லேபிள்கள்

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

கட்டாயம் செய்ய வேண்டியவை!

கட்டாயம் செய்ய வேண்டியவை! 

ரிசர்வ் வங்கி அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் பெயரிலோ ஏதேனும் தகவலோ, அல்லது ஆப், என்கொயரி அல்லது டோல் ஃப்ரீ சர்வீஸ் நெம்பர் போன்ற வசதிகளோ வந்தால் அது உண்மைதானா என்பதை உங்கள் வங்கிக் கிளையில் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட பிறகு முயற்சி செய்யவும். 


உங்கள் மொபைல் போனுக்கு ஸ்க்ரீன் லாக் போட்டு வையுங்கள். அதற்கான பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும். 

மொபைல் பேங்கிங் வசதிக்காக வங்கிகள் வழங்கும் பிரத்யேக MPIN (Mobile-Personal Identification Number) என்ற எண்ணை, குறித்து வைப்பதோ, யாரிடமும் பகிர்ந்துகொள்வதோ வேண்டாம். வங்கிகளும் மூன்று முறைக்கு மேல் MPIN-ஐ தவறாகப் பதிவு செய்தால் அந்தச் சேவையை நிறுத்தி விடுகின்றன. 

மொபைலோ, சிம் கார்டோ தொலைந்து போனால் உடனடியாக வங்கித் தரப்பில் முறையிட்டு மொபைல் பேங்கிங் சேவையை ரத்து செய்யுங்கள். 

ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருங்கள். வங்கிக் கணக்கு தொடர்பான புகார்களை முடிந்தவரை நேரடியாக வங்கிக் கிளைக்கே சென்று முறையிடுங்கள். தெளிவாக பதில்களைக் கேட்டுப் பெறுங்கள். 

செல்போன் நிறுவனத்திலிருந்து பேசுவதாகச் சொல்லி உங்கள் விவரங்களைச் சரிபார்க்க வேண்டும், சொல்லுங்கள் என்று கேட்டால் உஷாராகிவிடுங்கள். ஏனெனில் உண்மையாகவே செல்போன் நிறுவனங்கள் நம்மைப் பற்றிய விவரங்களை அவர்களே சொல்லி, 'சரியா?' என்றுதான் கேட்பார்கள். எனவே, உங்கள் விவரங்களைச் சொல்லுங்கள் என்று அழைப்பு வந்தால், துண்டித்துவிடுங்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts