லேபிள்கள்

திங்கள், 29 அக்டோபர், 2018

20 முதல் 50 வயதுக்குள் தவிர்க்க வேண்டிய நிதிசார்ந்த தவறுகள்!

நம்மில் பெரும்பாலானோர் மாதச் சம்பளமே கதி என வாழ்கிறோம். ஒவ்வொரு மாத இறுதியிலும், 'எப்போது முதல் தேதி வரும்?!' எனத்  தவமாய்த் தவம் இருக்கிறோம். அலுவலகத்தில் ஓரிரு நாள் சம்பளம் தாமதமானால்கூட ஒருசிலர் மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிடுவர்.
தெரிந்தவர், தெரியாதவர், நண்பர்கள் என, பார்க்கும் அனைவரிடமும் கடன் வாங்கிவிடுவர். இதற்குக் காரணம், `குறைவான சம்பளம்' என்று பலரும் சொல்லலாம். ஆனால், அந்தச் சம்பளத்தை வைத்து சரியான நிதி திட்டமிடலுடன் வாழ்க்கையை சிறப்பாக நடத்துவதுதான் நமது சாமர்த்தியம். இதை வயதுவாரியாகப் பிரித்துப்பார்ப்போமா?
20 வயதினர்
பொதுவாக, 20 வயதுக்கு மேல்தான் கல்லூரி வாழ்க்கையை முடித்து, அலுவலகப் பணிக்குச் சென்று கையில் பணத்தைப் பார்க்கத் தொடங்குவோம். பெறும் சம்பளத்தில், அவர்களுடைய எதிர்காலத் தேவைக்காக எந்த முதலீட்டையும் செய்வதுமில்லை; ஓய்வூதியத்துக்குத் திட்டமிடுவதும் இல்லை. 20 வயதில் இருந்தே குறைந்தபட்சப் பணத்தையாவது மாதந்தோறும் முதலீடு எனும் பெயரில் விதைத்துவந்தால், ஓய்வுபெறும் வயதில் அந்தப் பணம் பெரிய விருட்சமாக வளர்ந்து நமக்கு நிழலாக இருக்கும். ஆகவே, வாங்கும் சம்பளத்தில் நம்முடைய முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்.
30 வயதினர்
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான வயது 30. இந்த வயதில்தான் ஒருவர் தனது எதிர்காலத்தை நிர்ணயித்து, அதற்கு ஏற்றாற்போல் பயணிக்க முடியும். ஆனால், பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்படாத சேமிப்புத் திட்டங்களிலும், தவறான நிதித் திட்டமிடலிலும் பணத்தை முதலீடு செய்து வருமானத்தை இழப்பதோடு, வாழ்க்கையையும் இழக்கின்றனர். மேலும், தேவையில்லாத பொருள்களை அதிக விலைக்கு வாங்கி, பகட்டு வாழ்க்கையைப் பறைசாற்றிக்கொள்ள பணத்தை வீணாக்குகின்றனர். வரும் வருமானத்தில் இப்படியே செலவுகள் செய்துகொண்டிருந்தால், குடும்பப் பொறுப்பு கூடிய பிறகு அதைச் சமாளிக்க வழி தெரியாமல் தவிக்கும் நிலை வந்துவிடும். இதைத் தவிர்க்க, நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஏற்றதொரு முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, நம்மால் முடிந்த அளவுக்கு சேமிப்பது நல்லது.
40 வயதினர்
40 வயதினரைப் பொறுத்தவரை அநேகருக்குத் திருமணமாகி, குழந்தைகளுடன் குதுகலமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பர். ஆனால் ஒருசிலர், பெரும்கடன் சுமையில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பர். ஏனெனில், கல்விக் கடன், திருமணக் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன் என ஏதேனும் ஒரு கடனில் சிக்கித் தவிப்பர். கடன் எதுவும் இல்லையென்றால்கூட, வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக வாழ்ந்திட எந்த ஓர் எதிர்காலத் திட்டமோ எண்ணமோ இருப்பதில்லை. வாழ்க்கையில் குறிக்கொள் வைத்து வாழ்வதே சிறப்பு!
50 வயதினர்
நம்மில் பலர் வாழ்க்கையை ஆண்டு அனுபவித்து வந்தாலும்,  சிலருக்கு மட்டுமே `நம்முடைய ஓய்வுக்காலத்தில் பணம் தேவைப்படும்' என்ற எண்ணமே வரும். அதே சமயம் 50 வயதில்கூட `ஓய்வூதியம் பற்றிய எண்ணமோ, வாழ்க்கையின் இறுதி நாள்களில் பாதுகாப்பான தருணத்துக்குப் பணம் தேவை. அதற்கு ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்' என்ற எண்ணமோ இருப்பதில்லை. அப்படியே ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதாக இருந்தாலும், அதிகமாகப் பணம் செலவழித்து முதலீடு செய்வதும் தவறு.
உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ஒவ்வொருவரும் மற்றவர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறார்கள். ஒருசிலர் சரியாக உண்ணாமலும் உறங்காமலும் உழைத்துவருகிறார்கள். அதே சமயம் நம்முடைய கனவை நிறைவேற்றுவதற்காக சிறிதளவாவது உழைக்கிறோமோ என்றால், இல்லை என்பதே பதில்.
உழைக்க வேண்டும் என்றால், அலுவலக வேலையை முடித்துவிட்டு ஆறு மணிக்கு மேல் வேறு ஒரு கடையிலோ, அலுவலகத்திலோ சேர்ந்து வேலைசெய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய பணத்தைச் சரியான நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தாலே போதும். நாம் உழைப்பதைப்போல நம்முடைய பணமும் உழைக்கத் தொடங்கி வருமானத்தை வழங்கும். ஆனால், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நிதி சார்ந்த பல தவறுகளை அறியாமல்  செய்து, வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்கின்றனர்.
ஆகையால், நம் வாழ்க்கையை வளமாக்கிட, நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவோம்… செழிப்போம்!



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 27 அக்டோபர், 2018

நம் குடலில் உள்ள குடல் புழுக்கள் வெளியேற...... உணவே_மருந்து!!!

நம் குடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை எப்படி கண்டறிவது என்று கேட்கலாம்.
நிச்சயம் அதற்கும் அறிகுறிகள் உள்ளன.
அவை வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை
சிறுகுடற்புழுக்களை நீக்க குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மருந்து
இரத்த சோகை சத்துக் குறைபாடு செரிமானக் கோளாறுகள் அலர்ஜி மலச்சிக்கல் வயிற்ருப் போக்கு ஆகிய பிரச்சினைகள் தீர்ந்து குடல் இயக்கம் சீர் படும்.

#மருந்து_ஒன்று
சுண்டைக்காய்ப் பொரியல்
பச்சை சுண்டைக்காயை நைத்து எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி சீரகம் வெந்தயம் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை போட்டு தாளித்து நைத்து வைத்திருக்கும் சுண்டைக்காயைப் போட்டுக் கிளறி மஞ்சள் தூள் போட்டிக் கிளறி மிளகுத்த்கூல் கல் உப்புப் போட்டு பொரியலாக்கி இறக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் நீங்கும்.

#மருந்து_இரண்டு 
பாகற் காய் கூட்டு மிதி பாகல் அல்லது நாட்டு பாகற்காய் மட்டும் பயன் படுத்த வேண்டும்
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் பெருங்காயம் பாகல் காய் துவரம்பருப்புடன் பூண்டு சேர்த்து வேக வைத்து எடுத்த பருப்பு மசியல்ஆகியவற்றை சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்

#மருந்து_மூன்று
அகத்திக் கீரை பூண்டு சாறு
அகத்திக் கீரை சாறு .. ஒரு தேக்கரண்டி
பூண்டு சாறு. .... .. ஒரு தேக்கரண்டி
தேன் ....... தேவையான அளவு
மூன்றையும் கலந்து தினமும் காலையில் ஒரு வாரம் மட்டும் குடித்து வர குடலில் தங்கியிருக்கும் புழுக்கள் வெளியேறும்

#மருந்து_நான்கு
வாய் விடங்கப் பொடி
வாய் விடங்கம் ஓமம் மிளகு சுக்கு கறிவேப்பிலை கல் உப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து ஆறவைத்து ஒன்றாக சேர்த்து அரைத்துப் பொடியாக எடுக்க வேண்டும்
இந்த வாய் விடங்கப் பொடியை தோசை இட்டிலி சோறு போன்ற உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர குடல் புழுக்கள் வெளியேறும்
குறிப்பு : வாய் விடங்கம் அல்லது வாய் விளங்கம் என்பது மிளகு போன்ற ஒரு பொருள் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் அது தமிழ் நாட்டு அடுக்களையில் மிளகு போல தவறாமல் இடம் பிடித்திருந்த நாம் மறந்துவிட்ட பொருள் இது

#மருந்து_ஐந்து 
வேப்பிலை துவையல்
சிலர் வேப்ப இலைக் கொளுந்துகளை அரைத்துக் குடிப்பர்
கசப்பு காரணமாக சிலர் குடிக்க மறுப்பார்கள் அப்படிப் பட்டவர்கள் கீழ்க்கண்டவாறு வேப்பிலை உருண்டைகள் செய்து விழுங்கலாம்
வேப்பங் கொழுந்து கறிவேப்பிலை பூண்டு மிளகு ஓமம் சுக்கு ஆகிய பொருட்களைத் தேவையான அளவு எடுத்து நாட்டுப் பசு நெய்யில் பொன்னிறமாக வறுத்து இறக்கி ஆறவைத்து கல் உப்பு சேர்த்து அரைத்து துவைலாக்கி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விழுங்கி தண்ணீர் குடிக்க குடல் புழுக்கள் வெளியேறும்.

#மருந்து_ஆறு 
குப்பைமேனியிலையை நிழலில் உலர்த்திப் பொடித்து 1/2 தேக்கரண்டிஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள், மலப்புழுக்கள் வெளியேறும். நீரில் கலந்தும் கொடுக்கலாம்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது
பெரியவர்கள் குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. அளவு குடித்து வர பெரியவர்களின் குடல் புழுக்கள் வெளியேறும்.

#மருந்து_ஏழு
கீரை சூப்
சின்ன வெங்காயம் - இரண்டு
நல்ல மிளகு - இரண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
தேவையான அளவு - கீரை (தண்டுக்கீரை அல்லது அகத்திக்கீரை)
பூண்டு - 1 பல்
சேர்த்து சூப் செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் மாலை வேளையில் அருந்தி வந்தால் குடற்புழுக்கள் நீங்கும்.

#மருந்து_எட்டு
* யானை திப்பிலி, அரிசி திப்பிலி, வேப்பிலை, சுக்கு, சீந்தில் தண்டு, நிலவேம்பு, சுண்டை வற்றல் ஆகியவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து, சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
* 10 கிராம் பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 100 மிலியாக சுண்டியபின் வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்துவர, வயிற்றுப்புழுக்கள் வெளியேறும்.

#மருந்து_ஒன்பது 
*புழுத்தொல்லையினால் ஏற்பட்ட தோல் தடிப்பு, வெள்ளை நிற மாவு படிதல், மலவாய் அரிப்பு, பலவிதமான வயிற்று உபாதைகள் நீங்க யானைத்திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடித்து 1 கிராம் அளவு எடுத்து தேனுடன் குழப்பி, 3 முதல் 7 நாட்கள் சாப்பிட்டுவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

#மருந்து_பத்து
குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.

#மருந்து_பதினொன்று 
குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமானத்தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 25 அக்டோபர், 2018

குழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு பால் குடிக்கலாம்.....Good Parenting !

பாலுக்கும் மனிதர்களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை பால் மனிதர்களின் வாழ்வில் ஒன்றியிருக்கிறது. தாய்ப்பாலைவிட குழந்தைகள் அதிகம் பருகுவது பசும்பால்தான். குழந்தைக்குத் தேவையான புரோட்டீன், கால்சியம், விட்டமின் பி12 என ஏராளமான சத்துக்கள் பாலில் கிடைப்பதால், குழந்தையின் முதல் ஆறு மாதங்கள் பால் மட்டுமே முழு உணவுத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வோர் உணவாகக் குழந்தை உண்ணத் துவங்குகிறது. மற்ற உணவுகளோடு பாலும் அதிகளவில் வழங்கப்படுகிறது. இப்படி குழந்தையின் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கும் பால், சரியான வழியில்தான் நமக்குக் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு, இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாலில் நடக்கும் அரசியல் அதிர்ச்சிகரமானவை.

பாலில் யூரியா கலக்கப்படுகிறது. பசுக்களின் பால் சுரப்புக்காக மருந்துகள், ஊசிகள் போடப்படுகின்றன. ஆண்டிபயாடிக் மருந்துகள் பசுக்களுக்கு வாரி வாரிக் கொடுக்கப்படுகிறது. இப்படி எல்லாம் செய்து பசுவின் மடியிலிருந்து கரக்கப்படும் பாலை அருந்தும் மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகிறது என்ற சர்ச்சைகள் வந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, 'பசுவின் கரந்தப் பாலை அப்படியே கொடுக்கக் கூடாது. பதப்படுத்தப்பட்டு, பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலைதான் கொடுக்க வேண்டும்' என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். குழந்தைகளின் வயதுக்கேற்ப ஒருநாளைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும்? எந்த மாதிரியான பால் நல்லது என்பது பற்றி விளக்கம் அளிக்கிறார், மதுரையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர், செல்வ பிரமிளா.

'பாலில் கால்சியம் உட்பட ஏராளமான சத்துகள் இருக்கிறது. மற்ற உணவுகளைவிட பாலைக் குடிக்கும்போது கால்சியம் சத்துகள் முழுமையாக உடலுக்குக் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட பால் நல்லது. தற்போது சின்தடிக் பால் என விற்பனைக்கு வருகிறது. ஐந்து அல்லது ஆறு நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்கிறார்கள். சின்தடிக் பால் வகைகளைக் குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது. பதப்படுத்தப்பட்ட ஆவின் பால் நல்லது. சிறிய குழந்தைகள் சாதம் போன்ற உணவுகளைச் சாப்பிடத் துவங்குவதற்கு முன்னர், அழும்போது தேவைக்கேற்ப பால் வழங்கலாம். எந்த வயதுடைய குழந்தையாக இருந்தாலும், பாட்டிலில் பால் கொடுக்கக் கூடாது. பாட்டிலில் பாலை ஊற்றிக் கொடுப்பதால், இன்பெக்க்ஷன் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், ஸ்பூனில் கொடுக்க வேண்டும். கொஞ்சம் பெரியவர்களானதும் டம்ளரில் குடிக்கப் பழக்க வேண்டும்.

வளரிளம் பருவக் குழந்தைகளுக்குப் பால் மிகவும் அத்தியாவசியமான, அவசியமான உணவு. குழந்தைகள் உணவு உண்ணத் துவங்கிய பின்னர் காலையில் ஒரு டம்ளர், மாலையில் ஒரு டம்ளர் என 500 மி.லி அளவில் பால் வழங்கினால் போதும். பாலில் சுண்ணாம்புச் சத்து, கால்சியம் அதிகளவில் உள்ளது. பற்களின் ஆரோக்கியத்துக்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் பால் அவசியமான ஒன்று. எப்போதெல்லாம் எந்த அளவில் பாலைக் கொடுக்க வேண்டும் என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். சில பெற்றோர்கள், மற்ற உணவுகளை ஊட்டுவதற்குச் சோம்பல் பட்டு வளர்ந்த குழந்தைகளுக்குக்கூட பாலை ஊற்றிக் கொடுப்பதை பார்க்க முடிகிறது. அவ்வாறு செய்வது மிகவும் தவறு. இரவு தூக்கத்தில் குழந்தைகள் அழுதால்கூட, பாட்டிலில் பாலை ஊற்றிக் கொடுத்துவிடுவார்கள். எதற்காக அழுகிறது, ஏன் அழுகிறது என்பதையெல்லாம் கவனிப்பது இல்லை. இதுவும் தவறு. தூக்கத்தில் பாலைக் கொடுப்பதால் வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று, வயிறு சம்பந்தமான உபாதைகளை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்குப் பற்கள் விழுந்து முளைப்பதற்குள், சொத்தைகள் அரிக்கப்பட்டு இருக்கும். பற்களைச் சுத்தப்படுத்தாமல் பாலைக் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்குப் பற்களின் சுகாதாரம் அவசியம். தொடர்ந்து பால் அருந்திக்கொண்டே இருக்கும் குழந்தைகளால் கடினமான பொருட்களை கடித்து மெல்ல இயலாத நிலை ஏற்படும்.

காலையில் எழுந்ததும் பல் முளைத்த குழந்தைகள் பல் துலக்கிய பின்னரும், பல் முளைக்காத குழந்தைகளாக இருந்தால் வாய் கொப்பளித்த பின்னரும் ஒரு டம்ளர் பால் குடிப்பது சரியான வழிமுறை. பின்னர், பெரியவர்கள் போல அவர்களும் காலை உணவாக இட்லி, தோசை உட்கொள்ள வேண்டும். பல பெற்றோர்கள் இட்லி, தோசைக்கும் குழந்தைகளுக்கு பால் ஊற்றி, சர்க்கரை போட்டு சாப்பிட வைக்கின்றனர். ஒரு வயது முடியும்போதே சட்னி அல்லது சாம்பாரை தொட்டு சாப்பிடப் பழக்க வேண்டும். மாலை நேரத்தில் ஒரு டம்ளர் பால் கொடுக்கலாம். இரவு பருப்பு சாதம் அல்லது பால் சாதம் அல்லது இட்லி என திட உணவாகக் கொடுத்தாலே போதும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் தூக்கத்தில் பால் கொடுப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் செல்வ பிரமிளா.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 23 அக்டோபர், 2018

மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்!

இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையானபோது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்துகொள்கிறோம். அதை விரும்பும்போது மீண்டும் மைக்ரோவேவ் அவனிலோ, அடுப்பிலோ வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. எப்போதும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்ற விருப்பமும், அப்படிச் சாப்பிட்டால்தான் ஆரோக்யம் என்ற தவறான எண்ணமும்தான் இதற்குக் காரணம். `உணவுகளை இப்படிச் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்துபோய்விடும். அதுவே உடல் ஆரோக்யத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும்' என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இது ஃபுட் பாய்ஸனிங் தொடங்கி இதய நோய், புற்றுநோய் போன்ற பெரிய நோய்கள் வரை வழிவகுத்து, உயிருக்கே உலைவைத்துவிடும்' என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

சிக்கன் 
கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டீன் உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம்ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்தும்போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். எனவே, இதை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது. ஒரு முறை வறுத்த இறைச்சியை மீண்டும் சூடாகச் சாப்பிட வேண்டும் என்றால், சாண்ட்விச்சாகச் செய்து சாப்பிடலாம்.
கீரை
கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் (Nitrates) சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக (Nitrites) மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும் பண்பு (Carcinogenic Properties) கொண்டது. கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

முட்டை
முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.

காளான் 
காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

சாப்பாடு
அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.
உருளைக்கிழங்கு 
உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும்போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.

சமையல் எண்ணெய்
எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.

 பீட்ரூட்
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது. 



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

தினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள்!

`நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்' - கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளில் பேரீச்சையை இவ்வாறு உயர்வாகக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஒயிலாக வளர்ந்து நிற்கும் பேரீச்சம் பழ மரங்கள் அவற்றின் அழகுக்கும் தித்திப்பான பழங்களுக்கும் பேர்போனவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரீச்சை... பனை வகையைச் சேர்ந்த இந்த மரத்தை அதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. குறைந்த மூலதனத்தில் நிறைவான பலன் தரக்கூடிய இந்த பழத்தை சாப்பிடுவதற்கென நேரம் ஒதுக்கத் தேவையில்லை. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுபோலச் சாப்பிடலாம். ஃப்ரெஷ்ஷாகவோ, உலர்த்தியோ எப்படிச் சாப்பிட்டாலும் ஏராளமான பலன்களை அள்ளித்தருகின்றது. உண்ணத்தகுந்தது மட்டுமல்ல பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது.

மலச்சிக்கல் தீர்க்கும்!
'பேரீச்சை மலச்சிக்கலை உண்டாக்கும்' என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், உண்மையில் பேரீச்சை ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைச் சரிசெய்ய, முதல்நாள் இரவே மூன்று பேரீச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் அவற்றின் சாற்றைக் குடிக்கலாம். பேரீச்சையில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது; கரையக்கூடியது. இது செரிமான மண்டலப் பாதையில் உள்ள நீரை வெளியேற்ற உதவுகிறது. குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயிற்றுப்போக்குக்குச் சிறந்த மருந்தாகும் இது செரிமானச் சக்தியை அதிகரிக்கும்.

இரும்புச்சத்து அதிகரிக்கும்!
பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான எனர்ஜி மற்றும் ஆரோக்கியத்தைத் தரும். ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
இதயத்தை இதமாக்கும்!
இதில் நிறைந்துள்ள பொட்டாசியம், இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பலவீனமான இதயத்துக்கு பலம் தரும். இதயத்துக்கு இம்சை தரக்கூடிய கெட்ட கொழுப்பைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இன்ஸ்டன்ட் எனர்ஜி!
பேரீச்சையில் இயற்கையாகவே இனிப்பு அதிகம். சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் நிறைந்துள்ளன. மதிய நேரங்களில் ஏற்படும் மந்தநிலையை சீர்செய்து உடலுக்குத் தேவையான உடனடி எனர்ஜியைத் தரும். மேலும், இதில் நிறைந்துள்ள மாவுச்சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.

எலும்பை வலுவாக்கும்!
இதில் உள்ள மாங்கனீசு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற நுண் சத்துகள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம். எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோயில் இருந்து நம்மைக் காக்கிறது. குறிப்பாக, பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புறுக்கி நோயைக் குணப்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது.
நினைவாற்றல் பெருக்கும்!

இதில் உள்ள வைட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நரம்பு மண்டலச் செயல்பாட்டை அதிகரிக்கவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கவும் உதவும். ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.

கூடுதல் பலன்கள்!
* தினமும் ஆறு பழங்களைச் சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும்.
* தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமடையும்.
* பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமையைச் சரிசெய்யும்.
* பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்தும்.
* வயிற்றுப் புற்றுநோயைக் குணப்படுத்தக்கூடியது.

உண்ணும் முறை
* உலர்ந்ததாக அல்லது ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், அவற்றை நன்குக் கழுவி சுத்தம் செய்து உண்ண வேண்டும்.
* உணவுகளுடனோ அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.
* பாதாம், வால்நட், உலர் திராட்சை, முந்திரி போன்றவற்றுடன் சேர்த்து ஜூஸாகவும் பருகலாம்.
* பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்து பனங்கற்கண்டுச் சேர்த்துக் காபியாகவும் குடிக்கலாம்.
* தினசரி இரண்டுவேளை பேரீச்சையை நட்ஸ்களுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 19 அக்டோபர், 2018

உங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும்?

*நீண்ட நேரம் சார்ஜில் இருந்தபின்னும் மொபைல் ஆன் ஆகவே இல்லையென்றால், பேட்டரியின் கதை முடிந்தது என்று அர்த்தம். இது தெரியாமலே சிலர் பழைய பேட்டரியுடன் போராடிக் கொண்டு இருப்பார்கள். மொபைல் போனின் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம்.
சில பேட்டரிகள், சக்தியை மொபைலுக்கு அனுப்பும் திறனை இழந்திருக்கும். சார்ஜ் போட்டால் மொபைல் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இயங்கும். ஆனால், சார்ஜிலிருந்து எடுத்தவுடன் மொபைல் ஆஃப் ஆகிவிடும். இந்த பேட்டரியை உடனே மாற்ற வேண்டும்.

* அனைத்து ரீசார்ஜபிள் பேட்டரிகளும் சூடாகும். இப்படி சூடாவது வெளியே தெரியாத அளவுக்கு இந்த பேட்டரிகள் தயார் செய்யப்படும். அதையும் மீறி, பேட்டரி சூடானால் அதன் வாழ்நாள் முடிவை நெருங்குகிறது என்று அர்த்தம்.

* ஆண்ட்ராய்டு போனைப் பயன்படுத்துபவர்கள் *#*#4636#*#* என்ற எண்ணை டயல் செய்யலாம். உங்கள் பேட்டரியின் தற்போதைய மெடிக்கல் ரிப்போர்ட்டை அது சொல்லிவிடும்.

* சில பேட்டரிகள் நன்றாக சார்ஜ் ஏறும்; 50% குறையும் வரை பிரச்னை இருக்காது. ஆனால், அதன்பின் சில நிமிடங்களிலே மொத்த சார்ஜும் குறைந்து, மொபைல் ஆஃப் ஆகிவிடும். இதுவும் பேட்டரியின் பிரச்னைதான். இப்படி, சக்தி சீராக ஏறி இறங்காமல் இருந்தால், அந்த பேட்டரியையும் மாற்றிவிடுவது நல்லது.

* பேட்டரியை மாற்றும்போது, கம்பெனியின் அதிகாரபூர்வமான சர்வீஸ் சென்டரில் கொடுத்து மாற்றுவது நல்லது. ஏனெனில், மொபைலில் உள்ள பிரச்னையை பேட்டரியில் உள்ள பிரச்னையாக நாம் கருதிவிட வாய்ப்புண்டு. சர்வீஸ் சென்டரில் தரும்போது நம் மொபைலை முழுமையாகச் சோதித்து, பேட்டரியில் பிரச்னையா அல்லது செல்போனில் பிரச்னையாக என்பதைத் துல்லியமாகச் சொல்லிவிடுவார்கள்.



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 17 அக்டோபர், 2018

சுகபிரசவம் ஆகும் சில வழிகள் !

· கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சுகப்பிரசவம்ஆகவேண்டியதில்லை
· கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.
· முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும். 
· ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.   அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.
· மல்லாந்துபடுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை.அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலேசுகப்பிரசவமாகும். 
· வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால்எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும்
· முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான
பயிற்சிகளை செய்யலாம்.ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.
· சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை.
· நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.
· மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை
பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.
 தாயாக போகும் உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். தைரியமாக பிரசவத்தை எதிர்நோக்கி மகிழ்ச்சியாக இருங்கள்.

இது 8வது மாதமென்பதால் ரொம்ப கடினமான வேலைகளை செய்யாமல், மிதமாக முடித்துக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் சுக பிரசவமாதற்காகவும் இடுப்பு எலும்பு வலுவாக இருப்பதற்காகவும் உளுத்தம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உளுந்து வடை, உளுத்தங்களி, உளுத்தங்கஞ்சி போன்றவைகளை செய்து சாப்பிடுங்கள்.

வாரத்திற்கு இருமுறை வெந்தயக்களி காலையில் வெறும் வயிற்றில் முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு (1 மணி நேரம் கழித்து) வழக்கம் போல் நீங்கள் சாப்பிடும் உணவை சாப்பிடுங்கள். வெந்தயக்களி சுகபிரசவத்திற்கு வழி வகுக்கும்.

தினமும் இரவில் படுக்கும் முன் வெந்நீரை இடுப்பு, வயிறு, கால்களுக்கு ஊற்றிக் கொண்டால், நன்கு உறக்கம் வரும்.

வாரம் இருமுறை சீரக கஷாயம் இரவில் படுக்கும் முன் குடிக்கவும். 2 தேக்கரண்டி சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து, 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி, 1 தம்ளராக வற்றும் வரை கொதிக்க விடவும். அதை வடிக்கட்டி, எழுமிச்சையளவு பனைவெல்லம் (கருப்பட்டி) 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து ஆற்றிக் குடிக்கவும்.

அதுவே 9 மாதமான பின் வயிறு, இடுப்பு வலிப்பது போலிருந்தால், சீரகத்திற்கு பதில் சோம்பை வறுத்து, கஷாயம் போட்டு குடிக்கவும்.

கால், கை வீங்குவது போலிருந்தால், பார்லி வாட்டர் போட்டு வைத்துக் கொண்டு, தாகமெடுக்கும் போதெல்லாம் தண்ணீருக்குப் பதிலாக பார்லி வாட்டரில் உப்பும் சர்க்கரையும் சேர்த்துக் குடிக்கவும்.

தினமும் குளிப்பற்கு 1/2 மணி நேரம் முன்பு தேங்காய் எண்ணெயையோ, நல்லெண்ணயையோ வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் நன்கு தடவி, ஊற விட்டு, பின் குளிக்கவும்.

உடலுக்கு உஷ்ணம் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடாதீர்கள், மிகுந்த குளிர்ச்சியான உணவுப்பொருட்களையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

திரும்பி படுக்க நினைத்தால், அப்படியே திரும்பி படுக்காதீர்கள், எழுந்து உட்கார்ந்து, மறுபக்கம் திரும்பி, பின் படுங்கள். இதை செய்வதற்கு மிகவும் கடினமாகத் தானிருக்கும், ஆனால் சுகப்பிரசவத்திற்கு இது மிக மிக மிக மிக முக்கியம். கவனம்.

மேலே அனைத்து உணவு குறிப்புகளுக்கும் செய்முறை என்னுடய குறிப்புகளில் உள்ளன. பார்க்கவும்.

உங்களின் சுகப்பிரசத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

நீங்கள் இந்த நேரத்தில் அதிலும் எட்டு மாசத்தில் உணவுப் பழக்கங்களை புதியதாக எதுவும் சேர்க்கவோ மாற்றவோ வேண்டாம் என்றே கருதுகின்றேன்.

வழக்கம் போல் சேர்க்கும் காய்கறி பழங்கள்,தயிர்,கீரைவகைகள் என்று இவைகளை சற்று அதிகமான எடுத்துக் கொள்ளவும் ஏன்னென்றால் அவைகளில் நார்சத்து அதிகமாக இருப்ப்தால் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வராமல் சுகப்பிரசவத்திற்க்கு உதவியாக இருக்கும்.

பப்பாளி பழம் கூட சாப்பிடலாம் (என்று எனது அத்தை கூறுவார்கள், அது கண்ணிலே படக்கூடாது என்று அம்மா கூறுவார்கள், இவர்கள் இருவருக்கும் இடையில் நான் மாட்டிக் கொண்டு பட்ட அன்புத் தொல்லையில் இதுவும் ஒன்று, ஆனால் இருவருக்கும் தெரியாமல் கணவருக்கு மட்டும் தெரிவித்துவிட்டு ஒரு சில துண்டுகளை நான் சாப்பிட்டிருக்கேன்).

நீங்க மோர், ஜூஸ், சூப், கஞ்சி, போன்ற நீராகாரம் அதிகம் எடுப்பது நல்லது, இவைகள் உணவிலுள்ள நார்சத்தை எளிதில் ஜீரணமாக்கும்,

மேலும் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.
பிரசவம் என்பது சுகமான விசயம் ஆகவே தேவையில்லாததையெல்லாம் நினைத்து அதை கஷ்டப் படுத்த வேண்டாம்

மற்றபடி மருத்துவர் பரிந்துரைக்கும் சிறிய உடற்பயிற்ச்சிகளை உங்களால் முடிந்தவரையில் செய்யலாம். தினமும் உங்க கணவரின் துணையுடன் பாதுகாப்பாக கொஞ்ச நேரம் நடக்கலாம்.

உங்க இருவருக்கும் இந்த நேரத்தில் செக்ஸ்ஸில் நாட்டமிருந்தாலும் தாராளமாக ஈடுபடலாம் குழந்தைக்கு ஒன்றுமாகாது.

மருத்துவர் வேறு ஏதாவது காரணங்களுக்காக உங்களிடன் பிரித்தியேகமாக வேண்டாம் என்று கூறினாலொழிய நீங்களாக குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயந்து அதை நிறுத்த வேண்டாம். சுகப் பிரசவத்துக்கு இது கூட ஒரு சிறந்த குறிப்பு என்று தான் கூறுவேன்.

எல்லாவற்றையும் விட சுகப்பிரசவத்திற்க்கு தாயின் மனஅமைதி மிக மிக முக்கியம். ஆகவே நீங்களே கூறியிருப்பதுப் போல் சுகப்பிரசவம் ஆவதற்க்கு எதை பற்றியும் கவலைப்படாம பிரசவ நாளை சந்தோசமுடன் வரவேற்க்க ஆயத்தமாக இருக்கவும் சரியா.

 ஹாஸ்பிடல் செல்லும் முன்  மூச்சு முட்ட சுக்கு பால் குடிக்கவும்.
இயற்கை வழியில் இனிய சுகப்பிரசவம்

நம் சமூகத்தைப் பொருத்தவரை, சுகப்பிரசவம் என்பது, கூடங்குளத்தில் மின்சாரம் தயாரிப்பதைப் போல, செயற்கரிய ஒரு செயல் ஆகிவிட்டது. "சுகப்பிரசவம் என்பது கருவுற்ற அனைவருக்குமானது அல்ல; அது ஆசீர்வதிக்கப்பட்ட வர்களுக்கே அமையும்." நமது ஆங்கில மகப்பேறு மருத்துவமுறைகளும், மகப்பேறு மருத்துவர்களும் அப்படித்தான் நம்மை நம்ப வைத்திருக்கின்றனர்.

ஆங்கில மருத்துவ முறையின்படி, ஒரு பெண் கருவுற்றதற்கான அறிகுறிகளை உணர்ந்த வுடன் என்ன செய்ய வேண்டும்? மருந்து கடைகளில் விற்கும் சுய பரிசோதனைக் கருவியை வாங்கி சோதிக்க வேண்டும். இரண்டு சிவப்புக் கோடுகளை அது காட்டி விட்டால், கருவுற்றிருப்பது உறுதி. உடனடியாக ஒரு 'கைராசியான' மகப்பேறு மருத்து வரை அணுக வேண்டும். ஸ்கேனிங் என்ற பெயரில் சில நிமிட ரணகளத்திற்குப் பிறகு கருவுற்றிருப்பதை அதிகாரபூர்வமாக அவர் உறுதி செய்வார்.
அவ்வளவுதான். இனி அந்த கர்ப்பிணி அன்றாடம் எத்தனை மணிக்கு எழ வேண்டும்? எப்படி பல் துலக்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? குனியலாமா, கூடாதா? வாந்தி வந்தால் என்ன மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்? மயக்கம் வந்தால் என்ன ஊசி போட வேண்டும்? இப்படி அனைத்தையும் இனி அந்த மருத்துவர்தான் முடிவு செய்வார். ஐந்து மாதங்கள் வரை, வாராவாரம் மருத்துவரைச் சந்தித்து ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இப்படியாக, முப்பது முப்பத்தி ரெண்டு வாரங்கள் கடந்துவிட்ட பிறகு, தேதி குறித்துக் கொடுப்பார் கள். தேதிக்கு முன்னதாகவே அந்த மருத்துவமனையில் சேர்ந்துவிட வேண்டும். குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி வருகிறதா என பார்ப்பார்கள்.வரவில்லை என்றால், வலி வருவ தற்கான ஊசியைப் போடு வார்கள். மாறாக, குறிப் பிட்ட தேதிக்கு முன்னதாகவே பிரசவ வலி வந்து விட்டால், வலி நிற்பதற்கான ஊசியைப் போடு வார்கள். இப்படி யாக, மருத்துவரின் அல்லது பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு தக்கபடி, குழந்தை பிறந்தாக வேண்டும். இல்லாவிட்டால், 'சிசேரி யன்' எனும் அறுவை சிகிச்சைப் பிரசவம் தான். ஆங்கில மருத்துவ உலகில், 'கேன் ஸர்' என்ற வார்த்தைக்கு அடுத்தபடியாக அதிகம் உச்சரிக்கப் பட்டது 'சிசேரியன்' எனும் வார்த்தையாகத்தான் இருக்கும்.

சிசேரியன் செய்வதற்கு முன்ன தாக, இந்த அறுவை சிகிச்சையால், தாய்க்கோ, குழந்தைக்கோ எது நேர்ந்தாலும், தொடர்புடைய மருத்துவரோ, மருத்துவ மனையோ, அல்லது வேறு யாருமோ காரணம் அல்லர் என கையொப்பம் வாங் கிக்கொள்வார்கள். அந்த அளவிற்கு தங்களது மருத்துவ முறையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை. இப்ப டிப்பட்ட சிசேரியனால், வாழ்க்கை முழுக்க தாயும், சேயும் அனுபவிக் கப்போகும் இன்னல்கள் குறித்த எந்த தகவலும் அந்த அறிக்கையில் இருக்காது.

இவை எல்லாவற்றையும் தாண்டி, ஆசீர்வதிக்கப்பட்ட கர்ப் பிணிக்கு மருத்துவமனையில் சுகப் பிரசவம் நடந்துவிட்டால், அது உலக அதிசயங்களில் ஒன்றாக கொண்டாடப்பட வேண்டியது. ஆக, அறுவை சிகிச்சை பிரசவமோ அல்லது சுகப்பிரசவமோ, மருத்து வச் செலவு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரை வந்துவிடும். இப்படியாக, மகப்பேறு என்பதே அபாயகரமான ஒன்றாக, சுகப்பிரசவம் என்பதே அரிதான ஒன்றாக, மருத்துவப் பரிசோத னைகள் என்பவை அத்தியாவசிய மான ஒன்றாக, ஆங்கில மருத்துவ முறை நம் புத்தியில் உறைய வைத் திருக்கிறது.

இவை அனைத்திற்கும் மாறாக, மகப்பேறு என்பதை ஓர் இனிய அனுபவமாக, நிச்சயத்தன்மையுடன் கூடிய சுகப்பிரசவத்தை சாத்தியப் படுத்துகிறது, இயற்கையோடு இயைந்த, மரபு வழி மருத்துவம். இந்த முறையில், ஊசியால் குத்து வது அரிது. நாடித் துடிப்பின் வாயி லாகவே நோயின் அல்லது தொந் தரவின் தன்மையை அறிந்து, உடம் பில் உள்ள குறிப்பிட்ட சில புள்ளி களில் தொடுவதன் மூலமாகவே குணப்படுத் தக்கூடியது இதுவே தொடு சிகிச்சை எனப்படுகிறது. 'உணவே மருந்து; உடலே மருத்து வர்' என்பதே இதன் அடிநாதம். தமிழகத்தில் தொடு சிகிச்சை மருத்துவத்தை திரு. ஏங்கெல்ஸ் ராஜா, திரு. போஸ் முகமது மீரான், திரு. மகி ராமலிங்கம், திரு. மாவீரன் போன்றவர்கள் தற்போது வெற்றி கரமாகச் செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே, இந்த தொடு சிகிச்சை முறையின் அடிப்படையை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் என்ற முறையில், எங்களுக்கான மகப்பேறு மருத்துவத்தையும் தொடு சிகிச்சை முறையிலேயே பார்க் கலாம் என நானும் என் மனைவி சவிதாவும் முடிவு செய்தோம். அதன் படி, திரு. ஏங்கெல்ஸ் ராஜாவிடம் தொடர்ந்து தொடு சிகிச்சை எடுத்துக் கொண்டோம். ஃபோலிக் ஆசிட் உள்ளிட்ட எந்தவிதமான மருந்து, மாத்திரையையோ, ஊசியை யோ, ஸ்கேன் பரிசோதனையையோ எடுத்துக் கொள்ளவில்லை. தொடு சிகிச்சையாளரின் ஆலோசனைப் படி, அன்றாட உணவு முறையில் மட்டும் சில மாற்றங்களைச் செய்து கொண்டோம்.

பால், தயிர், தேநீர் போன்ற வற்றை முற்றிலும் தவிர்த்தோம். பழங்கள், மீன் உணவுகள் போன்ற வற்றைக் கூடுதலாக எடுத்துக் கொண்டோம். பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தோம். ஐந்து மாதங்கள் வரை 'பொட்டு போல' போய்விட்டு, 'பொட்டு போல' வரவேண்டும் என்கிற ஆங்கில மருத்துவ அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எப்போதும் போல, இயல் பாக நடக்கலாம். பேருந்துக ளில், ரயிலில் பயணம் செய்யலாம். 'ஆசைப்பட்டால், கடற்கரைக்குச் சென்று குதிரைச் சவாரிகூட செய் யலாம்' என்றார் ஏங்கெல்ஸ் ராஜா. இப்படியாக முதல் ஐந்து மாதங்கள் வெகு இயல்பாகக் கடந்தன.

எல்லாம் சரி. தொடு சிகிச்சை முறையில் மகப்பேறு மருத்துவம் பார்ப்பதற்கு எதிர்ப்பு வரவில் லையா? எதிர்ப்பு மட்டுமல்ல, பலர் நேரடியாகவே எதிர்மறையாகப் பேசி பயமுறுத்தவும் செய்தார்கள். குடும்பத்தினர் மட்டுமல்லாமல், நண்பர்கள் சிலர், அலுவலகத் தோழர்கள் என பலரும் பலவித மான கருத்துக்களைக் கூறி, ஆங்கில மருத்துவத்தின் பக்கம் போகச் சொன்னார்கள். "கருவிப் பரி சோதனை செய்யாமல் இருந்தால், தாய்க்கு சர்க்கரை நோய் வருவதைக் கண்டறிய முடியாது; குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கு வதை கவனிக்க இயலாது; குழந்தை ஊனத்துடன் பிறக்கும்" என்றெல் லாம் நேரடியாகவே பேசி அச்சு றுத்தினார்கள். இவை அனைத் திற்கும் என் மனைவி சொன்ன ஒரே பதில், "விலங்குகள் எவையும் மகப்பேறுக்காக மருத்துவமனைக் குச் செல்வதில்லை. இயல்பாகவே, இயற்கையின் விதிகளின்படியே கருவுற்று குட்டிகளை ஈனுகின்றன. அப்படி இருக்கையில் மனிதன் மட்டும் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்; பரிசோதனை களைச் செய்ய வேண்டும் என்ப தெல்லாம் இயற்கைக்கு முரணா னது. நமது வாழ்க்கை முறையும், ஆங்கில மருத்துவ மோகமும் அத்த கைய நிர்பந்தத்தை நமக்கு ஏற்படுத் திவிட்டன. இயற்கையின் விதி களின் படியான பிரசவத்தை மரபு வழி மருத்துவம் கண்டிப்பாக சாத்தி யப்படுத்தும்".

அந்த நாள் வந்தது. மனைவிக்கு பிரசவ வலி வந்துவிட்டது என சென்னையிலிருந்த எனக்குத் தகவல் வந்தது. மயிலாடுதுறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லி விட்டார் எங்கெல்ஸ். உதவிக்கு வேண்டுமானால், யாராவது செவி லியரை உடன் வைத்துக் கொள் ளுங்கள் என்றார் அவர். அதன்படி, ஈழத்தமிழரும், மயிலாடுதுறையில் பணிபுரியும் மரபுவழிச் செவிலியரு மான நளாயினி என்பவரை உடன் தங்க வைத்திருந்தோம்.

மனைவிக்கு பிரசவ வலி தொடங்கிய செய்தி அறிந்ததில் இருந்தே நான் பதற்றமாயிருந்தேன். இன்னும் சில மணி நேரங்களில் என் மகனையோ, மகளையோ பார்க்கப் போகிறேன் என்ற ஆசை ஒரு புறம்; இயற்கை முறை யிலான இந்தப் பிரசவம் சரியாக நடைபெற வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பு இன்னொருபுறம். இதில் ஏதாவது தவறு நடந்து, தாய்க்கோ, குழந் தைக்கோ சிக்கலாகிவிட்டால், உடனடியாக வேறு ஏற்பாடுகளின் படி காப்பாற்றிவிட முடியும் என்றா லும், அனைத்து தரப்பின் குற்றச் சாட்டுகளையும் சுமக்க வேண்டுமே; நாம் முன்னெடுக்கும் மாற்று முயற்சிகள் அனைத்துமே தோல் விக்குரியவை என்ற உதாரணத்தை அது ஏற்படுத்தி விடுமே என் றெல்லாம் மனக்குழப்பம் சூழ்ந்து கொண்டது.

நான் வீட்டிற்குச் சென்றபோது மாலை 6 மணி. பிரசவ வலியால் என் மனைவி அழுது கொண்டி ருந்தார். செவிலியர் நளாயினியிடம் தொலைபேசி மூலம் ஏங்கெல்ஸ் சில குறிப்புகளைச் சொல்லியி ருந்தார். "ஆங்கில மருத்துவ முறை யின்படியான எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது; குறிப்பாக, கர்ப்பப்பை வாசலைக் கிழித்து விடுவது, முதலில் தலை வருகிறதா, கால் வருகிறதா என தொட்டுப் பார்ப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. குழந்தை தானாக பிறக்கும் வரை காத்திருக்க வேண்டும்" என்ப வையே அவை.
இரவெல்லாம் விழித்திருந்தோம். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை ஏங்கெல்ஸிடம் தொலை பேசியில் பேசியபடி இருந்தோம். வலியின் தன்மையை வைத்து, இப்போது தண்ணீர் குடிக்கலாம்; இப்போது சற்று தொலைவு நடக் கலாம் என்பது போன்ற குறிப்பு களை அவர் சொன்னபடி இருந் தார். இரவு சரியாக 12.40 மணிக்கு நீர்க்குடம் உடைந்தது. தொடர்ந்து ஏங்கெல்ஸிடம் பேசியபடி இருந் தோம்.

பொழுது விடிந்தது. காலை 5 மணி. தொடந்து பிரசவ வலி இருந் தது; ஆனால், குழந்தை மட்டும் வெளியில் வரவில்லை. வீட்டில் இருந்தவர்கள் கலவர முகத்துடன் அறைக்குள் எட்டி பார்த்தபடி இருந்தார்கள். செவிலியர் நளாயி னியும் பதற்றத்தில் இருந்தார். இப் போது ஏங்கெல்ஸிற் குப் பதிலாக, அவரது மனைவி பிரியா தொலை பேசி தொடர்பில் இருந்தார். மணி 6, 7, 8 என கடிகார முட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன.

சரியாக காலை 8.46 மணி. ரத்தமும், தண்ணீரும் கசிய, குழந்தை வெளியே வந்தது. மழையில் நனைந்து தலைதுவட்டாத புறா வைப் போலிருந்தது. "ஆண் குழந்தை பிறந்திருக்கு சார்" என்ற படி நளாயினி குழந்தையை என் கைகளில் கொடுத்தார். நடுங்கிய கைகளில் குழந்தையை வாங்கி முத்த மிட்டேன். என் மனைவி கண்ணீர் மல்க சிரித்துக் கொண்டிருந்தார்.

இப்போது ஏங்கெல்ஸ் தொடர் பில் வந்தார். "குழந்தை அழுகிறதா? அழாவிட்டால் அழவையுங்கள்" என்றவர், "15 நிமிடங்களுக்கு தொப் புள் கொடியை துண்டிக்கக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகு, குழந்தை யின் நெற்றியைத் தொடும் நீளத் திற்கு இடைவெளிவிட்டு துண்டிக்க வேண்டும்" என்றார்.

ஆங்கில மருத்துவ முறையில், குழந்தை பிறந்தவுடனேயே தொப் புள் கொடியை துண்டித்து விடு வார்கள். அதுவும் இரண்டு அல் லது மூன்று அங்குல அளவில் வைத்து துண்டிப்பார்கள். மரபு வழி மருத்துவத்தில் 15 நிமிடங்கள் வரை துண்டிக்காமல் வைத்திருப்பதன் மூலம் சில சத்துக்கள் குழந்தைக்குச் செல்வதை உறுதி செய்ய இயலும். மேலும், எவ்வளவு நீளம் விட்டு துண்டிக்கிறோமோ, அந்த அள விற்கு குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் சொல்லப் படுகிறது. ஏங்கெல்ஸ் சொன்னது போல, தொப்புள் கொடியை துண்டித்து நூல் கொண்டு முடிச் சிட்டு, கட்டிலில் கிடத்தினார்கள்.

மனமார்ந்த மகிழ்ச்சியுடன் மதியம் நேரில் வந்து குழந்தையைப் பார்த்தார் ஏங்கெல்ஸ். குழந்தை பெற்ற களைப்புகூட தெரியாத என் மனைவி, கூடத்திற்கு வந்து அவரை வரவேற்றார். ஏங்கெல்ஸிடம் "நீங்கள் முன்பே வந்திருந்தால், நாங்கள் இன்னும் தைரியமாக இருந்திருப்போம்" என்றேன். "எந்த வொரு ஆகச் சிறந்த மருத்து வருக் காகவும் குழந்தை காத்திருக்காது; அதேபோல, அவர் வந்தவுடன் குழந்தை பிறந்துவிடாது" என்றார்.

இப்படித்தான் குழந்தை பிறந்தது என்பதைச் சொல்லும் போது பலரும் அதிர்ச்சி அடைகி றார்கள். ஆச்சரியப் படுகிறார்கள். "நீங்கள் செய்திருப்பது மாபெரும் சாதனை" என்கிறார்கள். மருத்துவப் புரட்சி என்கிறார்கள். கடவுளின் கருணை என்கிறார்கள்.

இதில் ஆச்சரியப்படுவதற்கோ, என்னையோ, என் மனைவியையோ பாராட்டுவதற்கோ எதுவுமில்லை. காரணம், இதில் எங்களது சாதனை எதுவும் இல்லை. இது இயற்கையின் சாதனை. இயற்கையின் இயல்பு. இயற்கையின் வழியில் நடக்கும் எவருக்கும் இனிய சுகப்பிரசவம் சாத்தியமே!



--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts