முதலுதவிகள்... முத்தான அறிவுரைகள்!
தீ விபத்து முதல் மாரடைப்பு வரையிலான எதிர்பாராத சமயங்களில், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் முன் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதலுதவிகளைப் பற்றி இந்த இதழ் `ஒரு டஜன் யோசனைகள்' பகுதியில் விளக்குகிறார்... சென்னை, மேத்தா மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவர் டாக்டர் சரவணக்குமார்.
தீ விபத்து
தீ விபத்து
''தீக்காயத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது, கொப்புளங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும். சில்வர் சல்ஃபாடையஸின் (Silver Sulfadiazine) என்ற மருந்தை காயத்தில் தடவலாம். கொப்புளங்களை உடைத்துவிடுவது, காயத்தால் உரிந் திருக்கும் தோலைப் பிய்த்துவிடுவது, தீ விபத்தால் உருகி உடலோடு ஒட்டியிருக்கும் துணியைப் பிரிப்பது இவையெல்லாம் கூடாது.
தவறு: காயத்தில் மை ஊற்று வது, மஞ்சள்தூள் தடவுவது, மாவு பூசுவதை எல்லாம் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.
மாரடைப்பு
தவறு: காயத்தில் மை ஊற்று வது, மஞ்சள்தூள் தடவுவது, மாவு பூசுவதை எல்லாம் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.
மாரடைப்பு
இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு நிகழும். முதலில் இதயத்
தவறு: மாரடைப்பை வாயு என்று நினைத்து சோடா குடிக்க வைப்பது பலரும் செய்யும் தவறு. 'மாரடைப்பு வந்தால் வேகமாக 20 முறை இரும வேண்டும்'என்பது போன்ற வாட்ஸ்அப் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.
லோ சுகர்
தவறு: மாரடைப்பை வாயு என்று நினைத்து சோடா குடிக்க வைப்பது பலரும் செய்யும் தவறு. 'மாரடைப்பு வந்தால் வேகமாக 20 முறை இரும வேண்டும்'என்பது போன்ற வாட்ஸ்அப் வதந்திகளையும் நம்ப வேண்டாம்.
லோ சுகர்
தின் நடுப்பகுதியில் தீராத வலி ஏற்பட்டு, பின்னர் இடது தோள்பட்டை, கை என வலி பரவும். வழக்கத்தைவிட அதிகமாக வியர்ப்பது, மூச்சு வாங்கு வது போன்றவை அறிகுறிகள் (சர்க்கரை நோயாளிகள் மற்றும் மிக வயதானவர்களுக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலும் அட்டாக் ஏற்படலாம்). பாதிக்கப்பட்டவரை காற் றோட்டமான இடத்தில் அமரவைத்து, கைவசம் ஆஸ்பிரின் (Aspirin), க்ளோப்பிடெக்ரல் (Clopidogrel) போன்ற மாத்திரைகள் இருந்தால் 300 மில்லி கிராம் கொடுக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாதது, உடல் தேவைக்கும் சற்று அதிகமான டோசேஜ் மருந்து எடுத்துக்கொள்வது போன்றவை அவர்களுக்கு லோ சுகர் ஏற்படச் செய்யும். வாய்க்குழறல், படபடப்பு, அளவுக்கு அதிகமாக வியர்ப்பது, மயக்கம் போன்றவை அறிகுறிகள். கைவசம் குளுக்கோ மீட்டர் இருந்தால் சுகரின் அளவை செக் செய்து, சர்க்கரையின் அளவு குறைவாக இருந்து நோயாளி நினைவுடன் இருக்கும்பட்சத்தில் சாக்லேட், ஜூஸ் கொடுக்கலாம்.
தவறு: பாதிக்கப்பட்டவர் மயக் கத்தில் இருக்கும்போது சாப்பிட எதுவும் கொடுத்தால், அது நுரையீரலைச் சென்றடைந்து உயிருக்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கவும்.
இதயத்துடிப்பு முடக்கம்
தவறு: பாதிக்கப்பட்டவர் மயக் கத்தில் இருக்கும்போது சாப்பிட எதுவும் கொடுத்தால், அது நுரையீரலைச் சென்றடைந்து உயிருக்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கவும்.
இதயத்துடிப்பு முடக்கம்
சீராகத் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரெனத் துடிக்காமல் இயக்கத்தை நிறுத்துவது, இதயத் துடிப்பு முடக்கம் (கார்டியாக் அரஸ்ட்). இது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை யாருக் கும் மூச்சுக்குழாய் அடைப்பு, எலெக்ட்ரிக் ஷாக் போன்றவற்றால் ஏற்படலாம். பாதிக்கப்பட்டவரின் நெஞ்சின் நடுப்பகுதியில் இரு கைகளையும் வைத்து 30 முறை அழுத்தம் கொடுக்கலாம்; அவர் வாயோடு வாய்வைத்து இரண்டு முறை மூச்சுக்காற்று கொடுக்கலாம். இதற்குத் தகுந்த பயிற்சி அவசியம். இப்போது இந்த முதலுதவிப் பயிற்சிகள் பல மருத்துவமனைகளில் வழங்கப்படுகின்றன.
தவறு: மாரடைப்பும் இதுவும் வேறு வேறு என்பதால், அதற்கான மாத்திரைகளை இவர்களுக்குக் கொடுத்துக் குழப்பக் கூடாது.
எலெக்ட்ரிக் ஷாக்
தவறு: மாரடைப்பும் இதுவும் வேறு வேறு என்பதால், அதற்கான மாத்திரைகளை இவர்களுக்குக் கொடுத்துக் குழப்பக் கூடாது.
எலெக்ட்ரிக் ஷாக்
முதலில் கரன்ட் சர்க்யூட்டை ஆஃப் செய்யவும். பாதிக்கப்பட்ட வருக்கு தீக்காயம் ஏற்பட்டால், தீக்காயம் தொடர்பாக ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். இதயத்துடிப்பில் மாற்றம் அல்லது இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
தவறு: பாதிக்கப்பட்டவர் ஒரு வேளை எந்தப் பிரச்னையும் இன்றி எழுந்து நார்மலாக இருந்தாலும்கூட, அப்படியே விட்டுவிடக் கூடாது. ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.
எலும்பு முறிவு
தவறு: பாதிக்கப்பட்டவர் ஒரு வேளை எந்தப் பிரச்னையும் இன்றி எழுந்து நார்மலாக இருந்தாலும்கூட, அப்படியே விட்டுவிடக் கூடாது. ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.
எலும்பு முறிவு
குழந்தைகள், பெரியவர்கள் இடறி விழுவது, விபத்தில் பலமாக அடிபடுவது போன்ற சமயங்களில் எலும்பு முறிவு ஏற்படும்போது, அந்த இடத்தில் ஐஸ் பேக் வைக்கலாம். காயம் ஏற்பட்ட பாகத்துக்கு அசைவு கொடுக்கக் கூடாது. ஒரு ஸ்கேல் அல்லது நீளமான குச்சியை அடிப்பக்கம் சப்போர்ட் ஆகக்கொடுத்து மெதுவாகக் கட்டியபடி மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
தவறு: ஐஸை நேரடியாக வைக்கக் கூடாது, ஒரு கவரில் வைத்து வைக்கவும்.
வலிப்பு
தவறு: ஐஸை நேரடியாக வைக்கக் கூடாது, ஒரு கவரில் வைத்து வைக்கவும்.
வலிப்பு
பாதிக்கப்பட்டவர் இறுக்கமான ஆடைகள் அணிந்திருந்தால் தளர்வுபடுத்தி, முதலில் நல்ல காற்றோட்டமான சூழல் தரவும். காயங்கள் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை அவர்களிடம் இருந்து விலக்கிவைக்கவும். புரை யேறுவதைத் தடுக்கும் வகையில் அவர்களை இடதுபுறமாகத் திருப்பிப் படுக்கவைக்கவும். குழந்தைகளுக்கு அதிகப்படியான காய்ச்சலால் வலிப்பு வரும் என்பதால், முதலில் காய்ச்சலின் அளவைக் குறைக்கவும். வலிப்பு சமயங்களில் வாய்வழியாக மருந்து கொடுக்கக் கூடாது; ஆசனவாயில் வைக்கக்கூடிய மாத்திரைகளைப் பயன்படுத்தலாம்; குளிர்ந்த நீரால் பற்றுப்போடலாம்.
தவறு: கையில் இரும்பு, சாவி கொடுப்பது, சூடுவைப்பது எல்லாம் தவறு.
விஷம் உட்கொண்டவர்களுக்கு...
தவறு: கையில் இரும்பு, சாவி கொடுப்பது, சூடுவைப்பது எல்லாம் தவறு.
விஷம் உட்கொண்டவர்களுக்கு...
ஆசிட், ஃபினாயில் போன்ற பொருட்களை உட்கொண்டவர்களுக்கு உணவுக்குழாய் பாதிப்பு ஏற்படும். பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவைக் குடிக்கவைக்கலாம். அது குடல் பகுதியில் ஒரு கோட்டிங்போல அமைந்து பாதிப்பைக் குறைக்கும். பூச்சிக்கொல்லி, அளவுக்கு அதிக மான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட
வர்களை கொஞ்சம் கரித்தூள், டீத்தூள் எனச் சாப்பிட வைக்கலாம் (ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் என்ற அளவில் கொடுக்கலாம். உதாரணமாக, 50 கிலோ எடை உள்ளவருக்கு 50 கிராம் கொடுக்கலாம்). இவை விஷத்தன்மையை உறிஞ்சி அதிகப்படியான குடல் பாதிப்பை தவிர்க்கும்.
தவறு: புளி போன்ற பொருட் களைக் கரைத்துக்கொடுத்து கட்டாய வாந்தி எடுக்கவைக்கக் கூடாது.
பூச்சிக்கடி

தேனீ, குளவி போன்றவை கடித்த இடத்தில் அதன் கொடுக்கு இருந்தால், ஒரு சின்ன பேப்பர் அட்டையை பக்குவமாகத் தேய்த்து கொடுக்கை முதலில் எடுக்கவும். பின் அங்கு ஐஸ் பேக் வைக்கலாம். பாம்பு கடித்த பாகத்தை அசைக்கக் கூடாது. அந்த இடத்தில் இருந்து 15 செ.மீ தள்ளி மேல் பாகத்தில் தளர்வான கட்டுப்போடலாம், இதனால் விஷம் அதிகம் பரவாமல் இருக்கும்.
தவறு: பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது, வாயால் உறிஞ்சுவது போன்றவை எல்லாம் தவறு.
விபத்தில் அடிபட்டவர்களுக்கு...
தவறு: பாம்பு கடித்த இடத்தில் நெருப்பு வைப்பது, வாயால் உறிஞ்சுவது போன்றவை எல்லாம் தவறு.
விபத்தில் அடிபட்டவர்களுக்கு...
பாதிக்கப்பட்டவரை முதலில் அதிகபதற்ற நிலையில் இருந்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும். ரத்தப்போக்கை நிறுத்த, ஒரு சுத்தமானதுணியால் காயத்தில் அழுத்தம் கொடுத்துப் பிடித்துக் கொள்ளவும். தண்டுவடத்தில் ஏற்படும் காயங்க ளைத் தவிர்க்க அடிபட்டவரை துணியிலோ, கை, கால்கள் பிடித்தோ தூக்கிவராமல், பலகையில் வைத்துத் தூக்கிவரவும்.
தவறு: காயத்தில் டீத்தூள், மண் வைக்கக் கூடாது. காயம் பட்டவர் சுயநினைவில் இல்லாதபோது எதுவும் பருகக் கொடுக்கக் கூடாது.
விரல் துண்டாவது...
தவறு: காயத்தில் டீத்தூள், மண் வைக்கக் கூடாது. காயம் பட்டவர் சுயநினைவில் இல்லாதபோது எதுவும் பருகக் கொடுக்கக் கூடாது.
விரல் துண்டாவது...
விபத்து மற்றும் மிக்ஸி, ஃபேனில் கையைக்கொடுத்து விரல் துண்டானால், ரத்தப்போக்கு உள்ள இடத்தில் சுத்தமான துணியால் அழுத்தம் கொடுக்கவும். துண்டான பகுதியை ஒரு கவரில் வைத்து ஐஸ் பேக்கின் மீது வைத்து மருத்துவ மனைக்கு விரையவும்.
தவறு: ஏற்கெனவே சொன்னதுபோல, காயத்தில் வெளிப்பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது.
முதலுதவிப் பெட்டி
தவறு: ஏற்கெனவே சொன்னதுபோல, காயத்தில் வெளிப்பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது.
முதலுதவிப் பெட்டி
நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்து, காயத்தை ஆற்றும் மற்றும் தீக்காய ஆயின்மென்ட், காயம்பட்ட இடத்தை சுத்தம் செய்வதற்கான காட்டன், பேண்டேஜ், கத்தரிக்கோல், எலும்பு முறிவுக்குக் கட்டப்படும் ஸ்கேல் / கட்டை, ஒட்டும் தன்மையுள்ள டேப் ரோல்கள், தெர்மாமீட்டர்... இவையெல்லாம் அடங்கிய ஃபர்ஸ்ட் எய்டு கிட் எப்போதும் கையோடு இருக்கட்டும்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக