லேபிள்கள்

செவ்வாய், 13 நவம்பர், 2018

பெற்றோர்களே! எச்சரிக்கையாக இருங்கள்…


மௌலவி யூனுஸ் தப்ரீஸ்சத்தியக் குரல் ஆசிரியர்

உலகத்தில் மிகச் சிறந்த செல்வம் பிள்ளைச் செல்வம் என்பார்கள். திருமணம் முடித்தவுடன் அடுத்ததாக தங்களுக்கு பிள்ளைகள் வேண்டும் என்று அனைத்து தம்பதியினரும் எதிர்பார்ப்பார்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல, ஒரு தாய் தன் குழந்தையை பெற்றெடுப்பது எப்படி கஷ்டமோ, அதை விட அவர்களை நல்ல முறையில் வளர்த்தெடுப்பது கஷ்டமாகும்.
பெற்றோர்கள் நல்லவர்களாகவும், சரியான வழிக்காட்டிகளாகவும் இருந்தால் பிள்ளைகளும் சரியான முறையில் வளர்ந்து வருவார்கள்.பெற்றோர்கள் கவனயீனமாக இருந்தால் பிள்ளைகள் பல வழிகளில் வழி தவறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு பிள்ளைகளும் இயற்கை(இஸ்லாம்) மார்க்கத்தில் பிறக்கின்றன. அவர்களை பெற்றோர்கள் தான் திசை திருப்புகிறார்கள் என்பது இஸ்லாம் கூறும் அடிப்படை கொள்கையாகும். இரண்டு பெண் பிள்ளைகள் இருந்து, அவர்களை பருவ வயது வரை சரியான மார்க்கத்தின் அடிப்படையில் வளர்த்தெடுத்தால், அந்த பெற்றோர்களுக்கு சுவர்க்கம் என்று நபியவர்கள் கூறினார்கள். மேலும் உங்களுக்கு பின்னால் பிரார்த்தனை செய்யும் பிள்ளைகளாக உங்கள் பிள்ளைகளை விட்டுச் செல்லுங்கள் என்றும் நபியவர்கள் கூறினார்கள்.
மேலும் "முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். -66:06
குடும்பத்தோடு சுவர்க்கம் செல்ல வேண்டும் என்று மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் ஒவ்வொரு பெற்றோருக்கும் எச்சரிக்கையாக கட்டளையிடுகிறது. அப்படியானால் தங்களை மார்க்கத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டால் தான் அந்த பாக்கியம் கிடைக்கும். இல்லாவிட்டால் மறுமையின் நிலை மிகவும் மோசமாக மாறிவிடும் என்பதை தெளிவாக பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அடியார்களை பல வழிகளில் வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விடம் சபதம் போட்டு வந்த ஷைத்தானின் பாவத்தின் சூழ்ச்சிகள் ஒரு பக்கம் அலங்கரிக்கப்பட்டு வியாபித்து நிற்கின்றன. மறுபுறம் எதிரிகள் மூலமாக ஷைத்தானின் நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இளம் பெண்களை குறி வைத்து காய் நகர்த்தப் படுகிறது. ஒன்றும் தெரியாத அப்பாவி இளம் பெண்கள் சூழ்ச்சிகாரர்கள் விரிக்கும் காதல் என்ற மாய வலைக்குள் சிக்கி இறுதியில் சீரழிந்து போகும் துர்பாக்கியமான காட்சியை நாம் கண்டு வருகிறோம். காதலனின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகி தன்னை கஷ்டத்திற்கு மேல், கஷ்டப்பட்டு பெற்றறெடுத்த தாயையும், தன்னை வளர்த்தெடுப்பதற்காக வெயிலிலும், மழையிலும் இரவு, பகல் பாராமல் தன்னை தியாகம் செய்த தந்தையையும் கதற, கதற விட்டு, விட்டு, வீட்டை விட்டே ஓடிப்போக கூடிய அவல காட்சியை கண்டு யாரும் கண்கலங்காமல் இருக்க மாட்டார்கள்.
இன்று இலங்கை, மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இஸ்லாத்தின் எதிரிகள் பலவிதமான சூழ்ச்சிகளில் இஸ்லாமிய இளம் பெண்களை குறி வைத்து உச்சக் கட்ட நல்லவர்களைப் போல நடித்து, அந்தப் பெண்களை காதலிப்பது போல பல ஆசை வார்த்தைகளை கூறி இறுதியில் தனது காதலனுக்காக பெற்றோர்களை வெறுத்து உதறி தள்ளி விட்டு தனது காதலனோடு வெளியேறி விடுகிறார்கள்.
தனது காரியாலயத்தில் வேலை செய்யும் போது தனது மீது அதிகமாக இவர் இரக்கம் காட்டுகிறார், மிகவும் நல்லவராக இருக்கிறார் இவரையே நான் திருமணம் செய்து கொண்டால் எனது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று அந்த கயவனின் நரிப் புத்தியை விளங்கிக் கொள்ளாமல் தப்பான முடிவுக்கு வந்து விடுகிறாள்.அல்லது தனது பக்கத்து வீட்டு பையன் தனக்கு பல வழிகளில் உதவிகள் செய்கிறார் என்ற அவனின் நடிப்பின் நாடகத்தை விளங்கிக் கொள்ளாமல் தவறான நம்பிக்கையில் தன்னை இழந்து விடுகிறாள். முஸ்லிம் இளம் பெண்களை சீரழிக்க வேண்டும் என்று இன்று பல கயவர்களுக்கு சிறப்பு பயிச்சி கொடுத்து அவர்கள் நல்லவர்களைப் போலஇளம் பெண்களோடு நெருக்கமாக பழகி வருவதை பெற்றோர்கள் அடிக்கடி தனது பெண் பிள்ளைகளுக்கு எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
பின் வரும் குர்ஆன் வசனம் மூலம் அல்லாஹ் நமக்கு சொல்லக் கூடிய உபதேசத்தை சற்று ஆழமாக சிந்தியுங்கள்:
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்கு கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். -2:221
சமீபத்தில் கேரளாவில் நடந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் முதல் தர எதிரி அமைப்பான R S S இயக்கத்தை சார்ந்த ஒருவரை யார் என்று தெரியாமல் அவனின் தந்திரமான வலையில் சிக்கி, அவனுடன் நெருக்கமாக பழகி (காதலித்து) கடைசியில் அந்த விவகாரம் நீதி மன்றம் வரை போய் இறுதியில் காதலனோடு சேர்ந்து வாழலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து, அந்த இளம் முஸ்லிம் பெண் R S S இயக்க காதலனோடு போகும் போது அந்த நீதி மன்ற வளாகத்தில் துடிதுடித்தவராக தன் அருமை மகளைப் பார்த்து (மோளே, மோளே) மகளே, மகளே, என்று கத்தி அழுது கொண்டு தந்தை அழைத்த காட்சியைப் பார்த்த அனைவருடைய கண்களும் கலங்கி விட்டன. இவளும் ஒரு மகள் தானா ? வளர்த்த பெற்றோர்களுக்கு துரோகம் செய்து விட்டு, இப்படி அநியாயமாக போகிறாளே, இவள் உருப்படுவாளா என்று பல கோணங்களில் சாபத்தின் சாயல்கள் மக்களிடமிருந்து வந்து கொண்டே இருந்தன.
இப்படியான பல சம்பவங்கள் அடிக்கடி ஆங்காங்கே நடந்து வருகிறது. வெள்ளம் வரும் முன் அணை கட்டுவோம் என்றடிப்படையில் நமது பிள்ளைகளுக்கு இப்படியான நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் ஒவ்வொரு பெற்றோர்களும் நிதானமாக சிந்திக்க வேண்டும்.
இன்று இஸ்லாத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இப்படியான சூழ்ச்சிகள் திரை மறைவில் பரவலாக உலா வந்து கொண்டிருக்கிறது.
முதலில் இப்படியான செய்திகளை தனது பிள்ளைகளுக்கு பகிரங்கமாக பெற்றோர்கள் அடிக்கடி எடுத்துக் காட்ட வேண்டும். ஒரு பக்கம் பெற்றோர்களுக்கு கேவலம்,மறுபக்கம் இது வரை ஏற்றுக் கொண்ட இஸ்லாத்திற்கும் அவமானம் என்பதை துல்லியமாக எடுத்துக் கூறுங்கள். மார்க்கம் சம்பந்தமான வகுப்புகளுக்கு தனது பிள்ளைகளை அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்.
பிரத்தியேக தனியார் (டியூசன்) வகுப்புகளுக்கு அனுப்பும் போது அங்குள்ள சூழல்களை கட்டாயம் அவதானியுங்கள். ஆண், பெண் கலப்பு குறிப்பாக அந்நியர்கள் நடாத்தும் வகுப்புகள் சர்வ சாதாரணமாக இரண்டரக் கலந்து எல்லைகள் மீறப்படும். நானே அழைத்து செல்கிறேன்,வகுப்பு விட்டவுடன் நானே மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்ற நிலை இருந்தாலும் வகுப்பிற்குள் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாது. விசயம் முற்றிவிட்டது என்றால் நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்களது பிள்ளையை சரியான முறையில் பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
உங்கள் பிள்ளையே உங்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தி விடுவார். சில பெற்றோர்கள் எனது பிள்ளையை அப்படி , இப்படி படிக்க வைக்க வேண்டும் என்று இப்படியான தனியார் வகுப்புகளுக்கு தனியாக அனுப்புகிறார்கள். ஆனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை கவனிக்க மறந்து விடுகிறார்கள்.
அடிக்கடி மகளை மட்டும் தனியாக ஆட்டோவில் அங்குமிங்கும் அனுப்பி வைப்பது, இன்னும் சிலர் ஏனைய பெண்பிள்ளைகளோடு தானே எனது மகள் போகிறாள் என்ற நம்பிக்கையில் அனுப்பி வைப்பது, இன்னும் சிலர் என் மகள் தங்கம் என்று சக ஆண் பிள்ளைகளுடன் சர்வ சாதாரணமாக பழக விடுவது, எனது மகள் குனிந்த தலை நிமிர மாட்டாள் என்ற தப்பான நம்பிக்கைகள்.
பெற்றோர்களை பொறுத்தவரை ஒரு பக்கம் பயமிருந்தாலும், மகள் மீதுள்ள நம்பிக்கையில் இப்படி நடந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் எனது சகோதரி வீடு தானே எனது உறவுக்கார வீடு தானே என்ற நம்பிக்கையில் மகளை அங்கு தங்க வைத்து படிக்க வைக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் நமது எதிரியான ஷைத்தான் ஒரு வினாடியில் திசை திருப்பி விடுவான் என்பதை மறந்து விடக் கூடாது. மேல் படிப்புகளை படிக்க வைக்க வேண்டும். அதற்கான சூழல் இடம் தருகிறதா என்பதை நன்கறிந்து களத்தில் தனது பிள்ளைகளை இறக்குங்கள்.
இன்று பெண் பிள்ளைகளை மார்க்க அடிப்படையிலும், உலக அடிப்படையிலும் சரியான முறையில் உருவாக்க பல மத்ரஸாக்கள் அதிகமான ஊர்களில் உள்ளன. அப்படியான மத்ரஸாக்களில் தனது பிள்ளைகளை சேர்த்து எதிர் காலத்தில் தனக்கும், இந்த சமுதாயத்திற்கும் சிறந்த முன்மாதிரியான பிள்ளைகளாக மாற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லது தப்பான வழியில் செல்லாத அளவிற்கு மார்க்க பயிற்சிகளை கொடுத்து வாருங்கள். மார்க்கத்தோடு இருப்பவர்களோடு நட்புகளை ஏற்ப்படுத்தி கொடுங்கள். வீட்டில் இருக்கும் போது மார்க்கம் சம்பந்தமான அம்சங்களை வாசிப்பதற்கு வசதிகளை செய்து கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் விசயத்தில் நீங்கள் நிழலாக இருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts