா..?
இட்லி, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற, எளிதில் செரிமானமாகக்கூடிய இரவு உணவு. குறிப்பாக, இரவுநேரப் பேருந்து, ரயில் பயணங்களின்போது வயிற்றில் மந்தத்தன்மையை ஏற்படுத்தாது.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் கோதுமை ரவை உப்புமா, சப்பாத்தி, கோதுமைக்கஞ்சி உள்ளிட்ட உணவுகளைச் சாப்பிடலாம். கொழுப்பை உண்டாக்கும் வெற்று கலோரிகள் இல்லாதவை. கோதுமை உணவுகளை 7.30 மணிக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது.
பருப்பு வகைகள் அதிகப் புரதம் மற்றும் நார்ச்சத்து உடைய உணவுகள் இவை. பருப்பு, கொண்டைக்கடலை சேர்த்த உணவுகளை எண்ணெய் அதிகம் சேர்க்காத சப்பாத்தியோடு சேர்த்துச் சாப்பிடலாம். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்; செரிமானம் எளிதாகும்; மலச்சிக்கல் நீங்கும்.
ராகி தோசை, கம்பு, அடை, கம்மஞ்சோறு, கேழ்வரகுக் கஞ்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம். இவற்றில் கெட்ட கொலஸ்ட்ரால், கொழுப்பு இல்லை.
கொழுப்பு அதிகம் இல்லாத பசும்பால் அருந்தலாம். உடலுக்கு கால்சியம் சத்து கிடைக்கும். அதிகக் கொழுப்பு நிறைந்த எருமைப்பாலைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் நீங்கும். உணவு சாப்பிட்ட உடனே பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். சாப்பிட்டு ஒரு மணி நேர இடைவெளிக்குப் பின்னர், வாழைப்பழம் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இரவு உணவாக, அளவோடு ஃபுரூட்சாலட் சாப்பிடலாம்.
தேனை, பாலில் கலந்து குடிக்கலாம். இது நன்கு தூக்கம் வர உதவும்.
சாப்பிட கூடாதவை :
சிக்கன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளில் அதிகப் புரதம் உள்ளது. எனவே, செரிமானமாக பல மணிநேரங்கள் எடுத்துக்கொள்ளும். இரவு உணவில் இவற்றை சேர்த்துக்கொள்ளக் கூடாது.
இரவில் கீரை சாப்பிடக் கூடாது. இதில் அதிக தாது உப்புகள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கீரையை இரவு உணவில் அசைவத்தோடு சேர்த்து சாப்பிடக் கூடாது.

நெய், வெண்ணை, சீஸ் உள்ளிட்ட கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிகக் காரம் கொண்ட மசாலா உணவுகளைச் சாப்பிடக் கூடாது. இவற்றை செரிமானம் செய்ய, இரைப்பை அமிலம் அதிகமாகச் சுரக்கும். இதனால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.
பீட்சா, பர்கர், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
பரோட்டா, பட்டர் நான் உள்ளிட்ட மைதாவில் செய்யப்பட்ட உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இவை செரிமானமாகத் தாமதமாகும்.
சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாமல், அனைவருமே இரவில் முடிந்தவரை அதிக அளவில் அரிசி சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட தொகுப்பில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள்
கோதுமை – Wheat
புரதம் – Protein
கம்பு – Millets
அமிலம் – Acid

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 16 நவம்பர், 2019

மருத்துவ பயன்கள் நிறைந்த அரைக்கீரை.:

வாதம், வாய்வு, வாய்வு சம்பந்தப்பட்ட உடல்வலிகள் இவைகளுக்கு சுக்கு, பூண்டு, மிளகு, பெருங்காயம் சேர்த்துக் கடையல், குழம்பு, பொரியல் செய்து உண்டால் அந்த நோய்கள் குணமாகும்.

நீர்க்கோர்வை, குளிர்சுரம், வாதசுரங்கள், கபசுரம், சளி இருமல் ஆகியவைகளை அரைக்கீரை போக்கும் குணமுடையது. இக் கீரை உடலுக்கு வெப்பத்தைத் தந்து சப்த தாதுக்களையும் வலுவடையச் செய்யும். இக்கீரை சுக்கில தாதுவை வலுப்படுத்தி உடல்பலத்தைப் பெருக்குவதில் தூதுவளைக் கீரைக்கு நிகரானது.
உடலில் தேங்கும் வாய்வு, வாத நீர்களைப் போக்குவதில் முருங்கைக் கீரைக்கு சமமானது. நோயால் தளர்வுற்ற உடலுக்கு வலுவும் பலனும் தரக்கூடியது. அரைக்கீரையை நாள்தோறும் உணவுடன் சேர்த்து உண்டுவர உடலுக்கு அழகும் வலுவும் கொடுக்கும்.
அரைக்கீரை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடரி நரம்பு வலித்தல், மண்டை பீனிச நரம்புவலி, ஜன்னித் தலைவலி, கன்னநரம்பு புடைப்பு ஆகியவைகளுக்கு இக்கீரை பெருங்குணமளிக்க வல்லது.
மாதவிடாய் காலத்தில் பெண்ணுடன் சேர்ந்த சேர்க்கையால் வரும் சூதக ஜன்னிக் கோளாறுகளை அரைக்கீரையுணவின் மூலம் குணமாக்கிக் கொள்ளலாம். தீயவழிகளில் உடல் சக்தியை இழந்தவர்களுக்கு இக்கீரை அரும் மருந்தாகவும், உற்றுழி உதவும் நண்பனாகவும் திகழ்கிறது.
அரைக்கீரை விதையை அரைத்து மாவாக்கி உண்பதும் உண்டு. நாட்பட்ட நோய்களையும் அரைக்கீரை விதையில் சிறுகச் சிறுகக் குணப்படுத்திவிடலாம்.
அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் அரைக்கீரைத் தைலம் மிகவும் புகழ்பெற்ற தைலமாகும். இத்தைலம் கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. தலைமுடியானது செழித்து வளர இத்தைலமும் உதவுகிறது. மேலும் தலைமுடியும் ஒளிவிட்டு மின்னும்.
தலைமுடி கருமையாகவும் செழிப்பாகவும் வளர்வதற்கு, அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சிப் பதத்தில் எடுத்து வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தடவிவர வேண்டும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 13 நவம்பர், 2019

சீதாப்பழம் சாப்பிடுவதால் நன்மைகள்.:

சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள், இப்பழத்தைத் தின்று வர, நோய் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.
சீதாப்பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் கொடும் தாகம் தணியும். உடல் குளிர்ச்சி பெறும். தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால் உடனே வாந்தி, குமட்டல் நிற்கும்.
அறுவை சிகிச்சைக்குப் பின் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாய்ந்து விடும்.
சிறிது வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சீதாப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர குடற்புண் விரைவில் குணமாகும். உடம்பு ஊளைச்சதை உள்ளவர்கள் தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வர ஊளைச்சதை கணிசமாக குறையும்.
சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள் சீதாப்பழச் சாறுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து பருகினால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கடுப்பும் நீங்கும்.
சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்.
நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு என ஜெர்மன் நாட்டு மருத்துவ ஆராய்ச்சியிலிருந்து தெரிய வருகிறது.
உஷ்ணத்தால் ஏற்படும் மாந்தத்தைக் குணப்படுத்தும் தன்மை இப்பழத்திற்கு உண்டு. சீதாப்பழத்துடன், சிறிது இஞ்சிச்சாறு, கருப்பட்டி சேர்த்து தின்றால், பித்தம் மொத்தமாக விலகும்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 11 நவம்பர், 2019

முகத்தில் உள்ள அழுக்களை நீக்கி பொலிவாக்கும் அழகு குறிப்புகள்.:

அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு சூப்பரான அழகு பராமரிப்பு பொருள் என்றால், அது தேன் தான். ஏனெனில் தேனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமம் நன்கு அழகாக மாறும். வேண்டுமெனில், தேனுடன் சிறிது தயிர் மற்றும் சந்தனப் பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதனை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமம் ஜொலிக்கும்.
வேப்பிலையை அரைத்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பப்பாளியைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்துளைகள் அடைக்கப்பட்டு பருக்கள் வராமல் தடுக்கும். அதற்கு பப்பாளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
பால் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, வறட்சியின்றி வைத்துக் கொள்ளும். அதற்கு பாலை பஞ்சில் நனைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், முகம் பொலிவோடு காணப்படும்.
தக்காளியில் லைகோபைன் என்னும் சருமத்தைப் பாதுகாக்கும் பொருள் உள்ளது. எனவே தக்காளியைக் கொண்டு, தினமும் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள அழுக்கள் அனைத்தும் நீங்கிவிடும். http://nammaseithi.com/?p=25815

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 6 நவம்பர், 2019

பேசாமல் இரு, கதவை அல்லாஹ் எப்படித் திறக்கிறான் என்று பார்

கதவு அடைபட்டிருப்பது பற்றிய சிந்தனையிலேயே ஏன் தொலைந்து போகிறாய்?!" என்கிறார் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்).
சங்கைமிகு குர்ஆனில் மனித வாழ்வைப்பற்றி அல்லாஹு தஆலா சுருக்கமாக மூன்றே வசனங்களில் கூறியுள்ளான்.
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
َபின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
ٗۙபின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்" ஆக்குகிறான்.
(அல்குர்ஆன் : 80:19, 20, 21)
எவ்வளவு சுருக்கமான பயணம் இது!
வாழ்வின் வழித்தடங்களில் இலகு தான் அடிப்படை.
சிரமம் எதிர்பாராதது, திடீரென்று வருவது; விரைவில் போய்விடும்.
உடைந்து போய் வேதனைப்படும் உள்ளத்திற்கு ஜப்பார்- ஆற்றுப்படுத்துபவனாகிய அல்லாஹ் விரைவில் கட்டுப் போடுவான்.
அடைபட்ட வழியை ஃபத்தாஹ்- திறப்பவனாகிய அல்லாஹ் திறந்து விடுவான்.

வளைந்து போன உன் காரியங்கள் நேராகும்; உன் வலிகள் விரைவில் குணமாகும்.
நீ அல்லாஹ்வுக்குச் சொந்தம்; அவன் உன் மனதுக்கு நிம்மதியை வழங்குவான்!هَدُو
"மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்."
(அல்குர்ஆன் : 29:69)
இறைநம்பிக்கை என்பது வெறும் வார்த்தையல்ல; அது மனதுடனான போராட்டம். பொருமையும், சகிப்புத்தன்மையும் தேவை. பாரங்களையும் கடமைகளையும் நிலைநிறுத்த வேண்டும்.
நன்மையை அடையும் முயற்சியில் தன் முழு வலிமையையும் செலவிடுபவருக்கு அல்லாஹு தஆலா அதனை இலகுவாக்கிக் கொடுக்கிறான்;
அல்லாஹ்வுக்கு வழிப்பட நாட்டம் கொண்டு ஒருவர் முயற்சித்தால் அவருக்கு அல்லாஹ் அதற்கான வாய்ப்பை வழங்குகிறான்
"ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும்." (அல்குர்ஆன் : 42:43)
இந்த வசனத்திற்கு இப்னு ஸஅதீ (ரஹ்), தனது விரிவுரையில் கூறியுள்ளதாவது:
"மனம் சொல்லும் சொல், செயலைக் கைவிடுவது கடினமானது; பிறரின் நோவினைகளை பொருத்துக் கொண்டு விட்டுக் கொடுப்பதும், மன்னிப்பதும், உபகாரம் செய்வதும் மிகக் கடினமானது; ஆனால் அல்லாஹ் யாருக்கு இலகுவாக்கிக் கொடுக்கிறானோ அவருக்கு இலகுவானது தான்."
(பக்கம் 761)
சுனனுத் திர்மிதீயில் 2616- ம் எண்ணில் இடம் பெற்றுள்ள ஹதீஸில் முஆத் பின் ஜபல் (ரழி) அறிவிக்கிறார்கள்:
ஒரு பயணத்தின் போது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருந்தேன்.
ஒருநாள் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த போது, "என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்து, நரகத்திலிருந்து தூரமாக்கும் நற்செயலை எனக்கு அறிவியுங்கள்!" என்று கேட்டேன்.

"மகத்தானதொன்றை என்னிடம் கேட்டு விட்டீர்; அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கித் தருகிறானோ அவருக்கு அது இலகுவானது தான்." எனக்கூறி வணக்கவழிபாடுகள் தொடர்பான பல்வேறு அம்சங்களையும், நரகத்திலிருந்து தப்பிக்க நாவைப் பேணிகாக்க வேண்டிய அவசியத்தையும்  எடுத்துரைத்தார்கள்.
அல்லாஹு தஆலா இலகுவாக்கித் தந்து விட்டால் சொர்க்கமும் இலகுவாகக் கிடைத்து விடும் என்பதுடன், சொர்க்கத்தை அடையக் காரணமான அமையும் வணக்க வழிபாடுகளும் இலகுவாக அமைந்து விடும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம்.
"மாஉ ஜம்ஜம் லிமா ஸுஇல"- ஜம்ஜம் நீர், எந்த எண்ணத்தில் குடிக்கப் படுகிறதோ, அதற்குரியது." என்ற நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொன்மொழிக்கு சர்க்கார் கிப்லா நிஜாமிஷாஹ் நூரி தாமத் பரக்காத்துஹு, ஒரு முறை இப்படி விளக்கம் கூறினார்கள்:
"அல்லாஹ்விடம் அல்லாஹ்வைக் கேட்க வேண்டும்; குறிப்பாக ஜம்ஜம் நீரை அருந்தும் போது கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது என்றால், அப்போது ஈமான் ஸலாமத்- இறை நம்பிக்கையில் ஆரோக்கியத்தைக் கேட்க வேண்டும்."
வாழ்க்கைப் பாதையில் நம் பயணம் இலகுவாக அமைவது அல்லாஹு தஆலாவின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையினால் சாத்தியமாகிறது.
காழி அபூபக்ர் இப்னுல் அரபி மாலிக்கி (ரஹ்) கூறினார்கள்:
"ஹிஜ்ரீ 489- ம் ஆண்டு நான் மக்காவில் இருந்தேன். ஜம்ஜம் தண்ணீரை அதிகளவில் அப்போது குடித்தேன். குடிக்கும் போதெல்லாம், இறைநம்பிக்கையும், கல்வியும் அதிகரிக்க வேண்டுமென நிய்யத்- எண்ணம் கொண்டேன்.
அதன் விளைவாக, அல்லாஹு தஆலா கல்வியை எனக்கு இலகுவாக்கி தன் பரக்கத்- அருள்வளத்தை திறந்து விட்டான்.
கற்றபடி செயலாற்ற இறையருளை வேண்ட மறந்து விட்டேன். நான் அவ்விரண்டையும் வேண்டியிருக்க வேண்டுமே! இரண்டையும் குறையின்றி அல்லாஹ் எனக்கு திறந்து விட்டிருப்பான்.
இப்போது, செயலை விட அதிகமாக கல்வியில் எனது தேர்ச்சி அமைந்து விட்டது." (ரஹ்லத்துல் ஹிஜாஸிய்யா, ஹுழைகீ)
..

அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்:
"குர்ஆனின் ஐம்பது வசனங்களை ஒரு இரவில் ஓதி வருபவர, ஃகாபில்- மறதியாளர் பட்டியலில் எழுதப்பட மாட்டார்.
நூறு வசனங்களை ஓதுபவர், கானித்- கீழ்ப்படிந்து நடப்பவர்களில் எழுதப்படுவார்.
முன்னூறு வசனங்கள் ஓதுபவருக்கு கின்தார்- அதிகளவு செல்வம் வழங்கப்படும்.
தொள்ளாயிரம் வசனங்கள் ஓதுபவருக்கு  நலவும், அவர் குர்ஆனை சிந்தனையுடன் ஓதுபவராக இருந்தால் குர்ஆனில் விளக்கமும் திறந்து விடப்படும்."
(முஸன்னஃப் இப்னு அபீஷைபா 30709)
"நாம் இந்தக் குர்ஆனை, அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கின்றோம். பின்னர், அறிவுரையை ஏற்றுக்கொள்ள எவரேனும் இருக்கின்றாரா?"
(அல்குர்ஆன் : 54:17)
"மனிதர்கள் ஓதும் விதமாக அவர்களின் நாவுகளுக்கு அல்லாஹ் குர்ஆனை இலகுவாக்கிக் கொடுத்திருக்க -வில்லையென்றால் படைப்பினங்களில் வேறு யாரும் கூட அதனைச் செய்ய முடிந்திருக்காது." என்று
இந்த வசனத்திற்கான விளக்கத்தில் இப்னு அப்பாஸ் (ரழி) கூறியுள்ளார்கள்.
இப்னு உஃதைமீன் (ரஹ்) கூறினார்கள்:
"குர்ஆனை சிந்திப்பவருக்கு அதன் கருத்துக்களை இலகுவாக விளங்க வைக்கிறான்.
அதனை மனனம் செய்பவருக்கு அதன் வார்த்தைகள் உச்சரிப்பை இலகுவாக்கி வைக்கிறான்.
குர்ஆனை மனம் செய்வதற்காக ஆரோக்கியமான மனதுடன் அதனை மூன்னோக்கினால், அல்லாஹ் அதனை உனக்கு எளிதாக்கி வழங்குகிறான்.
ஆய்வில் ஈடுபட்டு, குர்ஆனின் கருத்துக்களை விளங்கிக் கொள்ளும் எண்ணத்துடன் அதை முன்னோக்கினால் அதையும் அல்லாஹ் உனக்கு எளிதாக்கி வைப்பான்."
(லிகாஉல் மஃப்தூஹ், 13/184)
தெளிவு பிறப்பதன் அழகைக் கண்டு ரசிக்கத் தொடங்கி விட்டால், குழப்பம் ஒரு பொருட்டாகத் தெரியாது.
#முஸ்தஃபா_காசிமி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 3 நவம்பர், 2019

தாயாருக்கு மருந்து வாங்க பணமில்லை ஆனாலும் வேண்டாம் இந்த நான்கு கோடி -

பாகிஸ்தானின் மிகவும் புகழ் பெற்ற பாப் பாடகராக விளங்கியவர். பணத்திலும் புகழிலிலும் எந்த ஒரு வாலிபரின் கனவும் இவரது வாழ்வில் நிஜம்.
1997-ல் மெளலானா தாரிக் ஜமீல் அவர்களுடன் இவரது சந்திப்பு நடை பெற்றது. மெளலானா தாரிக் ஜமீல் அவர்கள் தப்லீக் பணியில் உலக அளவில் மாபெரும் சேவை செய்து வருபவர். மென்மையான பண்பும், ஹிக்மத்துடன் தாவா செய்வதிலும் மிகச் சிறந்தவர். மெளலானாவிடம் சிறிது நேரம் உரையாடிய ஜுனைத் ஜம்சேத் கூறினார், எனக்கு பணத்திற்கோ புகழிற்கோ குறைவில்லை. பாகிஸ்தானின் இளைஞர்கள் கனவு காணும் வாழ்க்கை என்னிடமுள்ளது. உங்களது வார்த்தைகள் எனக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது, ஆதலால் கேட்கிறேன்.. இவ்வளவு இருந்தும் உள்ளத்தில் ஒரு வெறுமையை உணர்கிறேன். நிம்மதியில்லை ஏன்?
மெளலானா கூறினார்கள் நீங்கள் ஒரு காலில் வலியிருக்கிறது ஆனால் மருந்தை அடுத்த காலில் தடவிக் கொண்டிருக்கிறேர்கள் என்றார். உங்களது இந்த வலி உங்களது ரூஹில் உள்ளது உடம்பில் இல்லை. ஆனால் நீங்களோ இசையில், 5 நட்சத்திர ஹோட்டல்களில், ஆடம்பர வாழ்க்கையில் உடம்பிற்கான சுகத்தை கொடுத்துக் கொண்டிருக்கீறீர்கள். எப்போது ரூஹிற்கு மருந்தை கொடுப்பீர்களோ அப்போது நிம்மதியை உள்ளத்தில் உணர்வீர்கள்.. இது போன்று சம்பாஷைணைகள் தொடர்ந்தன..

இதற்கு பின்னரும் ஜுனைத் ஜம்சேத் தனது பாடல்களையும் தொடர்ந்தார், நோன்பு போன்ற அமல்களையும் தொடர்ந்தார். மெளலான தாரிக் ஜமீல் அவர்களுடன் தொடர்பிலும் இருந்தார்.
ஒருமுறை அவர் மெளலானவிடம் கூறினார், நீங்கள் நமது முதல் சந்திப்பிலேயே நீ செய்வது முற்றிலும் தவறானது, ஹராமானது என்று கடின வார்த்தைகளை கூறியிருந்தால் நமது முதல் சந்திப்பே நமது இறுதி சந்திப்பாக இருந்திருக்கும். ஆனால் நீங்கள் ஒருபோதும் என்னை அது போன்று பேசியதில்லை கடிந்ததுமில்லை. அல்லாஹ் அவனாகவே எனது உள்ளத்தில் ஹிதாயத்தை போட்டுவிட்டான், நான் இப்போது சிறிது சிறிதாக இசையை விட்டும் விலகிவிட்டேன்.
இதனைத் தொடர்ந்து ஜுனைத் ஜம்சேத் அவர்கள் நான்கு மாத ஜமாத்தில் சென்றார். ஒரு நாள் ஜமாத்தில் இருக்கும் போது
மெளலானா தாரிக் ஜமீல் அவர்களைத் தொடர்பு கொண்டு கூறினார். "இப்போது நான் வந்த ஜமாத்துடன் பாலக்கோட் என்ற இடத்தில் ஒரு சிறிய, பழைய பள்ளியில், ஒரு கிழிந்த பாயில் இருக்கிறேன். இது வரை வாழ்க்கையில் அனுபவத்திராத, ஒரு ஆத்மார்த்த நிம்மதியை உள்ளத்தில் உணர்கிறேன். இதைத் தான் நான் இவ்வளவு நாளும் இசையிலும், 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் ஆடம்பர வாழ்க்கையிலும் இது வரை தேடிக் கொண்டிருந்தேன்" என்றார்.
தனது வாழ்வாதரமான பாடும் தொழிலை விட்டு விட்டதால் உல்லாசத்தின் உச்சத்திலிருந்த இவர் வாழ்க்கையில் வறுமையின் உச்சத்தை தொட்டார். ஒருமுறை மெளலானவை போனில் தொடர்பு கொண்டு கூறினார். இப்போது எனது வீட்டில் எனது தாயாருக்கு மருந்து வாங்கக் கூட பணமில்லை, பெப்சி நிறுவனத்தினர் போன் மேல் போன் செய்கின்றார்கள். ஒரே ஒரு சீடி பெப்சி நிறுவனத்திற்காக தயார் செய்து கொடுங்கள், நான்கு கோடி ரூபாய்கள் தருகிறோம் என்று. ஆனால் நான் அவர்களிடம் மீண்டும் அந்த பாதாளத்தில் விழமாட்டேன், அது முடியாது கூறிவிட்டேன்.
அல்லாஹ் தனது அடியார்களை சோதிக்கின்றான் ஆனால் கைவிடமாட்டான். பின்னர் JJ என்ற பெயரில் ஆடைகள் விற்பனைகளை தொடங்கினார், அதில் அல்லாஹ் அவருக்கு பரக்கத்தை அருளினான்.
அல்லாஹ் தன்களித்த குரல் வளத்தில் மூலம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புகழ்ந்து பல கவிதைகளை பாடியுள்ளார்.

தப்லீக் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உலகில் பல இடங்களுக்கும் தீன் பணிக்காக சென்றுள்ள இவர், 10 நாள் ஜமாத்தில் சித்ரால் சென்று திரும்பும் போது 7-Dec-16 அன்று நடந்த விமான விபத்தில் இறந்து விட்டார்.
இவரைப் போன்று வாழ்வின் எந்த ஒரு நிலையிலும் தீனுக்கு முன்னிரிமையளிக்கும் புனிதர்கள் இன்றும் இந்த பூமியில் இருப்பதால் தான் அல்லாஹ் இந்த உலகை இன்னும் விட்டு வைத்திருக்கின்றான்.
இவரது மஃபிரத்திற்காக துஆ செய்யுங்கள். அல்லாஹ் இவருக்கு ஷஹீத்களின் அந்தஸ்தை வழங்குவானாக! ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts