லேபிள்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2016

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடலாமே!

நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடலாமே!
தொடங்கும் நாள் சிறந்ததாக இருக்க வேண்டுமெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஏனெனில் காலையில் நல்ல ஆரோக்கியமான மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், உடலின் சக்தி சீராக இருந்து, உடல் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.
அதிலும் காலையில் உண்ணும் உணவுகளில் கலோரி குறைவாகவும், எனர்ஜி அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
இதனால், உணவுகள் சீக்கிரம் செரிமானமடையாமல், பொறுமையாகவும் ஆரோக்கியத்தை தரும் வகையிலும் செரிமானமாகும்.
அந்த வகையில் எந்த உணவுகளை காலையில் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.
தேன்
காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், குடலியக்கம் சீராக இயங்குவதோடு, உடலும் ஒல்லியாகும்.

மூலிகை டீ
டீயில் காபியை விட, குறைவான அளவில் காப்ஃபைன் இருப்பதோடு, அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. எனவே இது உடலை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

முட்டை
தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளும்.

பால்
பாலில் நிறைய புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால், காலையில் ஒரு டம்ளர் பால் அல்லது செரிலுடன் பால் சேர்த்து சாப்பிடுவது நல்லது.

கோதுமை பிரட்
நவதானியங்களால் ஆன பிரட்டை காலை உணவாக சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைவான கலோரி உள்ள கார்போஹைட்ரேட், சிறந்த காலை உணவாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்துடன் வயிறும் நிறையும்.

வாழைப்பழம்
காலை எழும் போது உடல் ஆற்றலின்றி சோர்ந்து இருக்கும். அப்போது உடலுக்கு சிறந்த ஆற்றலை வாழைப்பழங்கள் கொடுக்கும்.

ஆப்பிள்
ஆப்பிளில் போதுமான அளவில் இரும்புச்சத்து மற்றும் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் இயற்கையான சர்க்கரையானது நிறைந்துள்ளது. எனவே இத்தகைய ஆப்பிளை காலையில் ஒன்றோ அல்லது செரிலுடன் சேர்த்தோ சாப்பிட்டால், மிகவும் நல்லது.

பெர்ரிப் பழங்கள்
பெர்ரி சூப்பர் உணவுகளில் ஒன்றாகும். மேலும் இதில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோயை தடுப்பதோடு, உடல் முழுவதற்கும் ஆரோக்கியத்தை தருகிறது. எனவே காலை உணவாக பெர்ரிப்பழங்களைக் கொண்டு மில்க் ஷேக் போட்டு குடிக்கலாம்.

காபி
காப்ஃபைன் அதிகம் நிறைந்துள்ள காபி ஆரோக்கியமானது என்று சொல்ல முடியாது. ஆனால், அதனைக் குடித்தால் ஒற்றைத் தலைவலியானது குணமாகும். மேலும் காபியின் மணமானது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts