*நீண்ட நேரம் சார்ஜில் இருந்தபின்னும் மொபைல் ஆன் ஆகவே இல்லையென்றால், பேட்டரியின் கதை முடிந்தது என்று அர்த்தம். இது தெரியாமலே சிலர் பழைய பேட்டரியுடன் போராடிக் கொண்டு இருப்பார்கள். மொபைல் போனின் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம்.
* சில பேட்டரிகள், சக்தியை மொபைலுக்கு அனுப்பும் திறனை இழந்திருக்கும். சார்ஜ் போட்டால் மொபைல் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கும். ஆனால், சார்ஜிலிருந்து எடுத்தவுடன் மொபைல் ஆஃப் ஆகிவிடும். இந்த பேட்டரியை உடனே மாற்ற வேண்டும்.
* அனைத்து ரீசார்ஜபிள் பேட்டரிகளும் சூடாகும். இப்படி சூடாவது வெளியே தெரியாத அளவுக்கு இந்த பேட்டரிகள் தயார் செய்யப்படும். அதையும் மீறி, பேட்டரி சூடானால் அதன் வாழ்நாள் முடிவை நெருங்குகிறது என்று அர்த்தம்.
* ஆண்ட்ராய்டு போனைப் பயன்படுத்துபவர்கள் *#*#4636#*#* என்ற எண்ணை டயல் செய்யலாம். உங்கள் பேட்டரியின் தற்போதைய மெடிக்கல் ரிப்போர்ட்டை அது சொல்லிவிடும்.
* சில பேட்டரிகள் நன்றாக சார்ஜ் ஏறும்; 50% குறையும் வரை பிரச்னை இருக்காது. ஆனால், அதன்பின் சில நிமிடங்களிலே மொத்த சார்ஜும் குறைந்து, மொபைல் ஆஃப் ஆகிவிடும். இதுவும் பேட்டரியின் பிரச்னைதான். இப்படி, சக்தி சீராக ஏறி இறங்காமல் இருந்தால், அந்த பேட்டரியையும் மாற்றிவிடுவது நல்லது.
* பேட்டரியை மாற்றும்போது, கம்பெனியின் அதிகாரபூர்வமான சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றுவது நல்லது. ஏனெனில், மொபைலில் உள்ள பிரச்னையை பேட்டரியில் உள்ள பிரச்னையாக நாம் கருதிவிட வாய்ப்புண்டு. சர்வீஸ் சென்டரில் தரும்போது நம் மொபைலை முழுமையாகச் சோதித்து, பேட்டரியில் பிரச்னையா அல்லது செல்போனில் பிரச்னையாக என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள்.

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக