லேபிள்கள்

சனி, 29 ஜூன், 2019

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்!


`உழைத்தால் உயரலாம்!' உண்மையா? நூற்றுக்கு நூறு உண்மை... ஒரு காலத்தில்! இன்றைக்கு..? `ஹார்டு வொர்க் பண்றதைவிட, ஸ்மார்ட்டா வொர்க் பண்ணுங்க ப்ரோ... டாப்ல போயிடலாம்' என இளைய தலைமுறையே இறங்கி வந்து அடித்துச் சொல்கிற காலம் இது. ஆக, எதையும் புத்திசாலித்தனமாகச் செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்கு முதல் தேவை, உடல் ஆரோக்கியம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வாழ்வியல்முறைகளில் ஒழுங்கு, சமச்சீர் உணவு... என ஆரோக்கியம் காக்க நீளமான பட்டியலே உண்டு. மருந்துகள் உட்கொள்வதும் அவற்றில் ஒன்று. உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில் எடுத்துக்கொள்வார்கள். அவற்றில் `திரிபலா பொடி' இரவில் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து. சரி, திரிபலா பொடியை ஏன், எதற்கு, எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

திரிபலா பொடி
திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.
திரிபலா தரும் நன்மைகள்...
திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில்கொள்ளவும்.
* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.
* உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
* வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
* கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.
* ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.
* உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.
எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?
* கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.
* மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.
* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.
* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 26 ஜூன், 2019

மார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்!


ஜெயராணி, மகப்பேறு மருத்துவர்
மார்பகங்கள் அழகுக்கான அடையாளம் மட்டும் கிடையாது. அவை ஆரோக்கியத் துக்கான காரணியும்கூட. கடந்த சில வருடங்களாக, 'குழந்தைக்குப் பால் கொடுக்கலைன்னா மார்பகப் புற்றுநோய் வரும்', 'கால தாமதமா குழந்தை பெத்துக்கிட்டா மார்பகப் புற்றுநோய் வந்துடும்', 'கருத்தடை மாத்திரை சாப்பிட்டா கேன்சர் வந்துடும்' என்று ஏகப்பட்ட அச்சுறுத்தல்களைக் கடக்கிறோம். மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் ஜெயராணியிடம் கேட்டோம்.

கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா?
''அந்த அபாயம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப வரலாற்றில் ஏற்கெனவே ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பிருந்தால், அப்படிப்பட்ட பெண்களுக்குக் கருத்தடை மாத்திரை களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதைத் தவிர்ப்பார்கள். இந்த மாத்திரைகளில் இருக்கிற ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மார்பகப் புற்றுக்கான வாய்ப்பை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அதிகப்படுத்திவிடலாம். இவர்கள் மாத்திரைகளைத் தவிர்த்துவிட்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மற்ற கருத்தடை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுக்கமான பிரா மார்பகப் புற்றை ஏற்படுத்துமா?
இறுக்கமான பிரா மற்றும் அண்டர் வொயர் பிராவால் மார்பகப் புற்று வர வாய்ப்பிருக்கிறதா என்று நிறைய பெண்கள் கேட்கிறார்கள். இறுக்கமான பிராக்களைத் தொடர்ந்து அணிந்தால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் தடைப்படுகிற பிரச்னை வரும். இதனால் மார்பகங்களில் புற்றுநோய் ஏற்படும் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. பொதுவாக, சீரான ரத்த ஓட்டம் தடைப்படும் வகையிலான பிரா அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

மார்பகங்களை அழகுபடுத்தும் சிகிச்சைகளால் ஆபத்தா?
மார்பகங்களைப் பெரியதாக்கும் என்று விளம்பரம் செய்யப்படுகிற மசாஜ் க்ரீம், மாத்திரைகளில் ஆரம்பித்து மார்பகங்களுக்குள் சிலிக்கான்வைத்துப் பெரியதாக்கும் அறுவை சிகிச்சைவரை எல்லாமே பெண்களுக்கு ஆபத்தான விஷயங்கள்தாம். இவற்றால், மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

ஹார்மோன் தெரபி சிக்கலை ஏற்படுத்துமா?
மெனோபாஸ் நேரத்தில் சில பெண்களுக்கு ஹார்மோன் தெரபி சிகிச்சை செய்யவேண்டி வரலாம். அப்போது, சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலைக்கு ஏற்ப, பாதுகாப்பான அளவில்தான் மருத்துவர்கள் இந்த ஹார்மோன் சிகிச்சையை மேற்கொள்வார்கள். அதையும் மீறி அளவு அதிகமாகி விட்டால், ஹார்மோன் தெரபியே மார்பக கேன்சரை ஏற்படுத்திவிடலாம்.

அடிக்கடி மேமோகிராம் பரிசோதனை மேற்கொள்ளலாமா?
மார்பகப் புற்றைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனையை மேற்கொள்ளும்போது, மார்பகங் களுக்குள் பாய்கிற கதிர்வீச்சுகளால்கூட புற்றுநோய் வரலாம். அதற்குப் பதிலாக அல்ட்ரா சவுண்ட் முறையிலான சோனார் மேமோகிராம் செய்துகொள்வது நல்லது.

மார்பக மசாஜ் நல்லதா?
சில துளிகள் ஆலிவ் ஆயிலை மார்பகங்களில் தடவி, தினமும் 10 நிமிடங்கள் மட்டும் மென்மையாகக் கடிகார சுழற்சியில் மசாஜ் செய்து வருவது மார்பகங்களுக்கு நல்லது. இதனால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு,  மார்பகங்களுக்குள்ளே உருவாகும் சிறு சிறு நார்க்கட்டிகள் வராமல் தடுக்கலாம்.

உடல் எடையும் உணவுப் பழக்கமும் மார்பகங்களைப் பாதிக்குமா?
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு, உடலில் ஈஸ்ட்ரோஜெனின் சுரப்பும் அதிகமாக இருக்கும். அளவுக்கு அதிகமான ஈஸ்ட்ரோஜென் மார்பகங்களுக்கு ஆபத்தான விஷயம். அதனால், பருமன் பிரச்னை இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்று செய்து எடையைக் கட்டுக்குள் கொண்டுவருவதுதான் மார்பகங்களுக்கு நல்லது.

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, ஹார்மோன் ஊசி போடப்பட்ட இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிட்டாலும் மார்பகப் புற்று வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்காத நாட்டுக்கோழி, வீட்டில் வளர்த்த ஆடு என கவனமாகப் பார்த்து வாங்கிச் சாப்பிட  வேண்டும். பச்சைக் காய்கறிகள், இயற்கைப் புரதம் நிறைந்த சுண்டல் வகைகள், தாவரக் கொழுப்பு ஆகியவை மார்பக ஆரோக்கியத்துக்கான உணவுகள்.

மற்றபடி, காலதாமதத் திருமணம், 35 வயதுக்கு மேல் முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்வது,  குழந்தைக்குப் பாலூட்ட முடியாமல் போவது என இவையெல்லாம் பல நேரங்களில் நம் கைகளில் இல்லை. அவற்றைப் பற்றி கவலைப்படாமல், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி மார்பக ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ளுங்கள்.''

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 23 ஜூன், 2019

ATM / BANK சம்பந்தமான Online புகார் செய்ய....!


அருமையான தகவல்... அனைவருக்கும் பகிருங்கள். . . .மிக மிக முக்கியமான செய்தி :  ATM / BANK சம்பந்தமான Online புகார் :
இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான்  சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.

உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10-ம் தேதி,மே 10-ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28-ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18-ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும். இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை.
PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
பொது நலன் கருதி இத்தகவலை வெளியிடுவோர் :
Sanctuary Legal Bureau
( A Law Firm )
Ph (Enquiry) : 99949 61613

அதிகபட்சம் பகிருங்கள் (Share). மேலும் இது போன்ற விழிப்புனர்வு மற்றும் சட்டம் பற்றிய செய்திகளை படிக்க எங்கள்
Posted by Mohamed ali

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 19 ஜூன், 2019

நட்ஸ் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


தினமும் ஒருவகை ட்ரை ஃப்ரூட்ஸ் சரியான அளவில் எடுத்துக்கொள்வதால் எடையைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்துடன் வாழலாம்.
ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காலை எழுந்ததும் பாலுடன் சேர்த்தோ, நீரில் ஊறவைத்தோ இதைச் சாப்பிட்டால், நாள் முழுக்க புத்துணர்வு கிடைக்கும்.
டிரை ஃப்ரூட் சிக்கி :
தேவையானவை:
பாதாம் கால் கப் (பொடியாக நறுக்கவும்)
முந்திரி கால் கப் (பொடியாக நறுக்கவும்)
வறுத்த வேர்க்கடலை கால் கப்
வறுத்த வெள்ளை எள் கால் கப்
பொடித்த வெல்லம் ஒரு கப்
நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி, வெல்லம் சேர்த்துக் கிளறவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை சிறுதீயில் வைத்து பாதாம், முந்திரி, வேர்க்கடலை, எள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். பிறகு, இதைச் சுத்தமான நெய் தடவிய சமையல் மேடையில் கொட்டி, கனமாக தேய்க்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு துண்டுகளாக்கிக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 16 ஜூன், 2019

பிள்ளை பிறந்த தகவல் கிடைத்தால் எவ்வாறு வாழ்த்துவது?


தனது ஒரு முஸ்லிம் சகோதர சகோதரிக்கு குழந்தை பிறந்த தகவல் கிடைத்தால் அதிகமான சகோதரர்கள்
بورك لك في الموهوب، وشكرت الواهب، وبلغ أشده، ورزقت بره
என்ற துஆவை வாழ்த்தாக கூறிவருவது வழமை.
ஆனால் மேற்கூறிய துஆவை நபியவர்கள் ஓதியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
இந்த துஆவை ஹஸனுல் பஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறியதாக, முஸ்னத் இப்னில் ஜஃத் (3398), இப்னு அபித்துன்யாவின் ( 201/النفقة على العيال), இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாக இமாம் ஸுயூதியின் (وصول الأماني بأصول التهاني) ஆகிய நூட்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது மிகவும் பலவீனமான அறிவிப்பாகும்.
முதல் இரண்டு நூற்களிலும் உள்ள அறிவிப்பில் ஹைஸம் இப்னு ஜம்மாஸ் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் ஆதாரம் கொள்ளப்பட முடியாதளவு பலவீனமானவர் என இமாம்களான இப்னு மஈன், அஹ்மத், நஸாஈ போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். (பார்க்க: லிஸானுல் மீஸான்: 8299)
இமாம் ஸுயூதியின் நூலில் இடம்பெறும் அறிவிப்பில் குல்ஸூம் இப்னுல் ஜவ்ஷன் எனும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரும் ஆதாரம் கொள்ளப்பட முடியாதளவு மிகவும் பலவீனமானவர் என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இமாம் புகாரி அவர்கள் நம்பிக்கையானவர் எனவும், இப்னு மஈன் பரவாயில்லை எனவும் கூறியுள்ளனர். (பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப் :803)
ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் மூலமாக ஆதாரபூர்வமான அறிவிப்பில் பின்வரும் துஆ இடம்பெற்றுள்ளது.
جَعَلَهُ اللَّهُ مُبَارَكًا عَلَيْكَ وَعَلَى أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
இதே துஆ அய்யூப் ஸக்தியானி )ரஹ்( அவர்கள் மூலமாகவும் வந்துள்ளது. (ஆதாரம்: இமாம் தபரானியின் துஆ எனும் நூல் :945, 946, இப்னு அபீ துன்யாவின் النفقة على العيال: 202)
இவைகள் அனைத்தையும் விட நபியவர்கள் ஓதிய ஆதாரபூர்மான பின்வரும் துஆவே மிகச் சிறந்ததாகும்.
بَارَكَ اللَّهُ لَكَ فِيهِ وَجَعَلَهُ بَرًّا تَقِيًّا
பெண் பிள்ளையாக இருந்தால் பின்வருமாறு மாற்றி ஓதவேண்டும்.
بَارَكَ اللَّهُ لَكَ فِيهِ وَجَعَلَها بَرَّةً تَقِيَّةً
ஒரு பெண்மணிக்கு வாழ்த்துச்சொல்வதாக இருந்தால் "லக" என்பதை "லகி" என மாற்றி ஓத வேண்டும்.
உசாத்துணை நூல்
وصول الأماني بأصول التهاني للسيوطي بتحقيق يحيى الحجوري
தொகுப்பு: அப்துல்லாஹ் உவைஸ் மீஸானீ

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts