லேபிள்கள்

சனி, 25 ஜூன், 2016

பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்...!

குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க  வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட  தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.

இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்ஜி ஏற்படுத்தும் சில உணவுகளை தாய்
 உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த  உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும்.

இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி
 குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி  தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும். உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால்
 குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள். எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல்  போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது.

ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாலாடைக் கட்டி, தயிர்,
 ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க  வேண்டும்.

குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும்
 வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம். முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும்  பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.

உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல்
 போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
http://kiruukkal.blogspot.com/2014/08/blog-post_6.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 23 ஜூன், 2016

நடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்?

நடுக்கம் என்றால் என்ன?

பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம்.

அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும். இந்த வகை நடுக்கத்தை ஆங்கிலத்தில்
 shivering என்பார்கள்..

பயத்தினால் நடுங்குவது மற்றொன்று.

இவற்றைத் தவிர மற்றொரு நடுக்கமும் உண்டு. விரல்களும் கைகளும் நடுங்குவது. கோப்பை பிடித்தால் கிடுகிடுவென நடுங்கி தேநீர் தரையில் சிந்தும், சேவ் செய்யும்போது கை நடுங்கி சொக்கையை ரணமாக்கிவிடும், சமையலறையில் பாட்டியின் கை நடுங்கி பாத்திரங்கள் பொத் பொத்தென விழுங்கி நொருங்கும்.

பொதுவாக வயதானவர்களில் கண்டிருப்பீர்கள். சில நோய்களாலும் வருவதுண்டு. மருத்துவத்தில்
 tremors என்பார்கள்.
ஒருவரது விருப்பின்றி தாமாகவே உடலின் சில உறுப்புகள் நடுங்குவதை அவ்வாறு கூறலாம். பொதுவாக விரல்களில் ஏற்படும். வயதானவர்களிலும் நடுத்தர வயதினரிடையேயும் அதிகம் காணப்படும் என்றபோதிலும் எந்த வயதிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. விரல்களில் மாத்திரமின்றி கைகள், தலை முகம் உதடுகள் குரல்வளை உடல் என எங்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

ஒருவர் தான் அதைச் செய்ய வேண்டும் என்று எண்ணாத போது அதாவது சுயவிருப்பின்றி
 அவரது முயற்சியும் இன்றி எதிர்பாராது ஏற்படுவதே இத்தகைய நடுக்கம் ஆகும். தசைகளின் அசைவியக்கத்தை கட்டுப்படுத்தும் மூளையும் நரம்பு மண்டலமும்தான் இதற்குக் காரணமாகும்.

பல வகைகள்

மூன்று முக்கிய வகைகள் உண்டு.

முதலாவது வகை ஒருவர் எதுவும் செய்யாது வாழாதிருக்கும்போது ஏற்படும் நடுக்கமாகும் இதை
 resting tremors  என சொல்லுவார்கள். அத்தகைய நடுக்கம் அவர் ஏதாவது செய்ய முனையும்போது தற்காலிகமாகத் தணிவதுண்டு. சாதாரணமாக கை நடுக்கம் உள்ள ஒருவர் எழுத முனையும் போது அல்லது ஒரு பொருளைப் பற்ற முயலும்போது இத்தகைய நடுக்கம் தணியும். இதற்கு முக்கிய உதாரணம் பார்க்கின்சன் (Parkinson's disease) நோயாகும்.

இந்நோயின்
 போது அவரது இயக்கம் மெதுவாவதுடன் நடையும் தளும்பலாக இருக்கும். சில ஈரல் நோய்கள், நடுமூளையில் பக்கவாதம் போன்றவை ஏனைய காரணங்களாகும்.

வேறு சில நடுக்கங்கள் ஒருவர் ஏதாவது செய்ய முனையும் போது மோசமாகும். இதை
 Intention tremors என்பார்கள். உதாரணமாக ஒரு பொருளைப் பற்ற முனையும்போது அல்லது எழுத முனையும்போது நடுக்கம் மோசமாகும். மூளையின் செரிபல்லம் பகுதியில் ஏற்படும் நோய்களால் இவை ஏற்படும்.

இன்னும் சில நடுக்கங்கள் எந்நேரமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
 Action tremors  என்பார்கள். இவற்றில் சில ஏதாவது ஒரு புறத்தில் மட்டும் இருப்பதுண்டு. உதாரணமாக இடது கை நடுங்கும் ஆனால் வலது பக்கத்தில் எதுவம் இருக்காது.

நடுக்கங்களில் பல காரணம் சொல்ல முடியாதவை ஆகும்.
  • இவற்றில் பல பரம்பரை பரம்பரையாக வருவதுண்டு. 
  • காரணம் சொல்ல முடியாத நடுக்கங்களில் பல 65 வயதிற்கு பின்னரே ஆரம்பிக்கும். 
  • ஆயினும் பரம்பரையில் தோன்றுபவை நடுத்தர வயதிலேயே தோன்றுவதுண்டு. 
  • பெற்றோரில் ஒருவருக்கு இருந்தாலே பிள்ளைகளுக்கு வர வாய்ப்புண்டு.
  • ஆனால் எல்லாப் பிள்ளைகளுக்கும் வரும் என்றில்லை. 
  • கை நடுக்கம் மட்டுமின்றி தலை ஆடுவது குரல் நடுங்குவது போன்றவையும் பரம்பரையில் வரலாம்.

மருந்துகளால் நடுக்கம்

"எனக்கு நேற்றிலிருந்து கை நடுங்குகிறது" என ஒரு நோயாளி சொன்னார். திடீரென ஏன் ஏற்பட்டது?

"ஏதாவது மருந்துகள் புதிதாக உபயோகிக்க ஆரம்பத்தீர்களா" எனக் கேட்டபோது "எனக்கு ஒரு வருத்தமும் இல்லை" என்றவர் சற்று யோசித்துவிட்டு 'இருமல் சிரப்' ஒன்று குடித்தனான்' என்றார்.

ஆம் பல மருந்துகள் நடுக்கங்களுக்கு காரணமாகி;னறன.

ஆஸ்த்மா நோய்க்கு உபயோகிக்கும் பல மருந்துகள் காரணமாகலாம்.

Terbutaline. Salbutamol, Theophylline
 போன்றவை முக்கியமானவை. இம் மருந்துகள் சுவாசக் குழாயை விரிவுபடுத்தி சளி இலகுவாக வெளியேறுவதற்கு உதவுகின்றன. இதனால் பல இருமல் சிரப் மருந்துகளில் குறைந்த அளவில் கலந்துள்ளன.

ஸ்ரோயிட் வகை மருந்துகள்
 (eg Prednisolone, betamethasone)  பலவகையாகும். இவை பல வகை நோய்களுக்கும் உபயோகிக்கப்படுவதுண்டு. இவையும் நடுக்கத்தை ஏற்படுத்தலாம்

மருத்துவ ஆலோசனை இன்றி தானாகவே மருந்தை வாங்கிக் குடித்ததால் அவரைப் போல பலருக்கு நடுக்கம் ஏற்படுவதுண்டு.

வலிப்புநோய்க்கு
 cபயேரிக்கும் Valporate, மனநோய்களுக்கு உபயோகிக்கும் lithium,  மனச்சோர்விற்கு உபயோகிக்கும் பல மருந்துகள், சில அன்ரிபயோடிக் மற்றும் அன்ரி வைரஜ் மருந்துகளும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. பார்க்கின்சன் நோய்ககு நடுக்கம் ஏற்படும் என்றேன். அதேபோல அந்நோய்க்கு உபயோகிக்கும்  Levodopa மருந்தாலும் ஏற்படலாம்

தைரொக்சின் மருந்தின் அளவு கூடினாலும் வரலாம். தைரொயிட் சுரப்பி அதிகமாக வேலை செய்யும் நோயிலும் நடுக்கம் வருதுண்டு.

இன்னும் பல மருந்துகளால் நடுக்கம் ஏற்படலாம் என்பதால் ஒருவர் தனக்கு புதிதாக நடுக்க நோய் ஏற்பட்டு மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் தான் உபயோகிக்கும் அனைத்து மருந்துகளின் பட்டியலை மருத்துவரிடம் கொடுத்து ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

போதையும் நடுக்கமும்

போதைப் பொருட்கள் நடுக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக மதுபானமும் புகைத்தலும் நடுக்கத்தை நடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதேபோல போதையில் மூழ்கியவர் அதைத் திடீரென நிறுத்தினாலும் நடுக்கம் ஏற்படலாம்.

நிறுத்தும்போது ஏற்படும் நடுக்கம் தற்காலிகமானது சில நாட்களில் தணிந்துவிடும்.

சிகிச்சை

நடுக்கம் ஏற்பட்டால் அதற்கான அடிப்படைக் காரணத்தை கண்டறிய வேண்டும். எனவே மருத்துவ ஆலாசனை பெறுவது அவசியம்.

பெரும்பாலான காரணங்களை விரிவாகவும் தெளிவாகவம் பேசுவதன் மூலம் கண்டறிய முடியும். இருந்தபோதும் இரத்தப் பரிசோதனைகள் மற்றும்
 CT scan MRI  போன்றவையும் தேவைப்படலாம்

சிகிச்சையின் அடிப்படை காரணத்தை துல்லியமாகக் கண்டறிவதே.

மருந்துகள் காரணமாயின் அவற்றை இனங்கண்டு மருத்துவ ஆலோசனையுடன் வேறு மருந்துகளை உபயோகிக்க வேண்டும்.

போதைப் பொருள்கள் காரணமாயின் அவற்றை நிறுத்த வேண்டும். மது சற்று அருந்தினால் சிலருக்கு நடுக்கம் குறையும். ஆயினும் அவ்வாறு குடிப்பது ஆபத்தானது. அவர்கள் மதுவிற்கு அடிமையாகி சீரழிந்து போவது பெரும் பிரச்சனை ஆகும்.

நடுக்கம் உள்வர்கள் கோப்பி தேநீர் கொக்கோ போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்

மனப்பதற்றமும் காரணம் என்பதால் அதைத் தணிக்க முயலவேண்டும்.

அரிதாக சத்திர சிகிச்சையும் தேவைப்படலாம்.

எவ்வாறாயினும் பெரும்பாலான நடுக்கங்கள் ஆபத்தற்றவை என்பதால் அச்சமடையத் தேவையில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2014/08/blog-post_22.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 21 ஜூன், 2016

எக்ஸெல் டிப்ஸ் & டிரிக்ஸ்


தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.

டெக்ஸ்ட் டிசைன்:
எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் செய்வதில் அனைவரும் பொதுவான பிரச்னை ஒன்றைச் சந்திப்பார்கள். செல்களில் உள்ள டேட்டா டெக்ஸ்ட் உள்ள அளவிற்கு அதிகமான இடத்தை எடுத்திருக்காது. இதனால் டேட்டா உள்ள செல்களில் அதிகமான காலி இடம் இருக்கும். இது ஒர்க் ஷீட் டிசைனில் விரும்பாத தோற்றத்தினைத்தரும்.

இந்த பிரச்னையைத் தீர்க்க எக்ஸெல் இரண்டு வழிகளைத் தருகிறது. டெக்ஸ்ட்டை நெட்டாக அமைக்கலாம்; அல்லது சுழற்றி ஒரு கோணத்தில் வைக்கலாம். எந்த செல்களில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்றி அமைத்திட வேண்டுமோ அந்த செல்களைத் தேர்ந்தெடுக்கவும். பின் இதில் மவுஸ் ரைட் கிளிக் செய்தால் மெனு ஒன்று கிடைக்கும். இதில் Format Cells என்பதில் கிளிக் செய்திடவும்.

இதில் உள்ள பல டேப்களில் அலைன்மெண்ட் என்பதனைத் தேர்ந்தெடுத்தால் நெட்டாக, படுக்கை வசமாக, குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக டெக்ஸ்ட்டை அமைத்திட வழிகள் தரப்பட்டிருக்கும். உங்கள் டிசைன் கற்பனைக்கேற்ப டெக்ஸ்ட்டை அமைத்திட கட்டளை தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது காலி இடம் இல்லாமல் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டு அழகான தோற்றத்தில் இருக்கும்.

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட்: எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.

F1+ALT+SHIFT புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.

F2+ALT+SHIFT அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.

F3+ALT+SHIFT நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.

F6+ALT+SHIFT ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.

F9+ALT+SHIFT திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்கு களிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.

F10+ALT+SHIFT ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.

F11+ALT+SHIFT மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.

F12+ALT+SHIFT பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

எக்ஸெல் ஸ்குரோலிங்:

எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது? மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். உங்களுக்கு வியப்பு! என்ன நடக்கிறது இங்கு? ஏறத்தாழ 100 வரிசைகள் தாண்டி நான் இருந்தேனே? எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் என்று தானே வியக்கிறீர்கள். புரோகிராம் ஏன் இப்படி தவறுதலாகச் செயல்படுகிறது? அதுதான் இல்லை. நீங்கள் ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப் பயன்படுத்தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி தான் மாறுகிறது. புதிய செல்களுக்கு நீங்கள் செல்லவில்லை.

எனவே நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கிறது. எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற இடத்திலிருந்து உடனடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஸ்குரோல் செய்து அடைந்த இடத்திற்கு உங்கள் கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய்திட வேண்டும். இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான். ஒரு செல்லில் தகவல் இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என்டர் செய்து சென்றால் எங்கு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பது மறந்துவிடும் அல்லவா? எனவே ஸ்குரோல் செய்து சுழன்று சென்று பின் மீண்டும் செயல்படும் செல்லுக்கே வரலாமே.

எக்ஸெல் பைலை விரும்பும்போது பார்க்க:

எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide)என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் இந்த விளைவு ஏற்படும். நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பைல் மறைக்கப்பட்டுவிடும். விண்டோ மெனு சென்று தற்போது திறந்திருக்கும் பைல்களின் பட்டியலைப் பார்த்தாலும் அதில் இந்த பைல் இருக்காது.

சரி. இப்போது அந்த பைலை மீண்டும் திறந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் (Unhide) என்பதனைக் கிளிக் செய்யலாம். அல்லது ஆல்ட் + டபிள்யூ + யு ஆகிய கீகளை அழுத்தலாம். அப்போது ஒரு விண்டோ திறக்கப்பட்டு அதில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள் அனைத்தும் காட்டப்படும். நீங்கள் எந்த பைலை மறைத்து வைத்ததிலிருந்து மீட்க விரும்புகிறீர்களோ அந்த பைலின் பெயர் மீது கிளிக் செய்து அதனைத் திறந்து பணியாற்றலாம்.
 

இப்போது ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாம்? மறைக்கப்பட்ட பைலை மீண்டும் கொண்டு வராமல் எக்ஸெல் புரோகிராமை மூடிவிட்டால் என்ன நடக்கும்? அடிப்படையில் பார்க்கையில் எக்ஸெல் புரோகிராமை மூடும்போது, அப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பைலை பதியவா என்று கேட்கும். மற்ற பைல்களை மூடும்போது சேவ் செய்ய அல்லது வேண்டாம் என நினைத்தால் அதற்கேற்றார்போல் யெஸ் / நோ கொடுத்து வெளியேறலாம்.

இங்கே வேறுபாடு என்னவென்றால் நீங்கள் மறைத்து பின் மீண்டும் திறக்காமல் விட்ட பைலைத் திறக்க பின்னொருமுறை கட்டளை கொடுத்தால், பைல் திறந்து உடனே மறைக்கப்பட்டுவிடும். மீண்டும் விண்டோ மெனு சென்று அன்ஹைட் பட்டனை அழுத்த பைல் மீண்டும் பயன்படுத்தக் கிடைக்கும். எனவெ அய்யோ போய்விட்டதே! என்ற கவலை வேண்டாம்.

தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க:

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை மட்டும் தெரியும் படி உறைய வைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? அதாவது படுக்கை வரிசை 30, 40 எனச் சென்றாலும், அந்த பக்கங்களின் மேலாக, இந்த தலைப்புகள் நமக்குத் தெரிந்தபடி இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். உங்கள் விருப்பப்படியே, தலைப்பு உள்ள வரிசைகளை அப்படியே உறைந்து போய் நிற்க வைக்கலாம். அதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.

எடுத்துக்காட்டாக, முதல் மூன்று படுக்கை வரிசைகளில் நிறுவனப் பெயர் மற்றும் நெட்டு வரிசைகளில் அமைப்பதற்கான டேட்டாவினை விளக்கும் வகையில் தலைப்புகளை அமைத்திருக்கிறீர்கள். இந்த மூன்று படுக்கை வரிசைகளும் அனைத்து பக்கங்களிலும் தெரிய வேண்டும். எனவே A4 செல்லைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின்னர், மேலே உள்ள மெனு பாரில், Window என்பதில் கிளிக் செய்திடுங்கள்.

கீழாக Freeze Panes என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போது மூன்றாவது படுக்கை வரிசைக்கும், நான்காவது படுக்கை வரிசைக்கும் இடையே, பட்டையாக ஒரு கோடு இருக்கும். இனி நீங்கள் 60, 70 என எந்த படுக்கை வரிசைக்குச் சென்றாலும், முதல் மூன்று படுக்கை வரிசைகள் அப்படியே மேலாக உறைந்து நிற்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதற்கெனத் தேர்ந்தெடுக்கும் செல் அ வரிசையில் தான் இருக்க வேண்டும். சரி,வேலை முடிந்த பின், இந்த உறைந்த செல்களை மறுபடியும் வழக்கமான நிலையில் வைக்க வேண்டுமே. என்ன செய்யலாம்? மீண்டும் Window மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அங்கு Unfreeze Panes என்று ஒரு பிரிவு Freeze Panes இருந்த இடத்தில் இருக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே உறையச் செய்த வரிசைகள் அதன் தன்மையிலிருந்து விலகும். குறுக்காக இருந்த பட்டையான கோடு மறைந்துவிடும்.

நன்றி - GS (தமிழ் ரோகர்ஸ்)
http://vadakaraithariq.blogspot.in/2014/08/blog-post_12.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 19 ஜூன், 2016

உங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது?


உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது !!!HOW TO SHARE YOU LAPTOP OR PC INTERNET TO WIFI DEVICE (Mobile Phone Or Tablet Or Any Wifi Device) !!
                   
1. முதலில் START பட்டனை கிளிக் செய்து Search செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் ....

2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ... கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...

netsh wlan show drivers

இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில் Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம் /

3. பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம் ....
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...

netsh wlan set hostednetwork mode=allow ssid=kavinspot key=passwordasd

இந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் . (இதில் ssid என்பது உங்கள் பெயர் ... key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் ...ssid பெயர் மற்றும் key பாஸ் வோர்ட் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி டைப் செய்து கொள்ளலாம் .... )

4. உருவாக்கிய WIFI Profile Activate செய்வது எப்படி ??
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
உடனடியாக Wifi Activate ஆகிவிடும் ....

netsh wlan start hostednetwork

அவ்வளவு தான் Wifi Activate ஆகிவிட்டது....

5.Activate செய்த Wifi De-Activate எப்படி ???
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
உடனடியாக Wifi De-Activate ஆகிவிடும் ....

netsh wlan stop hostednetwork

அவ்வளவு தான் Wifi De-Activate ஆகிவிட்டது..

கண்டிப்பாக இந்த முறையில் Internet Sharing செய்ய முடியும் !!! அப்படி சரியாக வேலை செய்யவில்லை என்றால் Firewall ஆப் செய்துவிட்டு முயற்சிக்கவும் !!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 17 ஜூன், 2016

கணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்

கம்ப்யூட்டரைப் பராமரிப்பதற்கான செலவினைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றால் அதனை அவ்வப்போது சுத்தப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.பலர் கம்ப்யூட்டரின் சிபியு கேபினட்டை டேபிளின் அடியில் சிறு பெட்டி போன்ற அமைப்பில் வைத்து .அதற்குக் கதவும் வைத்து பூட்டி விடுவார்கள். பின்புறமாக கேபிள்கள் இணைக்கப் பட்டிருக்கும் டேபிளை சுவர் ஓரமாக வைத்துவிட்டால் சிபியு கேபினட்டை சுத்தம் செய்வதனையே மறந்து விடுவார்கள்.
  
விளைவு? ஒரு நாள் கம்ப்யூட்டர் பூட் ஆகாது. சுத்தம் செய்யாததால் தூசியும் ஈரமும் சேர்ந்து மதர்போர்டு அல்லது இணைக்கும் வயர்கள் கெட்டுப் போயிருக்கலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைக் கடைப்பிடித்தால் கம்ப் யூட்டருக்குப் பாதிப்பு வருவதைத் தடுக்கலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டரை எப்போ தும் தரையில் வைத்து இயக்க வேண்டாம். கம்ப்யூட்டர் டேபிள் அல்லது ஷெல்ப் மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.

2. கம்ப்யூட்டரைச் சுத்தம் செய்திடும் முன் கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தவும். சிபியூவிற்குச் செல்லும் அனைத்துக் கேபிள்களையும் எது எது எங்கு மாட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்துக் கொண்டு கழற்ற வும்.

3. இப்போது வேக்குவம் கிளீனர் போன்ற சாதனம் அல்லது சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்ப் போன்றவற்றை வைத்து காற்றை கேபினுக்குள் அடிக்கவும். காற்று தரும் முனை அரை அடியாவது விலகி இருக்க வேண்டும். நன்றாக அனைத்து தூசியும் வெளியே வரும் வகையில் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கவும்.

4. இறுதியில் கம்ப்யூட்டர் கேபினுக்கு வெளியே ஈரத் துணி கொண்டு அனைத்தையும் அழுத்தம் தராமல் துடைக்கவும். கிளினிங் ப்ளூயிட் இருந்தால் அதனை லைட்டாக ஸ்பிரே செய்து அது உலர்ந்தவுடன் பேப்பர் டவல் கொண்டு சுத்தம் செய்திடவும்.

5. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்ப்யூட்டர் உள்பாகத் தினை அல்லது மதர் போர்டினை ஈரத் துணி கொண்டு துடைக்கக் கூடாது. உள்ளே ஸ்பிரே செய்யக் கூடாது.

6. கம்ப்யூட்டரில் செயலாற்றுகை யில் அதன் அருகே டீ, காபி கப் வைத்தல், குடித்தல் போன்றவை கூடாது. சிறிய பின், கேர் பின், ஜெம் கிளிப் போன்றவற்றை கீ போர்டு அல்லது சிபியூவின் மேல் வைத்தல் கூடாது.

7. கீ போர்டினைக் கிளீன் செய்கையில் அதிகக் கவனம் தேவை. கீ போர்டை அதன் இணைப்பை விலக்கி விட்டு தலைகீழாகத் திருப்பி மெதுவாகத் தட்டவும். உள்ளே நுழைந்து குடி இருக்கும் சிறிய துகள்கள் மற்றும் தூசி வெளியே வரும். பின் நெட்டு வாக்கில் இரு புறமும் நிறுத்தி தட்டலாம். இனி வேக்குவம் கிளீனர் அல்லது அது போன்ற சாதனத்தைக் கொண்டு காற்றை உள் செலுத்தி சுத்தம் செய்யலாம். 

கீ போர்டின் மேலாக கிளீனிங் ப்ளூயிட் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்திடலாம். பின் ஈரத் துணி கொண்டு சுத்தப்படுத்தலாம். மெம்ப் ரேன் கீ போர்டாக இல்லாமல் மெக்கானிக்கல் கீ போர்டாக இருந்தால் கீ போர்டின் பின்புறம் உள்ள ஸ்குரூக் களைக் கழற்றி உள்ளே இருக்கும் போர்டில் உள்ள தூசியினைத் துடைத்து எடுக்க லாம். மெம்ப்ரேன் எனில் அதனைச் சரியாக மீண்டும் பொருத்துவது கடினம். எனவே கழட்டாமல் இருப்பது நல்லது. தூசி நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குபவராக இருந்தால் கீ போர்டுக்கென விற்பனை செய்யப் படும் பிளாஸ்டிக் கவரினைக் கொண்டு கீ போர்டை மூடி இயக்குவது நல்லது. 

எப்படி இருந்தாலும் மாலையில் அல்லது இரவில் பணி முடித்துச் செல்கையில் கீ போர்டுக்கான கவர் போட்டு மூடவும். பெரும்பாலும் ஐவரி வண்ணத்தில் கீ போர்டுகள் உள்ளன. கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கின்றன. ஐவரி வண்ணத்தில் இருந்தால் அடிக்கடி துடைத்தால் தான் அழுக்கு படிவது தெரியாது. வெகுநாட் களாகத் துடைக்காமல் இருந்து அது மஞ்சள் அல்லது கருப்பாகிப் போனால் பின் என்ன அழுத்தி துடைத்தாலும் பழைய வண்ணம் கிடைக்காது.

8. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் உண்டென்றால் அது மவுஸ்தான். எனவே தான் அதனைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் தேவை. மவுஸ் பல திசைகளில் நகர்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் அதனை அவசியம் சுத்தம் செய்திட வேண்டும். முதலில் மவுஸைக் கழட்ட வேண்டும். ட்ராக் பால் மவுஸாக இருந்தால் அதன் மேலாக உள்ள சிறிய வீல் போன்ற பாகத்தினை ஆண்டி கிளாக் வைஸ் திசையில் திருகினால் தனியே வந்துவிடும். 

ட்ராக் பாலும் வெளியே வரும். நிச்சயம் அந்த சிறிய பந்தில் நிறைய அழுக்கு சேர்ந்து கருப்பாகி இருக்கும். இதனைத் தண்ணீர் அல்லது கிளீனிங் லிக்விட் போட்டு துடைக்க வேண்டும். அது இருந்த இடத்தில் சிறிய கம்பிகள் இரண்டு தெரியும். இதில் சிறிய முடி அல்லது அழுக்குகள் சேர்ந்திருக்கும். இதனையும் முழுமை யாகச் சுத்தப்படுத்த வேண்டும். 

இனி ட்ராக் பாலினை அதன் இடத்தில் வைத்து மேலாக வீல் போன்ற பிளாஸ்டிக் வளையத்தை வைத்து கிளாக் வைஸ் திசையில் சிறிது சுழட்டினால் அது கெட்டியாக அமர்ந்து கொள்ளும். இனி மவுஸைப் பயன்படுத்துவது இலகுவாக இருக் கும். பிற வகை மவுஸ்களைச் சாதாரண மாக அதன் வெளிப்புறத்தில் துடைத் தால் போதும்.

9. மானிட்டரையும் தரையில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. மானிட்டரின் பின்புறம் உள்ள கவரை எப்போதும் கழட்டக் கூடாது. அழுத்தமான காற்றை பின்புறம் இருந்து முன் புறமாகச் செலுத்தினால் தூசு தானாக வெளியேறும். இதைப் பலமுறைச் செயல் படுத்தி தூசியை வெளியேற்ற வும். பின் ஈரத்துணி அல்லது கிளீனிங் லிக்விட் பயன் படுத்தி மானிட்டரின் வெளிப் பாகம் மற்றும் திரையைச் சுத்தம் செய்யலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிய துளைகளின் வழியாக எதுவும் ஸ்பிரே செய்யக் கூடாது.

10. ஆர்வக் கோளாறினால் எந்த துணை சாதனத்தையும் கழற்றிப் பார்க்கக் கூடாது. பின் மீண்டும் அதனை மாட்டுவது கடினமாகிவிடும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 15 ஜூன், 2016

நல்ல மனைவியரின் குணங்கள்!

நற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்,
'நிரோகரிப்போருக்கு, (நபி) நூஹீடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகச் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக்கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடிய வில்லை, (இவர்கள்) துரோகம் செய்ததன் காரணமாக, இவர்களிடம்), ' நரக நெருப்பில் நுழைவோர்களுடன் நீங்களும் நழைந்து கொள்ளுங்கள்' என்று கூறப்பட்டது.' திருக்;குர்ஆன் 66 –10
மேலும் அல்லாஹ் குறிப்பிடும் போது, எகிப்து நாட்டை ஆட்சி செய்து, தன்னுடைய அதிகாரங்களால் பலருக்கு மிகவும் கொடுமைகளை புரிந்த பிர்அவ்னின் மனைவியின் குணத்தையும் பற்றியும் சொல்கிறான்,
மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் 'இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக' என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.' திருக்;குர்ஆன் 66 –11
நல்ல மனைவியானவள் இரத்த பந்த உறவு முறைகளை முறிக்காமலும், கணவருக்கு கீழ்ப்படிந்து நடக்க கூடியவளாகவும் இருக்க வேண்டும். தன்னுடைய பெற்றோர்களிடமும், மற்றும் குழந்தைகளிடமும் எந்த மாதிரியாக நடந்துக்கொள்ள வேண்டும். வெளி இடங்களிலும், வெளி நபர்களிடமும், பொது இடங்களிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்ற மனைவிகளுக்குரிய பல பங்குகளை பற்றி திருமறையானது பல இடங்களில் குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன் எவ்வளவு தான் நன்னடத்தையுள்ளவனாக இருந்தாலும் சரிதான். அவனுடைய மனைவி நன்னடத்தை உடையவளாக இல்லையெனில், அவனால் ஒரு போதும் இவ்வுலகில் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் வாழ்ந்திட முடியாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
'உலகின் அனைத்துப் பொருள்களும் அனுபவிப்பதற்காக உள்ளவைதாம்! அவற்றில் சிறந்த பொருள் நன்னடத்தை உள்ள மனைவி!' அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம் : முஸ்லிம், மிஷ்காத்
குடும்பம் என்பது புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தான் இருக்க வேண்டும். இந்த புரிந்துணர்வின் அவசியத்தினை மனைவிமார்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் புகுந்த வீடுகளில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஒரு சில குடும்பங்களில் எந்த புரிந்துணர்வும் இல்லாத பட்சத்தில் தான் சிறு பிரச்சனைகள் பூதகாரமாக மாறி விடுகிறது. பெண்களை ஏக இறைவன் பலஹீனமாக படைத்து உள்ளான். ஆகையால் தான் அவர்கள் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியாமல் சோர்ந்து போய் கவலையும் அடைகிறார்கள். ஒவ்வொரு இல்லங்களிலும் ஏதேனும் பிரச்சனை எப்படியாவது வந்தே தீரும் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்ன முடிவு என்பதினை பற்றி கணவன் மற்றும் மனைவி கலந்து ஆலாசிக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தினை பற்றியும் மனம் திறந்து பேச வேண்டும்; என்பதினை இருவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் பிரச்சனை அதிகளவில் உருவாகி கணவன் மனைவி பிரிவினைக்கும் காரணமாக அது அமைந்து விடும்.
'இன்னும் (கணவன் மனைவியாகிய) இருவருக்குள், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால், அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள், அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டு பண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ், (யாவையும்) தெரிந்தவனாக,நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.' திருக்குர்ஆன் 4:35
புகுந்த வீடு, புதிய சூழ்நிலை, மாமியார், நாத்தனார் மற்றும் புதிய முகங்கள் என்று புதுமையாக இருக்கும் திருமணம் புரிந்த புதிதில் மனைவிமார்களுக்கு. எல்லாவற்றிற்கு மனம் பொறுத்து போனால் எல்லாம் நன்மையே நடக்கும் என்பதினை எண்ணிக்கொண்டால் குடும்பம் ஒளிர வாய்ப்புண்டு. பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன் முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். குடும்பத்தில் கணவன் ஒரு சிறு துளி அன்பு செலுத்தினாலும், அவள் குடும்பத்தினை நல்ல மாதிரியாக கொண்டு செல்லுவாள். மனைவியானவள் குடும்பத்தில் உள்ள எல்லோருடைய மனங்களையும் புரிந்து அவர்களை எப்போதும் சந்தோஷமாக குளிர வைக்க தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.
'(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன.' திருக்குர்ஆன் 30: 21
குடும்பம் நல்ல மாதிரியாக இருக்க வேண்டுமானால், புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் மனைவிக்கு இருக்குமாயின் அந்தக் குடும்பத்தில் காலை இளந்தென்றல் எந்நேரமும் வீசிக்கொண்டே இருக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லேயே. ஒரு பெண் எல்லா விதத்திலும் குறையற்றவளாக இருப்பது சாத்தியமானதல்ல. அவளிடம் ஏதேனும் குறையோ பலவீனமோ இருந்தாலும் அதே நேரத்தில் அவளிடம் சில நல்ல அம்சங்களும் இருக்கலாம். ஆகையால் ஒரு நல்ல கணவன் மனைவியின் இருபுறங்களையும் பார்த்திடல் வேண்டும்.
மனைவியானவள் தன்னுடைய குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அவசியத்தினை பற்றி நாள் தோறும் சொல்லி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். உலகக் கல்வியுடன் சேர்ந்து மார்க்க கல்வியினையும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்தால் அந்த பிள்ளைகள் இரு உலகிலும் வெற்றியடைய வாய்ப்புண்டு. மார்க்கப்பற்றுள்ள பிள்ளைகளை உருவாக்க நம்மால் முடியும் என்பதினை ஒவ்வொரு மனைவியும் தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து கொள்ள வேண்டும். இன்றைய காலக்கட்டங்கள் பிள்ளைகள் வீணாக சுற்றி திரிய கூடிய சூழ்நிலைகளால் சூழப்பட்டு உள்ளது. ஆகையால் நாம் தான் சந்ததிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதினை தாயாக மாறக்கூடிய மனைவிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வுலகம் வீண் விரயமும் மற்றும் ஆடம்பரமும் கலந்தே உள்ளதாக இருக்கிறது. ஆகையால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் என்பதினை மனைவிமார்கள் தெரிந்து கொண்டு பிள்ளைகளை நன் முறையில் வளர்க்க வேண்டும்.
ஒவ்வொரு பெண்களும் அவர்கள் வெளியே செல்லும் போது தலைக்குனிந்து செல்லக்கூடிய பெண்மணியாகவும் மற்றும் தலை முந்தாணைகள் சரியாக இருக்கின்றாதா என்பதனை அடிக்கடி பார்க்கக்கூடிய பெண்மணிகளாகவும்; இருக்க வேண்டும். வெளி நபர்கள் நம்மை பார்ப்பார்கள் என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மற்றும் வாசனை திரவியங்கள் அதிகளவில் பூசக்கூடாது. ஏனெனில் வெளி நபர்கள் கவனம் நம் மீது திரும்புவதற்கு இது ஒரு காரணமாக நாமே அமைத்துத் தரக்கூடாது. ஒப்பனை மற்றும் அலங்காரங்கள் நம்முடைய கணவனுக்கு மட்டுமே உரியது. பிறருக்காக அல்ல என்பதினையும் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றும் வெளியே செல்லும் போது கணவனின் அனுமதியை பெற்று தான் செல்ல வேண்டும். கணவனின் அனுமதி இல்லாமல் செல்லும் மனைவிகளை அவர்கள் செல்லும் வழியெங்கும் மலக்குமார்கள் சபிக்கிறார்கள். வெளி நபர்கள் முன்பாக வருவதில் மனைவிகள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதனையும் இந்த குர்ஆன் வசனம் தெளிவாக நமக்கு காட்டுகிறது.
'(நபியுடைய மனைவியர்) தங்களுடைய தந்தைகள் (முன்பாகவும்), தங்கள் ஆண் மக்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரர்களின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் சகோதரிகளின் புதல்வர்கள் (முன்பாகவும்), தங்கள் பெண்கள் (முன்பாகவும்), தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களி(ன் முன்பாக வருவதி)லும் அவர்களின் மீது குற்றமில்லை. மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:55)


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 13 ஜூன், 2016

எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!

 வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில்இதற்கு அனுமதி இல்லை.
எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் 'அமருங்கள்' என்றனர். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552
மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி). நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள்.
நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள்.
உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்' என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 701
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.
யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.
அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.
ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரவேற்பதற்காகவும், அன்பைளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.
பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். (திர்மிதீ 3807)
நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.
ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள்.
இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 11 ஜூன், 2016

இல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..!

மனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். வீடு கட்டுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு இறுதி முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.
ஏனெனில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மாற்றங்கள் செய்ய நினைப்பது நேரத்தை அதிகரிக்கும். பணமும் வீண் விரயமாகும். அத்துடன் திட்டமிட்டபடி ஒவ்வொரு நிலையிலும் பணிகளை முடிப்பதில் தொய்வு ஏற்படும். ஆகவே கட்டுமான பணியை தொடங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
  • வீடு எத்தகைய வடிவமைப்புடன் அமைய வேண்டும் என்பதை கட்டிட வரைபடம் தான் நிர்ணயிக்கும். எனவே வரைபட தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் எத்தனை அறைகள் அமைக்கப் போகிறோம். ஒவ்வொரு அறையும் எவ்வளவு நீளம், அகலம் இருக்க வேண்டும் என்பதை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் அறைகள் எந்தெந்த திசையில் அமைய வேண்டும்? அறைக்குள் என்னென்ன வசதிகள் ஏற்படுத்த வேண்டும்? என்பது பற்றியும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் பிற வீடுகளை பார்த்தும், அவர்  களிடம் ஆலோசனைகளை கேட்டு பெறலாம். ஆனால் கட்டிட வரைபடம் தயாரித்து இறுதி செய்தபிறகு எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.
  • கட்டுமானப்பணியின் போது தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அவை கட்டிட வரைபட வரைமுறைக்கு உட்பட்டதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கட்டுமானப்பணிகள் ஆரம்பித்த பின்னர் பெரிய அளவில் மாற்றம் செய்ய நினைத்தால் மீண்டும் கட்டிட வரைபடம் தயாரிக்க வேண்டியிருக்கும். அதனால் தேவையில்லாத கால விரயமும், பண விரயமும் ஏற்படும்.
  • கட்டுமான பணி தொடங்கும் போதே வீடு கட்டி முடிப்பதற்கு எவ்வளவு தொகை செலவு ஆகும்? நம்மால் எவ்வளவு தொகை செலவு செய்ய முடியும்? என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவசியம். பணி தொடங்கியபிறகு கடன் வாங்கி கொள்ளலாம் என்று கற்பனை கோட்டை கட்டுவது பயன் தராது. ஏனெனில் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் போனால் கட்டுமானப்பணி பாதியில் நிற்கக்கூடும். ஆதலால் வீட்டை கட்டிமுடிப்பதற்கு ஆகும் தொகையை முதலிலேயே தயார் செய்து விட்டு கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும்.
  • கட்டுமான பணியை ஒப்பந்ததாரரிடம் கொடுக்கும் பட்சத்தில் எவ்வளவு காலத்தில் பணியை முடிக்க வேண்டும் என்பது பற்றி இருவரும் கலந்துபேசி முடிவு எடுக்க வேண்டும்.
  • கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறும் பணிக்கு இலக்கு நிர்ணயித்து அந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் எந்த அளவு வேலை முடிந்துள்ளது என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். திட்டமிட்டபடி பணியை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
  • பணியில் சிறிய மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தால் அதுபற்றி ஒப்பந்ததாரருடன் கலந்து பேசி அதன் விவரங்களை அவசியம் இருதரப்பும் எழுதி வைக்க வேண்டும். அதற்கு செலவழிக்கப்பட்ட தொகையை குறித்து வைக்க வேண்டும். அதுபோல் ஒவ்வொரு கட்ட நிலையிலும் ஆகும் செலவையும் எழுதி வைக்க வேண்டும்.
  • கட்டிடம் கட்ட பயன்படும் தண்ணீர், மின்சாரம் போன்றவை தடையின்றி கிடைப்பதற்கு கட்டிட உரிமையாளர் ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • சிமெண்ட், செங்கல், கம்பியில் தொடங்கி டைல்ஸ், பெயிண்ட், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் பொருள்கள் வரை அனைத்து பொருள்களும் எந்த கம்பெனியின் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பதையும், அப்பொருட்களின் அடிப்படை விலை பற்றிய விவரங்களும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக எழுதப்பட வேண்டும்.
  • கட்டுமான பொருட்களின் விலை குறைந்தாலோ, அதிகரித்தாலோ அதை இருவரும் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும்.
  • கட்டிடம் தவிர பிற வேலைகளான காம்பவுண்ட் சுவர், படிக்கட்டு, போர்டிகோ, நுழைவு வாயில், நீர் தேக்கத்தொட்டி, செப்டிக் டேங்க் போன்றவற்றின் அளவு மற்றும் அதற்கு ஆகும் கட்டுமான செலவு விவரங்களை முதலிலேயே முடிவு செய்ய வேண்டும். கப்போர்ட் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதும் முதலிலேயே முடிவு செய்யப்பட வேண்டும்.
  • கதவு, ஜன்னல், கிரில் வகைக்கு தனியாக வரைபடம் தயாரித்து அதில் உரிமையாளர், ஒப்பந்ததாரர் இருவரும் கையெழுத்திட வேண்டும்.
  • ஒவ்வொரு பகுதி வேலை முடியும்போதும் எத்தனை சதவீதம் பணம் கொடுக்கவேண்டும் என்பதும் ஒப்பந்தத்தில் எழுதப்பட வேண்டும்.
  • இயற்கை பேரிடர் மற்றும் இன்னபிற காரணங்களால் வரும் இழப்புகள், அதனால் வரும் செலவுகளுக்கு யார்? யார் எவ்வளவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட வேண்டியது அவசியம்.
  • எந்த ஒரு வேலையையும் இது தனி, அது தனி என பிரிக்காமல், வேலைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். மேலும் ஒரு அனுபவமிக்க பொறியாளரிடம் கலந்து ஒப்பந்தத்தை இறுதி செய்து விட்டு பின்னர் அவ்வப்போது அவரிடம் ஆலோசித்து கட்டுமான பணியை மேற்கொள்வது நல்லது.
  • பொதுவாக பேஸ்மெண்ட் உயரம், நுழைவு வாயில், டைல்ஸ், கப்போர்ட், போர்டிகோ, மொட்டை மாடி போன்ற வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் கட்டிட உரிமையாளர் தனது தேவைகள் அனைத்தையும் ஒப்பந்தத்தில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
·         பணம் முழுவதையும் மொத்தமாக வழங்குவதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் பணத்தை பிடித்தம் செய்து வேலை முடிந்த சுமார் ஆறு மாதத்துக்கு பிறகு ஏதேனும் குறைபாடு தோன்றாவிடில் பணம் முழுவதும் வழங்கலாம்.
நன்றி:நம்ம வீடு


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts