லேபிள்கள்

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

சுவர்க்கம் திறக்கப்படும் நாட்கள்

சுவர்க்கம் திறக்கப்படும் நாட்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
அல்லாஹ் அடியார்களை கண்ணிப் படுத்தும் விதமாக இந்த உலத்தில் வாழும் போதே சுவர்க்கத்தை அடையும் பாக்கியத்தை வழிக் காட்டியுள்ளான். நாம் அல்லாஹ்விற்கு கட்டுப் பட்டு, நபியவர்களின் வழி முறைகளை நாளாந்தம் நடை முறைப் படுத்தினால் வாழும் போதே சுவர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கலாம்.

நமது முன்னோர்களான ஸஹாபாக்கள் அப்படி தான் இந்த உலகத்தில் வாழ்ந்து மரணித்தார்கள். நபியவர்கள் காட்டிய பிரகாரம், ஸஹாபாக்கள் சென்ற வழிகளில் நாமும் செல்ல முயற்சி செய்வோமாக!
சுவர்க்கத்தை அல்லாஹ் பல சந்தர்ப்பங்களில் திறந்து விடுகிறான். ரமலான் மாதம் வந்து விட்டது என்றால், மாதம் முழுவதும் அதாவது பகலிலும், இரவிலும், சுவர்க்கத்தின் வாசல்கள் திறந்த வண்ணமாகவே இருக்கும்.
அடியார்கள் சுவர்க்கத்தின் நினைவோடு வாழ வேண்டும் என்பதற்காக அல்லாஹ் நமக்காக இப்படி செய்கிறான்.


அது போல நாம் வுளு செய்து விட்டு வுளுவுடைய துஆவை ஓதினால் சுவர்க்கத்தின் எட்டு வாசல்கள் திறக்கப் படுகின்றன. நீங்கள் நாடிய வாசல் வழியாக சுவர்க்கம் செல்லுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் வழிக் காட்டியுள்ளார்கள். பாருங்கள் ஒவ்வொரு நாளும் சுவர்கத்தின் நினைவோடு வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் நம்மோடு எவ்வளவு இரக்கமாக உள்ளது என்று சிந்தியுங்கள்.!
சுவர்க்க்திற்கு எட்டு வாசல்கள் உள்ளன. அவற்றில் பாபுர் ரய்யான் என்ற பெயரில் ஒரு வாசல் , இதில் நோன்பாளிகள் மட்டும் உள் நுழைந்து சுவர்க்கம் செல்வார்கள். பாபுஸ் ஸலாஹ் என்ற பெயரில் ஒரு சுவர்க்கத்தின் வாசல் இதில் தொழுகையாளிகள் மட்டும் உள் நுழைந்து சுவர்க்கம் செல்வார்கள். பாபுஸ் ஸதக்கா என்ற பெயரில் ஒரு சுவர்க்கத்தின் வாசல் இதில் ஸதக்காக்கள் கொடுத்தவர்கள் மட்டும் உள் நுழைந்து சுவர்க்கம் செல்வார்கள். பாபுல் ஜிஹாத் என்ற பெயரில் ஒரு சுவர்க்கத்தின் வாசல் இதில் அல்லாஹ்வின் பாதையில் கலந்து போராடியவர் மட்டும் உள் நுழைந்து சுவர்க்கம் செல்வார்கள். ஆனால் வுளு செய்து விட்டு வுளுவுடைய துஆவை ஓதினால் தான் நாடிய சுவன வாசல் வழியாக சுவர்க்கம் செல்ல முடியும். என்பதை வாழும் போதே சுவர்க்கத்திற்கான வழியை மார்க்கம் நமக்கு வழிக் காட்டுகிறது. அல்ஹம்து லில்லாஹ்!
அதைப் போல ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமைகளில் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதை பின் வரும் ஹதீஸில் காணலாம். "ஒவ்வொரு திங்கட் கிழமையும், ஒவ்வொரு வியாழக் கிமையும், சுவர்கத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன. அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு அடியார்களின் பாவங்களும் மன்னிக்ப் படுகின்றன. பகைமைக் கொண்டவர்களைத் தவிர. அவர்கள் ஒன்று சேரும் வரை விட்டு வைய்யுங்கள் என்று கூறப்படும். (முஸ்லிம் 5013)
இந்த ஹதீஸின் படி ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமைகளில் சுவன வாசல்கள் திறக்கப் படுகின்றன, அந்த நேரத்தில் நாம் செய்த அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப் படுகின்றன, இணை வைக்காத நிலையில் அமல் செய்தவரகளுக்கு நன்மைகள் வழங்கப் பட்டு். பாவங்கள் அழிக்கப் படுகின்றன. அதே நேரம் பிரச்சனைப் பட்டு பேசாமல் இருந்தவர்களைத் தவிர.
மேலும் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு திங்கள், மற்றும்,வியாழக் கிழமைகளில் நோன்பு பிடிப்பார்கள் காரணம் கேட்ட போது அன்றைய நாட்களில் நமது அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்து காட்டப் படுகிறது. அந்த நேரத்தில் நான் நோன்பாளியாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன் என்று கூறினார்கள்.
எனவே ஒவ்வொரு திங்கள், மற்றும் வியாழக் கிழமை வந்து விட்டால் இன்றைய நாள் சுவர்கத்தின் கதவுகள் திறக்கப் படுகின்றன, என்ற சிந்தனையுடன் அந்த நாட்களை கழிக்க வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts