லேபிள்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2015

பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்...!

குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர்.

அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர்.

 மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால், அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர்.

 இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள்.

ஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம். ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம்.

இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம். அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.

கிராம்பு

இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உப்பு

பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பூண்டு

ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமைப்புல் சாறு

கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.

வெங்காயம்

பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

கொய்யாப்பழ இலை

வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து, வீக்கமும் வற்றிவிடும்.

கால்சியம் உணவுகள்

பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சி சாறு

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

சூடம்

சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.

மருத்துவர் ஆலோசனை

தேவையில்லாமல் மருத்துவரை அணுக வேண்டாம். மிகவும் மோசமான நிலையில், பல்லை நீக்கினால் மட்டுமே நல்லது என்ற முடிவு வரும் போது ஒரு நல்ல மருத்துவரை அணுகலாம். தேவையில்லாமல் பல்லை நீக்கினால் அது பல வித பிரச்சனைகளில் கொண்டு விட்டு விடும். பல்லை நீக்கியவுடன் எதுவும் தெரியாது. காலம் போகப் போக பல்வலியுடன் தலைவலியும் சேர்ந்து வந்துவிடும். அதனால் இவ்விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

Women Depression: பெண்களுக்கு மன அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?

பெண்கள் , ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இருப்பினும் , ஆண்களை விட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ...

Popular Posts