இன்சுலின் ஊசியைப் போடுவதற்கான நான்கு வழிமுறைகள்--சர்க்கரையை வெல்லலாம்!
சர்க்கரையை வெல்லலாம்ஹெல்த்க.பரணீதரன், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர்
கடந்த இதழில், இன்சுலின் வகைகளைப் பற்றியும், அவற்றின் செயல்திறன்கள் பற்றியும் பார்த்தோம். ஒருநாளைக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளக்கூடிய சூழல் பலருக்கும் இருப்பதால், சர்க்கரை நோயாளி தனக்குத்தானேவோ அல்லது அவரது குடும்பத்தினரோ இன்சுலின் ஊசியைப்போடும் வழக்கம் இன்றைக்குப் பரவலாக இருக்கிறது. எனவே, இன்சுலின் ஊசியைப் பற்றிய போதுமான விவரங்களைத் தெரிந்துவைத்திருப்பது, இவர்களின் கடமை. பல மாதங்களாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்பவர்களுக்குக் கூட இன்சுலின் ஊசியின் தன்மை, போட்டுக்கொள்ளும் விதம் பற்றிய போதுமான விழிப்பு உணர்வு இருப்பதில்லை. மருத்துவரின் பரிந்துரையின்பேரில், இன்சுலின் ஊசியைச் சுயமாக போட்டுக்கொள்பவர்கள் கவனிக்க வேண்டிய மற்றும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அடிப்படை உண்மைகளை இந்த இதழில் விரிவாகக் காண்போம்.
இன்சுலின் போடும் இடம்
இன்சுலின் ஊசியைச் சருமத்துக்கு அடியில், கொழுப்புத் திசுக்கள் (subcutaneous) உள்ள அடுக்கில் போட வேண்டும். நேரடியாகத் தசையிலோ, ரத்தக் குழாயிலோ செலுத்தக் கூடாது.
இன்சுலின் கிரகித்தல் என்பது நாம் போடக்கூடிய இடத்துக்கு ஏற்ப மாறுபடும். வயிற்றுப் பகுதியில் போடும்போது, மிக விரைவாகக் கிரகிக்கப்படும். இந்த முறையைப் பலரும் பின்பற்றுகின்றனர். இருப்பினும், பொதுவாக கை மற்றும் இடுப்புப் பகுதியில்தான் இன்சுலின் ஊசி போடப்படுகிறது. தொடைப் பகுதியிலும் இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொள்ளலாம்.
இன்சுலின் ஊசியைப் போடுவதற்கான நான்கு வழிமுறைகள்:
இன்சுலின் செலுத்துவதற்கென்றே கிடைக்கும் மெல்லிய சிரிஞ்சை கையில் எடுத்து, மருத்துவர் பரிந்துரைத்த அளவு இன்சுலினை நிரப்பி, பென்சிலைப் பிடிப்பதுபோலப் பிடிக்க வேண்டும்.
ஊசி செலுத்தப்படும் தோல் பகுதியை, இரண்டு விரல்களால் மென்மையாகப் பிடித்து, 90 டிகிரி கோணத்தில் ஊசியைச் செலுத்த வேண்டும்.
விரல்களால் பிடித்திருந்த தோல் பகுதியை விடுவிக்க வேண்டும்.
சிரிஞ்சின் அழுத்தும் பகுதியை அழுத்தி இன்சுலினை உடலுக்குள் செலுத்த வேண்டும். இன்சுலினை முழுமையாகச் செலுத்தியதும் ஊசியை வெளியே எடுக்க வேண்டும்.
குறிப்பு:
இப்படிச் செய்யும்போது சில நேரங்களில் துளி ரத்தம் வெளிப்படலாம். அது இயல்பானது தான்; கவலை வேண்டாம்.
ஊசி செலுத்தும் இடத்தில் வீக்கம், காயம், புண், சிராய்ப்பு என ஏதாவது இருந்தால் அந்தப் பகுதியில் இன்சுலின் ஊசியைச் செலுத்த வேண்டாம். வேறு பகுதியில்தான் செலுத்த வேண்டும்.
ஊசி செலுத்துவதற்கு முன்பு, செலுத்தப்படும் இடத்தைக் கிருமி நாசினி அல்லது ஆல்கஹால் உள்ள மருந்தை வைத்து, மென்மையாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

இன்சுலினைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்
இன்சுலின் ஊசி போடும் பலருக்கும் இருக்கும் சந்தேகம் அதை எப்படிப் பராமரிப்பது என்பதுதான். இன்சுலினை அதிகக் குளிர் அல்லது அதிக வெப்பம் உள்ள பகுதியில் வைக்கக் கூடாது.
ஜன்னல் அருகில், மூடிய காரில், மைக்ரோவேவ் அவன் அருகில், அடுப்பு அருகில் என, வெப்பமான இடங்களின் அருகில் வைக்க வேண்டாம்.
திறக்காத இன்சுலினை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம். அதுவும் 2 - 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இன்சுலினை ஃப்ரீசரில் வைக்க வேண்டாம். இன்சுலின் ஒருமுறை உறைந்துவிட்டால், அதன் செயல்திறன் போய்விடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்சுலினை ஒருமுறை திறந்துவிட்டால், அறை வெப்ப நிலையிலேயே வைக்கலாம். அதாவது 30 டிகிரி செல்சியசுக்குக் கீழ் இருக்க வேண்டும். ஏற்கெனவே நிரப்பப்பட்ட இன்சுலின் ஊசியாக (Pre-filled insulin syringes) இருந்தால், ஊசி முனை மேலே பார்த்தபடி வைக்க வேண்டும்.
இன்சுலின் பாதுகாப்பு
இன்சுலின் பாட்டிலுக்குள் புகைமூட்டம் போல இருந்தாலோ, கட்டியாகி இருந்தாலோ செதில் செதிலாக இருந்தாலோ பயன்படுத்த வேண்டாம். சில நேரங்களில், இன்சுலின் உள்ளே செதில்செதிலாக இருந்தாலும் அவை சரியாகி விடும். அப்படி மாறாமல் இருந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம்.
இன்சுலினை வாங்கும்போது, அதன் காலாவதி தேதியைப் பார்த்து வாங்க வேண்டும். காலாவதி தேதிக்குப் பிறகு, பயன்படுத்தக் கூடாது. இன்சுலின் குப்பியைத் திறந்துவிட்டால், ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். உறை நிலைக்குச் சென்ற அல்லது அதிக வெப்பத்துக்கு ஆளான இன்சுலின் மருந்தைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.

ஸ்வீட்டர்
தொடர்ந்து ஒரே இடத்தில் இன்சுலின் இன்ஜெக்ஷன் போட வேண்டாம். வலது கை, இடது கை, தொடை, வயிறு, இடுப்பு என்று அடிக்கடி இடத்தை மாற்றிப்போடுவதன் மூலம், இன்சுலின் கிரகித்தல் நன்றாக இருக்கும். சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
டயாபடீஸ் டவுட்
"சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க, கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்சுலின் எடுத்துவருகிறேன். இன்சுலினை மிகவும் ஆற்றல் மிக்கதாகப் பயன்படுத்த, உங்கள் ஆலோசனை என்ன?"

"இன்சுலின் ஊசி போடுவதற்கு முன்பு, கைகளைக் கிருமிநாசினி பயன்படுத்திச் சுத்தம் செய்யுங்கள். ஆல்கஹால் உள்ள கிருமிநாசினி பயன்படுத்தி, ஊசி போடப்படும் இடத்தைச் சுத்தம் செய்து உலர விடுங்கள். இது, வலியைக் குறைக்க உதவும். இன்சுலினை ஃபிரிட்ஜில் பத்திரப்படுத்தி வைப்பவராக இருந்தால், ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த உடன் ஊசி போட வேண்டாம். அது அறை வெப்பநிலைக்கு வரும்வரை காத்திருங்கள். அல்லது இன்சுலின் குப்பியை கைகளுக்குள் வைத்து மெதுவாக உருட்டி, வெப்பப் படுத்துங்கள்.
ஒவ்வொரு முறையும் புது ஊசியைப் பயன்படுத்துங்கள். ஊசி மிகவும் கூராகத்தான் இருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அதன் முனை மழுங்கிவிடும். பயன்படுத்துவதும் கடினமாக இருக்கும். எனவே, மருத்துவர் பரிந்துரைத்த, மிகவும் மெல்லிய, கூரான, சிறிய சிரிஞ்களையே பயன்படுத்துங்கள். ஊசியைக் குத்தியபிறகு அதைப் பக்கவாட்டில் அசைக்க வேண்டாம். 90 டிகிரி கோணத்தில் வைத்துச் செலுத்துவதுதான் சிறந்தது. இன்சுலினை மெதுவாக அதேநேரம் நிலையாகச் செலுத்துங்கள். அதிக அளவு இன்சுலின் எடுக்க உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தால், அதை ஒரே நேரமாக எடுக்காமல், பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக