லேபிள்கள்

வியாழன், 29 ஜூன், 2017

வீட்டை குத்தகைக்கு விடும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

{?} என் வீட்டை பத்து வருடத்துக்கு குத்தகைக்கு விடலாம் என்று இருக்கிறேன். என்னென்ன கவனிக்க வேண்டும்?

சுரேஷ்பாபு, வழக்கறிஞர், சென்னை.

''குடியிருக்கப் போகும் நபர் சரியானவரா என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். வழக்கறிஞர் உதவியுடன் குத்தகை பத்திரத்தை தயார் செய்யுங்கள். முத்திரைத்தாளில் குத்தகை பத்திரம் இருக்க வேண்டும். தவிர, அது பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்யப்பட வேண்டும்.



வீட்டிலுள்ள வசதிகளை (அறைகள், லிஃப்ட்  வசதி, மின்சார வசதி) பற்றி குத்தகை பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். எதற்காக வீட்டை குத்தகைக்கு எடுக்கிறார் என்றும், இந்தந்த காரணங்களுக்கு வீட்டை உபயோகிக்கலாம், இதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக உபயோகிக்கக் கூடாது என்றும் குறிப்பிட வேண்டும்.

குத்தகைக்கு எடுப்பவர் வேறு ஒருவருக்கு வீட்டை குத்தகைக்குவிட வாய்ப்பு இருக்கிறது. இதனைத் தடுக்கும் விதத்தில் கவனம் அவசியம். மேலும், நீங்கள் குத்தகைக்கு விடப்போகும் தொகையையும், வரி உள்பட அனைத்து விஷயங்களையும் குறிப்பிட வேண்டும். மின்சாரக் கட்டணத்தை குடியிருப்போர்தான் கட்ட வேண்டும். குடியிருப்போர் பயன்படுத்தும் மின்சாரத்தை அளவிட மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் குறிப்பிட வேண்டும்.

குத்தகைக் காலம் நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பதைக் குறிப்பிட வேண்டும். குத்தகைக் காலம் முடிவடையும் முன்னரே வீட்டை காலி செய்யச் சொல்லும் உரிமை உரிமையாளருக்கு உள்ளதா என்பதையும் குறிப்பிட வேண்டும். உரிமை உள்ளது எனில் என்ன காரணத்துக்காக நீங்கள் காலி செய்யச் சொல்ல முடியும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

குடியிருப்போர் உங்களின் வீட்டை அடமானம் வைக்கவோ, மூன்றாம் நபருக்கு விற்கவோ வாய்ப்பிருக்கிறது. அதனால் குத்தகைக்கு விட்டபிறகு உங்கள் சொத்தின் வில்லங்க சான்றிதழை பதிவு அலுவலகத்தில் வருடம் ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள். ஏதாவது பிரச்னை என்றால் உடனே தீர்வு காண முடியும். உங்களுக்கும் குடியிருப்போருக்கும் எதாவது பிரச்னை இருந்தால், புகார் தர நடுவர் ஒருவரையும் பத்திரத்தில் குறிப்பிடுங்கள்.''


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts