லேபிள்கள்

ஞாயிறு, 16 ஜூன், 2019

பிள்ளை பிறந்த தகவல் கிடைத்தால் எவ்வாறு வாழ்த்துவது?


தனது ஒரு முஸ்லிம் சகோதர சகோதரிக்கு குழந்தை பிறந்த தகவல் கிடைத்தால் அதிகமான சகோதரர்கள்
بورك لك في الموهوب، وشكرت الواهب، وبلغ أشده، ورزقت بره
என்ற துஆவை வாழ்த்தாக கூறிவருவது வழமை.
ஆனால் மேற்கூறிய துஆவை நபியவர்கள் ஓதியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
இந்த துஆவை ஹஸனுல் பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறியதாக, முஸ்னத் இப்னில் ஜஃத் (3398), இப்னு அபித்துன்யாவின் ( 201/النفقة على العيال), இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாக இமாம் ஸுயூதியின் (وصول الأماني بأصول التهاني) ஆகிய நூட்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது மிகவும் பலவீனமான அறிவிப்பாகும்.
முதல் இரண்டு நூற்களிலும் உள்ள அறிவிப்பில் ஹைஸம் இப்னு ஜம்மாஸ் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் ஆதாரம் கொள்ளப்பட முடியாதளவு பலவீனமானவர் என இமாம்களான இப்னு மஈன், அஹ்மத், நஸாஈ போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். (பார்க்க: லிஸானுல் மீஸான்: 8299)
இமாம் ஸுயூதியின் நூலில் இடம்பெறும் அறிவிப்பில் குல்ஸூம் இப்னுல் ஜவ்ஷன் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரும் ஆதாரம் கொள்ளப்பட முடியாதளவு மிகவும் பலவீனமானவர் என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இமாம் புகாரி அவர்கள் நம்பிக்கையானவர் எனவும், இப்னு மஈன் பரவாயில்லை எனவும் கூறியுள்ளனர். (பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப் :803)
ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் மூலமாக ஆதாரபூர்வமான அறிவிப்பில் பின்வரும் துஆ இடம்பெற்றுள்ளது.
جَعَلَهُ اللَّهُ مُبَارَكًا عَلَيْكَ وَعَلَى أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
இதே துஆ அய்யூப் ஸக்தியானி )ரஹ்( அவர்கள் மூலமாகவும் வந்துள்ளது. (ஆதாரம்: இமாம் தபரானியின் துஆ எனும் நூல் :945, 946, இப்னு அபீ துன்யாவின் النفقة على العيال: 202)
இவைகள் அனைத்தையும் விட நபியவர்கள் ஓதிய ஆதாரபூர்மான பின்வரும் துஆவே மிகச் சிறந்ததாகும்.
بَارَكَ اللَّهُ لَكَ فِيهِ وَجَعَلَهُ بَرًّا تَقِيًّا
பெண் பிள்ளையாக இருந்தால் பின்வருமாறு மாற்றி ஓதவேண்டும்.
بَارَكَ اللَّهُ لَكَ فِيهِ وَجَعَلَها بَرَّةً تَقِيَّةً
ஒரு பெண்மணிக்கு வாழ்த்துச்சொல்வதாக இருந்தால் "லக" என்பதை "லகி" என மாற்றி ஓத வேண்டும்.
உசாத்துணை நூல்
وصول الأماني بأصول التهاني للسيوطي بتحقيق يحيى الحجوري
தொகுப்பு: அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts