அடிக்கடி இந்தத் தளத்திலும் இலவச மென்பொருள் பற்றிய பதிவுகள் வருவதால் மீண்டும் கணினி பற்றி எச்சரிக்கையாக இருக்க சில உதவிகள்.
இலவசமாகக் கிடைக்கும் பொருட்களினால், கணினிகள் பாதிப்பு அடையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ஆகவே, இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, நல்ல சில வழிமுறைகளைக் கையாள வேண்டும். மென்பொருளை பரீட்சித்து விட்டு நீக்கினாலும் கணினி வந்தட்டகத்தில் இருந்து முற்றாக நீக்கப்படுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
நேற்றைய பதிவில் இரண்டு தினங்களுக்கு இடையில் உள்ள நாட்களை கணிக்க மென்பொருள் பற்றிச் சொல்லப்பட்டது. இந்த கணக்கை கணியில் உள்ள வசதி மூலமே கணிக்க முடியும்.Excel,office இவை மூலமும் தெரிந்து கொள்ள முடியும். இப்படி பல நிரலிகள் பயனற்றவை,எப்போதோ ஒரு நாள் பாவிக்கப்படுபவை.
1. இலவசம் என்று தெரிந்ததும் கிடைக்கின்ற எல்லா மென்பொருட்களையும் கணினியில் பதிப்பு செய்யும் ஆசையை முற்றாகத் தவிர்த்து விடுங்கள். பதிவிறக்கம் செய்யப்படும் நிரலி மிகவும் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே கணினியில் நிறுவிக் கொள்ளலாம்.
2. பதிவிறக்கம் செய்யப்படும் நிரலி அல்லது நிரலிகளை ஒருமுறை மட்டும் தான் பயன் படுத்த முடியும் என்றால், தயவு செய்து அந்த நிரலிகளைப் பதிவிறக்கம் செய்யவே வேண்டாம்.
3. எந்த ஓர் இலவச நிரலியையும், அதனுடைய தயாரிப்பு இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் தங்களின் நிரலியைப் பற்றி அவர்களே தரம் உயர்த்திப் பேசுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.
4. இலவச நிரலிகளைத் தரம் பிரித்து அவற்றை முறையாக தொகுத்து வழங்கும் தளங்களான cnet, brothersoft, majorgeek, softpedia, filehippo, tucows, pcworld போன்ற நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
5. நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்தாலும், மற்ற கணினிப் பயனர்களின் கணிப்பும் விமர்சனங்களும் எப்படி உள்ளன என்பதையும் கண்டறியுங்கள். (Reviews).
6. cnet, tucows, pcworld போன்ற பிரபல தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, தகுதி மதிப்பீடு (Product Ranking) 1 அல்லது 2 க்குள் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பீடு 3 ஆக இருந்தால் பரவாயில்லை. ஆனால், 4 அல்லது 5 க்குப் போனால் அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
7. ஒரு தளத்தில் இருந்து ஒரு நிரலியைப் பதிவிறக்கம் செய்யும் போது கடந்த காலங்களில் எத்தனை பேர் அதனைப் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். அதிகமானோர் பதிவிறக்கம் செய்து இருந்தால் அந்த மென்பொருள் அப்போதைய சமயத்தில் நன்றாக இருக்கிறது என்று பொருள். ஆக, அந்த நிரலியை தயக்கம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.
8. அடுத்து, கணினியில் ஒரு வேலையைச் செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட நிரலிகளைக் கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். எடுத்துக்காட்டாக Video Players, PC Cleaners, Photo Editors, Downloaders. இவற்றில் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு பிடித்த ஒரே ஒரு நிரலியை மட்டும் கணினியில் வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத மற்ற நிரலிகளை அப்புறப் படுத்தி விடுங்கள்.
9.நிரலிகளை பதிவிறக்கம் செய்யும் முன்னர் அதற்கு மாற்றான வேறு நல்ல நிரலிகள் இருக்கின்றனவா என்பதை கண்டறியுங்கள். அதிக வசதிகள் நல்ல தளம்,பலரின் பதிவிறக்கம் இவற்றைக் கண்டு பதிவிறக்கலாம்.
தங்கள் படங்கள் பற்றி தொலைக்காட்சியில் நடிகர்,இயக்குனர்கள் அதிகமாக சொல்வார்கள். அதை நம்பி திரையரங்கம் சென்றால் நாம் மோசம் போனது தெரியவரும். சில தளங்களில் சினிமா விமர்சனங்கள் வரும்.அதைப் பார்த்து விட்டுச் செல்லலாம்.அதுபோல இலவச மென்பொருள் பதிவிறக்கமும் இருக்க வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் கணினி உங்கள் பேச்சைக் கேட்கும். இல்லை என்றால் மன்னியுங்கள். அம்மி மிதிக்காது. அருந்ததியையும் பார்க்காது.
சிலர் உலகத்தில் உள்ள எல்லாமே தங்கள் கணினிக்குள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது தப்பு. கணினி வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றால் கண்ட கண்ட குப்பைகளைக் கணினிக்குள் சேர்த்து வைக்காதீர்கள்.
http://www.puthiyatamil.net இலவசமாகக் கிடைக்கும் பொருட்களினால், கணினிகள் பாதிப்பு அடையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ஆகவே, இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, நல்ல சில வழிமுறைகளைக் கையாள வேண்டும். மென்பொருளை பரீட்சித்து விட்டு நீக்கினாலும் கணினி வந்தட்டகத்தில் இருந்து முற்றாக நீக்கப்படுவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
நேற்றைய பதிவில் இரண்டு தினங்களுக்கு இடையில் உள்ள நாட்களை கணிக்க மென்பொருள் பற்றிச் சொல்லப்பட்டது. இந்த கணக்கை கணியில் உள்ள வசதி மூலமே கணிக்க முடியும்.Excel,office இவை மூலமும் தெரிந்து கொள்ள முடியும். இப்படி பல நிரலிகள் பயனற்றவை,எப்போதோ ஒரு நாள் பாவிக்கப்படுபவை.
1. இலவசம் என்று தெரிந்ததும் கிடைக்கின்ற எல்லா மென்பொருட்களையும் கணினியில் பதிப்பு செய்யும் ஆசையை முற்றாகத் தவிர்த்து விடுங்கள். பதிவிறக்கம் செய்யப்படும் நிரலி மிகவும் பயனுள்ளதாக இருந்தால் மட்டுமே கணினியில் நிறுவிக் கொள்ளலாம்.
2. பதிவிறக்கம் செய்யப்படும் நிரலி அல்லது நிரலிகளை ஒருமுறை மட்டும் தான் பயன் படுத்த முடியும் என்றால், தயவு செய்து அந்த நிரலிகளைப் பதிவிறக்கம் செய்யவே வேண்டாம்.
3. எந்த ஓர் இலவச நிரலியையும், அதனுடைய தயாரிப்பு இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் தங்களின் நிரலியைப் பற்றி அவர்களே தரம் உயர்த்திப் பேசுவார்கள். ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது.
4. இலவச நிரலிகளைத் தரம் பிரித்து அவற்றை முறையாக தொகுத்து வழங்கும் தளங்களான cnet, brothersoft, majorgeek, softpedia, filehippo, tucows, pcworld போன்ற நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
5. நம்பிக்கையான தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்தாலும், மற்ற கணினிப் பயனர்களின் கணிப்பும் விமர்சனங்களும் எப்படி உள்ளன என்பதையும் கண்டறியுங்கள். (Reviews).
6. cnet, tucows, pcworld போன்ற பிரபல தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யும் போது, தகுதி மதிப்பீடு (Product Ranking) 1 அல்லது 2 க்குள் இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பீடு 3 ஆக இருந்தால் பரவாயில்லை. ஆனால், 4 அல்லது 5 க்குப் போனால் அந்த நிரலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
7. ஒரு தளத்தில் இருந்து ஒரு நிரலியைப் பதிவிறக்கம் செய்யும் போது கடந்த காலங்களில் எத்தனை பேர் அதனைப் பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள். அதிகமானோர் பதிவிறக்கம் செய்து இருந்தால் அந்த மென்பொருள் அப்போதைய சமயத்தில் நன்றாக இருக்கிறது என்று பொருள். ஆக, அந்த நிரலியை தயக்கம் இல்லாமல் பதிவிறக்கம் செய்யலாம்.
8. அடுத்து, கணினியில் ஒரு வேலையைச் செய்ய ஒன்றுக்கும் மேற்பட்ட நிரலிகளைக் கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். எடுத்துக்காட்டாக Video Players, PC Cleaners, Photo Editors, Downloaders. இவற்றில் ஒவ்வொன்றிலும் உங்களுக்கு பிடித்த ஒரே ஒரு நிரலியை மட்டும் கணினியில் வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத மற்ற நிரலிகளை அப்புறப் படுத்தி விடுங்கள்.
9.நிரலிகளை பதிவிறக்கம் செய்யும் முன்னர் அதற்கு மாற்றான வேறு நல்ல நிரலிகள் இருக்கின்றனவா என்பதை கண்டறியுங்கள். அதிக வசதிகள் நல்ல தளம்,பலரின் பதிவிறக்கம் இவற்றைக் கண்டு பதிவிறக்கலாம்.
தங்கள் படங்கள் பற்றி தொலைக்காட்சியில் நடிகர்,இயக்குனர்கள் அதிகமாக சொல்வார்கள். அதை நம்பி திரையரங்கம் சென்றால் நாம் மோசம் போனது தெரியவரும். சில தளங்களில் சினிமா விமர்சனங்கள் வரும்.அதைப் பார்த்து விட்டுச் செல்லலாம்.அதுபோல இலவச மென்பொருள் பதிவிறக்கமும் இருக்க வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். உங்கள் கணினி உங்கள் பேச்சைக் கேட்கும். இல்லை என்றால் மன்னியுங்கள். அம்மி மிதிக்காது. அருந்ததியையும் பார்க்காது.
சிலர் உலகத்தில் உள்ள எல்லாமே தங்கள் கணினிக்குள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது தப்பு. கணினி வேகமாக வேலை செய்ய வேண்டும் என்றால் கண்ட கண்ட குப்பைகளைக் கணினிக்குள் சேர்த்து வைக்காதீர்கள்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக