லேபிள்கள்

வெள்ளி, 27 மே, 2016

வீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்

வீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்டிப்பார்ப்பது குறையும். அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்.
* ஒரு பக்கம் வீட்டிற்குள் காற்று வந்தால், அது வேறொரு பக்கம் கண்டிப்பாக வெளியேற வேண்டும். அப்போது தான் வீட்டிற்குள் காற்றோட்டம் சீராக இருக்கும்.
* அறையில் போதிய ஜன்னல்களை அமைத்து விட வேண்டும். அந்த ஜன்னல்களில் சில நீண்ட நீளம், அகலம் கொண்டவையாக அமைவது நல்லது.
* காலை நேரங்களில் கதவு, ஜன்னல்களை நன்றாக திறந்து வையுங்கள். ஆனால், வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போது, அவற்றை மூடிவிடுங்கள். வெப்பமானது வீட்டுக்குள் அதிகம் உட்புகாமல் இருக்கும்.
* சமையல் அறையில் சமைக்கும்போது வெளிப்படும் புகை காற்றில் கலந்து அறை முழுவதும் பரவ வாய்ப்பு இருக்கிறது. அதனால் வீட்டில் உள்ளவர்கள் அவதிக்குள்ளாக நேரிடும். ஆகவே சமையல் அறை காற்றோட்ட வசதியுடன் அமைந்திருந்தால் மட்டும் போதாது. சமைக்கும்போது வெளிப்படும் நெடியை வெளியேற்றும் வகையிலும் அமைய வேண்டும். அதற்கு எக்சாஸ்ட் பேன் பொருத்துவது அவசியம். அவை சமைக்கும்போது புகையுடன் கலந்து வெளிப்படும் நெடியை ஈர்த்து வெளியேற்றி விடும். அதனால் புகை காற்றில் கலப்பது தவிர்க்கப்படும்.
* வெயிலின் தாக்கம் வீட்டினுள் நுழையாமல் இருக்க மெல்லிய ஜன்னல் திரைகளை உபயோகிக்க வேண்டும். கனமான ஜன்னல் திரைத் துணிகளை தவிர்ப்பது நல்லது. மெல்லிய திரைச்சீலைகளை பயன்படுத்துவதன் மூலம் வீடு காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும்.
* பால்கனி மற்றும் ஜன்னல்களில் மூங்கில் திரைகளைப் பயன்படுத்துங்கள். அவற்றை அவ்வப்போது ஈரப்படுத்தி வையுங்கள். அவை வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஈரப்பதம் காற்றில் கலந்து இதமான சூழலை ஏற்படுத்தும்.
* வீடுகளில் காற்றோட்டத்திற்காக பொருத்தப்பட்டிருக்கும் சீலிங்பேன் மற்றும் எக்சாஸ்ட் மின்விசிறிகளை அடிக்கடி தூசி படியாமல் சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் அதில் தூசி படிந்து இருந்தால் அதன் சுழற்றி வேகம் குறைந்துவிடும். எனவே மின்விசிறிகளை நன்றாக பராமரித்து வைத்திருக்க வேண்டும்.
* மஞ்சள் நிறத்தில் ஒளிரும் விளக்குகளை வீடுகளில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை வெப்பத்தை அதிக அளவில் உமிழக்கூடியவை. அதற்கு மாறாக சி.எப்.எல். போன்ற ப்ளோரெஸண்ட் விளக்குகளை பயன்படுத்தலாம். இவை அதிக அளவில் வெப்பத்தை வெளியிடுவதில்லை.
* பொதுவாக வீட்டிற்குள் வெப்பமானது மேற்கூரை வழியாகவே அதிகமாக உட்புகும். இதனால் வீட்டின் கூரையை குளுமையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தற்போது பிரபலமாகி வரும் 'பால்ஸ் சீலிங்' முறையில் வீட்டின் மேற்கூரையில் பொருத்தினால் வீட்டிக்குள் வெப்ப தாக்கத்தை குறைக்கலாம். இல்லையெனில் வீட்டின் மேற்கூரையில் வைக்கோலைப் பரப்பி, அதில் அடிக்கடி தண்ணீர் தெளித்து வந்தால் வீடு குளுமையாக இருக்கும்.
* வீட்டின் மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ சிறுசிறு செடிகளை தொட்டியில் வளர்ப்பது கோடை வெப்பத்தைக் குறைக்கும் காரணிகளாக அமையும்.
* அறைக்குள்ளும் அலங்கார செடிகளை வளர்க்கலாம். அவை அறைக்குள் பரவி இருக்கும் காற்றில் கலந்திருக்கும் தூசுக்களை ஈர்க்கும் தன்மை கொண்டவையாக இருப்பது நல்லது. அதன் மூலம் அறைக்குள் சுத்தமான காற்றை சுவாசிக்க வழி பிறக்கும்.
* வீட்டின் காற்றோட்டமான ஒரு ஓரத்திலோ, பால்கனியிலோ, சிறிய தொட்டி அல்லது வாளியில் நீரை நிரப்பி வையுங்கள். அவையும் வெப்பத்தாக்கத்தை குறைப்பதில் பங்கெடுக்கும். ஆனால் அவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால், கொசுக்கள் அல்லது பூச்சிகளின் கூடாரமாகிவிடும்.
https://redhilsrealestateagency.wordpress.com


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 25 மே, 2016

முடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்படுத்தும்போது முடி நன்றாக வளர்வதுபோல் தெரியும். ஆனால், அதை நிறுத்தும்போதுதான் இன்னும் அதிகமாக முடி கொட்டத் தொடங்கும்.

'முடி வளருதோ இல்லியோ... இருக்கிற முடியைத் தக்கவைச்சுக்கிட்டா போதும் என்ற மனநிலைதான் இன்று பலருக்கும் இருக்கிறது. விளைவு, ஆளாளுக்குச் சொல்லும் ஷாம்பு, எண்ணெய், தைலங்களை வாங்கித் தலையில் கொட்டி, இருக்கும் முடிக்கு வேட்டு வைக்கின்றனர். நம்முடைய பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே போதும்... இருக்கும் முடியை தக்கவைக்கலாம்... வளர்ச்சியைக் கூட்டி, உறுதியான ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கலாம்' என்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.

''முடி உதிர்வைத் தடுக்க, இரும்புச் சத்தும், புரதச் சத்தும் சரியான அளவு இருக்க வேண்டும். உணவில் பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை, முருங்கைக் கீரையைச் சேர்க்கும்போது இந்தச் சத்துக்கள் போதுமான அளவில் கிடைத்துவிடுகின்றன. எனவே, தினமும் இதில் ஏதேனும் ஒரு கீரையைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

பேரீச்சம், உலர் திராட்சை, மாதுளை, கொய்யா, பப்பாளி... போன்ற பழங்கள் முடி உதிர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வைத் தருகின்றன. வெள்ளை சர்க்கரையைத் தவிர்த்து, பனை வெல்லம் அல்லது நாட்டு வெல்லம் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம். பாசிப் பருப்பில் உள்ள சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கட்டிய பாசி பயிறு முடியின் வேர்க்கால்களை வலுபடுத்தும்.

பெண்கள், செவ்வாய், வெள்ளி கிழமைகளிலும், ஆண்கள் புதன் மற்றும் சனி கிழமைகள் என வாரம் தவறாமல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கவேண்டும். கூந்தலை சீவி பிண்ணுவதன் மூலம் முடி கொட்டுவதைத் தடுக்கலாம்.
முடி ஆரோக்கியமாக இருக்க வீட்டிலேயே சில தைலங்களைத் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்தத் தைலங்களைத் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். தலைக்கு ஷாம்புவுக்குப் பதில் அரைத்த சீயக்காய் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளை பயத்தமாவு அல்லது கடலை மாவால் குளிப்பாட்டலாம்.

கருகருவென முடி அடர்த்தியாக வளர கை கொடுக்கும். முடி கொட்டுவதும் நீங்கும். இளநரையும் வராது'' என்கிற வேலாயுதம், வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள, சில மூலிகை தைலங்களைச் சொன்னார்.  

பஞ்ச கர்ப்பம் தைலம்
தேவையானவை: 50 கிராம் கடுக்காய், சிறிது வேப்பிலை. கால் டீஸ்பூன் வெள்ளை மிளகு, கரிசிலாங்கண்ணி கரை சாறு - 10 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.
செய்முறை: கடுக்காயை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். மேலே சொன்ன பொருட்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து நல்லெண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். 'சடசட' வென ஓசை வந்ததும் இறக்கி, ஆற வைக்க வேண்டும்.
குளிக்கும்போது இந்தத் தைலத்தை மிதமாகச் சூடு செய்து தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியதும் குளிக்கவேண்டும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும்!

கரிசாலைத் தைலம்
தேவையாவை: கரிசலாங்கண்ணி இலை சாறு - 50 மி.லி., நல்லெண்ணெய் 50 மி.லி., வெந்தயம் - 50 கிராம்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி சாறு, நல்லெண்ணெய் கலந்துகொள்ள வேண்டும். அதனுடன் வெந்தயத்தை வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை நீர் வற்றும் வரை காய்ச்சி ஆறவைத்துப் பயன்படுத்தலாம்.

நெல்லி தைலம்
தேவையாவை: நெல்லி சாறு 50 மி.லி., மருதாணி சாறு 50 மி.லி., அரைக்கீரை விதை 50 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.
செய்முறை: நெல்லிசாறுடன், மருதாணி சாறைக் கலந்து அதில் அரைக் கீரை விதையைச் சேர்க்க வேண்டும். இதனுடன் நல்லெண்ணெய் விட்டு நீர் வற்றி வாசனை வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.

அவுரி தைலம்
தேவையானவை: அவுரி இலைச் சாறு 250 மி.லி., நெல்லிச் சாறு 100 மி.லி., நல்லெண்ணெய் அரைக் கிலோ.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் அவுரி, நெல்லிச் சாறு கலந்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து நீர் வற்றும் வரை காய்ச்சி ஆற வைக்கவும்.
http://pettagum.blogspot.in/2014/06/blog-post_3323.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 23 மே, 2016

நன்மை எல்லாம் தரும் நுங்கு!


''மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. 'பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்' என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன் உற்பத்தி குறைந்தாலும், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்'' என்கிற சென்னை சித்த மருத்துவர் சங்கீதா, நுங்கு மற்றும் பதநீரில் உள்ள நன்மைகள் குறித்து விளக்கினார்.

''வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.  

நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு - இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.  

சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.

நுங்கில் 'ஆந்த்யூசைன்' என்னும் ரசாயனம் இருப்பதால், பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.  

அதேபோல், பதநீரும், நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த பானம். உடல் உஷ்ணத்தை உடனே தணித்து, உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது. நம் உடல் வெயில் காலத்தில் சந்திக்கும் அனைத்து அசௌகரியங்களில் இருந்தும், நம்மைக் காக்கும் நுண்சத்துக்கள் இதில் அதிகம். ரத்த சோகையைப் போக்கும். தலையில் பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். இப்படி நுங்கும் பதநீரும் நமக்கு அள்ளித் தரும் நன்மைகள் ஏராளம்!''
டிப்ஸ்
  நுங்கை இளநீருடன் ஜூஸாக அரைத்து அருந்தலாம். தலைக்கு தேய்த்தும் குளிக்கலாம். சருமமும் உடலும் பொலிவடையும்.  
 பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன் சுக்கு சேர்த்துச் சாப்பிட்டால், நன்றாகப் பசி எடுக்கும்.
 சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.
 நுங்கை மசித்து வியர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால், விரைவில் சரியாகும். தோலும் பளபளப்பாகும்.
  நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால், அல்சர், வயிற்றுப்புண் பிரச்னை தீரும்
http://pettagum.blogspot.in/2014/06/blog-post_1.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 21 மே, 2016

மலவாயில் அரிப்பு

"சரியான அரிப்பு" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் பயம் வந்தது. ஆனால் செய்யவில்லை. "தானைப் புழுத் தொல்லை என்னை விட்டுப் போகுதில்லை" என அலுத்துக் கொண்டார்.

"இவளுக்கு போன மாதம்தான் பூச்சிக் குளிசை குடுத்தனாங்கள். பிறகும் பின் பக்கமாகக் கையைப் போட்டு சொறியிறாள்" இதைச் சொன்னது 4-5 வயது மதிக்கத்தக்க குழந்தையின் தாய்.
இவர்களுக்கெல்லாம் உண்மையில் பூச்சித் தொல்லைதானா?

மலவாயிலில் அரிப்பு எடுத்தால்
 அது பூச்சித் தொல்லைதான் என்றே பலரும் நம்புகிறார்கள். அது உண்மையா?

மலவாயில் அரிப்பிற்கு அதுவும் முக்கியமாக, இரவில் அரிப்பதற்கு தானைப் புழு என்று பரவலாக சொல்லப்படும்
 Thread worm  ஒரு காரணமாகும். இருந்த போதும் அது மட்டும் காரணமல்ல. மலவாயில் அரிப்பை மருத்துவத்தில் Pruritus ani என்பார்கள்.
இது ஒரு அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. பல்வேறு நோய்கள் காரணமாக அங்கு அரிப்பு ஏற்படுவதுண்டு.

கடுமையான அரிப்பு என்பதால் எங்கு நிற்கிறோம் யார் பார்க்கிறார்கள் என்று யோசிக்காது சொறியச் சொல்லும். சொறிந்த பின்னர் 'என்ன மானங்கெட்ட வேலை செய்தேன்' என நாண வைக்கும்.

இந்த அரிப்பு
  • எந்த நேரத்திலும் வரக் கூடுமாயினும் மலம் கழித்த பின்னரும், இரவில் படுக்கைக்குச் செல்லும் நேரங்களிலும் அதிகமாக இருக்கக் கூடும். 
  • கடுமையான வெக்கை, 
  • அவ்விடத்தில் ஈரலிப்பு, 
  • மலங் கசிதல், 
  • மனப் பதற்றம் போன்றவை அரிப்பை மோசமாக்கும். 
குழந்தைகளில் இப்பிரச்சனையைக் காண்பது அதிகம். அத்துடன் 40-60 வயதுள்ளவர்களிலும்  கூடுதலாகக் காணப்படாலும் எந்த வயதிலும் ஏற்படலாம்.

காரணங்கள் எவை.

பல்வேறு நோய்களால் ஏற்படலாம் என்ற போதும் சரும நோய்களால் ஏற்படுவது அதிகம். எக்சிமா, சோராசிஸ், லைக்கன் பிளேனஸ் போன்ற நோய்கள் சருமத்தின் ஏனைய இடங்களில் தோன்றுவது போலவே மலவாயிலும் வரலாம்.

அதைத் தவிர சருமத்தில் பல காரணங்களால் ஒவ்வாமை அழற்சி ஏற்படுவதுண்டு.

மலவாயில் பகுதியில் ஈரலிப்பு அதிகமாக இருந்தால் அதன் காரணமாக அழற்சி ஏற்படலாம்.
  • கடுமையாக வியர்ப்பது ஒரு முக்கிய காரணம். 
  • வயிற்றோட்டம் போன்ற நோய்களால் அல்லது பழக்க தோசத்தால் அடிக்கடி மலங் கழிப்பதால், மலவாயிலில் ஈரலிப்பு ஏற்பட்டு அதனால் அழற்சியும் அரிப்பும் வர வாய்ப்புண்டு. 
  • இயல்பாகவே கடுமையாக வியர்ப்வர்கள், 
  • வியர்க்க விறுவிறுக்க வேலை செய்பவர்கள், 
  • மலவாயிலை அண்டிய பகுதியில் உரோமம் அதிகம் இருப்பவர்களுக்கு 
அதேபோல வியர்வை ஈரலிப்பால் அழற்சியும் அரிப்பும் ஏற்படும்.

கடுமையான மற்றும் கிருமிஎதிர் சோப் வகைகளை உபயோகிப்பதாலும் அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

ஈரலிப்புத்தன்மை அதிகமாக இருப்பதால் அழற்சி மாத்திரமின்றி பங்கஸ் தொற்றும் ஏற்படலாம். ஈரலிப்புடன் மடிப்பும் உள்ள இடமாதலால் இறுக்கமாகவும் வெப்பமாகவும் காற்றோட்டமின்றி இருப்பதால் பங்கஸ் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். இதுவும் அரிப்பை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு அவ்வாறு பங்கஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

மலம் இறுக்கமாகப் போவதால் சிலருக்கு குதத்தில் சிறு வெடிப்புகள் தோன்றலாம்
 Anal fissure  எனப்படும் இவை வேதனையை ஏற்படுத்தும். அத்துடன் அரிப்பையும் ஏற்படுத்தலாம்.
அதே போல சிலருக்கு அவ்விடத்தில் சில தோற்தடிப்புகள் முளை போல வருவதுண்டு. Anal tags என்படும் இவற்றின் இடையே ஈரலிப்பும் மலத் துகள்களும் தேங்குவதால் அரிப்பை ஏற்படுத்தும்.
மூலக் கட்டிகளும் அவ்வாறே மலவாயில் அரிப்பிற்கு காரணமாகலாம்.

சில வகை உணவுகளாலும் ஒரு சிலரில் அரிப்பு ஏற்படும். புளிப்புள்ள பழங்கள், தக்காளி திராட்சை, சுவையூட்டிகள் போன்றவை அரிப்பை ஏற்படுத்தலாம். அதிகளவில் பால், தேநீர், கோப்பி, பியர் போன்ற பானங்களை அருந்துவதாலும் ஏற்படலாம். கடுமையான காரமுள்ள உணவுகளும் சிலருக்கு அரிப்பை ஏற்படுத்துவதுண்டு.

தானைப் புழு

இவ்வாறு பல காரணங்கள் இருந்தபோதும் தானைப் புழு என்று பொதுவாகச் சொல்லப்படும் Thread worm ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இது எந்த வயதிலும் தொற்றக் கூடியது என்ற போதும் குழந்தைகளில் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் 10 குழந்தைகiளில் 4 பேர எப்பொழுதாவது தானைப் புழு தொற்றிற்கு இலக்காகி இருப்பார்கள் என கள ஆய்வுகள் சொல்கினறன.
இப் புழக்கள் குடலில் வாழ்ந்தாலும் முட்டை இடுவதற்காக மல வாயிலுக்கு வருக்கினறன. முக்கியமாக இரவு அரிப்பிற்கு இது முக்கிய காரணமாகக் கருதலாம். ஒரே குடும்பத்தில் பலருக்கு மலவாயில் அரிப்பு இருக்குமானால் அதற்குக் காரணம் இப்பூச்சிகள்தான் எனக் கருதலாம். இதற்கு சிகிச்சையாக குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் பூச்சி மருந்து கொடுக்க வேண்டும். 2 வாரங்களின் பின்னர் ஒரு முறை மீண்டும் கொடுப்பதும் உதவலாம்.

அவ்வாறு பூச்சி மருந்து கொடுத்த பின்னரும் அரிப்பு இருக்குமாhனல் அதற்குக் காரணம் வேறு நோய் என்றே கருத வேண்டும். இலகுவான மலப் பரிசோதனை மூலம் பூச்சி இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்.

'சுத்திச் சுத்தி சுப்பற்ரை கொல்லைக்குள்ளே' என்று ஊர்புறங்களில் ஒரு வார்த்தையாடல் இருக்கிறது. பலருடைய மலவாயில் கடி அதைப் போன்றதுதான்.

ஏதாவது ஒரு காரணத்தால் ஒருவருக்கு மலவாயில் கடி ஏற்பட்டிருக்கும்.

'சுத்தத்தைப் பேணுவது காணாது, அசுத்தம், அழுக்கு பட்டிருக்கும்..' என்றெல்லாம் எண்ணி அடிக்கடி மல வாயிலைக் கழுவுவார்கள். ஈரலிப்பு அதிகமாவதால் அரிப்பு அதிகரிக்குமே ஒழியக் குறையாது. கழுவியது காணாது என எண்ணி மருந்து கலந்த சோப் வகைளை உபயோகிப்பார்கள்.

அதிலுள்ள மருந்து காரணமான ஒவ்வாமையால் அரிப்பு மேலும் அதிகரிக்கும். எனவே சோப் டெட்டோல் சவ்லோன் போன்றவற்றால் சுத்தம் பண்ண முயல்வார்கள். அவை மென்மையன சருமத்தை உறுத்தி அரிப்பை அதிகரிக்கும்.

எனவே காரணத்தைக் கண்டறியாது சுயவைத்தியத்தில் ஈடுபடுவது நோயை அதிகரிக்குமே ஒழிய தீர்க்காது.

நீங்கள் செய்யக் கூடியவை
 

காரணத்தை கண்டறிய முடியாவிட்டால் நீங்கள் செய்யக் கூடியவை எவை?
சருமத்தை உறுத்தக் கூடிய எந்தப் பொருளையும் உபயோகிக்க வேண்டாம்.
வாசனையூட்டிய சோப், மருந்து கலந்த சோப் போன்றை வேண்டாம். ஒவ்வொரு தடவையும் சோப் போடுவது கூடாது. சோப் போட்டு கழுவிய பின்னர் அதன் எச்சங்கள் சருமத்தில் ஒட்டியிருக்காதவாறு நன்கு அலசிக் கழுவுங்கள். வாசனைத் திரவியங்கள், ஸ்பிரிட், போன்றவற்றைத் தவிருங்கள். அவ்விடத்தில் பவுடர் போடுவதும் கூடாது. நிறம் மணம் அற்ற சோப் வகைகளை உபயோகியுங்கள். மலம் கழித்த பின் கழுவியம் ஈரத்தை ஒற்றி எடுங்கள். கடுமையாத் தேய்க்க வேண்டாம்.

உங்களுக்கு ஏதாவது உணவு வகைகள்தான் அரிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தால் அதைத் தவிர்க்கவும். அரிப்பு சிலகாலத்தில் மறைந்துவிடும்.

மலம் கழித்தால் உடனடியாகக் கழுவுங்கள். மலவாயிலால் வாய்வு கழியும்போது அங்கு ஈரலிப்பு ஏற்படுவதாக உணர்ந்தாலும் கழுவுங்கள். அதேபோல படுக்கப் போகும் முன்னரும் ஒரு தடவை கழுவுங்கள்.

கழுவுவதற்கு சுத்தமான நீரையே உபயோகியுங்கள். சோப் ஒவ்வொரு தடவையும் உபயோகிக்க வேண்டியதில்லை. சோப் உபயோகித்தால் அது எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை ஏற்கனவே கூறினோம்.

  • தினமும் குளியுங்கள். 
  • குளித்த பின்னர் ஈரத்தை ஓற்றி எடுத்து நீரை அகற்றுங்கள். 
  • மென்மையான துணியிலான டவல்களால் ஒற்றி எடுங்கள். 
கடுமையான அரிப்பும் முடி அதிகமாகவும் உள்ளவர்கள் ஹெயர் டிரையர் கொண்டு உலர்த்துமாறு மேலைநாட்டு மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் வெப்பமான சூழலில் வாழும் எங்களுக்கு ஈரத்தை நன்கு ஒற்றி எடுத்தாலே சிறிது நேரத்தில் சருமம் உலர்ந்து விடும்.

  • உள்ளாடைகளை தினமும் மாற்றுங்கள். 
  • துவைத்து, நன்கு உலர்ந்த உள்ளாடைகளையே அணியுங்கள். 
  • மலம் கழித்து கழுவிய ஈரம் அல்லது குளித்த ஈரம் நன்கு உலர்ந்த பின்னரே உள்ளாடைகளை அணிய வேண்டும். 
  • அரிப்பு எடுத்தாலும் சொறிவதை கூடியவரை தவிருங்கள். 
  • முக்கியமாக நகமுள்ள விரல்களால் சொறிவது கூடாது. நகங்களை குட்டையாக வெட்டி அழுக்கின்றி பராமரிப்பது அவசியம். 
  • அரிப்பு கடுமையாக இருந்தால் அதற்கு எதிரான அன்ரிஹிஸ்டமின் மாத்திரை ஒன்றை இரவில் உபயோகிக்கலாம். அவில் (Avil), பிரிட்டோன், லொராடடின், செற்ரிசின் போன்ற பல இவற்றில் அடங்கும்.

கிறீம் வகைகள் பல உள்ளன. பங்கசுக்கு எதிரானது, அரிப்பை குறைக்கும் ஸ்டிரொயிட் கிறீம், குளிர்மையாகக்கும் கிறீம் எனப் பலவகை. எனினும் மருத்து ஆலோசனை இன்றி கண்ட கிறீம் வகைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

மருத்துவத்தைப் பொறுத்த வரையில் மலவாயில் அரிப்பிற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டு பிடித்து அதற்கான மருந்துகளை உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பூச்சி மருந்துகளை உபயோகிப்பதில் பயனில்லை.

எந்த மருத்துவமானாலும் மேலே சொன்ன வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
http://hainallama.blogspot.in/2014/07/blog-post_27.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 19 மே, 2016

Internet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி?

கணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது,வேலை பளு குறைகிறது......).அதே போல் மற்றவர்கள் இதை பயன்படுத்தி நமது தகவல்கள் - ய் திருடிவிடுகின்றனர் குறிப்பாக நமது பாஸ்வேர்டு - ய். கீ லாக்கர் என்பது நாம் டைப் செய்திடும் கீகள் என்ன என்னவென்று அப்படியே காப்பி செய்து, File-ஆக உருவாக்கி தரும் Softwareஆகும்.
 எனவே இந்த Program இருக்கும் கம்ப்யூட்டரில் நாம் இன்டர்நெட் பரிவர்த்தனை செய்கயில் நம்முடைய பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் மிக எளிதாக கண்டுபிடிக்கலாம்.

நீங்கள் Browsing Centre-ல் உங்கள் Online Bank Account-ய்தயவு செய்து Open செய்ய வேண்டாம். உங்களுகே தெரியாமல் உங்கள் Password திருடப்பட்டுவிடும்.பாஸ்வேர்டு டைப் செய்யும் பொழுது இடை இடையேபாஸ்வேர்டில் இல்லாத எழுத்துகளை செர்த்து டைப்செய்து பின்பு Mouse மூலம் அந்த தேவையற்ற எழுத்துகளை நீக்கிவிடுங்கள். கீ லாக்கர் போன்றProgram-கள் நாம் டைப் செய்யும் எழுத்துகளை மட்டுமே நினைவில் கொள்ளும். 

எனவே நம் பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியாது.Online Bank Account & Credit Card போன்ற முக்கியவேலைகளை இணையத்தில் நீங்கள் செய்யும் பொழுது முக்கியமாக அந்த இனைய முகவரியை பார்க்கவும் Https என்று இருக்கவேண்டும் S என்பதுSecure(ssl)-ய் குறிக்கும். ( Https வாங்குவது மிகவும் கடினம் இதை வாங்க நிறைய வழிமுறைகள் உள்ளது.Bank போன்ற நிறுவனம் இந்த SSL Certificate-ய் வாங்கி வைத்து இருபார்கள் அவர்களின் வாடிகையளர்களின் நன்மைக்காக).

Phishing என்பது இந்த வகை திருட்டை குறிக்கும் அதாவது போலி இணையதளம். Original Website போன்று அதே மாதிரி போலி (Duplicate) இணையதளத்தினை வைத்து இருபார்கள். இந்த போலி (Duplicate)இணையத்தளத்தில் S கண்டிப்பாக இருகாது.

Https இல்லாத இனனையதளத்தில் நீங்கள் உங்கள் User name and Password குடுத்து விட்டிர்கள் என்றால் உங்கள் தகவல்கள் அந்த போலி Website Server-க்கு சென்று சேமித்துவிடும் பின்பு அவர்கள் உங்கள் Account-ல்உள்ள பணத்தினை Easyயாக எடுத்து விடுவார்கள்.

உங்கள் Bank இனனையதள முகவரி குடுத்து செல்லும் பொழுது அந்த இனனையதள முகவரியை நன்றாக கவனித்து பாருங்கள் அது உங்கள் Bank இனனையதளத்திர்கு செல்கிறதா அல்லது வேறு முகவரிக்கு Redirect ஆகி செல்கிறதா என்று பார்க்கவும் . 

Redirect என்பது மாற்றி விடுவது என்று அர்த்தம் ( அதாவது x -ல் இருந்து y-க்கு திருப்பி விடுவது )Online Bank Use செய்யும் பொழுது VIRTUAL KEYBOARD -ய் Enable செய்து அதன் மூலம் (Virtual Keyboard வழியாக) டைப் செய்வது மேலும் நமக்கு பாதுகாப்பனது மற்றும் சிறந்தது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 17 மே, 2016

ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்

ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்
எந்த துறை வளர்கிறதோ அந்த துறையில் அதற்கேற்றார் போல் மோசடி நபர்களும் நுழைவார்கள். இதற்கு இப்போதையை இணையமும் விதிவிலக்கல்ல. தற்போதைய சூழ்நிலையில் மிக அதிகம் பேர் ஏமாறும் துறையும் இது தான். இதில் நடக்கும் சில மோசடிகளையும், அதில் தப்பிக்கும் வழிகளையும் பார்ப்போம். 

1. நேரடியாக பணம் தருவதாக சொல்லும் செய்திகள்
இது கிட்டத்தட்ட அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து உங்களுக்கு சில கோடிகள் கிடைத்துள்ளது என்றும் அதை உங்களுக்கு அனுப்ப உங்கள் தகவல்கள் வேண்டும் என்றும் கேட்கப்படும். உதாரணம்: லாட்டரி மூலம் பணம் பணம் கிடைத்துள்ளதாக வரும் செய்தி, சாரிட்டிக்கு பணம் தேவை, பேஸ்புக்/மைக்ரோசாப்ட் கோடிக்கணக்கில் பணம் தருகிறது.

இம்மாதிரியான மின்னஞ்சல்கள் வந்தாலே நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் Delete பட்டனை அழுத்தி விட்டு உங்கள் வேலையை பார்க்க செல்வது. 

இதே தகவல்கள் SMS வழியாக கூட வரக்கூடும் அவற்றையும் நீங்கள் பொருட்படுத்தக் கூடாது. 

குறிப்பிட்ட சாரிட்டிக்கு உங்களுக்கு உதவ வேண்டும் என்று தோன்றினால், குறிப்பிட்ட சாரிட்டியின் தளத்துக்கே சென்று உதவலாம் அல்லது அதில் இருக்கும் தெரிந்த நபர்களை தொடர்பு கொள்ளலாம். 

நம்பிக்கை இல்லாத பட்சத்தில் எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நபர் ஒருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பாதீர்கள், சாரிட்டி பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால் அதற்கு மட்டும் அனுப்புங்கள். 

Paypal, eBay போன்றவற்றில் இருந்து வரும் மின்னஞ்சல்களை போன்று சில மின்னஞ்சல்கள் அனுப்பி உங்களை ஏமாற்றும் முயற்சியும் கூட நடக்கும். எனவே இதில் கொஞ்சம் கவனமாக இருத்தல் நலம். இம்மாதிரியான மின்னஞ்சல் வந்தால் இந்த தளங்களில் உள்ள உங்கள் கணக்கில் நுழைந்து பாருங்கள்,அங்கே உங்களுக்கு தகவல் இருந்தால் மட்டுமே அது உண்மை. இல்லை என்றால் மோசடி தான். 

ஜிமெயில் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த இரண்டு தளங்களில் இருந்து மின்னஞ்சல் வந்தால் ஒரு சாவி symbol இருக்கும். 

2. Online Stores/Websites செய்யும் மோசடிகள் 
இந்த மோசடிகள் கொஞ்சம் வித்தியாசமானவை. பெரும்பாலான தளங்கள் உங்களுக்கு Original பொருட்களைத் தான் கொடுக்கின்றன. எனவே அந்த விசயத்துக்கு நான் செல்ல விரும்பவில்லை. குறிப்பிட்ட தளத்தின் மீது சந்தேகம் இருப்பின் Twitter, Facebook, Google Plus போன்றவற்றில் இருக்கும் உங்கள் நண்பர்களிடம் நீங்கள் ஆலோசனை கேட்டுவிட்டு வாங்கலாம். 

உண்மையான மோசடி என்பது 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை 500 ரூபாய்க்கு தருவதாக செய்யப்படும் விளம்பரங்கள். நிறைய தளங்கள் இதில் செய்யும் வித்தை, நிறைய பேரை இதற்கு Book செய்ய வைத்து விட்டு யாரேனும் ஒருவர்க்கு மட்டும் குறிப்பிட்ட பொருள் கிடைக்கும் என்று சொல்வது,மற்றவர்கள் கட்டிய பணத்திற்கு எங்கள் தளத்தில் ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்பது. 

யாரோ ஒருவருக்கு பொருள் கிடைப்பதாக இருந்தாலும், கிடைக்காதவர்கள் எந்த பொருளை வாங்குகிறாரோ அது கண்டிப்பாக மற்ற தளங்களை விட விலை அதிகமாகவே இருக்கும். எனவே இது போன்ற தளங்களை பற்றிய மின்னஞ்சல் வரும் போது அவற்றை தவிர்ப்பது தான் நலம். 

இன்னும் சில தளங்கள் Free Trail, Half Price போன்று பல Offer – களை உங்களுக்கு வழங்குவார்கள். இதிலும் பெரும்பாலும் மோசடியே. உண்மையில் இவர்கள் Hidden Charges என்ற பெயரில் மிக அதிகமான பணத்தை தான் உருவுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களை கேட்க மாட்டார்கள். 

இதே போல திடீர் என இலவச போன் , கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், SMS வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது. 

3. சமூக வலைத்தளங்கள் மூலம் நடக்கும் மோசடிகள் 
நாம் தினமும் பயன்படுத்தும் பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் போன்றவற்றிலும் நம்மை ஏமாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. கூகுள் பிளசை விட மற்ற இரண்டும் இதில் கொஞ்சம் அதிகம் தாக்கப்படுகின்றன. 

பேஸ்புக்கை பொருத்தவரை பெரும்பாலானவை Chat மூலமே நடை பெறும். இது வைரஸ் அல்லது நேரடியான மனிதர் மூலம் நிகழும். முதலாவது உங்கள் நண்பர் ஒருவர் திடீர் என ஏதேனும் ஒரு File ஒன்றை உங்களுக்கு அனுப்புவது போல இருக்கும்,அதை கிளிக் செய்தால் டவுன்லோட் ஆகும் அந்த File உங்கள் கணினியில் நீங்கள் சேமிக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடி விடும். எனவே இது போன்று வரும் போது குறிப்பிட்ட நபரிடம் அது என்ன? பயன்படுத்தி உள்ளாரா, என்பது போன்றவற்றை கேட்டுக் கொள்ளவும், அதை விட முக்கியம் அவர் உங்களுக்கு தெரிந்தவராக இருத்தல் அவசியம். 

இரண்டாவது உங்கள் நண்பர் போல உங்களுடன் பழகும் முகம் தெரியாத நபர் கடவுச் சொல் மற்றும் சில தனிப்பட்ட தகவல்களை கேட்பது.மிகக் குறிப்பாக பணம், வங்கி கணக்கு, கிரெடிட் கார்டு தகவல்கள் கேட்கும் நபர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தேகப்பட வேண்டும். நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிரும் தகவல்கள் மூலம் ஒருவர் உங்கள் வரலாற்றையே அறிய முடியும். இது போன்று நடப்பின் அந்த நபரை நீங்கள் பிளாக் செய்வது தான் உங்களுக்கு நன்மை. 

பெண்கள் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நபர்களை கண்டிப்பாக தங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி விட வேண்டும். இந்த விசயத்தில் கடந்த கால மோசடிகள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். 

ட்விட்டர் தளத்தை பொறுத்தவரை பெரும்பாலான மோசடிகள் Message மூலமாகவே வரும். எனவே நம்பிக்கை இல்லாத மெசேஜ்களை நீக்கி விடுங்கள். அவற்றில் உள்ள லிங்க்களை கிளிக் செய்யாதீர்கள்.

அடுத்து இந்த இரண்டு தளங்களில் ஏதேனும் வீடியோ, அல்லது போட்டோ போன்றவற்றை பார்க்க குறிப்பிட்ட மென்பொருளை நிறுவ வேண்டும் என்று சொன்னால் அது உண்மையா என்று கவனிக்க வேண்டும். இவற்றில் பெரும்பான்மை மோசடி தான்.Flash Player இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றால் உங்கள் உலவியில் இருந்தே அதை Update செய்து கொள்ளலாம், அப்படி செய்தும் கேட்டால் அதை தவிர்த்து விடுங்கள். [இது பேஸ்புக், ட்விட்டர் மட்டுமல்ல மற்ற எல்லா தளங்களுக்கும், Youtube என்றால் அது Flash Player இல்லை என்றால் மட்டும் கேட்கும்]

இதே போல ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றுக்கு பாஸ்வேர்ட் மாற்றச் சொல்லும் தகவல்கள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வந்தால் அவற்றின் From Address எது என்று பாருங்கள். அது பொய்யான முகவரி என்றால் அல்லது சந்தேகம் இருப்பின் அந்த மின்னஞ்சலை டெலீட் செய்து விட்டு நேரடியாக பேஸ்புக், ட்விட்டர்க்கு சென்று பாஸ்வேர்டை மாற்றுங்கள். அது தான் பாதுகாப்பு. 

4. ஆன்லைன் ஜாப்ஸ்/ ஜாப் தளங்கள்
உலகிலேயே இணைய தளம் மூலம் அதிகம் பேர் ஏமாந்தது இதுவாகத் தான் இருக்கும். வீட்டில் இருந்தே ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்கலாம் என்று வரும் மின்னஞ்சல்களை கண்ணை மூடிக் கொண்டு டெலீட் செய்து விடுங்கள். 

இவை பெரும்பாலும் ஆரம்பத்தில் உங்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்வார்கள்,அதன் பின் அவர்கள் அனுப்பும் பொருளை வைத்து நீங்கள் ஒன்றும் சம்பாதிக்க முடியாது அல்லது குறிப்பிட்ட வேலை குறிப்பிட்ட வேலை மூலம் உங்களுக்கு வருமானம் வராது.

ஆன்லைன் ஜாப்க்கு நம்பிக்கையான தளம் என்றால் elance.
அடுத்ததாக பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருப்பதாக சொல்லும் மின்னஞ்சல்கள், தளங்கள் போன்றவற்றை நீங்கள் எப்போதும் சந்தேகக் கண்ணுடன் தான் பார்க்க வேண்டும். இம்மாதிரியான தளங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அளவு பணம் கட்ட சொல்லி கேட்டால் அவற்றை புறக்கணித்து விடுவதே நலம். 
இதே போல நம்பிக்கை இல்லாத கன்ஸல்டிங் கம்பெனிகளுக்கும் பணம் செலுத்துவதை தவிர்க்கவும்.

SMS, EMail பெறுவதன் மூலம் சம்பாதிக்கலாம் போன்றவை உங்கள் ஈமெயில் முகவரி, மொபைல் நம்பர்களை மற்றவர்களுக்கு விற்க வாய்ப்புள்ளது. எனவே அது போன்ற தளங்களையும் தவிர்க்கலாம்.

5. Credit Card மோசடிகள் 
இது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ நடக்கும். உங்கள் Credit தகவல்களில் கொஞ்சம் Update, Change என்று சொல்லு உங்கள் Card Number, CVV, Name போன்றவற்றை கேட்டு உங்களை ஏமாற்றுவார்கள். இது போன்றவற்றை நீங்கள் உடனடியாக புறக்கணிக்க வேண்டும். 

பொதுவாக இந்த தகவல்களை வங்கி ஊழியரே கேட்டால் கூட நீங்கள் தரக்கூடாது. Card தொலைந்து போனால் தவிர. 

இந்த தகவல்களை மாற்ற முடியாது, சிலவற்றை மாற்ற வேண்டும் என்றால் வங்கியின் தளத்துக்கே சென்று மாற்றுங்கள். மின்னஞ்சல் மூலம் அதை செய்யாதீர்கள். 

இவையே பொதுவாக நடக்கும் மோசடிகள். எல்லாவற்றையும் கவனித்தால் உங்களுக்கு ஒரு விசயம் புலப்படும் எல்லாமே பண மோசடிதான். எனவே நம்பிக்கை இல்லாத தளமோ, நபரோ, மின்னஞ்சலோ பணப் பரிமாற்றம் குறித்த செய்திகளை அனுப்பினால் அதனை நம்ப வேண்டாம். சொல்லப் போனால் பெரும்பாலான மோசடிகளுக்கு இது தான் தற்காப்பு வழி.

இது எவ்வாறெல்லாம் ஏமாற்றுகள் நடக்கிறது என்பதை சொல்லும் பொதுவான பதிவு மட்டுமே.
http://www.anbuthil.com/2016/01/blog-post_5.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

பென்ட்ரைவினை பாதுகாக்க நான்கு எளிய வழிகள்

இப்பொழுதெல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் அரிது. கணினி எப்படி எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதோ அது போல் பென் ட்ரைவினையும் தெரியும் ஏன் என்றால் இப்பொழுது வரும் சிஸ்டங்கள் எல்லாம் யூஎஸ்பி பென் ட்ரைவ் ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது.

 அது போலவே எல்சிடி, எல்இடி டிவிக்களும் டிவிடி ப்ளேயர்களும் பென் ட்ரைவினை ஆதரிக்கும் வகையில் வெளிவருகிறது. அதனால் எல்லோருக்கும் பென் ட்ரைவினை பாதுகாக்கும் வழிகள் தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. பென் ட்ரைவ் மட்டுமலாலம் யூஎஸ்பி பொருட்களை பாதுக்காக்க வழிகள் சில கீழே கொடுத்துளேன். 

Disabled Autorun ஆட்டோ ரன் நிறுத்தம்
பென் ட்ரைவினை கணினியில் செருகியவுடன் ஆட்டோ ரன் ஆகும். இதனால் இதில் உள்ள கோப்புகள் எந்த மென்பொருள் மூலம் திறக்க வேண்டும் என்று விண்டோஸ் காட்டும். இதன் மூலம் வைரஸ்களும் எளிதாக தொற்றும் பென் ட்ரைவினில். இதை முதலில் தடுக்க வேண்டும். இதற்கு AutoRun Disable செய்ய வேண்டும். 
                                
இதற்கு மைக்ரோசாப்டிலேயே தனியாக பேட்ச் மென்பொருள் கிடைக்கிறது. இதை நிறுவினால் உங்கள் கணினியில் சிடி, டிவிடி, பென் ட்ரைவ் எது போட்டாலும் தானாக ப்ளே செய்யாது. அதாவது Auto Play Run தானாக நடக்காது.


Scan Your Pen Drive - பென்ட்ரைவினை சோதித்தல்
ஒவ்வொரு முறை உங்கள் பென் ட்ரைவினை கணினியில் செருகும் பொழுது உங்கள் கணினியில் உள்ள ஆன்டிவைரஸால் கட்டாயம் சோதிக்க வேண்டும். இதன் மூலம் கணினியிலும் வைரஸ் வராமல் தடுக்க முடியும். அத்துடன் பென் ட்ரைவினில் வைரஸ் இருந்தாலும் தடுக்க முடியும்.
                                  
அதற்கு உங்கள் கணினியில் நல்ல ஆன்டிவைரஸ் கட்டாயம் நிறுவி இருக்க வேண்டும். ஆன்டிவைரஸ் நிறுவுவதோடு நின்று விடாமல் உங்கள் ஆன்டி வைரஸ் தினமும் அப்டேட் ஆகிறதா என்றும் சோதித்துக் கொள்ளுங்கள். பென் ட்ரைவினை செருகியவுடன் உங்கள் கணினியில் Go To > My Computer > சென்று அங்கு உங்களுடைய பென் ட்ரைவினை Right Click செய்து Scan செய்யவும்.

Safely Remove Your Pen Drive பென் ட்ரைவினை பாதுகாப்பாக நிறுத்துதல்

இது முக்கியமான ஒன்று நிறைய நண்பர்கள் எப்பொழுதும் இந்த தவறினை செய்கிறார்கள். அது என்னவென்றால் பென் ட்ரைவில் இருக்கும் கோப்புகளை நேரடியாக பென் ட்ரைவ் வழியாக திறப்பது. சரி திறப்பது கூட பரவாயில்லை அந்த கோப்பினை பென் ட்ரைவில் வைத்து கொண்டே வேலை செய்வது. இதனால் என்னாகிறது பென் ட்ரைவ் தொடர்ந்து வேலை செய்ய வேண்டி வரும். இதனால் சீக்கிரம் பென் ட்ரைவ் பழுதாகிறது. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் பென் ட்ரைவில் எந்த கோப்பினை எடிட் செய்ய விரும்புகிறீர்களோ அதை கணினியில் சேமித்து விட்டு பிறகு கணினியில் இருந்து எடிட் செய்யுங்கள். அதுவே மிகவும் சிறந்தது. 
                                                 
அடுத்து யூஎஸ்பியை நிறுத்தாமல் அப்படியே பென் ட்ரைவினை பிடுங்குவது. எல்லோருமே யூஎஸ்பி பொருட்களான பென்ட்ரைவ், டிவிடி ட்ரைவ் பாக்கெட் ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை விண்டோஸில் இணைந்திருக்கும் மென்பொருட்கள் வழியாக நிறுத்திய பிறகே எடுக்க வேண்டும்.
                                                
அப்படி இல்லாவிடில் சிறு மென்பொருட்கள் இருக்கிறது. யூஎஸ்பியை நிறுத்துவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நமக்கு தேவையான யூஎஸ்பி பென்ட்ரைவ் அல்லது வேறு எந்த யூஎஸ்பி வன் பொருட்களையும் இந்த மென்பொருட்கள் மூலம் நிறுத்திய பிறகு எடுக்கலாம்.


 General Tips - சில பொதுவான வழிமுறைகள்
அடுத்து நம் உபயோகிக்கும் பென்ட்ரைவினை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வதற்காக வைத்திருக்கிறோம் என்பதற்காக அதை எப்பொழுதும் கழுத்திலேயே மாட்டி வைத்திருப்பது அல்லது மிகவும் சூடான பகுதிகளில் வைப்பது போன்றவைகளை கட்டாயம் தவிருங்கள் அத்துடன் வீட்டினுள் கணினி ஸ்பீக்கர் அல்லது ஹோம் தியேட்டர்கள் மீது பென் ட்ரைவினை வைப்பதையும் தவிர்த்து விடுங்கள்.

 ஏன் என்றால் இதில் எல்லாமே காந்தசக்தி இருப்பதால் சுலபத்தில் உங்கள் டேட்டாக்கள் யூஎஸ்பி பென்ட்ரைவில் இருந்து காணாமல் போய் விடும். சில நேரங்களில் யூஎஸ்பி பென் ட்ரைவ் தண்ணீரில் விழுந்து விட்டால் உடனே எடுத்து துடைத்து விட்டு கணினியில் உபயோகப்படுத்தாதீர்கள். தண்ணீரில் விழுந்த பென் ட்ரைவினை 48 மணி நேரங்கள் கழித்தே உபயோகிக்கவும்.
                                       
அந்த இடைவெளியில் உங்கள் பென் ட்ரைவினை சமையல் செய்து வைத்த பாத்திரத்தில் மிதமான சூடு இருக்கும் பட்சத்தில் அதன் மேல் வைத்தால் ஓரளவு தண்ணீர் இழுக்கும் அது போல உங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் உங்கள் பென் ட்ரைவில் இருக்கும் நீர் சுலபமாக வெளியேற்றப்படும். ஏன் என்றால் அரிசி நீரினை அதிகளவு உறிஞ்சும் தன்மை உடையது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts