லேபிள்கள்

திங்கள், 21 மார்ச், 2016

பரவி வரும் அம்மை பாதுகாப்பு டிப்ஸ்!

பருவகால மாற்றத்தின் விளைவு... வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  வெயிலைத் தவிர்த்து, கோடையின் மற்றொரு பெரும் பிரச்னை 'வைரஸ்'. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைந்தாலே வயது வித்தியாசமின்றி, வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகின்றோம். இதன் காரணமாக, தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக 'அம்மை' நோய் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. அம்மை வராமல் தடுப்பதற்கும், வந்தபின் செய்ய வேண்டியவைகளையும் பட்டியலிடுகிறார், பண்ருட்டி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் சந்திரசேகரன்.

 நோய் எதிர்ப்பு சக்தி அவசியம்...
மனிதனின் உடம்பில் ஏதேனும் வைரஸ் தொற்று இருந்துகொண்டுதான் இருக்கும். வைரஸுக்கு ஏதுவான சூழல் அமையும்போது, அதன் தன்மைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸின் தாக்கம் அதிகரிக்கும். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, பல்வேறு மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. 5 கிராம் வேப்பங்கொழுந்துடன், 5 கிராம் விரலி மஞ்சள் சேர்த்து அரைத்து உருண்டைகளாக்கி, குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். வாரம் ஒருமுறை கொடுப்பது உகந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகப்படுத்தும்.

 'சுத்தம்' அம்மையை விரட்டும்...
சின்னம்மை, பெரியம்மை, உமியம்மை, தட்டம்மை, புட்டாலம்மை என அம்மையில் பலவகை உண்டு.இதில் சின்னம்மையைத் தவிர்த்து பெரும்பான்மையான அம்மைகளுக்கு மருந்துகள் வந்துவிட்டன. அம்மையால்  பாதிக்கப்பட்டவரை சுத்தமான இடத்தில் வைத்து, தனிமைப்படுத்த வேண்டும். வீட்டில் யாரேனும் ஒருவர் அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டும். கவனித்துக் கொள்பவரும் சுத்தமாக இருப்பது அவசியம். இந்நோய் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், வைரஸ் தொற்று வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புள்ளது.

 ஜுரத்தைக் குறைக்க...
ஜுரம், உடல்வலி, கண் எரிச்சல் என வரிசையாகப் பிரச்னைகள் தோன்றி, நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கும். உடலின் பல்வேறு பகுதிகளில் சிறு சிறு கொப்பளங்கள் உண்டாகும். என்னதான் மாத்திரைகள் பயன்படுத்தினாலும், சில மணி நேரத்துக்கு ஜுரம் கட்டுப்படுத்தப்படுமே தவிர, குணமாகாது. 

திரிதோடம், கஸ்தூரி, வசந்தகுசுமாகரம் போன்ற மாத்திரைகளைப் பயன்படுத்தி ஜுரத்தை உடனடியாகக் குறைக்கலாம். பிரம்மானந்த பைரவ மாத்திரையைப் பொடி செய்து சிறிதளவு தேன் சேர்த்து உட்கொண்டால் ஜுரம் குறையும்.

 வைரஸைக் கட்டுப்படுத்த...
துளசி மற்றும் ஆடுதொடா இலைச் சாறுகளை எடுத்து, அதில் தேன் கலந்து உட்கொண்டால் வைரஸின் வீரியம் குறையும். அதேபோல், கருங்குறுவை அரிசி, பார்லி மாவு கஞ்சி, இருமுறை வடித்த சோற்றுக் கஞ்சி இவற்றை உணவுகளாக உட்கொள்ளலாம். முத்துச்சிப்பி பற்பத்தில் தேன்விட்டுக் குழைத்து உட்கொண்டால் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.  வீட்டிலுள்ள பழந்தோலை (லெதர்)  சுட்டு சாம்பலாக்கி அதில் தேன் கலந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

 தொண்டை மற்றும் கண்களுக்கு...
அம்மை போட்டவுடன் சிலருக்குத் தொண்டையில் எரிச்சல்,  கண்களில் பூ விழவும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்க கற்பூரவல்லி இலை மற்றும் கோரோசனை மாத்திரையைக் கரைத்துச் சாப்பிட்டால் உடனடியாகத் தொண்டைப் பிரச்னை சரியாகிவிடும். பனங்குருத்துச் சாறை கண்களில் விட்டுக் கொண்டால், பூ விழுவது தவிர்க்கப்படும். நெரிஞ்சில் பூ, முருங்கைப் பூ, நந்தியாவட்டை, சீரகம் 5 கிராம் எடுத்துக்கொண்டு, அதன் சாறைக் கண்களில் விட்டால் பூ விழாது.

 செய்யக்கூடாதவை:  
கொப்புளங்களை உடைக்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. சொறிவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளைப் பயன்படுத்துதல் தவறு.

 செய்யவேண்டியவை:
குளிர்ச்சியான உணவுப் பொருட்களையே சாப்பிட வேண்டும். தரையில் வேப்பிலையைப் போட்டு, அதன் மீது மெல்லிய துணியை விரித்துப் படுக்க வேண்டும். தினமும் அறையை மஞ்சள் தெளித்து, சுத்தமாக வைக்க வேண்டும். துத்தி இலையுடன் கற்பூரம் சேர்த்து, விளக்கெண்ணெய் விட்டுக் குழைத்து, வேப்பிலை கொண்டு கொப்புளங்கள் மீது தடவ வேண்டும்.

கஷாயம் காய்ச்சும் முறை:
சிலருக்கு அம்மை நோய் குணமான பிறகும், சில வாரங்களிலே திரும்பத் தாக்கலாம். அப்போது இந்தக் கஷாயம் நல்ல பயன் தரும்.
ஜாதிக்காய், திப்பிலி, கிராம்பு, சீரகம் இவை தலா 5 கிராம் எடுத்து, 400 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி ஆகும் வரை கொதிக்கவைக்க வேண்டும். பிறகு இதில், எலுமிச்சைச் சாறு, பூண்டுச் சாறு சேர்த்துக் கொதிக்கவைத்து, தேன் கலந்து, காலை - மாலை இருவேளையும் குடித்து வந்தால் அம்மை பூரண குணமாகும்.
http://pettagum.blogspot.in/2014/04/blog-post_2314.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts