லேபிள்கள்

செவ்வாய், 29 மே, 2018

மாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி... எது தவறு?

மாத்திரைகள் உட்கொள்ளும்முறை எது சரி... எது தவறு?
மாத்திரைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து நம்மைக் காக்கும் போர்வீரர்கள். நோயுறும் காலங்களில் மட்டும் அல்ல... நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன. உணவுக்கு முன்பாக உண்ணவேண்டியவை, உணவுக்குப் பின்னர் உண்ணவேண்டியவை, உணவோடு சேர்த்து உண்ணவேண்டியவை என மாத்திரைகள் பலவகைகளில் உள்ளன.

இந்த மாத்திரைகளைச் சிலர் வாயில் போட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். சிலர், வாயில் தண்ணீரை விட்டுக்கொண்டு மாத்திரை போடுகிவார்கள். அப்படியே வெறும் வாயில் விழுங்கிவிடுபவர்கள்கூட உண்டு. மேலும், காபி, டீ, குளூக்கோஸ் கரைசல், ஜூஸ், குளிர்ந்த நீர், வெந்நீர் என எந்தத் திரவப் பொருள் கிடைத்தாலும் அதனோடு சேர்த்து விழுங்குபவர்களும் உண்டு. இப்படி மாத்திரையை எதனோடு சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாமா... மாத்திரை எடுத்துக் கொள்ளும் சரியான முறைகள் என்னென்ன?



மாத்திரைகள், வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகின்றன. பொதுவாக, உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், உணவு உண்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் என இரண்டு முறைகளில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு உண்பதற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு மிதமானதாக இருக்கும். உணவு உண்ட பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு தீவிரமாக இருக்கும்.

நோய் தீர்க்கும் மாத்திரைகள், வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவை பெரும்பாலும் உணவுக்கு பின்னர்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அசிடிட்டி மாத்திரை, வாந்தி நிற்கும் மாத்திரை போன்றவை உணவுக்கு முன்னர் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன.
உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளும் உண்டு. அதாவது, சர்க்கரைநோய் போன்றவற்றுக்கு மருத்துவர், நோயாளியின் தேவையை அறிந்து தருவார்.

மாத்திரை உட்கொள்ளும்முறை
நீருடன் சேர்த்து விழுங்குவது...
வாய்கொள்ளும் அளவுக்குச் சிறிது நீரைப் பருகி, அதில் மாத்திரையைப் போட்டு விழுங்குவதுதான் சரியான முறை. இதனால், விழுங்கும் மாத்திரை உணவுக்குழாயில் தடைபடாமல் செல்லும். நீரால் மாத்திரைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மாத்திரையை விழுங்கியப் பின்னர் நான்கு முதல் ஐந்து மடக்கு நீர் பருக வேண்டும். வெதுவெதுப்பான நீரில் மாத்திரையை விழுங்குவது நல்லது.

நீரில் கரைத்துக் குடிப்பது...
மாத்திரையை நீரில் கரைத்துக் குடிப்பதும் சரியான முறையே. இதனால், மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முறை எளிதாகிறது. பெரும்பாலும், 'குழந்தைகளுக்கு மாத்திரையை நீரில் கரைத்துக் கொடுங்கள்' என்பதே மருத்துவரின் பரிந்துரையாக இருக்கிறது.

தேனுடன் கலந்து சாப்பிடுவது...
மாத்திரையின் கசப்புத்தன்மையைப் போக்குவதற்காக இந்த முறை கையாளப்படுகிறது. தேன் சேர்த்துச் சாப்பிடும்போது, மாத்திரையின் செயல்பாடு சற்று தாமதமாகும். இந்த முறையில், பக்கவிளைவுகள் ஏதும் இல்லை என்றாலும், சிலவகை மாத்திரைகள் செயல்படாமல் போகக்கூடும். எனவே, மருத்துவர் பரிந்துரைப்படி இப்படிச் செய்வது நல்லது. மேலும், சர்க்கரை நோயாளிகள் இந்த முறையைத் தவிர்க்கலாம். தேனுக்குப் பதிலாக, வெள்ளைச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவதும் வழக்கத்தில் உள்ளது. தவிர்க்க இயலாத நிலையில் மட்டுமே இப்படிச் சாப்பிடலாம்.

பாலுடன் சேர்த்து சாப்பிடுவது...
பாலில் அதிகப்படியான கால்சியம், தாதுஉப்பு உள்ளன. பாலுடன் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுக்கும்போது, கால்சியத்துடன் ஆன்டிபயாட்டிக் வினைபுரிந்து நீரில் கரையாத கால்சியம் உப்பை உருவாக்கிவிடும். மாத்திரையின் பலனும் வீணாக, முற்றிலுமாகக்கூட வெளியேறலாம். இதனால், மாத்திரை சாப்பிடுவதால், எந்தப் பலனும் கிடைக்காத நிலை உருவாகும். நோயில் இருந்து குணமாதல் தாமதமாகும். மாத்திரை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பிறகு பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.

பொடித்து சாப்பிடுவது...
பண்டைய காலத்தில் இருந்து, பொடித்துச் சாப்பிடும் முறை பின்பற்றப்படுகிறது. இன்றும், பல இயற்கை மருந்துகள் பொடித்த முறையிலேயே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

மாத்திரைகளைப் பொடித்தோ, கேப்ஸ்யூல் மாத்திரைகளை திறந்து, நேரடியாக எடுத்துக்கொள்வதோ தவறு. சில மாத்திரைகள் எந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்பதைப் பொறுத்து தயாரிக்கப்பட்டிருக்கும். இதை பொடித்துச் சாப்பிடும்போது, மாத்திரையின் செயல்திறன் குறையலாம். சில மாத்திரைகளில், வெளிப்புறம் உடனடியாக கரைந்து பலன் அளிக்கும் வகையிலும், உள்புறம் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து பிறகு கரையும் வகையிலும் இருக்கும். இதைப் பொடித்து சாப்பிடும்போது பலனளிக்காமல் போய்விடலாம். டாக்டர் பரிந்துரைத்தால் தவிர, பொடித்துச் சாப்பிடக் கூடாது.

தவறான முறைகள்
குளிர்ந்த நீருடன் எடுத்துக்கொள்வது...
ஐஸ் வாட்டர் உடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, மிகவும் தவறான முறை. பொதுவாக, உணவு உண்ட பின்னர் ஐஸ் வாட்டர் குடித்தாலே, உணவு செரிமானம் தாமதமாகிவிடும். மாத்திரையையைக் குளிர்ந்த நீரில் எடுக்கும்போது, மருந்து செயல்படும் நேரத்தைத் தாமதப்படுத்தி விடும்.

நீரானது உணவுடன் சேர்த்து வயிற்றிலேயே நீண்ட நேரம் தங்கிவிடும். அவ்வாறு, நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதால், கொழுப்புக்கட்டிகள் உருவாகும். மேலும், வயிற்றில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரையாமல் உடல்பருமனை அதிகரிக்கச் செய்யும். ஐஸ் வாட்டருடன் மாத்திரையைச் சேர்த்துச் சாப்பிடும்போது, தொண்டைவலி ஏற்படும். சளி பிடிக்கக்கூடும்.

காபி, டீ உடன் எடுத்துக்கொள்வது...
காபி, டீயோடு சேர்த்து மாத்திரையை எடுத்துக்கொள்வது மிகவும் தவறான முறை. இவற்றில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள வேதிப்பொருட்களுடன் வினைபுரியக்கூடும். உதாரணமாக, காபியுடன் சேர்த்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், காபியில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தவிர்த்துவிடும். எனவே, மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது ஒரு மணி நேரம் கழித்து காபி, டீ அருந்தலாம்.

மாத்திரையை மட்டும் விழுங்குவது...
மாத்திரைகளை நீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக்கொண்டால், தொண்டையில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தலாம். தொண்டை வறட்சியை ஏற்படுத்தும். உணவுக்குழாயில் மாட்டிக்கொண்டால், அசெளகரியமான உணர்வு ஏற்படும். சில மாத்திரைகளின் சுவை நாவுக்கு ஒவ்வாதபோது குமட்டல் உணர்வு, வாந்தி ஏற்படும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 27 மே, 2018

குளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்!

குளிர்கால பிரச்னைகளை சமாளிக்க 12 யோசனைகள்!
      
  வெயில் காலத்தைவிட குளிர் காலத்தில் அதிக அளவில் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. முக்கியமாக குளிர் காலத்தில் சளி, மூக்கடைப்பு பிரச்னைகளில் துவங்கி, தும்மல், இருமல், தலைவலி, காய்ச்சல் என அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுக்கும். இதில் ஒவ்வாமை மற்றும் சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்படுவார்கள். அதேபோல  குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தொற்று நோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

1.இரவு முதல் அதிகாலை வரையிலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்த நேரங்களில் வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சமயங்களில் குளிர் தாக்காத வகையில் கம்பளி, காதில் பஞ்சு, மப்ளர் அணிந்து கொள்ளலாம். குறிப்பாக, ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள்,  வயதானவர்கள் காலையில் நடைப் பயிற்சி செய்வதைத் தவிர்த்து, மாலை வெயிலில் நடக்கலாம்.
2.குளிர் காலத்தில் பொதுவாகவே தொண்டை வலி ஏற்படும். அதற்கு எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரையே குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு, வலி இருந்தால் சமையல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம்.
 3.வெந்நீரில் சிறிதளவு அளவு துளசி, கிராம்பு, மிளகு, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவைத்து அருந்தினால்  சளி, மூக்கடைப்பு,தொண்டைவலி போன்ற நோய்கள் நம்மை நெருங்காது.
4.நம் உடலில் உள்ள நீர் சத்து குறைபாட்டினால் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாகிறது. எனவே போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.  உடல் சூட்டைத் தக்கவைக்க, மூலிகை டீ, சுக்குக்காபி, புதினா டீ, இஞ்சி டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். குழந்தைகளுக்குத் தரும் பாலில், சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துகொடுக்கலாம்.
 5.சூடான தண்ணீர் சரும வறட்சியை அதிகரிக்கும் என்பதால் மிதமான சூடுள்ள நீரில் குளிப்பது நல்லது.  தும்மல் மற்றும் தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள், சுடுநீரில் ஆவிபிடிக்கலாம்.
6.குளிர்காலத்தில் தோலில் வறட்சி ஏற்பட்டு, பல இடங்களில் தோல் வெடித்து காணப்படும். இதனைத் தடுக்க கற்றாழை அல்லது எண்ணெய் ஆகியவற்றை தடவி வர, எளிதில் தோல் வெடிப்பு சரியாகும்.
7.பனிக்காலங்களில் வீட்டிற்குள் வெறும் கால்களால் நடக்காமல் வீட்டுக்குள் உபயோகப்படுத்தும் 'ஸ்லிப்பர்' வகை செருப்புகளை பயன்படுத்தலாம். அதன் காரணமாக தரையின் குளிர்ச்சியனது சுலபமாக உடலுக்குள் கடத்தாமல் தடுக்கப்படும்.
8.குளிர் காற்று உள்ளே வரும் ஜன்னலோரங்கள், பால்கனி  ஆகிய இடங்களில் அதிக நேரம் நிற்பதையும், மொட்டை மாடியிலும் தூங்குவதையும் தவிர்க்கலாம். தூங்கும்போது, கம்பளி அல்லது அழுத்தமான 'காட்டன்' துணியால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்த வேண்டும். போதுமான நேரம் தூக்கம் இல்லாவிட்டாலும் சளி தெந்தரவு ஏற்படும். எனவே குறைந்த பட்சம் 6 மணி உறக்கம் அவசியமாகும்.
 9.குளிர்காலத்தில் பாத வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒரு பக்கெட் சுடுநீரில் சிறிது உப்பு போட்டுக் கால் பாதங்களைப் பத்து நிமிடங்கள் வைத்து, பிறகு பாதங்களை நன்கு துடைத்துவிட்டு மாய்சுரைசிங் கிரீம் அல்லது ஹேண்ட் அண்ட் பாடி லோஷனைத் தடவி வரலாம்.
10.உதடு வெடிப்பை தவிர்க்க நெய் அல்லது எண்ணெய்யை உதட்டில் பூசலாம். வறண்ட சர்மம் உள்ளவர்கள் வறட்சியை தடுக்க ஆலிவாயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வர சர்மம் சீராகும்.
11.உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
12.உணவில் பூண்டு, இஞ்சி, மிளகு, புதினா ஆகியவற்றைச் சேர்த்துகொள்ளலாம். குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். வைட்டமின் சி உள்ள உணவுகளைச் சாப்பிட்டு வர ஜலதோஷத்தில் இருந்து நம் உடலைத் தற்காத்துக் கொள்ளலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 25 மே, 2018

தொழுகையில் சிறுநீர் சொட்டு வெளியானால்

தொழுகையில் சிறுநீர் சொட்டு வெளியானால்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்-
தொழுகையைப் பொருத்தவரை மிகவும் பரிசுத்தமான நிலையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நோய்க்கு ஆளாக்கப்பட்டால் குறிப்பாக சிறுநீரை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் தன்னை அறியாமல் சொட்டு, சொட்டாக வெளியேறிக் கொண்டிருக்கும். இவர்கள் தொழுகையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சிலருக்கு தொடர் வாய்வு (காற்றுப்பிரிதல்) நிலை இருக்கும் இவர்களுக்காகவும், சிலருக்கு வுளு செய்த பின் ஏதோ ஓரிரு சிறுநீர் சொட்டு வெளியாவதைப் போல உணர்வு ஏற்ப்படும் இவர்களுக்காகவும் இன்னும் சிலருக்கு காற்று பிரிவதைப் போல ஓர் உணர்வு ஏற்ப்படும் இவர்களுக்காகவும் இந்த கட்டுரை ஒரு தெளிவுரையாக வருகிறது.

இஸ்லாம் எளிமையான, இனிமையான, வாழ்க்கைக்கு நடைமுறைப்படுத்த ஏற்ற மார்க்கம் ஆகும். அந்த அடிப்படையில் அனைவரின் நிலையை கவனித்து சட்டங்களை இலகுவாக்கியுள்ளது.


தொடர் உதிரப்போக்கும் தொழுகையும்:
மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் தொழக் கூடாது. அதே நேரம் சில பெண்களுக்கு வழமையான மாதவிடாய் காலத்தையும் தாண்டி தொடராக உதிரப் போக்கு இருக்கும். இப்படிப் பட்ட பெண்கள் எப்படி தொழ வேண்டும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ்கள் வழிக் காட்டுகின்றன.

'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?' என்று கேட்டதற்கு, 'அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 306)
மேலும் 'மாதவிடாய் அல்லாத நாள்களில் வெளிப்படும் மஞ்சள் நிற இரத்தத்தையும் ஒருவகை மண்நிற இரத்தத்தையும் மாதவிடாயாக நாங்கள் கருதுவதில்லை' என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். (புகாரி 326)

மேலும் 'உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு ஆண்டுகள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, 'இது ஒரு நோய்' என்று கூறினார்கள். (இதனால்) ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண் குளிப்பவராக இருந்தார்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். ( புகாரி 327)
இந்த இடத்தில் இரண்டு முக்கியமான விடயத்தை நாம் கவனிக்க வேணடும். முதலாவது பொதுவாக சிலர் தொழுகையில் இரத்தம் வெளியானல் தொழுகை முறிந்து விட்டது என்று கூறுவார்கள். அது பிழையான கருத்து என்பதை மேல் சென்ற ஹதீஸிலிருந்து காணலாம்.
இரண்டாவது மாதவிடாய் முடிந்தும் தொடராக உதிரப் போக்கு ஏற்படுமேயானால் அது மாதவிடாய் அல்ல ஒரு விதமான நரம்பு நோய் என்பதை நபியவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். எனவே அந்த அந்த நேரத்தில் குளித்துக் கொண்டு தொழ வேண்டும். ஒவ்வொரு தொழுகை வக்துக்கும் குளித்தால் நோய் வரும், அல்லது உடம்புக்கு ஏதாவது ஏற்ப்பட்டு விடும் என்று பயந்தால் அந்த உதிரப் போக்குடன் அந்த அந்த நேரத்தில் வுளு செய்து கொண்டு தொழ வேண்டும்.
இதே போன்று தான் ஒருவருக்கு தொழுகையில் அடிக்கடி சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறினால் அவர் தொழுகைக்கு முன் வுளு செய்து கொண்டு வெளியேறக் கூடிய சிறுநீர் ஆடையிலேயோ,அல்லது கீழே படாதவாறு ஒரு துணியையோ, அல்லது பம்பஸ் போன்ற பாதுகாப்பான ஏதாவது ஒன்றை சிறுநீர் வெளியாகக் கூடிய இடத்தில் வைத்து தொழுது கொண்டால் போதுமானதாகும்.
மேலும் சிலருக்கு வுளு செய்து முடித்தவுடன், அல்லது தொழுது கொண்டிருக்கும் போது ஒரு சொட்டு சிறுநீர் வெளியேறுவதைப் போல ஓர் உணர்வு ஏற்ப்படும். இது ஷைத்தானின் துாண்டுதலாகும். நாம் நன்றாக சிறுநீர் கழித்து சுத்தம் செய்து விட்டால் எந்த பிரச்சனையும் கிடையாது. நமது உள்ளத்தில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தவே இப்படியான உணர்வுகளை ஷைத்தான் நமக்குள் ஏற்ப்படுத்துவான்.
இப்படி ஏற்படுவதைப்பற்றி நபியவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.
" அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமது வயிற்றில் ஏதோ ஏற்படுவதைப் போன்று உணர்ந்து, அதிலிருந்து ஏதேனும் வெளியேறிவிட்டதா இல்லையா என்று சந்தேகப்பட்டால், அவர் (வாயு பிரிவதன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை (உளூ முறிந்துவிட்டதென எண்ணி) பள்ளிவாசலில் இருந்து வெளியேறிவிட வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 590)
சில நேரங்களில் நாம் தொழும் போது வயிற்க்குள் ஏதாவது குழப்பம் என்றால் காற்று பிரிவதைப் போல ஒரு விதமான சப்தம் வயிற்றுக்குள் கேட்கும். காற்று பிரிந்தால் வுளு முறிந்து விடும். ஆனால் பிரிவதைப் போல ஓர் உணர்வு என்றால் இரண்டில் ஒன்றை கவனிக்க வேண்டும். முதலாவது காற்றுப்பிரியும் சப்தம். இரண்டாவது அந்த காற்றுப் பிரிதலின் நாற்றமாகும். இந்த இரண்டும் ஏற்ப்படாத வரை நாம் தொழுகையை விடத் தேவை கிடையாது.
அதே போல சிலர் வைத்திய சாலையில் படுத்த படுக்கையிலேயே இருப்பார்கள். சிலருக்கு சிறுநீர் கழிப்பதற்கு (வயர்) பட்டையை போட்டிருப்பார்கள், இன்னும் சிலர் அழுக்கடனும், சிலர் நாற்றத்துடனும் இருப்பார்கள். இவர்களுக்கு இஸ்லாம் விதிவிலக்களித்துள்ளது. தொழுகையை விட முடியாது. என்றாலும் அதே நிலையிலேயே தொழுது கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 23 மே, 2018

இவ்வளவுதான் உலகம்!

இவ்வளவுதான் உலகம்!

இன்றைய அவசர உலகில் மனிதன் மிக வேகமாக பயணித்து கொண்டிருக்கின்றான். எவ்வாறு இந்த உலகம் நம்மை அவசரமாக இழுத்துச் செல்கின்றதோ அதே போன்று இந்த உலக வாழ்க்கையிலிருந்து நாம் பிரியும் தருணமும் நம்மை நோக்கி மிக வேகமாக வந்து கொண்டிருக்கின்றது.
நாம் வரலாறுகளை புரட்டும்போது நபி நூஹ் (அலை) இதே பூமியில் 950 வருடங்கள் வாழ்ந்ததாக இறைவேதம் திருக்குர்ஆன் பேசுகின்றது. நம் முன்னோர்கள் 100 வயது, 110 வயது, அதையும் தாண்டி திடகாத்திரமாக, உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததாக நாம் இன்றும் பெருமையாக பேசிக் கொள்கிறோம்.
ஆனால் இன்றைய நிலை நம்முடன் ஒன்றாக இரவு உணவை முடித்துக்கொண்டு நாளை காலை சந்திப்போம் என்று நம்மிடம் இருந்து விடை பெற்றுச் செல்லும் நண்பன் அடுத்த நாள் ஜனாஸாவாக உருமாற்றம் பெறுகின்றான். நமது வாழ்க்கையின் அவகாசமும், நேரமும் மிகக் குறுகியதாக சுருங்கிகொண்டிருக்கிறது.
தீடீர் மரணங்களும், அகால மரணங்களும் இளம் வயதில் நம் கண் முன் நிழலாடுகின்றன. மரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் உறுதி செய்யப்பட்டதுதான். மாற்றுக் கருத்து மனிதர்களுக்கு இல்லை.
மனிதர்களில் பெரும்பாலோர் மரணத்தை மறந்தவர்களாக வாழ்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்காக தம்மை தயார்படுத்திக் கொள்வதும் மிக மிக அவசியமாகும். எனவே ஒரு முஸ்லிம் நிரந்தரமற்ற இவ்வுலகில் தமக்கு மரணம் வருவதற்கு முன்னர் நற்செயல்களை அதிகமதிகம் செய்து நிரந்தர மறுமைக்கு தம்மை சித்தப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.


ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே!
"ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் இறுதித் தீர்ப்பு நாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டு சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை" (அல் குர்ஆன் 3:185)
அந்த மரணம் இன்று இரவு நம்மை விழுங்கிவிட்டால் நம் நிலையென்ன?
இந்த உலகத்திற்காக ஓடி ஓடி உழைக்கும் நமக்கு உண்பதற்கு நேரமுண்டு, உறங்குவதற்கு காலமுண்டு, மனைவி மக்களோடு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு அவகாசமுண்டு. ஆனால் நாளை நான் ஜனாஸாவகிப் போனால் என்னைப் படைத்த இரட்சகனிடம் சொல்வதற்கு என் கையின் என்ன உண்டு?
உலக வாழ்க்கைக்கு உதரணமாக இந்தக் கதையைப் பார்க்கலாம். ஒரு மனிதன் ஒரு சிங்கத்திடம் அகப்பட்டுக் கொள்கிறான். எப்படியாவது அந்தச் சிங்கத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எடுத்து பிடித்தான் ஓட்டத்தை. சிங்கமும் விடவில்லை. விரட்டி வந்தது. ஒரு வழியாக ஒரு பெரிய ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
தப்பித்து விட்டோம் என்று நினைத்து பெருமூச்சு விட்டு தான் இருக்கும் மரக் கொப்பைப் பார்க்கிறான். கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட கரையான் அந்தக் கொப்பை அரித்துக் கொண்டிருக்கிறது. கெட்டியாகப் பிடித்திருந்த பிடி தளர்ந்து அடுத்த கொப்பிற்கு தாவலாம் என்று பார்க்கும்போது அவனுக்கு மிக அருகில் ஒரு கருநாகப் பாம்பு வாயைப் பிளந்துகொண்டு அவன் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பது போல் சுருண்டு நெளிந்து கொண்டிருந்தது.
வேறு வழியில்லை. கீழே குதித்து விடலாம் என்று கீழே பார்த்தான். துரத்தி வந்த சிங்கம் விருந்துக்கு வந்த VIP-யைப் போல் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தன் தலைக்கு மேல் பார்த்தான். அழகான தேன்கூடு. அந்தத் தேன்கூட்டிலிருந்து ஒரு சொட்டு தேன் அவனது வாயில் விழுந்தது. அவ்வளவுதான். அந்தத் தேனின் சுவையில் தன்னைச் சுற்றி இருக்கும் ஆபத்துகளை மறந்து கையை உயர்த்தினான்.
அவனது நிலை என்ன ஆகியிருக்கும் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். இதுதான் இன்றைய மனிதர்களின் நிலை.
நான் மேலே குறிப்பிட்டது போல சிங்கம் என்ற மரணம் நம்மை அழைத்துகொள்ள நாம் எங்கு சென்றாலும் நம் பின்னால் துரத்தி வருகிறது. மரக் கொப்பை கரையான் அரிப்பது போல் நம் வாழ்நாட்களை இரவு, பகல் மாறி மாறி அரித்துக் கொண்டிருக்கிறது. கருநாகப் பாம்பைப் போல் கப்று நம்மை விழுங்குவதற்கு தாயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இத்தனை ஆபத்துகள் இருந்தும் ஒரு சொட்டு தேனைப் போன்ற உலகத்திற்காக உருண்டோடும் நமது வாழ்க்கையை மாற்றும் தருணம் எப்போது என்று சிந்தியுங்கள்.
இவ்வுலகில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு செல்வம் சேர்ப்பதில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அதனைக் கொண்டு பெருமிதம் அடைகின்ற நாம் இவ்வுலக வாழ்வு என்பது நிரந்தரமற்ற தற்காலிக வாழ்வு என்பதை ஏனோ மறந்து விடுகிறோம். இவ்வுலகில் எந்த மனிதருக்கும் நிரந்தர வாழ்வு என்பது கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான்: "(நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்றும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை." (அல் குர்ஆன் 21:34)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஐந்து நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள்ளுங்கள்: 1. மரணத்திற்கு முன் வாழ்வையும், 2. நோய் வரும் முன் ஆரோக்கியத்தையும், 3. வேலை வரும் முன் ஓய்வையும், 4. வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும், 5. ஏழ்மைக்கு முன் செல்வ நிலையையும் பேணிக் கொள்ளுங்கள்.' (ஆதாரம் : அஹ்மத்)
மரணம் என்பது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். எனவே மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ அல்லது அனைப் பிற்படுத்தவோ அல்லது அதை விட்டு தப்பிக்கவோ இயலாது.
அல்லாஹ் கூறுகிறான்: "ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு. அவர்களுடைய கெடு வந்து விட்டால் அவர்கள் ஒரு கணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்." (அல் குர்ஆன் 7:34)
இறைக் கட்டளைகளைப் பேணி வாழ்ந்து வரும் ஒரு முஃமினுக்கு மரண வேளை வந்து விட்டால் அவருடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும்போது நிகழ்கின்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:
"நிச்சயமாக எவர்கள் 'எங்கள் இறைவன் அல்லாஹ்தான்' என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பால் மலக்குகள் வந்து, 'நீங்கள் பயப்படாதீர்கள்; கவலையும் பட வேண்டாம் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்." (அல் குர்ஆன் 41:30)
அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும்போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) 'உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவு தரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்' (என்று கூறுவதை நீர் காண்பீர்)." (அல் குர்ஆன் 6:93)
ஒருவருடைய மரண வேளையில் அவரது நிலை அவருக்கு தெளிவாகி விடும். உண்மையை உணர்ந்த பின் தாம் வாழும்போது வீணடித்த நேரங்களில் ஒரு வினாடி இப்போது கிடைக்காதா என்று அங்கலாய்ப்பான். விட்டு வந்த நல்ல காரியங்களைச் செய்வதற்காக அவன் தமக்கு சிறிது அவகாசம் அளிக்குமாறு வேண்டுவான். ஆனால் காலம் கடந்து கைசேதப்பட்டு என்ன பயன்?
அல்லாஹ் கூறுகிறான்: 'இன்னும் எவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ அதற்குப் பின் அவருக்குப் பாதுகாவலர் எவருமில்லை. அநியாயம் செய்தவர்கள் வேதனையைக் காணும் போது, (இதிலிருந்து) தப்பித்து மீள்வதற்கு ஏதாகிலும் வழியுண்டா?' என்று கூறும் நிலையை நீர் காண்பீர்.' (அல் குர்ஆன் 42:44)
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: 'என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!' என்று கூறுவான். 'நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக' (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை). அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது." (அல் குர்ஆன் 23:99-100)
உலக வாழ்க்கை என்பது ஒரு முறைதான். இது காத்திருக்கும் ஒரு இடமல்ல. காத்திருந்தாலும் இழந்தால் மீண்டும் கிடைப்பதில்லை.
இம்மை என்பது ஒரு பயணம். தாமதிக்காமல் நம்மை மறுமையின் வாசலில் கொண்டு சேர்த்து விடும். எனவே இந்தப் பயணத்தில் கண்மூடித்தனமாய் காலத்தைக் கழிக்காமல், திட்டமிட்டு நாம் நம்மை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதைச் சிந்தித்து வாழ்க்கையை நகர்த்தினால் மரணத்திற்கு மரணம் கொடுக்கப்படும் மறுமையில் மகிழ்வோடு வாழலாம்.
வலசை ஃபைஸல்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 21 மே, 2018

மழைக்கால டிப்ஸ்...!

மழைக்கால டிப்ஸ்...!
மழை மற்றும் பனிக்காலங்களில் அனைவருக்கும் ஜலதோஷம் பிடித்து வாட்டும். குழந்தைகளுக்கோ மூக்கில், நீர் வடிந்தவாறு இருக்கும். இதனால், இரவில், தூங்காமல் அழுவர். இதற்கு, கோதுமை தவிட்டை ஒரு மணல் சட்டியில் வறுத்து, ஒரு துணியில் கட்டி, உடல் பொறுக்கும் சூட்டில், குழந்தையின் தலை, முதுகு, நெஞ்சுப்பகுதி மற்றும் நெற்றி என, மாறி மாறி, மென்மையாக ஒத்தடம் கொடுக்க, சளித் தொந்தரவிலிருந்து விடுபட்டு, உடனே, தூங்க ஆரம்பித்து விடுவர்.

கோதுமை தவிடு இல்லாவிட்டால், வெறும் சட்டியை சூடு செய்து, அதை துணியால் ஒற்றி, ஒத்தடம் கொடுக்கலாம்.
* ஜலதோஷம் வருவதற்கான அறிகுறி தெரிந்தால், சில பூண்டுகளை பச்சையாக சாப்பிட, தொண்டையில் ஏற்படும், 'கிச் கிச்' மட்டுமின்றி, ஜலதோஷமும் பறந்து போகும்.
* மழை நீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து, அதை நன்றாக காய்ச்சி, ஆற வைத்து முகம் கழுவினால், பட்டு போல, மிருதுவாக மாறும்.
* குளிர் காலத்தில், 'டார்க்' நிற ஆடைகளை அணியலாம்; கறுப்பு நிற ஆடை, குளிருக்கு இதமாக இருக்கும்.


* மழையின் காரணமாக, ஜன்னலை திறக்க முடியவில்லை என்றால், கோல மாவுடன், உப்பு தூள் கலந்து, ஜன்னல் விளிம்பில் தூவுங்கள்; எளிதாக திறக்கலாம்.
* மழை மற்றும் குளிர் காலத்தில் வீட்டில் உள்ள மிதியடியின் கீழ், நியூஸ் பேப்பரை விரித்து வைத்தால், மிதியடிகள் சில்லிட்டு போகாமல் இருக்கும். மேலும், தரை குளிர்ச்சியாய் இருந்தால், தரையில், நியூஸ் பேப்பரை விரித்து, அதன் மேல் பாயை விரித்து படுத்தால், குளிரோ அல்லது தரையின் குளிர்ச்சியோ தெரியாது.
* மழை காலத்தில், உப்பு ஜாடியில் இரண்டு மூன்று பச்சை மிளகாய்களை போட்டு வைத்தால், ஜாடியில் ஈரம் கசியாது.
* நனைந்த மழைக்கோட்டுக்குள், நியூஸ் பேப்பர்களை போட்டு, மடித்து வையுங்கள்; விரைவில், உலர்ந்து விடும்.
* ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை போயே போச்சு!
* மழைக்காலத்தில், அலுவலகத்திற்கு எடுத்து செல்லும் உணவு விரைவில் குளிர்ந்து விடும். இதைத் தவிர்க்க, டிபன் டப்பாவை மப்ளர் அல்லது கம்பளி துணியில் நன்றாக சுற்றி, காற்று புகாத, 'ஜிப்' வைத்த பையில் போட்டு, எடுத்து செல்லுங்கள்; மதியம் வரை, உணவு சூடாக இருக்கும்.
* மழைக்காலத்தில், பீரோவுக்குள் ஈரக்காற்று இருப்பதால், துணிகள் மற்றும் பட்டுப்புடவைகள் மொர மொரப்பை இழந்து, தொய்வாக காணப்படும். இதை தவிர்க்க, 10 சாக்பீஸ்களை நூலில் கட்டி, பீரோவின் உட்பகுதியில் தொங்க விடுங்கள். இது, உள்ளே இருக்கும் காற்றின் ஈரப்பதத்தை எடுத்து விடும்.
* ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.
* ஸ்கூட்டரிலோ அல்லது சைக்கிளிலோ செல்லும் போது, ஈரக் காற்று மார்பில் பலமாக அடிக்கும். இதை தவிர்க்க, நியூஸ் பேப்பரை நான்காக மடித்து, பனியனுக்குள் வைத்து, பனியனை, 'இன்' செய்து, சட்டை அணிந்தால், குளிர் காற்றின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம். ஸ்வெட்டரை தூக்கிக் கொண்டு அலைய வேண்டாம்.
* தீப்பெட்டி நமத்து போயிருந்தால், அரிசி மாவை அதன்மீது பூசி, பின், தீக்குச்சியை உரசினால், 'சட்' என்று பற்றிக் கொள்ளும்.
* இடி மற்றும் மின்னல் அடிக்கும் போது, சிலநேரங்கில், 'டிவி' பாதிப்படையும். இதைத் தவிர்க்க, பவர் பிளக் மற்றும் ஆன்டெனா பிளக் இரண்டையும், கழற்றி விடுங்கள்.
* மழைக்காலம் ஆரம்பித்தாலே, கொசுக்களின் ஆதிக்கமும் துவங்கி விடும். இதிலிருந்து தப்பிக்க, நெருப்பில், வேப்பிலை போட்டு, புகை போடலாம் அல்லது 'ஆல் அவுட்' காலி பாட்டிலில், வேப்பெண்ணையை நிரப்பி, 'ப்ளக்'கில் சொருகி விட்டால், கொசுக்கள், வெகுதூரம் பறந்தோடி விடும். வேப்பெண்ணெய் வாடை பிடிக்காதவர்கள், அதில் இரண்டு அல்லது மூன்று சொட்டு, 'சென்ட்' கலந்து, பாட்டிலில் நிரப்பி விட்டால், வீடு கமகமக்கும்; கொசு தொல்லையும் இருக்காது.

மழைக்காலத்தில் பெரும்பாலும், வாகனங்கள் அடிக்கடி பழுதாவது வழக்கம். அவற்றை தவிர்க்க...
* மழையில் வாகனங்கள் நனைவதை முதலில் தவிர்க்க வேண்டும். மழைக்காலம் மட்டுமல்லாது, எல்லா காலங்களிலும் வாகனங்களை மூடி வைப்பது, அனைத்து சேதங்களிலிருந்தும் வாகனங்களை பாதுகாக்கும்.
* தண்ணீர் அதிகமாக இருக்கும் இடங்களில், வாகனங்களை செலுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால், ஏதாவது சிறு கற்கள் மற்றும் பள்ளங்களால், டயர் பஞ்சர் ஆகலாம். மேலும், அலாய் வீல் வளைய, வாய்ப்புகள் உண்டு.
* 'சைலன்சர்' நீரில் மூழ்கி விட்டாலும், வண்டி உடனே நின்று விடும். இச்சமயத்தில், 'ஸ்டார்ட்' செய்யக்கூடாது. மெக்கானிக் உதவியுடன், இன்ஜினை நன்றாக, உலர வைத்து, பின் உபயோகிக்கலாம்.
* மழைக்காலங்களில் மட்டுமில்லாமல், மற்ற நாட்களிலும், 'ஸ்பார்க் ப்ளக்'கை அடிக்கடி பரிசோதித்து மாற்றுவது நல்லது. இது பழுதடைந்தால், வாகனம் உடனே நின்று விடும்.
* வாகனங்கள் அதிக நேரம் மழையில் நனைந்தால், ப்ரேக் மற்றும் க்ளட்ச் போன்றவற்றின் அடிப்பாகங்கள், இறுக்கமாவதுடன், துருப்பிடிக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 19 மே, 2018

சிசேரியன் பிரசவம்... பின்தொடரும் பிரச்னைகள்!

சிசேரியன் பிரசவம்... பின்தொடரும் பிரச்னைகள்!
மருத்துவத் துறை வளர்ச்சியடையாத காலத்தில், நம் முன்தலைமுறைப் பெண்கள் சுகப்பிரசவமாகவே குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்தனர். ஆனால், தொழில்நுட்பங்கள் பெருகியுள்ள இந்த நூற்றாண்டிலோ, அந்த அளவுக்கு சுகப்பிரசவங்களை சாத்தியமாக்க முடியவில்லை என்பது விசித்திரம்.

சில சந்தர்ப்பங்களில் மருத்துவக் காரணங்களால் சிசேரியன் பிரசவமே பாதுகாப்பானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. அதே சமயம், அவசியமே இல்லை என்றாலும், இப்போது சிசேரியன் பிரசவத்தை நாடிச்செல்வோர் அதிகரித்து வருவதும் உண்மை.

``பொதுவாக இவர்களின் மனநிலை, 'சிசேரியன் பிரசவம்னா எந்த ரிஸ்க்கும் இல்லை' என்பதாக இருக்கிறது. அது அறியாமைதான்'' என்கிற மகப்பேறு மருத்துவர் டாக்டர் நித்யா தேவி, சிசேரியன் சூழல்கள் பற்றியும் கூறுகிறார்.



எப்போது சிசேரியன் அவசியம்?
``பொதுவாக கருவின் வளர்ச்சி 39 வாரங்கள் முழுமையடைந்த பிறகு, 40-வது வாரத்துக்கு இடைப்பட்ட நாட்களில் பிரசவமாவதே ஆரோக்கியம். சிலருக்கு 37 - 40 வாரங்களில் பிரசவமாகலாம். இந்த வாரங்களில் வலி வந்து, சுகப்பிரசவத்துக்கு வழியில்லாமல், தாய்க்கோ பிறக்கப்போகும் குழந்தைக்கோ ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு, விரைவாக குழந்தையை வெளியில் எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சிசேரியன் செய்வோம். பின்வரும் சூழல்கள் அதற்கு உதாரணங்கள்...

* முந்தைய பிரசவம் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில்...

* தாய்க்கு இதய நோய், நுரையீரல் பிரச்னை, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு, கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால்...

* கர்ப்பப்பை சுவரோடு நஞ்சு ஒட்டியிருப்பது, கர்ப்பப்பை வாயில் நஞ்சு இருக்கும்போது...

* பிரசவ நேரத்தில் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருந்தால்...

* கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையின் பொசிஷன் மாறுபட்டு இருந்தால்...

* குழந்தையின் எடை நான்கு கிலோவுக்கு அதிகமாக இருந்தால்...

* கர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால்...

* தாய்க்கு HIV பாதிப்பு இருந்தால்...

* கர்ப்பப்பையில் ஏதாவது பெரிய கட்டி இருந்து அகற்றப்பட்டிருந்தால்...

* இரட்டைக் குழந்தைகள் எனில்...

 * வலி வந்து கர்ப்ப வாய் திறக்காதபோது...

* கர்ப்பப்பையில் நீர்ச்சத்துக் குறையும்போது...

* 30 வயது தாண்டி முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்போது...

தாயின் வேண்டுகோளுக்கு இணங்க செய்யப்படும் சிசேரியன் (CDMR - Cesarean Delivery on Maternal Request)

ஜோதிடர் குறித்துக் கொடுத்த தேதியில் குழந்தையை வெளியே எடுக்க விரும்புவது, பிறந்தநாள், திருமணநாள், பண்டிகை நாட்கள், ஃபேன்ஸி தினங்களில் குழந்தை பிறக்க விரும்புவது, ஆடி, சித்திரை மாதங்களில் குழந்தை பிறந்தால் ஆகாது என்ற மூடநம்பிக்கை, இவற்றுடன் பிரசவ வலிக்குப் பயந்து கர்ப்பிணியும் அவருடைய குடும்பத்தினரும் சிசேரியன் செய்ய மருத்துவர்களிடம் கோருவது... இந்தக் காரணங்களுக்காகக் கூட, சுகப்பிரசவத்துக்கான வாய்ப் பிருக்கும் சூழலிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

1970 - 2010 வரை 5% ஆக இருந்த சிசேரியன் பிரசவங்கள், 2010-க்குப் பிறகு 15% ஆக அதிகரித்தன. இப்போது அவை 30% ஆக அதிகரித்துவிட்டதாக உலக அளவிலான ஓர் ஆய்வு கூறுகிறது.

சிசேரியன் பிரசவத்தால் வரும் பிரச்னைகள்!
* சிசேரியன் பிரசவமான பெண்களுக்கு உடல்வலி, வயிற்று வலி, தலைவலி, முதுகுவலி, அதிக
  உதிரப்போக்கு ஏற்படலாம்.

* தாயிடம் இருந்து சிசுவுக்கு உணவு மற்றும் ஆக்சிஜனை எடுத்துச் செல்லக்கூடிய நஞ்சுக் கொடி (placenta), தாய் மற்றும் குழந்தைக்கு இணைப்புப் பாலமாக இருக்கும். அந்த நஞ்சுக்கொடி பிரசவத்துக்குப் பிறகு கர்ப்பப்பையில் இருந்து தானாகவே பிரித்துவந்துவிட வேண்டும். ஆனால், சிசேரியன் பிரசவத்தில் நஞ்சுக்கொடி கர்ப்பப்பையிலேயே ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் அடுத்த பிரசவத்தின்போது, தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகலாம்.

* சிசேரியன் பிரசவம் செய்வதால், தாயின் கர்ப்பப்பையும் நீர்ப்பையும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளக்கூடும். இதனால் அடுத்த குழந்தையும் சிசேரியனாக இருக்கும்பட்சத்தில், அப்போது தாய்க்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பிரசவம் சிக்கலாகும்.

  * சிசேரியன் பிரசவத்தில் பிறந்த குறை மாத குழந்தைகளுக்குப் பிரசவ நேரத்திலும், பிறந்து சிறிது நேரம் கழித்தும் மூச்சுத்திணறல் ஏற்படுவது, பச்சிளம் குழந்தையின் வயிற்றுக்குள் ரத்த ஓட்டம் சுருங்கி அதனால் மலக்குடல் அழுகி ரத்தப்போக்கு ஏற்படுவது (Necrotising enterocolitis), தொற்றுநோய்கள் என பிறந்த முதல் மூன்று நாட்களில் பல பிரச்னைகள் ஏற்படலாம்.

* நிறைமாதமான 37 - 40 வாரங்களுக்கு முன்பாக கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் ஆபரேஷன் செய்வது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

சுகப்பிரசவத்தில் சிரமங்களை எதிர்கொண்டு வெளிவரும் குழந்தைகள்
  எதிர்காலத்தில் உடல்  மற்றும் மனதளவில் தைரியமானவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பார்கள் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. இதற்காகவும் சிசேரியன் பிரசவங்கள் தவிர்ப்போம், சுகப்பிரசவத்துக்கு தயாராவோம்" என்கிறார்  டாக்டர் நித்யா தேவி.

சிசேரியன் பிரசவம் தவிர்க்கலாம்!
* இடுப்பு எலும்புப் பகுதிக்கு பயிற்சி கொடுப்பது சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும். குழந்தையின் தலை மற்றும் உடல் வெளியேறும் வகையில் பெண்ணின் பிறப்புறுப்பு விரிந்து கொடுக்க, இடுப்பு எலும்பைச் சுற்றியுள்ள தசைகளும் உறுப்புகளும் நன்றாக ஒத்துழைக்க வேண்டும். நடைப்பயிற்சி, மருத்துவர் ஆலோசனையுடன் யோகா, கால்களை மடக்கி நீட்டுவது போன்ற எளிய உடற்பயிற்சிகள்
  இதற்கு கைகொடுக்கும்.

* கர்ப்பகாலத்தில் உறங்குவது, அமர்வது என ஒரே நிலையில் நிலைகொள்ளும் ஓய்வு தேவையில்லை. அன்றாட வேலைகளை, குனிந்து, நிமிர்ந்து செய்யும் வீட்டுவேலைகளைச் செய்யலாம்.

* துரித உணவு மற்றும் அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளை உட்கொண்டு மனதையும் உடலையும் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 17 மே, 2018

கொசுவ விரட்ட! – கொசுவை ஒழிக்க! கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி?

கொசுவ விரட்ட! கொசுவை ஒழிக்க! கொசு விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி?
கொசுவ விரட்ட! கொசுவை ஒழிக்க! கொசு விரட்டி!
இயற்கை கொசு விரட்டி! mosquito control! இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட!
ஒரு மண் சட்டியில் தீ கணல் போட்டு அதில் பச்சை வேப்பிலை போட்டு அதன்மீது சிறிது மஞ்சள் தூளையும் தூவிவிடுங்கள். அப்புறம் பாருங்கள் ! அதிலிருந்து வரும் புகை கொசுவை விரட்டோ விரட்டுனு விரட்டிவிடும். ஒரு கொசுகூட இனி இருக்கக்கூடாது. அதற்கு என்ன வழி!
தேங்காய் நார்களை எரித்து அதன் புகையை வீட்டில் காண்பித்தாலும் ஒரு கொசுகூட இருக்காது!

கொசு தொல்லை ஒழிந்திட
மாம்பூவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  வீட்டின் ஒரு பக்த்தில் நெருப்பை வைத்து அதன்மீது மாம்பூக்களை போடுங்கள். அதிலிருந்து வரும் புகையால் கொசு தொல்லை ஒழிந்துபேகும்!

கொசுவுக்கு பிடிக்காத வாசனை எது? தெரியுமா உங்களுக்கு!
அது பூண்டு வாசனை! இந்த பூண்டு வாசனையை கண்டா கொசுவுக்கு சுத்தமா பிடிக்காது! அதனால நீங்க பூண்டு சாப்பிட்டிங்கனா அந்த பூண்டு நாத்தம் தாங்காம கொசு ஓடியே போய்விடும்!



நொச்சி இலை மிகச் சிறந்த கொசுவிரட்டி. பேய்துளசி, காட்டுத்துளசி ஆகியவையும் கொசுக்களை அப்புறப்படுத்த உதவும். இவற்றைத் தூளாக்கி, மாலைப் பொழுதில் சாம்பிராணி புகைபோடுவதுபோல தீயிலிட்டு வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பின்னர் பூண்டு எண்ணெய், நீரைச் சேர்த்து வீட்டின் ஜன்னல்களில் தடவி, கதவைப் பூட்டிவிட்டால் அன்றைய நாள் முழுவதும் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது.இதேபோல புதினா, கேந்தி ஆகிய செடிகளைத் தொட்டியில் வளர்த்து அவற்றை மாலை நேரங்களில் ஜன்னல்களின் அருகே வைத்தால் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது. அழகுச் செடிகளாகக் கருதப்படும் ஏஜ்ரேடம், ரோஸ்மேரி, சிட்ரோநெல்லா உள்ளிட்டவை மட்டுமன்றி எளிதாகக் கிடைக்கும் வேப்பிலையும்சிறந்த கொசுவிரட்டி. மேலும் சில கொசுக்களை விரட்டும் செடிகள் கீழே

ஏஜ்ரேடம் (Ageratum)
வெள்ளை நிறமும் ரோஜா நிறமும் கலந்து கவர்ச்சியாக காட்சி தரும் இந்த பூச்செடி உண்மையில் காக்கா வலிப்புக்கும், காயங்களுக்கும் அருமருந்து. வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்கள், கொசு விரட்டிகளை உற்பத்தி செய்பவர்கள் அதற்காக இதன் எசென்ஸை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது அரிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் சில வகையான கொசுவத்திகள் எரியும்போது சிலருக்கு தோலில் அரிப்பும் அலர்ஜியும் ஏற்படுகிறது.

யூகிலிப்டஸ் (Eucalyptus)
தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் மூலிகை. படுவேகமாக வளரக்கூடியது. ஆனால் இதை வீட்டில் வளர்ப்பது சாத்தியமில்லை. அதே சமயம் இதன் இலைகளை எளிதாக சேகரிக்கலாம். அவற்றைக் காய வைத்து தீ மூட்டினால் அந்த வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

மாரிகோல்ட் (Marigold)
மஞ்சள் வண்ண பூக்களைக் கொண்ட செடி வகை. இதை கிராமப்புறங்களில் 'துலுக்கச் சாமந்தி' என்று குறிப்பிடுவார்கள். சிராய்ப்பு, காயங்கள், தோல் வியாதிகள், தீக்காயம், சொறி, சிரங்கு, மூல நோய் போன்றவற்றுக்கு இதை அரைத்துப் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கல், குடல் புண்கள், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் இது அருமருந்து. தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட மாரிகோல்ட் உதவுகிறது. இது ஒரு சிறந்த கொசுவிரட்டி. சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் வேகமாய் வளரும். இதன் வாசனை பிரச்னை இல்லை என்றால், கொசுக்கள் உற்பத்தியாகும் பாத்ரூம், சமையலறையிலும் மாரிகோல்ட்டை வைத்து வளர்க்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் எடுத்துப் போய் வெயிலில் காட்டினால் போதும். நன்றாக வளரும், கொசுக்களை விரட்டும்.

புதினா (Mint)
டீ தயாரிக்கவும், சளி, ஜூரம் ஆகிய பிரச்னைகளுக்கு சிகிச்சைக்காகவும் பயன்படுவது புதினா. இதன் வாசனை பிடிக்காமல்கொசுக்கள் பறந்து விடும். இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவத்தை தெளித்தால் கொசுவை விரட்டி விடலாம். வீட்டிலுள்ள தொட்டியில், அறைக்குள் வைத்து மிக எளிதாக இதை வளர்க்கலாம். மண்ணில் ஒருமுறை பயிரிட்டால் தானாக, வேகமாக வளரும்.

ரோஸ்மேரி (Rosemary)
இது ஒரு பசுமை மாறாத செடி. நன்கு வெப்பம் உள்ள, வறண்ட தட்ப வெப்பநிலையில் வளரக்கூடியது. இயல்பாகவே கொசுவை விரட்டும் ஆற்றல் கொண்டது. நான்கு சொட்டு ரோஸ்மேரி எண்ணெயையும், கால் கிண்ணம் ஆலிவ் எண்ணெயையும் கலந்து அந்தக் கலவையை உடலில் தேய்த்தால் கொசு நெருங்காது. இந்தக் கலவையை ஈரப்பதம் இல்லாத இடத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். எளிதாக வளரக்கூடிய இயற்கைச் செடி.

சிட்ரோநெல்லா (Citronella – Lemongrass)
சிட்ரோநெல்லா எண்ணெய் மிகப் பிரபலமான ஓர் இயற்கை பூச்சி விரட்டி. இதன் சிறப்பு பல ஆய்வுகளின் மூலமாக தெரிய வந்திருக்கிறது. வாசனை திரவியங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சிட்ரோநெல்லாவைப் பயன்படுத்தி, சென்ட்டு தயாரிக்கின்றன.

பூண்டு (Garlic)
மூலிகை சார்ந்த மருத்துவத்தில் பூண்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. மிக அதிகமாக பூண்டு சாப்பிடுபவர்களைகொசுக்கள் கடிப்பதில்லை என்கிறார்கள். பூண்டு எண்ணெயையும் தண்ணீரையும் 1க்கு 5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் கொசு நுழையும் இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.

கொசுக்களை விரட்டும் செடிகள்!
உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.? இதோ கொசுவை விரட்ட எளிய வழி
கொசு ஓரு பிரச்சனையா? உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட

ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!
ஒரு எழுமிச்சை பழம் எடுங்கள். அதை பாதியாக வெட்டுங்கள். இப்பொழுது சதை பகுதியில் ஆங்காங்கே கிராம்பை சொருகுங்கள். இதை அப்படியே உங்கள் ரூமில் வைங்கள். இவைகளில் இருந்து வரும் வாசனை கொசுவை விரட்டோ விரட்டு என்று விரட்டிவிடும்.

கொசுவை ஓட ஓட விரட்டணுமா?
அப்படி என்றால் நீங்கள் வேப்ப மரத்து இலைகளை சுடு தணலில் வாட்டுங்கள். அதிலிருந்து வரக்கூடிய புகை கொசு கூட்டங்களை ஓட ஓட விரட்டும்
வடை போண்டா பஜ்ஜி செய்து சாப்பிடக்கூடிய அசோலா பாசியை வீட்டில் பின்னாடி வளர்த்து வந்தால் உங்கள் வீட்டு பக்கம்கொசு எட்டிகூட பார்க்காது.

டெங்கு கொசுவை ஒழிக்க எளிய வழி
டெங்கு காய்ச்சலுக்கு மூல காரணமாக இருக்கும் கொசுக்களை ஒழிக்க எளிய வழி!
2 லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதை பாதியாக வெட்டுங்கள். அப்புறம் கீழ் பாதியை எடுத்துக்கொண்டு அதில் அரைப்பாகம் வெதுவெதுப்பான சுடு நீரை ஊற்றுங்கள். அதில் முக்கால் கப் பிரவுன் சுகர் என்று சொல்லக்கூடிய பழுப்பு நிற கரும்பு சர்க்கைரையையும் ஒரு டேபிள் ஸ்பூன் ஈஸ்ட்டையும் சேர்த்து கலக்கவும். ( சீனி கூட பயன்படுத்தலாம்)
இப்பொழுது கீழ்பகுதி பாட்டிலின் மீது பாட்டிலின் மேல் பகுதியை தலைகீழாக வைக்கவும் (புணல் போல வைக்கவும்). இப்பொழுது இந்த பாட்டிலை சுற்றி கருப்பு நிற காகிதத்தை சுற்றி ஒட்டவும். அப்புறம் இந்த பாட்டிலை நமது ரூமில் ஒரு மூலையில் வைக்கவும். இந்த பாட்டிலிலிருந்து கார்பன் டை ஆக்சைடு வெளி வர ஆரம்பிக்கும். கொசுக்கள் எல்லாம் அங்க படை எடுக்கும்.

அந்த கரைசலில் கொசுக்கள் எல்லாம் ஒட்டிக்கொள்ளும். அவைகளால் இனி வெளியே வரமுடியமல் போய் அங்கேயே சமாதி அடைந்துவிடும்.
கொசு விரட்டி மூலிகை லிக்யுட்! இது ஒரு இயற்கை தயாரிப்பு!
கொசு விரட்டி லிக்யுட் தயாரிப்பது எப்படி? கொசு விரட்டி மூலிகை லிக்யுட் தயாரிப்பது எப்படி?

வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).
குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.

பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான் கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.

எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப் போட வேண்டும்.

கொசுக்களைக் கலங்கடிக்கும் கற்பூர வில்லை!
கற்பூரம்ஒரு கண்கண்ட கிருமி நாசினி. வீடுகளில் தினமும் பூஜை செய்யும் போது கற்பூரத்தை கொளுத்தி ஆரத்தி எடுப்போம். இதைச் செய்யும்போது அறையில் உள்ள காற்றின் மாசுக்கள், பேக்டீரியா, வைரஸ், கொசு மற்றும் பூச்சிகளை விரட்டி அடிக்கின்றன கற்பூரப் புகையும் மணமும். சுற்றுப்புறத்தை ஆரோக்கியமாக்கும் சக்தி கற்பூரத்துக்கு உண்டு. நிரூபிக்கப்பட்ட பல மருத்துவ குணங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.

மூக்கடைப்பு, இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றுக்கு கற்பூரத் தைலம் கண்கண்ட மருந்து. பல வலி நிவாரண மசாஜ் க்ரீம்களுக்கு கற்பூரம் ஒரு இன்றியமையாத பொருள்.

நம்மில் பலருக்கு கற்பூரம் ஒரு சிறந்த கொசு நிவாரணி என்கிற உண்மையே தெரியாது. பக்க விளைவுகள் இல்லாத, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒரு அரு மருந்து. இதற்காக கற்பூரத்தை நாள் முழுவதும் எரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில்லை .

கொசுக்களை ஒழிக்க சுலபமான மூன்று வழிகள்
1. கொசுவர்த்தி பேடில் வழக்கமாக வைக்கும் நீல நிற வில்லைக்கு பதில் கற்பூரத்தை தினமும் ஒரு மணி நேரம் காலையிலும் மாலையிலும் வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. இரண்டு வில்லை கற்பூரத்தை அறையின் மூலை முடுக்குகளில் எங்கு கொசுக்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கு வைத்து விடவும். அந்த வில்லைகள் தாமாகக் கரையும். காற்றும் சுத்தமாகும். கொசுவும் இருக்காது.
3. இரவில் படுக்கை அறையில் ஒரு வாய் அகன்ற கப்பில் தண்ணீருடன் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டு ஒரு மூலையில் வைத்து விடவும். கற்பூரம் தண்ணீரில் கரைந்து காற்றுடன் கலக்கும். கற்பூர மணத்துடன் கொசு இல்லா நிலையை அனுபவிக்கலாம்.

கொசுக்களை ஒழிப்பது எப்படி?
வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் மண்ணெனண்ணைய் தெளித்தால் கொசு முட்டை அழிவதோடு கொசுக்கள் முட்டையிடுவதும் நின்று போகுமாம். இதனால் கொசு உற்பத்தியே இல்லாமல் போகுமாம்!

வீட்டை சுற்றிலும் நீங்கள் துளசி, திருநீற்று பச்சிலை செடிகளை வளர்த்து வந்தால் கொசுக்கள் வருவது குறைந்து போகுமாம்.
வீட்டை சுற்றி இருக்கும் தண்ணீரில் லிட்டருக்கு ஒரு விதை வீதம் தேற்றான் கொட்டையை அரைத்து கலக்கலாம்! மஞ்சள் கிழங்கையும் அரைத்து தேங்கியிருக்கும் தண்ணீரில் கரைக்கலாம்

கொசுவை விரட்ட மூன்று வழிகள்! முத்தான வழிகள்! எளிய வழிகள்! அனைவருக்கும் ஏற்ற எளிய வழிகள்!
வீட்டில் கொசு மேட் வைக்கும் கருவி இருந்தால் (படத்தில் உள்ளதுபோல்) அதனுள் அந்த இரண்டு சூட பில்லைகளை உள்ளே வைத்து 'பிளக்'கில் சொருகிவிடுங்கள். இதைக் காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மட்டும் செய்தால்கொசு போயே போச்சே!

கற்பூர பில்லைகளை (அந்துருண்டை போல) அறையில் கொசு அடையும் இடங்களில் போட்டுவைத்தால் அந்த வாசனைக்குக் கொசு வாராது.
ஒரு தட்டில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சூட பில்லைகளைப் போட்டு வையுங்கள். தண்ணீர் ஆவியாகும் போது, கற்பூர வாசனை அறை எங்கும் பரவும். அறையும் மணக்கும், கொசுவும் விரட்டப் படும்! உடனடி பலனுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம்.

வீட்டில் கொசுக்களை விரட்ட எளிய வழிகள்!!!
ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாட்கள்.
  பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்கள். பொதுவாக் கொசுவின் சராசரி ஆயுட்காலம் 21 நாட்கள்.  வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது

கொசு ஒழிப்புதினம்!
மனிதர்களைக் கொல்லும் உயிரினப் பட்டியலில் கொசுக்களுக்கு சிறப்பிடம் தரலாம். கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய்களால் உயிரிழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன. .உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு, மனிதர்களுக்கு பல நோய்களை பரப்புவதில் முதல்வனாக இருக்கிறது. உலகில் 3 ஆயிரம் வகை கொசுக்கள் உள்ளன. இதில் 300 வகையான கொசுக்கள் மனிதர்களையும், மிருகங்களையும் கடிக்கும்போது நோய்கள் பரவுகிறது. இதில் ஆண் கொசு கடிப்பதில்லை. பெண் கொசுதான் இனவிருத்திக்காக பல உயிர்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. முக்கியமாக 3 வகை கொசுக்கள் தான் கொடிய நோய்களை பரப்புகிறது.

அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ.என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1987ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி சர்ரெனால்ட்ரோஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளேகொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது. இவரது கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஆக. 20ம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவரது கண்டுபிடிப்பிற்காக, 1902ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ரொனால்டு ரோஸ், 1857ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடித்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சியில் 1882 முதல் 1899 வரை ஈடுபட்டார். பிரிட்டன் சார்பில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றார்.கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன.

எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தென்கிழக்காசிய நாடுகளில் கொசுக்கள் பரவலாக உள்ளன. உலக சுகாதார நிறுவனம் இதற்காக பிராந்திய அளவில்,தென்கிழக்காசியத்திற்கான அலுவலகத்தை டில்லியில் அமைத்துள்ளது.இந்தியா முழுவதிலும் உள்ள கொசுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம் 1985 மே 1ம் தேதி அமைக்கப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் கொசுக்களால் காய்ச்சல், உயிரிழப்பு ஏற்படுகிறதோ அந்த பகுதிகளுக்கு விஞ்ஞானிகள் நேரடியாக சென்று ஆய்வுகள் செய்து, இழப்புகள், கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்கிறார்கள்.

பீகாரில் முஜபூர் நகர், மேற்குவங்கத்தில் ஜல்பகிரி, குஜ்பீகார், தக்ஷின் தினஜ்பூர், டார்ஜிலிங், உத்தரபிரதேசத்தில் கோரக்பூர், கேரளத்தில் குட்டநாடு, ஆந்திராவில் கர்னூல், தமிழகத்தில் கடலூரில் கொசுக்கள் குறித்த ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. கொசுக்களின் மாதிரிகள், சேகரித்த ரத்த மாதிரிகள், அவற்றின் மூலக்கூறுகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்தும் நடைமுறைகள் அரசுக்கு அனுப்பப்படுகிறது.

மதுரையில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகத்தில் 240 வகையான கொசுக்களின் மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது புதிய கொசுக்கள் கண்டறியப்பட்டு, அவை குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றின் இனப்பெருக்கம் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன.

இறப்புப் பட்டியலில் மலேரியாவால் ஏற்பட்ட உயிரிழப்பு தான் அதிகம். 1920 மற்றும் 1930களில் இந்தியாவில் பல லட்சம் மக்களை தாக்கியது. இக்காய்ச்சலுக்கு பத்து லட்சம் மக்கள் இறந்தனர். தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம் 1958 ல் துவங்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சையின் மூலம் மலேரியா கட்டுப்படுத்தபட்டது.அதன்பின் அவ்வப்போது மலேரியா காய்ச்சல் வந்தாலும், இறப்புகளின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. மலேரியா கட்டுப்படுத்தப்பட்டாலும் இன்னமும் அதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.நன்னீர், தேங்கியுள்ள மழைநீரில் இனப்பெருக்கம் செய்யும்.

சிலநேரங்களில் ஆற்றின் கரையோரங்களிலும் இனப்பெருக்கம் செய்யும். அனாபிலிஸ் வகை கொசுக்கள் 58 இருந்தாலும் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
பைலேரியா: மருந்து கண்டுபிடிக்கவில்லை. கடற்கரை பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் குயிலெக்ஸ் கொசுக்களால், 'பைலேரியா' எனப்படும் யானைக்கால் நோய் உருவாகும். இக்கொசுக்கள் இரவில் கடிக்கும். இவை சாக்கடை, வயல்வெளி சகதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.

டெங்கு: 'ஏடிஸ் எஜிப்டே' வகை கொசுக்களால் டெங்கு வைரஸ் மூலம் காய்ச்சல் பரவுகிறது. மழைக்காலத்தில் ரோட்டில் கிடக்கும் தேங்காய் சிரட்டை, இளநீர் மட்டை, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில், ரப்பர் கழிவுகளில் தண்ணீர் தேங்கினால், கொசுக்கள் உற்பத்தியாகிறது. வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், திறந்தநிலை மேல்நிலைத் தொட்டிகளின் மூலம் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகும். பகலில் கடிக்கும்.

சிக்குன் குனியா: 'ஏடிஸ் எஜிப்டே, ஏடிஸ் ஆல்போபிக்டஸ்' கொசுக்களால், 'ப்ளேவி' வைரஸ் மூலம் சிக்குன்குனியா காய்ச்சல் பரவுகிறது. இதுவும் நன்னீர், மழைநீரில் உற்பத்தியாகும்.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்: குயிலெக்ஸ் வகையைச் சேர்ந்த 18 வகை கொசுக்களால் பரவுகிறது. இவை பன்றி மற்றும் எக்ரெட் பறவைகளில் காணப்படும் வைரஸ். இக்கொசுக்கள் விலங்குகளை தான் கடிக்கும். அதிக இனப்பெருக்கத்தால், சிலநேரங்களில் மனிதர்களை கடிக்கும் போது, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரவுகிறது.

தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 1985களில் உயிரிழப்புகள் நிகழ்ந்தன. அதுகுறித்த ஆராய்ச்சிக்காக, மத்திய பூச்சியியல் நிறுவனம் சார்பில் கடலூர் விருத்தாச்சலத்தில் சிறப்பு ஆய்வு மையம் அமைக்கப்பட்டது.

1988 முதல் தற்போது வரையான ஆய்வுகள் அங்கு சேகரிக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம், திருக்கோயிலூரில் யானைக்கால் தடுப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொசுக்களை ஆராய்ச்சி செய்வதோடு, அதன் டி.என்.ஏ., மாதிரியை சேகரிக்கும் வகையில், கோவையில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கொசுக்களை அழிப்பது எப்படி?: கொசுக்களை கட்டுப்படுத்துவது ஒன்றே மிகச்சிறந்த வழி. அவற்றின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்கு வீடுகளில் தண்ணீர் தேங்கக்கூடாது. ஜன்னல்களில் கொசுவலை, படுக்கையில் கொசுவலை அவசியம். சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும்.

உற்பத்தித் தளங்களை கட்டுப்படுத்தினாலே, கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தடுக்கலாம், என்றார்.
கியூலக்ஸ் என்ற கொசு கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் காணப்படுவதால் களியக்காவிளை பகுதியில் பலர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டனர். ஏடிஎஸ் ஏஜிட்டி என்ற கொசுக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லை மாவட்டத்தில் அதிகம் காணப்பட்டதால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் பலியாகினர்.

விஷக்காய்ச்சல் என்று தெரிய வந்தால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கசாய பொருட்களை தண்ணீருடன் கலந்து கொதிக்க காய்ச்சி சுண்ட வற்றிய பின் ஆற வைத்து குடிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நிலவேம்பு கசாயம் வாங்கி குடிக்கலாம். சித்த ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளிலும் இலவசமாக மருந்து கிடைக்கும்.

கொசு ஒழிப்பு (தடுப்பு) முறைகள் :வீட்டில் கழிவு நீரோடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூந்தொட்டி, மரம், செடி, கொடிகளில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மரம், செடி, கொடிகளுக்கு உரிய மருந்து தெளித்திட வேண்டும். வீட்டில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். பாத்திரங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரை குடிநீராக பயன்படுத்த வேண்டும்.

நாம் தினமும் குளிக்கும்போது ஒரு சொட்டு டெட்டால் விட்டு குளித்து வந்தால் தண்ணீரில் உள்ள கிருமிகள் அழியும். தேகமும் மணமணக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். சுகாதாரத்தை பேணுவோம், நோயின்றி வாழ்வோம் என கொசு ஒழிப்பு தினமான இன்று சபதம் ஏற்போம்.
பூச்சிகள் பற்றிய தகவல்
1. தேனிக்கு ஐந்து கண்கள்.
2. கரப்பான் பூச்சி எப்போதுமே 16 முட்டைகள் இடும்.
3. ஈயின் ஆயுள் 10 நாட்கள் மட்டுமே.
4. ஆண் கொசுவின் ஆயுட்காலம் 9 நாள்.
5. பெண் கொசுவின் ஆயுட்காலம் 30 நாள்.
6. மரவட்டைக்கு 7 கண்கள் உள்ளன.
7. வெள்ளை, மஞ்சள் நிறங்கள் கொசுக்களுக்குப் பிடிக்காது.
மலேரியாவை பற்றி…:
ஆண்டுதோறும் 7,81,000 பேர் பலியாகின்றனர். இதில் 90 சதவீதம் ஆப்ரிக்க நாடுகளில் ஏற்படுகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி எடுத்தல் போன்றவை மலேரியா கொசு கடித்த 10 முதல் 15 நாட்களுக்குள் ஏற்பட்டால், மலேரியா நோய் தாக்கியுள்ளது என தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லை எனில், நோய் முற்றி உடலுறுப்புகளுக்கான ரத்த ஓட்டம் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதை முற்றிலுமாக தடுக்க முடியாவிட்டாலும், மலேரியாவின் வீரியத்தை குறைப்பதற்கு சில தடுப்பு மருந்துகள் உள்ளன.
ஆப்பிரிக்காவில் 30 நாடுகள், ஆசியாவில் 5 நாடுகள் என 35 நாடுகளில் தான் 98 சதவீத மலேரியா உயிரிழப்பு ஏற்படுகிறது.

உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5வது இடத்தில் உள்ளது. அதே போல, ஆப்ரிக்காவில் எச்.ஐ.வி., / எய்ட்ஸ் நோய்க்கு அடுத்து 2வது இடத்தில் மலேரியா உள்ளது.

காசு கொழிக்கும் கொசு விரட்டி தயாரிப்பு !
தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்' : விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரிக்கலாம்!

இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாது. இயற்கை முறையில் தயாரிப்பதால், இவை நோயாளிகளை பாதிப்பதில்லை.  வரும் காலத்தில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் பயன்பாடு அதிகரிக்கும். கோவை வேளாண் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கண்காட்சிகளில் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் இடம்பெற்றுள்ளது.

விற்பனை வாய்ப்பு
மளிகை கடைகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் விற்பனையகங்கள், நாட்டு மருந்து கடைகள், மருந்து கடைகள் ஆகியவற்றில் மூலிகை கொசுவிரட்டி லிக்யுட் விற்கப்படுகிறது. அங்கு நேரடியாக சப்ளை செய்யலாம். தினசரி கடைக்கு 5 பாட்டில் வீதம் 20 கடைகளுக்கு ஒரு நாள் உற்பத்தியான 4 லிட்டர் லிக்யுட்டை (100 பாட்டில்) எளிதில் விற்கலாம். இவ்வாறு சுழற்சி முறையில் வெவ்வேறு கடைகளில் சப்ளை செய்யலாம். தெரிந்தவர்களுக்கும், அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் நேரடியாகவும் விற்கலாம். தரம் மிகவும் முக்கியம். நல்ல தரத்தோடு விலையும் ஏற்றதாக இருந்தால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். விற்பனையும் அதிகரிக்கும்.

மூலிகை லிக்யுட் காய்ச்ச வீட்டு சமையலறை, மூலிகைகளை காய வைக்க திறந்தவெளி. தளவாட சாமான்கள்: வர்த்தக கேஸ் சிலிண்டர் அடுப்பு, 15 லிட்டர் குக்கர், 30 அடி நீள பைப், அகன்ற பாத்திரம், 10 லிட்டர் பாத்திரம், 40 மி.லி காலி பெட் கன்டெய்னர்கள், லேபிள், பேப்பர் பேக்கிங் பாக்ஸ். இவற்றுக்கு செலவு ரூ.15 ஆயிரம்.

வேப்பிலை, துளசி, நொச்சி இலை, மஞ்சள், சாம்பிராணி, குங்குலியம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை. நாட்டு மருந்து கடைகளில் மற்ற மூலிகை பொருட்கள் கிடைக்கின்றன. சோற்று கற்றாழையை வீட்டில் வளர்க்கலாம். பெட் கன்டெய்னர் பாட்டில்கள் கோவை, மும்பை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கின்றன.

வேப்பிலை 500 கிராம் ரூ.10, துளசி 500 கிராம் ரூ.25, நொச்சி இலை 700 கிராம் ரூ.70, மஞ்சள் 100 கிராம் ரூ.10, சாம்பிராணி 150 கிராம் ரூ.40, குங்குலியம் 150 கிராம் ரூ.30, தும்பை 50 கிராம் ரூ.10, ஆடாதொடா, சிறியாநங்கை, சோற்று கற்றாழை 1 கிலோ ரூ.20, 4 லிட்டர் மூலிகை கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் தயாரிக்க தேவையான மூலிகை பொருட்கள் செலவு ரூ.250, பேக்கிங் மெட்டீரியல் செலவு ரூ.50, உழைப்பு கூலி 2 நபருக்கு ரூ.300 வீதம் ரூ.600, இதர செலவுகள் ரூ.100 என தினசரி 1000 ரூபாய் செலவாகும். ஒரு மாதத்தில் 25 நாள் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம் தேவை.

உற்பத்தி செய்யப்படும் லிக்யுட் 40 மி.லி அளவுகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. ஒரு பாட்டில் ரூ.25க்கு கடைகளுக்கு விற்கப்படுகிறது. அவர்கள் ரூ.40 வரை விலை வைத்து விற்கிறார்கள். இவ்வாறு தினசரி உற்பத்தியாகும் 4 லிட்டர் லிக்யுட்டை 100 பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் ரூ.2,500 கிடைக்கும். செலவு போக தினசரி லாபமாக ரூ.1,500 கிடைக்கும். இதுவே மாதத்தில் 25 நாட்களில் லாபம் ரூ.37,500.

கொசு  விரட்டி மூலிகை லிக்குயூட் தயாரிப்பது எப்படி?
வேப்பிலை, துளசி தலா 500 கிராம், நொச்சி 700 கிராம், மஞ்சள் 100 கிராம், சாம்பிராணி, குங்குலியம் தலா 150 கிராம், தும்பை, ஆடாதொடா, சிறியாநங்கை தலா 50 கிராம் ஆகியவற்றை காயவைத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். சோற்று கற்றாழை ஒரு கிலோ எடுத்து கசப்பு நீங்கும்வரை கழுவ வேண்டும். மூலிகை பொடிகளையும், சோற்று கற்றாழை ஜெல்லையும் 10 லிட்டர் தண்ணீரில் போட்டு, குறைந்தது 6 நாள் முதல் 10 நாள் வரை ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை குக்கரில் போட்டு மூடி மிதமான தீயில் வைக்க வேண்டும் (வெப்பநிலை 30 முதல் 40 டிகிரி வரை).
  குக்கரில் ஆவியை வெளியேற்ற விசில் போடும் இடத்தில், விசிலுக்கு பதிலாக 30 அடி நீள பைப்பை செருக வேண்டும். குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி, பைப் வழியாக வரும். அந்த பைப்பை தண்ணீர் நிரப்பப்பட்ட அகன்ற பாத்திரத்தில் மூழ்கியவாறு வைக்க வேண்டும்.

பைப் வழியாக வரும் ஆவி குளிர்ந்து தண்ணீரும், எண்ணெயும் கலந்தவாறு சொட்டு சொட்டாக வெளியேறும். பாத்திரத்தின் கீழ் பகுதியில் 4 லிட்டர் தண்ணீரும், மேல் பகுதியில் 3 லிட்டர் எண்ணெயும் மிதக்கும். மேலே மிதக்கும் எண்ணெய் தான்கொசு விரட்டி மூலிகை லிக்யுட். இதற்கு மூன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் குக்கரில் உள்ள தண்ணீர் வற்றி விடும். பிறகு தீயை அணைத்து விட வேண்டும். தண்ணீரும், எண்ணெயும் கலந்த பாத்திரத்தில் உள்ள எண்ணெயை மேலோட்டமாக வடித்து எடுத்து கொள்ளலாம் அல்லது ஏர் பில்லர் மூலம் உறிஞ்சி எடுக்கலாம்.
எண்ணெய் வடித்தது போக பாத்திரத்தில் மிஞ்சிய 4 லிட்டர் தண்ணீரை மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும். ஏற்கனவே குக்கரில் மூலிகை பொருட்கள் மசாலா போல் தங்கியிருக்கும். இதில் தண்ணீர் கலந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் வேக வைத்து, ஆவி வெளியேறி, அதன் மூலம் மேலும் ஒரு லிட்டர் லிக்யுட் கிடைக்கும். இவ்வாறு ஒரு நாளில் ஒரு முறை 4 லிட்டர் கொசுவிரட்டி மூலிகை லிக்யுட் கிடைக்கும். சேகரித்த தைலத்தை பெட் கன்டெய்னர் பாட்டிலில் ஊற்றி பேக்கிங் செய்தால் கொசு விரட்டி மூலிகை லிக்யுட் விற்பனைக்கு தயாராகி விடும். தினசரி 4 லிட்டர் தயாரிக்க, 10 நாளுக்கு முன்பே மூலிகை பொருட்களை தண்ணீரில் ஊறப்
     கொசுக்களை கட்டுப்படுத்த  அரசாங்கம் பல நடவடிக்களை எடுத்தாலும் நாம் நம்மை சுற்றி உள்ளஇடத்தை சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமலும் பார்த்து கொள்ளவேண்டும்.டெங்கு காய்ச்சலுக்கு பிறகு கொஞ்சம் மக்களிடையே விழிப்புணர்வு வந்து இருப்பதாக தெரிகிறது . வாளி , வர்ணம் இருந்த பாத்திரங்கள் , தேவையில்லாத உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை கவிழ்த்து வைக்க வேண்டும். வீட்டை சுற்றி தேங்கும் தண்ணீரை அப்புறபடுத்த முடியவிட்டாலும் நீர் மீது டீசல் ,மண்ணெண்ணெய் ,பெட்ரோல் ஏதோவொன்று சிறிது தெளிக்கலாம் .இதுவும் அதிக செலவு என்று எண்ணுபவர்கள் சோப்பு தண்ணீரை பயன்படுத்தலாம் .கிணறு போன்ற நீர் நிலைகளில் என்ன செய்யலாம் ? அதற்கு  இயற்கை தந்த தீர்வு மீன் வளர்ப்பது.

வீட்டில் பூதொட்டிகள் இருக்கும் நீரை தினசரி மாற்ற வேண்டும் .இன்னமும் சுத்தமாக வைத்து கொள்ள விருபும்வோர் பூசெடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கலாம் . வசதியுள்ளவர்கள் சிறிய அளவில் வீட்டுக்காக கொசு மருந்தடிக்கும் இயந்திரம் உள்ளது.கொசு மருந்து திரவ கரைசலையும் ,வாயுவையும்  வாங்கி அதற்கான இயந்திரத்தில் இணைத்து  வீட்டை சுற்றிலும் பயன்படுத்தலாம் .இதையும் இயற்கையான முறையில் வேப்பபுண்ணாக்கையும்,சுண்ணாம்புக் கரைசலை பயன்படுத்தலாம் .மரக்கிளையில் இருக்கும்பொந்துகளில் மண் அல்லது சிமெண்ட் பூசி தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ளலாம் .

சிங்கப்பூர் ,மலேசியா போன்ற நாடுகளில் டெங்கு காய்ச்சல் வந்து வருடந்தோறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மழைக் காலங்களில் வீடு வீடாக சென்று சோதனை செய்வார்கள்.அதற்கு தனியாக ஒரு குழு உண்டு , இவர்கள் கொசுக்களின்  லார்வாவை  பிடித்து விட்டால் முதல் தடவை  20,000($500)ரூபாய்யும்,கட்டிட கட்டுமான தளமாக இருந்தால்  40,000($1000)ரூபாய்யும்,அடுத்தடுத்த முறைகளில் அபராதம் இரட்டிப்பாக உயர்ந்து கொண்டே போகும்.இதனால் தான் அங்கு மக்கள் சுகாதாரமாக வாழ்கிறார்கள். நல்ல வேளையாக இந்தியாவில் மழைக்காலம் மூன்று மாதம் மட்டுமே
நண்பர்களே நீங்கள் படித்து பயன் பெறவும் உங்கள் நண்பர்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் பகிருங்கள் .உலகம் விழித்து கொள்ளட்டும் .


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts