லேபிள்கள்

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!
பச்சை காய்கறிகள் மற்றும் இலைதழை உணவுகள் என சைவம் மட்டும் தான் மனிதனுக்கு ஆரோக்கிய நன்மைகள் தரும் என யார் கூறியது. மனிதனின் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது. இறைச்சி நம்மில் பலரும் போன் லெஸ் (Bone-less) வகையிலான சதை பகுதி இறைச்சிகளை தான் விரும்பி சாப்பிடுவோம். அதில் ருசியும் கொழுப்பும் மட்டும் தான் இருக்கிறதே தவிர மற்றபடி பெரிதாய் எந்த ஆரோக்கியமும் இல்லை. ஆனால், இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! உங்களது இதயம், மூளை, குடல் மற்றும் எலும்பு என தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை விளைவிக்கிறது.



இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, புரதம், இரும்புச்சத்து, கிரோமியம், ஃபோலிக் அமிலம் போன்ற உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அதிகமான அளவில் கிடைகின்றன. மற்றும் உங்களது சீரான உடல் இயக்கத்தையும் இது ஊக்குவிக்கிறது.

சரி இனி வெறும் சதை இறைச்சியை உண்பதை விட உறுப்பு பகுதிகளை உண்பதன் மூலம் கிடைக்கின்ற ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...
@ ஈரல் - உறுப்பு இறைச்சிகளில் மிகவும் வலிமைமிக்கது ஈரல் தான். இதில் உயர்த்தர புரதம், வைட்டமின் எ, ஃபோலிக் அமிலம், கிரோமியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. ஈரல் உங்கள் இதயத்திற்கு வலு சேர்க்கிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

@ சிறுநீரகம் - ஆடு அல்லது மாட்டின் சிறுநீரகம் சாப்பிடுவதனால் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து கிடைக்கிறது. மற்றும் இதை சாப்பிடுவதன் மூலம் நிறைந்த புரதச்சத்து கிடைக்கிறது. இதை சாப்பிடுவதன் மூலம் உங்கள் இதயத்திற்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இடுப்புக்கும் சிறுநீரக சுரப்பிக்கும் நல்ல வலிமை தரும்.

@ கணையம் மற்றும் மண்ணீரல் - கணையத்தில் நிறைய செலினியம் மற்றும் துத்தநாகம் சத்துகள் இருக்கின்றன. இது உங்கள் ஹார்மோன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் அவசியமானது ஆகும். மற்றும் இவை செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

@ மூளை - மூளையில் உயர்ரக ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து இருக்கிறது. ஃபாஸ்ஃபேடிடில்செரீன் மற்றும் ஃபாஸ்ஃபேடிடில்சொலின் போன்ற நரம்புக்கு வலிமை அளிக்கும் ஊட்டச்சத்துகள் மூளையில் இருந்து கிடைகின்றன. இவை, மூளை மற்றும் முதுகெலும்பிற்கு வலு சேர்க்கிறது.

மூளை கண்ணுக்கு குளிர்ச்சி தருகிறது ஆட்டின் மூளை. தாது விருத்தியை உண்டாக்குகிறது மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கவும் பயன் தருகிறது. உங்கள் மூளை பகுதி நல்ல வலிமை பெற ஆட்டின் மூளை சாப்பிடலாம். மார்பு கபத்தை நீக்கும். மார்புக்குப் வலிமையை தரும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் குணப்படுத்தும்.

@ குடல் - ஆட்டு குடல் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.
@ ஆட்டுக்கால்கள் - ஆட்டு கால்களை சூப் வைத்து குடித்தால் எலும்புக்களுக்கு பலமும் கால்களுக்கு நல்ல ஆற்றல் தரும்.

@ நுரையீரல் - உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு நல்ல வலிமையை தரும். ஆட்டின் கொழுப்பு இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும்.
@ இடுப்பு வலி மற்றும் கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். தாது விருத்தியாகும். ஆண் குறிக்கு வலிமை தரும். நாக்கு உடல் சூட்டை தணிக்கும். தோலுக்குப் வலிமை தரும் மற்றும் சருமம் பளபளக்க உதவும். உடலின் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வளிக்கிறது ஆட்டிறைச்சி பின் நூறு வருஷம் எளிது தானே.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

மஞ்சள் கலந்தபாலைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.

வெறும் பாலைக் குடிக்காதே. அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி ' என்பார்கள் நம் வீட...

Popular Posts