இடது கைப்பழக்கம் சரியா?
இடது கையால் எழுதுவது, பொருளை எடுப்பது, வீசுவது, பிடிப்பது, இடது காலால் உதைப்பது, தள்ளுவது என… எல்லா செயல்களுக்கும் இடது கை, காலைப் பயன்படுத்துபவர்களைக் கிண்டல் செய்வார்கள் பலர். வேறு சிலரோ, `இடது கைப் பழக்கம் அதிர்ஷ்டம்' என்பார்கள். உலகில், 10 சதவிகிதம் பேர் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்தான். மிகப்பெரிய பிரபலங்கள் பலரும் இடது கைப் பழக்கம் கொண்டவர்கள். இடது கையைப் பயன்படுத்துவது ஏதேனும் குறைபாடா… இயல்பான விஷயம்தானா… சிலர் மட்டும் ஏன் எல்லாவற்றுக்கும் இடது கை, காலைப் பயன்படுத்துகிறார்கள்?
பொதுவாக, இடது மூளை, வலது புற உடலை இயக்கும். அதுபோல, வலது மூளை, இடது புற உடலை இயக்கும். அதிகமாக இடது கை, கால்களைப் பயன்படுத்துவோரின் உடலில், வலது மூளை அதிகமாக ஆதிக்கம் செலுத்தும்.
எப்படிப் பெரும்பாலானவர்களுக்கு வலது கைப் பழக்கமோ, அப்படிச் சிலருக்கு இடது கைப் பழக்கம் இயற்கையாக, இயல்பாக வருகிறது. இது ஒரு நோயோ, குறைபாடோ கிடையாது. சில பெற்றோர், குழந்தைகளின் இடது கைப் பழக்கத்தைத் திருத்த வேண்டும் என, குழந்தையை மிரட்டியும் அடித்தும் துன்புறுத்துகின்றனர். திருத்துவதற்கு இது ஒன்றும் தவறே அல்ல; இயல்பான செயல்பாடு என்ற புரிதல் அவசியம்.
சில சமயங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, இடது மூளை பாதிக்கப்படும்போது, வலது மூளை ஆதிக்கம் பெறுகிறது. இதனால், திடீரென இடது கைப் பழக்கத்துக்கு மாறுவார்கள் சிலர். இதுவும் இயல்பான ஒரு மாற்றமே.
இடது கைப் பழக்கம் உள்ள குழந்தைகளை அடித்து, திருத்த முயற்சிக்காமல், அவர்களின் போக்கில் விட வேண்டும்.
இடது கைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி வலது கைப் பழக்கத்துக்கு ஈடுபடுத்தினால், அவர்களின் செயல்திறன் குறைந்துபோகலாம்.
இடது கைப் பழக்கம் உள்ளவர்களால், பலதரப்பட்ட பணிகளை (Multi tasking) ஒரே நேரத்தில் செய்ய முடியும். ஆதலால், கட்டாயப்படுத்தி அவர்களின் பழக்கத்தை மாற்றக் கூடாது.

சாப்பிடுவதற்கு மட்டும் வலது கையால் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தலாம். இந்தப் பழக்கம் அவர்களால் முடியுமா என்பதை, மருத்துவர் உதவியுடன் முடிவு செய்யலாம்.
http://www.tamilyes.com/t53461-topic--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக