லேபிள்கள்

வியாழன், 1 மார்ச், 2018

பானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்!

பானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்!

மனிதன் உயிர்வாழ மிக மிக அத்தியா வசியமானது... நீர். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து மட்டுமின்றி... ஆற்றல், வளர்சிதை மாற்றம், சரும ஆரோக்கியம் என்று அதன் பணிகளும், பலன்களும் ஏராளம். அப்படிப்பட்ட குடிநீரை, சேமித்து வைக்கும் பாத்திரங்களை பொறுத்து என்னென்ன நன்மை - தீமைகள் என்று விரிவாக சொல்கிறார் கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி...

கேன் வாட்டர் நல்லதா..?
முன்பெல்லாம் ஆறு, குளம், ஏரி, கிணறு போன்றவற்றின் மூலம் குடிநீர் கிடைக்கப் பெற்றோம். ஆனால், இன்று சுற்றுச்சூழல் மாசு, நிலத்தடி நீர் குறைவு, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றால் ஒவ்வொரு வீட்டிலும் இடம்பிடித்துவிட்ட 'சுத்திகரிக்கப்பட்ட' கேன் தண்ணீரையே அருந்திவருகிறோம். தண்ணீரில் உள்ள தாதுக்களை எல்லாம் பிரித்தெடுத்து வெளியேற்றிவிட்டு, பூச்சிக்கொல்லி மருந்து கள் சேர்க்கப்பட்ட, பல இடங்களில் முறையான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படாத அந்த கேன் தண்ணீர், நலம் தருவதைவிட நலக்குறைவே தருகிறது என்பதுதான் உண்மை. கூடுமானவரை கேன் தண்ணீரை தவிர்க்கவும். இல்லையென்றால் காய்ச்சி வடிகட்டி ஆற வைத்து பருகவும்.

மண்பானை மகிமை!


ஆழ்துளை மோட்டார் மூலம் பெறப்படும் நிலத்தடி நீர், ஊற்றுநீர் வகையில் அடங் கும். அதை மண்பானையில் சேமித்துவைக்கும்போது, சில மணி நேரங்களில் அந்நீரில் உள்ள அழுக்கு களை மண்பானை உறிஞ்சிக் கொண்டு, மண்ணுக்குரிய சக்தியால் அதைச் சுத்திகரிப்பு செய்கிறது. அத்து டன் பிராண சக்தியும் கிடைக்கிறது. மேலும், மண்பானை நீரில் வெட்டிவேர், துளசி, எலுமிச்சை, புதினா போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கலந்துவைத்து குடிக்கும் போது உடலுக்கு நன்மைகள் பல கிடைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப் பெறலாம்.

சித்தர்கள் அருந்திய செம்புக்குட நீர்!
சித்தர்கள், செம்பு (தாமிரம்) குடங்களில்தான் தண்ணீரைச் சேமித்து அருந்தினார்கள். செம்புப் பாத்திரத்தில் 24 மணி நேரம் தண்ணீரைச் சேமித்து வைத் திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை என்று ஆய்வு நிறுவனம் ஒன்று தனது ஆராய்ச்சியின் முடிவில் அறிவித்துள்ளது. கோயில்களில் இன்றும் செம்புப் பாத்திரங்களில் தீர்த்த நீர் தர இதுவே காரணம்.

நம் முன்னோர்கள் காலத்தில் வீட்டுக்கு வீடு செம்புக் குடங் களில்தான் தண்ணீர் சேமித்துவைக்கப்பட்டது. காலப்போக்கில் அது வழக்கம் இழந்து, இப்போது எந்த வீட்டிலும் செம்புக்குடம் இல்லை. குடமாக இல்லை என்றாலும், மண்பானை தண்ணீருக்குள் உள்ளங்கை அளவில் ஒரு செம்புத்தகட்டை போட்டுவைத்தால், அது அந்த நீரை சுத்திகரிப்பதில் பங்களிக்கும். அது மினரல் வாட்டரைவிட நல்ல தரத்தில் இருக்கும்.

சமநிலைக்கு உதவும் தாமிரம்!
தாமிரப் பானையில் தண்ணீர் குடிப்பது, ஆயுர்வேதத்தின் அடிப்படை என்பது குறிப்பிடத்தக்கது. உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றைச் சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க தாமிரம் உதவும் என்கிறது ஆயுர்வேதத்தின் பண்டைய அறிவியல்.

மொத்தத்தில், நீரை மண்பானை அல்லது செம்புப் பாத்திரத்தில் சேமித்து அருந்துவது, இயற்கையான சுத்திகரிப்பு முறையில் ஆரோக்கியம் தரவல்லது!

அலுமினியப் பாத்திரம்... ஆபத்து!
இன்று அலுமினியப் பாத்திரங்கள் சமையல் தொடங்கி தண்ணீர் சேமிப்புவரை பயன்படுகிறது. அதில் உள்ள அயனிகள் அல்லது மின்துகள்கள், மூளைக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக அலுமினியப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டுவரும்போது, நாளடைவில் அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அலுமினியம் சிறுநீரகங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியது.

ஃப்ரிட்ஜ் வாட்டர்... அவஸ்தை தரும்!
குளிர்சாதனப்பெட்டியில் தண்ணீரைக் குளிர்வித்து அருந்துவது பலரின் வழக்கம். இது ஜலதோஷம், மூக்கடைப்பு என்பதில் தொடங்கி செரிமானத்தை தாமதப்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதுவரை பல பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts