லேபிள்கள்

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

நரக நெருப்பை அஞ்சிக் கொள்வோம்


மனிதன் இந்த உலகில் எத்தனையோ விதமான போட்டிகளில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றுவிட்டால் அவனது நிலை மறக்குமளவுக்கு சந்தோஷப்படுகிறான். ஆனால் இவன் சந்தோஷப்பட காரணமாக அமைந்த இந்த வெற்றி தற்காலிகமான சந்தோஷத்தை தரக்கூடிய வெற்றியேயாகும்.
ஒருவர் ஒரு வருடத்திற்கு முன் ஒரு போட்டியொன்றில் பங்குபற்றி அதில் வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு இந்த வருடம் அவ்வெற்றி அதனுடைய மகிழ்ச்சியைக் காட்டாது. ஆகக்கூடினால் அந்த வெற்றியின் சந்தோஷம் ஒரு மாதத்துக்குத்தான் இருந்து கொண்டிருக்கும். ஆகவே இந்த வெற்றி உண்மையான வெற்றி கிடையாது.
மனிதனுக்கு ஒரு வெற்றி இருக்கிறது. அவ்வெற்றிதான் உண்மையானதும் நிலையானதுமாகும். அந்த வெற்றி எதுவென்பதை அல்லாஹ் சொல்லும் போது,
"
எவர் நகரிலிருந்து தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டாரோ அவரே நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டார்"
(
ஆலுஇம்ரான்: 185)
என்று கூறியிருக்கிறான்.
அல்லாஹ் எனக்கு இந்த வெற்றியை தராமல் நரகத்தை மறுமையில் தந்தால் என்னுடைய நிலை எப்படி இருக்குமென்பதை நாம் சிந்திக்க வேண்டும். அல்லாஹ் எம்மையெல்லாம் நரகிலிருந்து பாதுகாப்பானாக.
இங்கே சொல்லப்படுகின்ற விடயங்களை நாம் உணர்பு பூர்வமாக சிந்திக்க வேண்டும். சில கட்டங்களில் வழிகேடர்களது சில தவறான வழிகாட்டல்களினால் அல்லாஹ்வுக்கு இணை வைப்பர்களாக சில மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை மக்களின் பக்கம் அவைகளை திருப்பி விட்டால் அது எந்த சந்தேகமுமின்றி இணைவைப்பாக மாறிவிடுகின்றது. அந்தடிப்படையில் ஒரு மனிதன் தன்னை நரகத்துக்கு இட்டு செல்லக்கூடிய காரியங்களை செய்து விட்டு மறுமையில் நரகில் நுழைந்தால் அவனுடைய நிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு சொல்லப்பட இருக்கின்ற எனக்கு நடந்தால் எப்படி இருக்கும் என்று உணர்பு ரீதியாக சிந்திக்க வேண்டும்.
அந்தடிப்படையில் அல்லாஹ் நரகத்தைப் பற்றி,
"
அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் உங்களால் செய்யவே முடியாது. எனவே தீய மனிதர்களும், கற்களும் எரிபொருட்களாக இருக்கின்ற அந்த நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்" (2:24)
என்று எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறான். ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், சாதாரணமாக சமைக்கும் போது நெருப்பை எறிய வைப்பதற்காக எத்தனையோ விறகு கட்டைகளை வைத்து எறிக்கிறோம். சாதாரண நெருப்புக்கே மிக வேகமாக எறியக்கூடியதான் விறகு. நாம் பயன்படுத்துகின்ற நெருப்பை விடவும் 69 மடங்கு பலமானதுதான் நரக நெருப்பு. அந்த நரக நெருப்பில் மனிதன் ஒரு தடவை மாத்திரம்தான் விறகாக பயன்படுத்தப்படமாட்டான்.
இந்த உலகில் ஏதாவது ஒன்றை எறிப்பதற்கு ஒரு விறகை ஒரு தடவை மாத்திரம்தான் பயன் படுத்த முடியும். ஆனால் 69 மடங்கு பலமான அந்த நெருப்பிற்கு விறகாக காணப்படுகின்ற மனிதன் ஒரு தடவை மாத்திரம் எறிக்கப்படமாட்டான். அல்லாஹ் மனிதனை நரக நெருப்பில் போட்டு எறித்து விட்டு மீண்டும் பழைய தோற்றத்திற்கு நல்ல தோல்களையெல்லாம் வழங்கி விட்டு மீண்டும் நரக நெருப்பில் போட்டு வேதனை செய்வான். எரிந்து சாம்பலாகி கறியானதற்கு பின் மீண்டும் புதிய தோலை வழங்கி நரகில் போட்டு வேதனை செய்வான். இப்படி மாறி மாறி தொடர்ந்து கொண்டே இருக்கும். அல்லாஹ் இந்த பயங்கரமான நிலையைப் பற்றி சொல்லும் போது,
"நிச்சயமாக எவர்கள் எமது வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நாம் நரகில் நுழைவிப்போம். வேதனையை அவர்கள் சுவைப்பதற்காக அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு வேறு தோல்களை மாற்றுவோம்" (4:56)
என்று முடிவே இல்லாத வேதனையையின் வர்ணணையை சொல்லிக் காட்டுகிறான்.
மனிதன் உலகில் பெரும்பாவம் செய்தவனாக இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்கு இந்த வேதனையை எல்லாம் அனுபவித்து விட்டு அல்லாஹ் எப்போது நாடுகிறானோ அப்போது அந்நரகை விட்டும் அம்மனிதனை அல்லாஹ் விடுவித்து விடுவான்.
ஆனால் அல்லாஹ்வுக்கு இணைவைத்த மனிதனாக இருந்தால் அவனுக்கு முடிவே இல்லாத வேதனையாக இவ்வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும். 60 வயது 70 வயது என மனித வாழ்வு வரையரை செய்யப்பட்ட அழியக்கூடிய இந்த உலகில் சுயகெளரவத்துக்காக மனிதன் அல்லாஹ்வுக்கு பகிரங்கமாகவே இணைவைக்கின்றானே! அவனுக்கு முடிவே இல்லாத வேதனையைப் பற்றி பயம் கிடையாதா? அவ்வேதனையையின் விபரீதத்தைப் பற்றி சிந்திக்க கூடாதா?
இப்படி பயங்கரமான முறையில் நரகில் வேதனை செய்யப்படுகின்ற அம்மனிதன் தொடர்ச்சியான அந்த வேதனையை தாங்க முடியாததனால் நரகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கும் மாலிக் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து,
"மாலிகே உமதிரட்சகன் எங்களுக்கு (மரணத்தைக்) கொண்டு தீர்ப்பளிக்கட்டும் என்று சப்தமிடுவார்கள்; நிச்சயமாக நீங்கள் (இதே நிலையில் மரணிக்காது) தங்கியிருக்க வேண்டியவர்களே என்று கூறுவார்.
நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். எனினும் உங்களில் அதிகமானவர்கள் அவ்வுண்மையை வெறுக்கின்றவர்களாக இருந்தீர்கள்" (43:78,79)
என்று நரகவாதிகளது கதறளையும் அவர்கள் நரகில் நுழைந்ததற்கான காரணத்தினையும் அல்லாஹ் சுருக்கமாக சொல்லிக் காட்டுகிறான்.
அல்லாஹ் அல்குர்ஆனில் இன்னுமொரு வசனத்தில் நரகவாதிகள் கிடைத்திருக்கின்ற வேதனை தாங்க முடியாமல்,
"நரகத்தில் உள்ளோர் நரகத்தின் காவலர்களிடம் ஒரு நாளைக்கேனும் வேதனையை எங்களை விட்டும் இலகுபடுத்துமாறு உங்களது இரட்சகனிடம் வேண்டுங்கள் எனக் கேட்பார்கள்.
(
அதற்கு அக்காவலாளிகள்) உங்களது தூதர்கள் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வரவில்லையா? எனக் கேட்பார்கள். இவர்கள் ஆம் என்று சொல்வார்கள். (அதற்கு அந்த காவலாளிகளான) அவர்கள் (நாங்கள் அல்லாஹ்விடம் கேட்கமாட்டோம்) நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள்" (40:49,50) என்று நரகவாதிகளது வேதனை ஒரு நாளுமே குறைக்கப்படாது என ஆணித்தரமாக எச்சரித்துக் காட்டியிருக்கிறான்.
எனவே அந்த நரகவாதிகள் தங்கள் வேதனையிலிருந்து தப்ப வேண்டுமென்பதற்காக முதலாவது காவலாளிகளிடம் மன்றாடி விட்டு அது எந்த பலனையும் அளிக்காததனால் நரகத்திலிருந்து வெளியேற முயற்சி செய்வார்கள். இந்த சந்தர்ப்பத்தில் என்ன நடக்குமென்பதை அல்லாஹ் கூறும் போது,
"மேலும் பாவம் செய்தார்களே அத்தகையோர் தங்குமிடம் நரக நெருப்பாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும் போதெல்லாம் மீண்டும் அதிலேயே மீட்டப்படுவார்கள். மேலும் நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களே அந்த (நரக) நெருப்பின் வேதனையை சுவைத்துப் பாருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்படும்" (32:20)
என்று நரகவாதிகள் நரகிலிருந்து தப்பவே முடியாதென எச்சரிக்கையாக சொல்லியிருக்கிறான்.
சாதாரண நெருப்பை விடவும் 69 மடங்கு கடுமையான அந்த நெருப்பில் எரிந்து வேதனையை தாங்கவே முடியாமல் இருக்கும் போது அந்நரகவாசிக்கு பசி, தாகம் ஏற்படும். இந்த நேரத்தில் இவர்களது தாகத்தை இல்லாமலாக்க அல்லாஹ் எந்த சூடு சூட்டினுடைய கடைசி எல்லையில் இருக்குமோ அந்தளவுக்கு சூடாக்கப்பட்ட நீரைத்தான் பருகக் கொடுப்பான்.
சாதாரணமாக இந்த உலகில் தேநீர் அருந்துகின்ற போது சாதாரண ,இலேசான சூட்டையே குடிக்கமாட்டோம். காரணம் அந்த சூடு எம்முடைய நாக்கை எறித்து விடுமென பயப்படுகின்றோமே முடிவுற சூடாக்கப்பட்ட அந்த நீரைக் குடிக்கும் போது நரகவாதியினுடைய குடல் சூட்டின் விபரீதத்தினால் சிதைந்து விடுமென்ற செய்தியை அல்குர்ஆனில் படிக்க முடிகின்றது. அப்படியானால் எப்படி எம்மால் அந்த நீரைக்குடிக்க முடியும் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
நரகவாதிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ் அந்நீரை குடிக்கவே வைப்பான் என்பதில் எந்த சந்தேகமுமே கிடையாது.
அது மட்டுமல்லாமல் நரகவாதிகளுக்கு பசி வருகின்ற போது அவர்களுக்கு முற்கள் நிறைந்த ஸக்கூம் என்று சொல்லப்படக்கூடிய மரத்திலிருந்து உணவு வழங்கப்படுவதுடன் நரகவாதிகளது சீழ் கடுமையாக சூடாக்கப்பட்டு அவைகள் தான் உணவாகவும் வழங்கப்படுமென அல்லாஹ் எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறான். (பார்க்க 56:51-55 வரையுள்ள வசனங்களை)
இப்படி நரகவாதிகளது தண்டனைகளை அல்லாஹ் எமக்கு சொல்லிக் காட்டிருப்பதன் மூலம் மனிதன் சத்தியத்தை படித்து சத்தியத்தில் முழுமையாக நுழைய வேண்டுமென அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இது மட்டுமல்லாமல் அதிகமான வசனங்களில் நரகவாதிகள் படுகின்ற வேதனைகளை அவதானிக்க முடிகின்றது. சிந்தனையுள்ள மக்களுக்கு இவைகள் பிரயோசனம் தரும் என்று நினைத்தவனாக இத்துடன் இத்தகவல்களை சுருக்கிக் கொள்கிறேன்.
இறுதியாக அல்லாஹ் கூறக்கூடிய சில வசனங்களை முன்வைத்து விட்டு என்னுடைய ஆக்கத்தை முடிக்கலாமென நினைக்கிறேன்.
"நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை சபித்துவிட்டான். கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்குத் தயார் செய்தும் வைத்திருக்கின்றான்.
அவர்கள் என்றென்றும் அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள் (அவர்களைக்) காப்பவரையும் (அவர்களுக்கு) உதவி செய்பவரையும் அவர்கள் (அங்கு) காணமாட்டார்கள்.
அவர்களுடைய முகங்கள் ( நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில் 'நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே' என்று கூறுவார்கள்.
மேலும் 'எங்கள் இரட்சகனே நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும் எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம் ஆகவே, அவர்கள் எங்களை வழிதவறச் செய்து விட்டார்கள்' ஆகவே 'எங்கள் இரட்சகனே நீ அவர்களுக்கு வேதனையில் இருமடங்கை கொடுப்பாயாக. இன்னும், பெரும் சாபமாக அவர்களைச் சபிப்பாயாக' (என்றும் கூறுவார்கள்) (33:64-68)
இந்த வசனம் 5 வசனங்களாக மாத்திரம் இருந்தாலும் அதிகமான விடயங்களை சொல்லித் தருகின்றன.
இந்த உலகில் சில வழிகேடர்கள் அவர்களும் வழிகெட்டு வேண்டுமென்று எம்மையும் வழிகெடுக்க முனைந்து அல்லாஹ்வுக்கு இணைவைக்கக்கூடிய காரியங்களை சத்தியத்தை சொல்வது போன்று சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
நாம் இந்த உலகில் வேண்டுமானால் அவ்வழிகேடர்களை நேசர்களாக ஆக்கி அவர்களை பின்பற்றலாம். ஆனால் மறுமையில், நீங்கள் அவர்கள் மீது நேசம் வைத்ததன் காரணமாக கைசேதப்படுவீர்கள். மறுமையில் நீங்கள் அவர்களை அல்லாஹ்விடத்தில் காட்டிக் கொடுத்தாலும் அதுவும் உமக்கு எந்த பிரயோசனத்தையும் தரமாட்டாது.
எனவே எல்லாம் வல்ல இறைவன் எம் ஒவ்வொருவரையும் நேர்வழியில் வாழ்ந்து நேர்வழியில் மரணிக்க அருள்புரிவானாக.
தொகுப்பு
பர்ஹான் அஹமட் ஸலபி

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts