லேபிள்கள்

திங்கள், 7 மார்ச், 2016

மதியால் விதி மட்டுமல்ல நிதிப் பற்றாக்குறையையும் வெல்லலாம்!

காசு, பணம்தான் நம் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிப்போட்டு விடுகிறது? பாலச்சந்திரனுக்கு இப்போது 60 வயது. 25 வயதில் வேலைக்குச் சேர்ந்தார். அரசு வேலை; எனவே, சம்பாத்தியத்துக்குக் குறைவில்லை. ஆனால், சிக்கனம், சேமிப்பை அவர் பெரிய விஷயமாக நினைக்க வில்லை. சினிமா, சுற்றுலா என இஷ்டப்படி வாழ்ந்தார். மகனின் கல்லூரிப் படிப்புக்கு கடன் வாங்கி, கஷ்டப்பட்டு அடைப்பதற்குள் மகளின் கல்யாணமும் வந்தது. மீண்டும் கடன் வாங்கி, அதைக் கட்டி முடிப்பதற்குள் வேலையிலிருந்து ஓய்வும் பெற்றுவிட்டார். வேலையில் இருந்த காலத்தில் அவர் வாங்கிய கடன்களால் இன்னும் அவர் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்.

ஆனால், சிவராமன் ரிட்டையர்டான பின்னும் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார். பாலச்சந்திரனைப் போல, 25 வயதில் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்தான் சிவராமனும். ஆனால், காசு விஷயத்தில் கெட்டி.

கஞ்சனாக இல்லை என்றாலும், எந்தச் செலவையும் தேவை யென்றால் மட்டுமே செய்வார். நிகழ்காலத்திலேயே தனது எதிர்காலத்தைப் பற்றி யோசித்து, அதற்கான முதலீடுகளைச் செய்தார். குழந்தைகளின் படிப்பு, கல்யாணம், தனது ஓய்வுக்கால பென்ஷன் என ஒவ்வொரு விஷயத்துக்கும் தனக்குத் தெரிந்தவரையில் பணம் சேர்த்தார். இன்றைக்கு நிம்மதியாக இருக்கிறார்.

நம் வாழ்க்கையில் எது செய்தாலும் அதைத் திட்டமிட்டுச் செய்தால், அந்தக் காரியம் சிறப்பாக முடியும் என்பார்கள். அந்தவகையில் நாம் குடும்ப நிதித் திட்ட மிடுதலின் முக்கியத்துவங் களையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பற்றி தெரிந்துகொண்டால், பாலச்சந்திரன்மாதிரி இல்லாமல், சிவராமன்மாதிரி நாம் இருக்கலாம்.

நிதித் திட்டமிடுதல் என்றால் என்ன?

நிதித் திட்டமிடுதல் என்பது உங்களின் எதிர்காலத் தேவைகளை அறிந்து அதற்குண்டான பாதையை வகுத்து அதனை உறுதியாகவும், ஒழுக்கமாகவும் பின்பற்றி வெற்றி காண்பதே ஆகும். நிதித் திட்டமிடுதல், உங்கள் கட்டாயத் தேவைகளான குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் உங்களின் ஓய்வுக்கால வருமானம், வீடு அல்லது கார் போன்ற சொத்துகளை வாங்குவதற்கு சரியான முறையில் திட்டமிட்டு உங்கள் இலக்குகளை அடைய வழி வகுக்குகிறது. உங்கள் நிதி ஆலோசகர் உங்களுடன் கலந்துரையாடி உங்கள் எதிர்கால இலக்குகளுக்குத் தேவையான பண மதிப்பீட்டை நிர்ணயம் செய்து, அதற்குத் தேவையான பணத்தை உங்கள் வருமானத்திலிருந்து ஒதுக்கிவைத்து உங்கள் எதிர்கால இலக்குகளைப் பூர்த்திசெய்ய உதவுவார்.

நிதித் திட்டத்தை உருவாக்கியபின் உங்களுடைய நிதி ஆலோசகர் முதலீட்டு திட்டங்களையும் வழங்குவார். இந்த முதலீட்டு பரிந்துரைகள் ஒவ்வொருவரின் தேவைகளுக் கேற்ப மாறுபடும்.

நிதித் திட்டமிடுதலின் முதல்படி, உங்களின் தற்போதைய நிதி நிலைமையை அறிந்துகொள்வது மட்டுமல் லாமல் உங்கள் இலக்குகளையும் திட்டமிடுவதாகும். உங்கள் ஆரோக்கியமான நிதி நிலைமைக்கு கீழ்க்கண்ட மூன்று விஷயங்களைக் கவனிப்பது அவசியம்.

1. கடன்-வருமான விகிதம்.

2. சேமிப்பு- வருமான விகிதம்.

3. எதிர்பாராத மற்றும் அவசர செலவுகளுக்கான தொகை.

இவற்றைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

கடன்- வருமான விகிதம்!

ஃபார்முலா:

கடன் - வருமான விகிதம் = (மொத்த கடன் பொறுப்புகள் (மாதத் தவணை) / மாத வருமானம்)X100

பொதுவாக, உங்கள் மாதாந்திர கடன் தவணைத் தொகை, உங்கள் மொத்த வருமானத்தில் இருந்து 40-50% இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. எந்தக் காரணத்தைக்கொண்டும் கடனானது இந்த அளவைத் தாண்டக்கூடாது.

உதாரணமாக, உங்கள் வருமானம் ஒரு மாதத்துக்கு ரூ.80 ஆயிரம் எனில், உங்கள் மொத்த கடன் பொறுப்புகள் (EMI) ரூ.40 ஆயிரத்துக்கு மிகாமல் இருப்பது ஆரோக்கியமான நிதி நிலைமைக்கு வழிவகுக்கும்.கடன்கள் அதிக வட்டிக்கு வாங்கப்படுவதால், திரும்பச் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு, மேலும் வட்டி மற்றும் இதர கட்டணங்கள் கட்டவேண்டிய நிலமைக்குச் சென்றுவிடும்.

சேமிப்பு - வருமான விகிதம்!

ஃபார்முலா: சேமிப்பு - வருமான விகிதம் = (மாத சேமிப்பு / மாத வருமானம்)X100

பொதுவாக, மாத வருமானத்தில் 20%க்கும் அதிகமாகச் சேமிப்பது, சிறப்பான

எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஓர் எளிய வழிமுறையாகும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் சேமிப்பை அதிகரிக்க முடியும்.

உதாரணமாக, உங்கள் மாத வருமானம் ரூ.80,000-ஆக இருப்பின், குறைந்தபட்சமாக ரூ.16,000 சேமிப்பது மிகவும் அவசியம்.

மாத வருமானம் எவ்வளவாக இருந்தாலும் 20 சதவிகிதத் தொகையைச் சேமித்தால்தான் உங்கள்

எதிர்கால வாழ்க்கை வளமானதாக அமையும்.

எதிர்பாராத மற்றும் அவசர செலவுகள்!

பொதுவாக, அதிகமானவர் கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதால், அவர்களுக்கு அடிக்கடி வேலைமாற்றம் மற்றும் வேலை இழப்பு என்பது தவிர்க்க முடியாதது. இதனைச் சமாளிக்க ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 6 - 24 மாதங்களுக்கு உண்டான செலவுகளுக்கான தொகையை ஒதுக்கிவைப்பது மிகவும் நல்லது.

இதில் உங்கள் மாதக் கடன் தவணை, மாத செலவுகள் மற்றும் காப்பீட்டு பிரீமியம் போன்றவை அடங்கும்.

மேலே கூறிய மூன்று வழிமுறைகள், நீங்கள் ஓர் ஆரோக்கியமான நிதி நிலைமையை அடைய உதவும்.

நன்றி விகடன்
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=169&t=42183

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts