லேபிள்கள்

செவ்வாய், 23 ஜூலை, 2019

!! தண்ணீர் !!!



By Dr. Gouse MD, (Acu.,Tcm)., Singapore.
மனிதன் உயிர் வாழ தண்ணீர் அவசியத் தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் மிக அத்தியாவசியமானது.
தண்ணீர் என்றால் குளிர்ந்த நீர் என்று அர்த்தம். ஆனால் வழக்கு சொல்லில் சாதாரண நீரைத்தான் தண்ணீர் என்று சொல்கின்றோம். அதனால் அதே சொல்லையே
நானும் இங்கு பயன்படுத்துகிறேன்.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அதை எப்போது, எவ்வாறு குடிக்க வேண்டும்?
தண்ணீர் அதிகம் குடித்தால் உடலுக்கு நல்லது என அனைவரும் கூற கேட்டிருப்போம். அதில் எந்த அளவு உண்மை இருக்கின்றது என பார்ப்போம்.
பொதுவாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவு சரியானது?
ஒரு மனிதனுக்கு எப்போது தாகம் ஏற்படுகிதோ அப்போது தான் அவன் தண்ணீர்த் தேடிச் செல்வான்.
உடலுக்கு எப்போது தண்ணீரின் தேவை ஏற்படுகிறதோ அப்போது தான் தாகம் என்கிற உணர்வு ஏற்படும். இதுதான் இயற்கை.
ஒருவர் ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும், இந்தெந்த வயதிற்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் அறிவுக்கும், ஆரோக்கியத்திற்கும் புறம்பானதாகும்.
உடல் உழைப்பு அதிகம் உள்ள தொழிலாளிகள், வெய்யிலில் வேலை செய்யும் விவசாயிகள், அதிக வியர்வையை உண்டாக்கும் வேலையை செய்பவர்கள், போன்றவர்களுக்கு சற்று அதிகமாக தண்ணீர் தேவை ஏற்படும்.
குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் மற்றும் அதிக நேரம் ஏசியில் உள்ளவர்களுக்கு குறைவான அளவு தண்ணீர் தான் தேவைப்படும். ஒருவரின் தண்ணீர் தேவையை அவரவர் உடல் தான் தீர்மானிக்க வேண்டும். ஆவரேஜ் ஆராய்ச்சிகள் அல்ல.
அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது என்றும், லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தால் இந்தெந்த வியாதிகள் குனமாகும் என்றும்
Japanese Water Therapy என ஒரு செய்தி அடிக்கடி சோசியல் மீடியாக்கள் மூலம் பரப்பப்படுகிறது.
இதுவும் தவறானதாகும். Japan Medical Society ம் இதை அங்கீகரிக்க வில்லை.
உங்களுக்கு எப்போது, எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை உணர்த்த தான் தாகம் என்கிற ஒரு உணர்வு இருக்கின்றது. இது அனைத்து உரியிரினங்களுக்கும் பொதுவானது.
நமது உடலுக்கும் சீதோஷ்ண நிலைக்கும் நெருக்கிய தொடர்பு உள்ளது. (Weather)
அக்குபங்சர் மருத்துவர்கள் Organ Clock Theory என்றும், ஆங்கில மருத்துவர்கள் Biological Clock என்று படித்திருப்பார்கள். அது தான் காலச் சூழ்நிலையின் மாற்றத்திற்கு தகுந்தவாறு நமது உடலின் தட்பவெப்ப நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளும்.
அதனால் தான் கால சூழ்நிலையான வெப்பம், குளிர், மழை, வறட்சி என மாறும் போதும், வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு தகுந்தாற் போல் நமது உடல் ஒத்துப் போகிறது. இல்லையேல் நாம் நோய்வாய் பட்டுவிடுவோம்.
உதாரணமாக சிலருக்கு வெய்யிலின் உஷ்ணம் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு குளிர் ஒத்துக்கொள்ளாது. வேறு சிலருக்கு வெளியூர் சென்றால் அங்குள்ள தண்ணீர் ஒத்துக்கொள்ளாது.
இப்படி யாருக்கெல்லாம் காலச் சூழ்நிலையின் மாற்றம் ஓத்துக்கொள்ள வில்லையோ, அவர்களின் உடலில் உள்ள சில உள்ளுறுப்புகளின் சக்தி ஓட்டத்தில் குறைபாடு உள்ளது என அறியவேண்டும்.
நமக்கான தாகத்தில் அளவை நிர்ணயிப்பது நமது உடலில் உள்ள மண்ணீரல் என்னும் உறுப்புத்தான். (Spleen).
தண்ணீர் என்பது நான்கு, ஐந்து லிட்டர் சாதாரனமாக குடித்துவிட்டு, பிறகு சிறுநீர் கழித்துவிட்டு செல்வதற்காக அல்ல.
நீங்கள் அருந்தும் ஒவ்வொரு சொட்டு நீரும் உடலில் உள்ள செல்களால் ஜீரணிக்கப்பட்டு, அதில் உள்ள உயிர்ச் சத்துக்கள் கிறகிக்கப்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட அவசியமானதாக அமையவேண்டும்.
தேவைக்கு மீறி நீங்கள் தண்ணீர் அருந்தும் போது, உடலின் தேவை போக மீதமுள்ள நீர் உங்கள் சிறுநீரகத்தின் மூலம் வெளியேற்றப்படும்.
ஏற்கனவே உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் உங்கள் சிறுநீரகங்கள், நீங்கள் அதிகமாக குடிக்கும் நீரையும் வெளியேற்ற பாடுபட வேண்டும். இது சிறுநீரகத்திற்கு அதிகப்படியான வேலை பளுவாகும். (Over Load to Kidneys).
இந்த நிலை தொடருமானால் நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். (Kidney Failure).
தாகமில்லாமல் தண்ணீர் மட்டுமல்ல, குளிர்பானங்கள், பீர் போன்ற எதைக் குடித்தாலும் அது உடல் தேவைக்கு அதிகமான நீராகத்தான் அமையும். பெரும்பாலும் பீர் குடிப்பவர்கள் ஒரே நேரத்தில் 2, 3 லிட்டர்கள் குடிப்பார்கள். சிறிது நேரத்தில் அவ்வளவு நீரும் சிறுநீர் மூலம் வெளியேறும். இது கிட்னிக்கு கடுமையான நெருக்கடி என்பதை அவர்கள் உணருவதில்லை.
சோர்வடைந்த சிறுநீரகங்களால் கழிவுகளை முழுமையாக நீக்க முடியாது. அதனால் அதில் உள்ள கால்ஷியம், ஆக்சலேட்ஸ் போன்ற உப்புக்கள் ஒன்றுசேர்ந்து எளிதில் கிட்னியில் கற்கள் உருவாகும்.
யாரெல்லாம் அதிகமாக செயற்கை குளிர்பானங்கள் மற்றும் பீர் குடிகின்றார்களோ அவர்களுக்கு எளிதில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.
பொதுவாக ஜீரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவுகள் மட்டும் தான் ஜீரணமாவது என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நாம் உண்ணும் உணவு ஜீரணமாகுவது போல், குடிக்கும் நீர்ம வகைகளும் ஜீரணிக்கப்பட வேண்டும். (Water Metabolism).
நாம் உட்கொள்ளும் தண்ணீர் வகைகள் முறையாக ஜீரணிக்கப்பட்டு பிறகு உடல் தேவைகளுக்காகவும், கழிவுகள் நீக்கப்படுவதற்காகவும்,(Toxins Removal) நமது அனைத்து செல்களுக்கும், திசுக்களுக்கும் முறையாக அனுப்பப்பட வேண்டும். (Distribution).
நாம் குடிக்கும் நீர் முறையாக ஜீரணிப்படா விட்டால், அது நமது செல்களாலும், திசுக்களாலும் கிரகிக்கப்படாமல் நிராகரிக்கப்படும். அதனால் அந்த நீர் சேகரமாகி பல உள் உறுப்புகளிலும், செல்களுக்கு இடையிலும் தேக்கம் கொள்ள ஆரம்பிக்கும். (Water Lodging).
வளர்ச்சிதை மாற்றத்தின் குறைவால் இந்த நீர் உடலால் கிரகிக்கப்படாமல் அதிக அளவில் உடலில் தேக்கம் கொள்ளும்போது செல்கள் தளர்ந்து உடல் பருமன் அடையும். அப்படிப்பட்டவர்கள் ஊளை சதையுடன் தோற்றமளிப்பார்கள். (Obesity).
மேலும் உடலின் உள்ள நீர் தேக்கத்தின் காரணமாக இரத்த நாளங்களிலும் நீர் சேர்ந்து இரத்த அழுத்தத்தை (Blood Pressure) ஏற்படுத்தும்.
எனவே இரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேற வேண்டும். இல்லையேல் நுண்ணிய நரம்புகள் வெடிக்க நேரிடும். அதனால் மூளையில் இரத்த கசிவு, கை கால்கள் வாதமடித்தல், ஒரு பக்கமாக வாய் கோணல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். (Rupture, Paresis, Paralysis).
உடலில் உள்ள அதிப்படியான நீர், சிறுநீர் மூலம் தான் வெளியேற்றப்பட வேண்டும்.
உடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும் வேலையை செய்து கொண்டிருப்பாதால், நமது சிறுநீரகங்கள் சோர்வடைந்து இருக்கும். அதனால் உடலில் உள்ள அதிப்படியான நீரை வெளியேற்ற முடியாது. அப்போது கைக், கால்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு வீக்கம் உண்டாகும். கைக், கால்கள் வீங்குவதற்கு இதுவே காரணமாகும்.
எனவே சோர்வடைந்த சிறுநீரகங்கள் மேலும் வேலை செய்ய, ஆங்கில மருத்துவத்தில் சிறுநீர் பிரியும் இரசாயன மருந்துகள் கொடுக்கப்படும். (Diuretics).
இந்த செயல்பாடு, ஏற்கனவே சோர்வுடன் இயங்கி கொண்டிருக்கும் சிறுநீரகங்களை மேலும் மோசமாக்கும். இது காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். (Kidney Failure).
நாம் குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவிலும் உள்ள நீர் சத்துக்கள் ஒவ்வொருவருடைய உடல் அமைப்புக்கும், ஜீரண சக்திக்கும், தேவைகளுக்கும் தகுந்தவாறு உடல் ஏற்றுக் கொண்டு, கழிவுகளை வெளியேற்றும்.
கழிவுகள் வெளியேறாமல் தேக்கம் கொள்வதன் காரணமாக உடலில் ஆக்சிஜன் கிரகிப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். அதன் காரணமாக நுரையீரலிலும், பெருங்குடலிலும் நோய்கள் உண்டாக ஆரம்பிக்கும். (Disease Forms in Metal Element).
ஆக்சிஜன் குறைபாடு நீர் மூலகங்களான சிறுநீரகத்தையும், சிறுநீர் பையையும் (Kidneys and Urinary bladder) பாதிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் நீர்மூலம் வெளியேறாது. அப்போது யூரினரி டிராக்ட் இன்பெக்ஷ்ன் (UTI), மலசிக்கல் ஏற்படும்.
உடலில் ஆக்சிஜன் கிரகிப்பு தன்மை குறைந்தால் மூச்சு திணறல், மூச்சு அடைத்தல், சிறு வேலை செய்தாலும், மாடிப்படி ஏறினாலும் மூச்சு வாங்குதல் போன்ற சுவாச கோளாறுகள் உண்டாகும். குண்டாக உள்ளவர்களுக்கு இந்த தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்.
யாருக்கெல்லாம் நுரையீரல் இயக்க சக்தியில் குறைபாடு உள்ளதோ, அவர்களுக்கு மனக் குழப்பங்களும் (OCD), பிடிவாத குணங்களும் அதிகமாகும்.
உதாரணமாக சளி பிடித்திருக்கும் குழந்தைகளுக்கு பிடிவாத தன்மை அதிகமாக இருப்பதை பார்க்கலாம். யாருகெல்லாம் பிடிவாத குனம் அதிகமாக உள்ளதோ அவர்களின் நுரையீரல் இயக்கச் சக்தியில் குறைபாடு உள்ளது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
(OCD என்றால் ஒரே செயலை திரும்ப திரும்ப செய்தல்)
நாம் குடிக்கும் தண்ணீர் நாக்கிலோ, தொண்டையிலோ நேரடியாக படக்கூடாது. முதலில் தண்ணீர் நமது உதடுகளை ஈரப்படுத்தி பிறகு தான் வயிற்றுக்குள் செல்ல வேண்டும்.
எப்போது உதடுகளில் நீர் படுகிறதோ, அப்போது தான் அந்த நீரை ஜீரணிக்க கூடிய சக்தி வயிற்றிலும், மண்ணீரலிலும் உருவாகும்.
உதடுகள் நீரில் உள்ள சக்தியை உறிஞ்சும் தன்மையை உடையது. அதனால் தான் இறைவன் படைப்பில் உதடுகள் வியர்வை சுரப்பிகள் இல்லாமல் படைக்கபட்டிருக்கிறது. வியர்வை சுரப்பிகள் உள்ள இடங்கள் உடற்கழிவுகளை வெளியேற்றும் தன்மையைக் கொண்டது.
வியர்வை சுரப்பி இல்லாத உதடுகள் சக்திகளை உறிஞ்சி உள்வாங்கும் தன்மையுடையது. எனவே பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். லிப்ஸ்டிக்கில் உள்ள இரசாயனங்கள் (Chemicals) உங்கள் உதடுகளால் உறிஞ்சப்படும்.
எப்போதெல்லாம் உதடு உலர்ந்து காய்ந்து போகிறதோ, அப்போது நமது உடலில் நீர் சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்துக் கொள்ளலாம்.
தாகமில்லாமல் உதடுகள் உலர்ந்துபோனால் அப்போது நாக்கால் உதடுகளை சிறிது தண்ணீரால் ஈரப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் எப்போது, எவ்வாறு, எந்த முறையில் தண்ணீர் அருந்துவது போன்ற தகவல்களை அடுத்தக் கட்டுரையில் காண்போம். நன்றி.
By Dr. Gouse MD (Acu., Tcm)., Singapore. WhatsApp: 9790740990.
--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts