லேபிள்கள்

செவ்வாய், 9 ஜூலை, 2019

எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும் ஏனெனில் …


எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும் ஏனெனில் நான் ஒரு அறிவாளி என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம்.
உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை. ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுக்கே உரிய சட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பது பிளாட்டோவின் புகழ் பெற்ற தத்துவம்.
மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்குகிறான் என்றால் அவன் வாழ்க்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம் என்கிறார் டார்வின்.
மனிதர்கள் 4 வகை:
  1. ஒருவனுக்கு தனக்கு எது தெரியும் என்பது அவனுக்கு தெரியும். அவன் அறிஞன். அவனை பின்பற்றுங்கள்.
  2. ஒரு மனிதன், அவனுக்கு தனக்கு தெரியும் என்பது தெரியாது. அவன் தூக்கத்திலிருக்கிறான். அவனை தட்டி எழுப்புங்கள்.
  3. ஒரு மனிதன், அவனுக்கு தனக்கு தெரியாது என்பது தெரியும். அவன் ஒரு முட்டாள். அவ்னுக்கு கற்றுக் கொடுங்கள்.
  4. ஒரு மனிதன், அவனுக்கு தனக்கு தெரியாது என்பதே தெரியாது. இவன்தான் வடி கட்டிய முட்டாள். இவனைவிட்டும் தூரமாக இருங்கள்
    [14/01, 10:13]
    +91 94441 88160: நமது பாவங்களை நினைத்து வேதனைப்பட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டுவதென்பது ஏதோ ஒரு முறையோ அல்லது ரெண்டு முறையோ வேண்டியோ அல்லது இறை திருநாமத்தை ஓதியோ இறைவன் நம்மை மன்னித்து விட்டான் என்று கலைந்து போவதில்லை. அது நாம் சென்ற பாதையில் நின்று நிதானித்து சென்ற பாதையில் திரும்பி வந்து தவறாக வந்த பாதையை அழிந்து விட்டு சரியாக நடப்பது.
நாம் எந்த பாவத்தை நினைத்து வருந்துகிறோமோ அதுதான் நாம் தவறாக எண்ணிய எண்ணங்கள், செய்த செயல்கள், வாழ்ந்த வாழ்க்கை. அது இப்போது வினையாக அதாவது வருந்தும் வாழ்க்கையாக இருக்கிறது.
தொழில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்சினை, குழந்தை இன்மை, மற்றும் நோய் என்ன செய்வது உடனே நீங்கள் பாவமன்னிப்பை பெறுவதை கையில் எடுங்கள்.
இப்போது வருந்தும் வாழ்க்கைக்கு காரணமான நீங்கள் செய்த எண்ணங்கள் செயல்பாடுகளை விட வேண்டும் இது ஆரம்பமாக செய்ய வேண்டும்.
இரண்டாவது நீங்கள் தவறிய அதாவது இப்போது நீங்கள் வருந்தும் வாழ்க்கைக்கு காரணமான எண்ணம் செயல்பாடு திரும்பி இனிமேல் எக்காலத்திலும் செய்யமாட்டேன் என்று உறுதிக்கு கொண்டு அதில் உறுதியாக இருக்க வேண்டும் மட்டுமல்ல வாழ வேண்டும்.
மூன்றாவது நீங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கக் வேண்டும். இதுதான் நீங்கள் தவறாக வந்த பாதையை அழிந்து விட்டு சரியாக நடப்பது. இதுவே பாவமன்னிப்பு.
இறை திருப்பெயர் "" يا غفور"" (யா கfபூர்) என்று தினமும் காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு நாளும் ஓத வேண்டும். ஓதுவதற்கு முன்பாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது அதிகம் அதிகம் சலவாத் ஓதி விளையாட்டு இந்த இஸ்மை ஓத வேண்டும். அப்படி ஓதும் போது உங்கள் வாழ்க்கை சரிசெவது மட்டுமல்ல அதற்கு பகரமா சிறந்த வாழ்க்கை தருவதாக இறைவன் கூறுகிறான் பாருங்கள்.
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ‏
நான் கூறினேன்: "உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.
يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ‏
அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான்.
وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا
செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்.
مَا لَـكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًا
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வுக்கு மகத்துவமும் மாண்பும் ஏதேனும் இருக்கிறது என்ற உணர்வே உங்களிடம் இல்லையே!
(
அல்குர்ஆன் : 71:10,11,12,13)
மௌலவி கலீfபா 
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts