லேபிள்கள்

சனி, 23 ஜூன், 2018

முஸல்லாவும், மவ்லவிமார்களும்

முஸல்லாவும், மவ்லவிமார்களும்

ஒவ்வொரு பெருநாள் தொழுகைகளின் போதும் மவ்லவிமார்களுக்கு மத்தியிலு்ம். பொதுமக்களுக்கு மத்தியிலும் திடலில் தொழக் கூடிய விசயத்தில் பிரச்சனைகள் வருவது சகஜமாகி விட்டது.
குர்ஆன், மற்றும் சுன்னா அடிப்படைகளில் உள்ளவர்கள் இந்த இரண்டு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும். நபியவர்கள் திடலில் தான் தொழுதுள்ளார்கள். ஆண்களையும், பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் திடலிற்கு தான் போக சொன்னார்கள். தொழும் போது மட்டும் மாதவிடாய் பெண்கள் ஒதுங்கி இருந்து கொள்வார்கள் என்று ஹதீஸ்களை ஆதாரம் காட்டி பேசும் போது, நபியவர்கள் இ்ப்படி திடலுக்கு போனது கிடையாது பெருநாள் தொழுகையை பள்ளியில் தான் தொழ வேண்டும். பள்ளி இடம் போதாவிட்டால் தான் மைதானத்திற்கு போக வேண்டும். என்று ஒரு சாராரும்,


நபியவர்கள் பெருநாள் தொழுகை தொழுதது திடலில் கிடையாது, முஸல்லாவில் தான், முஸல்லாஹ் என்றால் மதீனா பள்ளியோடு உள்ள பெருநாள் தொழுகைக்கு என்று ஒதுக்கப்பட்ட தனியான இடம் என்று கூறி நாம் பள்ளியில் தான் பெருநாள் தொழுகை தொழ வெண்டும் என்று வாதப்பிரதி வாதங்கள் போய் கொண்டிருப்பதை நாம் காணலாம்.
இன்னும் சிலர்கள் ஹனபி மத்ஹபினர் தான் இந்த தொழுகைகளை திடலில் தொழ வேண்டும். ஷாபி மத்ஹபினர் பள்ளியில் தான் தொழ வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
பொதுவாக இந்த பெருநாள் தொழுகைகளை நபியவர்கள் முஸல்லாவில் தான் தொழுதார்கள் என்பதை எந்த கருத்து முரண்பாடும் இல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் முஸல்லா என்பது நீங்கள் சொல்லும் திடல் கிடையாது என்று மறுத்து பள்ளியிலேயே இந்த தொழுகையை தொழக் கூடிய நிலையை காணலாம்.
அதிகமான மவ்லவிமார்களுக்கு இந்த முஸல்லாவிற்கு சரியான பொருள் தெரியாததினால் தான் இப்படியான குழப்பங்கள்.?
முஸல்லா என்பது தொழும் இடத்திற்கு சொல்லப்படும். நபியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பல அருட்கொடைகளில் ஒன்று தான் இந்த பூமியில் சுத்தமான எந்த இடத்திலும் தொழுது கொள்ள முடியும்.
தொழுகை நேரம் வந்தவுடன் பக்கத்தில் பள்ளி இல்லாவிட்டால் உடனே அந்த இடத்தில் தொழுது கொள்ள வேண்டும். அப்படி தொழும் இடத்திற்கு முஸல்லா என்று சொல்லப்படும்.
உதாரணத்திற்கு ஒருவர் பாலைவனத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார் இப்போது தொழுகை நேரம் வந்து விட்டது உடனே தன் வாகனத்திலிருந்து இறங்கி சுத்தமான அந்த இடத்தில் தொழுது கொள்ள வேண்டும். அந்த இடத்தில் தொழும் வரை அந்த இடத்திற்கு முஸல்லா (தொழும் இடம்) என்று சொல்லப்படும்.
பாலைவனத்திற்கு ஸஹாரா என்று தான் சொல்லப்படும். இந்த ஸஹராவிற்குள் பயணம் செய்யும் போது, தொழுதால் அந்த இடத்திற்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை முஸல்லா என்று அழைக்கப்படும். இங்கு ஸஹாராவிற்குள் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது
அல்லது விளையாட்டு திடலிற்கு மல்கப் என்று சொல்லப்படும். ஒருவர் தொழுகை நேரம் வந்த உடன் அந்த விளையாட்டு திடலில் சுத்தமான பகுதியில் தொழுகிறார் என்றால் அது விளையாட்டு திடலாக இருந்தாலும் தொழும் நேரம் வரை அந்த இடத்திற்கு மட்டும் முஸல்லா என்று சொல்லப்படும்.
எனவே இங்கு விளையாட்டு திடலுக்குள் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது்
ஒருவர் தன் வீட்டிலோ, தான் பணிபுரியும் இடத்திலோ தொழுகையை தொழுகிறார் என்றால் தொழுது முடிக்கும் வரை அந்த இடத்திற்கு முஸல்லா (தொழும் இடம்) என்ற சொல்லப்படும்.
எனவே இங்கு வீட்டில் அல்ல்து தான் பணிபுரியும் இடத்தில் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது்
அதே போல நாம் தொழுவதற்காக கட்டப்பட்ட இடத்தை மஸ்ஜித் என்று கூறுவோம். அந்த மஸ்ஜிதுக்குள் எந்த இடத்தில் தொழுகிறோமோ அந்த இடத்திற்கு முஸல்லா என்று சொல்லப்படும்.
உதாரணத்திற்கு பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.
"சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்தபின் சூரியன் உதயமாவதற்குமுன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக்கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 4641)

இந்த ஹதீஸில் "தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். என்பதற்கு அரபு வாசகம் முஸல்லாஹூ் " இடம் பெற்றுள்ளது. நபியவர்கள் பள்ளியில் சுபுஹை தொழுவித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தான் தொழுத இடத்திலே இருப்பார்கள். இங்கு மஸ்ஜிதுக்குள் முஸல்லா (தொழும் இடம்) வந்துள்ளது.
எனவே தொழும் இடத்திற்கு தான் முஸல்லா என்று சொல்லப்படும் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்தீருப்பீர்கள்.
முஸல்லா என்பது தனியான ஓர் இடத்திற்கு மட்டும் சொல்வது கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மழை வேண்டி தொழுகையும் முஸல்லாவும்
வறட்சியான காலத்தில் மழை வேண்டி தொழுகையை எப்படி தொழ வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு தொழுது வழிகாட்டியுள்ளார்கள்.

மழை வேண்டி தொழுகையும் முஸல்லாவில் தான் தொழ வேண்டும், என்பதை ஹதீஸ்களில் காணலாம். இந்த ஹதீஸின் படி பரம்பரை, பரம்பரையாக வறட்சியான காலங்களில் சகல ஜமாத் மவ்லவிமார்களும் பொது மைதானங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று மழை வேண்டி தொழுகையை தொழுவித்து வருகிறார்கள்.
அதற்கு எந்த மாற்று கருத்தும் கொடுப்பது கிடையாது. பள்ளியில் இடம் போதாவிட்டால் தான் மைதானத்தில் மழை வேண்டி தொழ வேண்டும் என்றும் சொல்வது கிடையாது.?
ஆனால் பெருநாள் தொழுகைக்கு மட்டும் முஸல்லாவிற்கு ஒரு விளக்கம். பள்ளி இடம் போதாவிட்டால் தான் திடலுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள் என்றால் இந்த மவ்லவிமார்கள் ஹதீஸை புரிந்து கொள்ளும் விதத்தை பார்த்தீர்களா?
பெருநாள் தொழுகை சம்பந்தப்பட்ட ஹதீஸை ஏற்றுக் கொண்டிருக்கும் இப்படியான மவ்லவிமார்கள் பள்ளியிலும் கூட நபியவர்கள் காட்டி தந்த அடிப்படையில் தொழுவது கிடையாது. பெண்களுக்கு தொழுவிக்க ஒரு நேரம்? ஆண்களுக்கு தொழுவிக்க ஒரு நேரம்? அதிலும் ஆண்களுக்கு ஒரே மௌலவி பல தடவைகள் தொழுவிக்கும் அவல நிலை?
நபியவர்கள் இந்த பெருநாள் தொழுகையை ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே நேரத்தில் தான் தொழுவித்துள்ளார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டே நபிவழிக்கு இவர்கள் மாறு செய்கிறார்கள் என்றால் சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள்.? இந்த மவ்லவிமார்கள் அல்லாஹ்விற்காக அமல்களை செய்கிறார்களா? அல்லது மக்களுக்காக செய்கிறார்களா?
எனவே பொதுமக்களே ! நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள், சரியான மார்க்கத்தை தேடுங்கள், அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts