லேபிள்கள்

வியாழன், 15 நவம்பர், 2018

கவ்ஸர் (நீர் தடாகம்)


மௌலவி யூனுஸ் தப்ரீஸ்சத்தியக் குரல் ஆசிரியர்

மறுமை நாளில் நல்லடியார்களின் தாகம் தீர்ப்பதற்காக அல்லாஹ்வால் விசேசமாக ஏற்பாடு செய்யப்பட்டநீர் தடாகம் தான் இந்த கவ்ஸராகும். இந்த கவ்ஸரைப் பற்றிய சில தகவல்களை நாம் அறிந்து கொள்வோம்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என்னுடைய இல்லத்திற்கும் என்னுடைய மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும்.
 என்னுடைய மிம்பர் என்னுடைய  (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
 (புகாரி 6588)
மேலும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் உங்களுக்கு முன்பே (அல்கவ்ஸ்ர்) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்"
என (ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6589)
தடாகத்தின் பரப்பளவு
ஹாரிஸா(ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) அறிவித்தார்:
"(அல்கவ்ஸர் எனும்) என்னுடைய தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ஸன்ஆவிற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்" என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் இப்னு
 ஷத்தாத்(ரலி) அவர்கள் என்னிடம் அதன் கோப்பைகள் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? என்று வினவினார்கள். நான் இல்லை என்றேன். அதற்கு அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும் என (நபி(ஸல்) அவர்கள் தெரிவித்ததாக)ச் சொன்னார்கள். (புகாரி 6592)
மற்றொரு ஹதீஸில்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அல்கவ்ஸர் எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்"
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 6579)
மற்றொரு ஹதீஸில்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளில் என்னுடைய அல்கவ்ஸர் எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ஜர்பா மற்றும் அத்ருஹ் ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும்"
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
 (புகாரி 6577)
மேற்ச் சென்ற ஹதீஸ்கள் நபியவர்களின் நீர் தடாகத்தின் அளவை எடுத்து காட்டுவதற்காக சொல்லப்பட்ட செய்திகளாகும். மேலும்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான் (வானவர்) ஜிப்ரீலே! இது என்ன? என்று கேட்டேன். அவர் இதுதான் உங்களுடைய இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸா என்றார். அதன் மண் அல்லது அதன் வாசனை நறுமணமிக்க கஸ்தூரியாகும்"
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.(புகாரி 6581)
கவ்ஸருக்கு அருகிலிருந்து விரட்டப்படக் கூடியவர்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் (அல்கவ்ஸ்ர்) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள் என்று கூறப்படும்"
இதை அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்: அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம் என்று பிரார்த்திப்பார்கள். (புகாரி 6593)
மேலும்,
(அறிவிப்பாளர்) அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ்(ரஹ்) அவர்கள் இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்,
"(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று நான் கூறுவேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று சொல்லப்படும். உடனே நான் எனக்குப் பின்னால் (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! என்று (இரண்டு முறை) கூறுவேன்"
 (புகாரி 6584)
மேலும்,
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது என்னைவிட்டு அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். அப்போது நான் (இவர்கள்) என் தோழர்களாயிற்றே! என்பேன். அதற்கு இறைவன் உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள்
அறியமாட்டீர்கள் என்பான்.
என அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6582)
மேற்ச் சென்ற மூன்று ஹதீஸ்களில் முதலாவது ஹதீஸில் நபியவர்களுக்கு பின்னால் மதம் மாறியவர்கள். அதாவது இஸ்லாத்தில் இருந்து விட்டு பிறகு மீண்டும் பழைய மார்க்கத்திற்கு மாறியவர்கள்.அவர்களுக்கு மறுமையில் நீர் அருந்தும் பாக்கியம் கிடைக்காது மாறாக நரகத்திற்கு திருப்பப் படுவார்கள். அடுத்த இரண்டு ஹதீஸ்களிலும் நபியவர்களின் மரணத்திற்கு பிறகு மார்க்கம் என்ற பெயரில் சில புதியவைகளை உண்டாக்கியவர்கள் என்பதை நபியவர்கள் உறுதிப் படுத்துகிறார்கள்.
எனவே நபியவர்கள் வாழும் போது நமக்கு மார்க்கமாக எவைகள் சொல்லித் தரப்பட்டனவோ அவைகளை நாம் சரியாக விளங்கி நடைமுறைப்படத்த வேண்டும். நல்லது தானே என்றடிப்படையில் நபியவர்கள் சொல்லி தராத செய்திகளை நாம்மார்க்கமாக நடை முறைப்படுத்தினால் நமது மறுமை
நிலை மோசமாகி விடும் என்ற எச்சரிக்கையை தான் இறுதியாக சொல்லப்பட்ட இரண்டு ஹதீஸ்களும் நமக்கு உறுதிப்படுத்துகின்றன. எனவே மறுமையை பயந்து சரியான மார்க்கத்தை விளங்கி இவ்வுலகில் அமல்கள் செய்வோமாக!



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts