லேபிள்கள்

திங்கள், 9 அக்டோபர், 2017

குழந்தைக்கு "ஸ்கர்வி’ பெற்றோரே கவனம்

குழந்தைக்கு "ஸ்கர்வி' பெற்றோரே கவனம்


ஒரு பெண் கர்ப்பம் தரிக்கும் தருணம், மிகுந்த மகிழ்ச்சிகரமானது. குழந்தையின் ஒவ்வொரு உறுப்பும் வளர்ந்து, முழுமையடைந்து பிறக்கிறது. வயிற்றில் இருக்கும் போது பல கனவுகளுடன், தாங்க தயாராகும் பெண்ணுக்கு, சத்துக்கள் அதிகளவில் தேவை. 
கரு தரித்த பின், பிரசவம், பாலூட்டும் சமயத்தில், அதீத ஊட்டச்சத்துகள் இருந்தால் மட்டுமே, குழந்தை ஆரோக்கியமாக வளரும்.


பெரும்பாலான கருசிதைவுகள், சத்துக்குறைபாட்டால் தான் நிகழ்கின்றன. குறிப்பாக, விட்டமின் இ குறைபாடு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது, பால், முளை கட்டிய பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் அதிகமுள்ளதால், தினசரி உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.
 
ஸ்கர்வி: வைட்டமின் சி பற்றாக்குறையினால், இந்நோய் ஏற்படுகிறது. பிறந்த எட்டு மாதங்களிலிருந்து, ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளையே, இந்த நோய் அதிகமாக பாதிக்கிறது.
 



அறிகுறிகள்: ஆரம்பத்தில் குழந்தைக்கு பசி இருக்காது. குழந்தையை எடுக்கும் போதும், கீழே விடும் போதும் குழந்தையின் கை, கால்களில் உள்ள எலும்புகளில் தாயின் கைபட்டு அதிர்ச்சி ஏற்படுவதால், குழந்தை வலி தாங்காமல் அழும். பல் முளைத்த குழந்தையானால், பற்களைச் சுற்றியுள்ள ஈறு வீங்கி, நீலநிறத்துடன் காணப்படும். 

சிகிச்சை: நோய் தாக்குதல் இருப்பின், தினசரி மூன்று வேளைகளும், வைட்டமின் சி மாத்திரைகள் சாப்பிடலாம். ஒரு வேளைக்கு, 50 மி.கிராம் அளவு கொடுத்து வந்தால், விரைவில் நோய் குணமாகி விடும். 
அத்துடன் தினமும் இரண்டு வேளை பழரசம் கொடுக்கலாம்.
 
குழந்தையை அடிக்கடி கையால் தூக்கக் கூடாது. மிருதுவான பஞ்சு மெத்தையில் படுக்க வைக்க வேண்டும். இந்த நோய்க்கு, கைவைத்தியம் பார்ப்பதை காட்டிலும், மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளிப்பது தான் சிறந்தது
http://www.tamilyes.com/t53044-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts