லேபிள்கள்

திங்கள், 17 ஏப்ரல், 2017

ஒவ்வாமை என்கிற அலர்ஜி

சி.எஸ். தேவநாதன்
அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ, பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.
நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு நாளுக்குள் குறைந்தது நூறு தும்மல் போடுகிறவரை. கண்ணில் இருந்து நீர் ஒழுகும். மண்டை ஒரேடியாய்க் கனத்துப் போகும். அவருடைய பிரச்சனை என்ன? பூவின் மகரந்தத் தூள்கள் காற்றில் பறந்து வந்து மூச்சு வழியாய் உள்ளே போய்விட்டிருக்கும். ஒவ்வொரு மழைக் காலமும் அவருக்கு நரக வேதனைதான்.
சிலருக்கு ஆண்டு முழுதும் பிரச்சனை. மகரந்தத் தூள் மாதிரி ஒரு சிறிய பூச்சியின் ஒரு சிறிய துகள் உணவு மருந்து ரசாயனப் பொருள் இறால் மீனின் ருசி சாதாரணத் தூசு என்று பல உருவங்களில் அலர்ஜி அவர்களைத் தாக்கி விட்டிருக்கும். மூச்சுத் திணறல் மனிதரை உலுக்கி எடுத்துவிடும்.
பெற்றோரில் ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் அவரது குழந்தைகளில் ஒருவருக்கு அலர்ஜி வர வாய்ப்பிருக்கிறது. பெற்றோர் இருவருக்கும் அலர்ஜி இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அலர்ஜி வரும்.
அலர்ஜி என்பது என்ன?
உடலுக்கு ஒத்துப் போகும் சில பொருட்கள் தீடீரென்று ஒத்துப் போகாமல் போவது அலர்ஜி. தேவையில்லாத நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்வதால் அலர்ஜி உண்டாகிறது.
மூக்கு அலர்ஜி ஓயாத தும்மல்.
நுரையீரல் அலர்ஜி ஆஸ்துமா இவற்றுடன் உணவுப் பொருட்களில் (பால் மீன் முட்டை கோதுமை) அலர்ஜி, மருந்துகளில் (ஊசி, மாத்திரை) அலர்ஜி, கண் காது அலர்ஜி என பல வகைகள்.
சிலருக்கு காற்றிலும் அலர்ஜி.
காரணிகள் : தூசுப் பூச்சி : இதுவே அலர்ஜிக்கு பிரதான காரணம். தூசுவில் வாழும் இந்த உயிரி காற்றில் கலந்து நம் வீடுகளைத் தாக்கும். மிகவும் ஆபத்தானது.
பூச்சிகள் : பூச்சிகளின் உடல் உறுப்புகளும், கழிவுகளும் காற்றில் மிதந்து நம் மூச்சுக்குள் போகும்.
பூஞ்சை காளான் : பயிர், புல், உணவு, தோல் பொருட்கள், ஃபர்னிச்சரில் உள்ளன.
உமி : காற்றில் அடித்து வரப்படும் உமி பலவித அலர்ஜியை ஏற்படுத்தும். தும்மல், ஜலதோஷம் சமயத்தில் பிரச்சனை தீவிரமாக இருக்கும்.
உணவு : அரிசி, பருப்புகள், மீன், தேங்காய், சோயா.
அறிகுறிகள்
தலைவலி மூக்கில் இருந்து நீர் ஒழுகல் வாந்தி மயக்கம்
சிலருக்கு உடல் சில்லிட்டுப் போகும்.
தூக்கமின்மை
படுக்கையில் சிறுநீர் கழித்தல்
தலைவலி
நெஞ்சு வலி
படபடப்பு
எப்போதும் பரபரப்புடன் காணப்படுதல்
பிறப்புறுப்புகளில் நமைச்சல்
சிகிச்சை
முதலில் அலர்ஜிக்கான மூல காரணம் எது எது என்று இனம் காண வேண்டும். அடுத்து எது காரணமானதோ அதைத் தவிர்க்க வேண்டும். மூன்றாவதாக உடல் நலத்தை எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்திக் கொள்வது.
ஐயத்துக்குரிய உணவுப் பொருட்களை இரண்டு வாரத்துக்கு ஒதுக்கி விடுவதன் மூலம் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
நாடித்துடிப்பு சோதனையும் உதவும். உண்பதற்கு முன் நாடித் துடிப்பைச் சோதிக்க வேண்டும். சாப்பாட்டில் ஒரு உணவு மட்டுமே இடம் பெறச் செய்யவும். உண்ட பிறகு அரை மணி நேரம் கழித்து மீண்டும் நாடித்துடிப்பைச் சோதிக்கவும். ஓரளவு எகிறியிருந்தால் அது இயல்பு என்று இருந்துவிடலாம். 16 கூடுதல் துடிப்புகள் வரை இயல்பு தான். நாடித்துடிப்புகள் 84-ஐக் கடந்து விட்டிருப்பின் உண்டு கழிந்து ஒரு மணி நேரமும் அதே அளவு இருப்பின் உங்களுக்கு ஒவ்வாமை இருக்கிறதென்று தீர்மானிக்கலாம்.
அலர்ஜியைத் தடுக்கவும், முறியடிக்கவும் சிறந்த வழி, எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொள்வதுதான். அப்போது எந்தக் காரணி பற்றியும் கவலைப்பட வேண்டியிராது.
சிகிச்சையின் தொடக்கத்தில் நான்கைந்து நாட்கள் பழச்சாறு மட்டுமே பருகி உபசாவம் இருக்க வேண்டும். அதன் பிறகு ஒற்றை உணவு கொள்ளலாம். ஏதாவது ஒரு பழம் அல்லது காய்கறி, கேரட், திராட்சை, ஆப்பிள். இது ஒரு வாரத்துக்குத் தொடரப்பட வேண்டிய திட்டம். பிறகு, இன்னொரு அயிட்டத்தைச் சேர்க்க வேண்டும். நான்கு வாரங்களுக்குப் பிறகு புரத உணவை அறிமுகப்படுத்தலாம். புதிதாய்ச் சேர்த்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தியதாய் தெரிந்தால் அதை நிறுத்தி விட்டு, புதிய உணவு ஒன்றை முயற்சிக்கலாம். இப்படியாக அலர்ஜி ஏற்படுத்தும் எல்லா பொருட்களையும் உணவில் இருந்து அகற்றி விடலாம்.
உடம்பில் காரப் பொருள் சேமிப்பில் இருக்க வேண்டும். தவறான உணவுகள் களைப்பு, மன அழுத்தம், உறக்கமின்மை காரணமாய் ஏற்படும் அமில நெருக்கடியை அது சமாளிக்கும்.
உணவில் தவிர்க்கப்பட வேண்டியவை காபி, டீ, சாக்லெட், கோலா பானங்கள், மது, சர்க்கரை, இனிப்புகள், இறைச்சி, மீன், கோழி, பால், புகையூட்டியவை, உப்புள்ளவை, ஊறுகாய்கள், நிறமூட்டிய, சுவையூட்டிய உணவு, புகையிலையை எந்த வடிவிலும் பயன்படுத்தக் கூடாது. இவை நச்சுப் பொருட்கள் சேரவோ, அட்ரினல் சுரப்பு தூண்டப்படவோ காரணமாகிவிடுகின்றன. அல்லது கணைய நீர் உற்பத்தியில் சிரமத்தை ஏற்படுத்தி விடும். இரத்த சர்க்கரை அளவு சீர்கெடவும் நேரும்.
வைட்டமின் சி உடம்புக்கு தேவையான எதிர்ப்புச் சக்தியை வழங்கும். பி5 அலர்ஜியில் அவதிப்படுகிறவர்களுக்கு நிவாரணமளிக்கும். அலர்ஜிக்கு எதிரான தன்மைகள் கொண்ட வைட்டமின் இ சத்தையும் போதிய அளவு உட்கொள்ளலாம்.
ஆமணக்கு எண்ணெயில் ஐந்து சொட்டுகள் எடுத்து சிறிதளவு பழச்சாறு அல்லது தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுவது சிறந்த பலனை அளிக்கும்.
மன உளைச்சல் காரணமாக அலர்ஜி ஏற்பட்டிருப்பின் இளைப்பாறுதல், உடற்பயிற்சி, தியானம், மனக் கட்டுப்பாடு உதவும்.
யோகாசனங்களில் யோகமுத்திரை, அர்த்தமத்ஸ்யேந்திராசனா, சர்வாங்காசனா, சவாசனா, ப்ராணயாமம் பலனளிக்கும்.
கவனத்திற்கு
ஒருவருக்கு இன்ன பொருள்தான் என்றில்லாமல் எந்தப் பொருள் வேண்டுமானாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஒருவர் தனக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவருக்கு அலர்ஜி, ஆஸ்துமா, இழுப்பு வராமல் தடுத்து உதவும்.
குடும்பத்தில் ஏற்கனவே ஒருவர் அலர்ஜியில் பாதிக்கப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அலர்ஜி பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆனால் ஒருவருக்கு ஒவ்வாதது இன்னொருவருக்கும் ஒவ்வாமல் போய்விடும் என்பதில்லை. எனவே அவர்கள் வீண் கவலைக்குள்ளாக வேண்டாம்.
குழந்தைகளுக்கு பஞ்சடைத்த பொம்மைகளை விளையாடக் கொடுக்கக் கூடாது கூடிய வரை ஐஸ்கிரீம், சாக்லெட் உண்ண அனுமதிக்கக் கூடாது. வீட்டில் உள்ள நாய், பூனை, முயல் போன்ற செல்லப் பிராணிகளுடன் விளையாடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
படுக்கை அறை சுத்தமாக, நிரம்ப சாமான்கள் இல்லாததாய் இருக்க வேண்டும்.
எண்ணெயில் பொரித்த மசாலா உணவுகள் கூடாது. வயிறு முட்டச் சாப்பிடுவது தவறு. இரவு உணவை எளிமையாக, நேரத்தோடு முடித்துக் கொள்ள வெண்டும். பலமான விருந்துகளில் கட்டுப்பாடாக உண்ண வேண்டும். இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்த்து விடலாம்.
யோகாசனம், தியானம், மன அடக்கம், மூச்சுப் பயிற்சிகள் மூலம் உதரவிதானத்துக்கு வேலை கொடுத்து மார்புத் தசைகளுக்கு ஓய்வளிக்கலாம்.
மேற்கண்டவைகளைக் கவனமாகக் கடைப்பிடித்தால், அதுவே ஒவ்வாமையில் தடுப்பு நடவடிக்கைகளாய் அமையும்.
( நர்கிஸ் ஆகஸ்ட் 2015 )
from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts