லேபிள்கள்

சனி, 7 நவம்பர், 2015

செலவு வைக்கும் “பல்” பிரச்சனை

ற்போது நம் உடல் சம்பந்தப்பட்ட சிறியளவு பிரச்சனைகளில் பெரியளவு செலவு வைக்கும் பிரச்சனையாக "பல் பிரச்சனை" உருவெடுத்து இருக்கிறது. தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனைகள் வெகு விரைவிலேயே துவங்கி விடுகிறது. இதற்கு காரணமாக இனிப்பு, பாக்கு, பற்களை சரியாக பராமரிக்காமை என்று அனைவருக்கும் தெரிந்த பட்டியல் இருக்கும்.
என்னுடைய சிறிய வயதில் எங்கள் வீட்டில் எனக்கு சாக்லேட் அதிகம் கொடுத்தது இல்லை. இதன் காரணமாகவோ என்னவோ எனக்கு சொத்தைப் பல் மற்றும் பல் சார்ந்த பிரச்சனைகள் இதுவரை வந்தது இல்லை.
ஏற்கனவே பல குழந்தைகள் அதிகம் சாக்லேட் சாப்பிட்டு பற்கள் படு மோசமாகி வலியால் அவதிப்பட்டதை கண்ணுற்றதால், என்னுடைய மகன் வினய்க்கு சாக்லேட் கொடுக்க எதிர்ப்பு தெரிவிப்பேன். அவன் என்னை தவறாக நினைத்துக்கொண்டாலும் சரி என்று அதிகம் சாக்லேட் சாப்பிட விட மாட்டேன். அப்படியும் மற்றவர்கள் கொடுப்பது, இவன் அம்மா கொடுப்பது என்று சாப்பிட்டு விடுவான். ஓரளவுக்கு தான் தடுக்க முடியும் அதற்கென்று ரொம்ப முறுக்கிட்டும் இருக்க முடியாது. நான் என் மனைவி கிட்டே சொல்லிட்டே இருப்பேன் அவனுக்கு கொடுக்காதே! என்று. எதிர்பார்த்தது போல சொத்தைப் பல் ஆகி விட்டது. செம டென்ஷன் ஆகி விட்டது.
பல் வலி நான் அனுபவித்தது இல்லை ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் கூறக் கேட்டு இருக்கிறேன். சாப்பிட, பேசக் கூட முடியாது என்று கூறக் கேட்கும் போதே எனக்கு வலிக்கும் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை . அந்த அளவிற்கு கொடுமையானது என்று கூறுவார்கள். இது போன்று வினய்க்கு ஆகி விடக் கூடாது என்பது என்னுடைய கவலை. கடந்த வாரம் இரவு பல் வலி என்று வினய் அழுது பின் சரியாகி விட்டது. சரியாக சாப்பிடுவதில்லை என்று என்னுடைய மனைவி இவனை கோயமுத்தூரில் உள்ள மருத்துவரிடம் அழைத்து சென்று இருந்தார். குழந்தைகள் சரியா சாப்பிடாம இருப்பது பெரிய விசயமில்லை, இருந்தாலும் ஒரு வார்த்தை என்னவென்று கேட்டுக்கலாம் என்று பெற்றோருக்கே உண்டான மன நிலையில் சென்று இருந்தார்.
அதற்கு மருத்துவர் ஆலோசனை கூறி விட்டு இவனுக்கு பல்லில் சொத்தை இருக்கிறது என்று சாக்லேட் கொடுக்காமல் ஒரு பென்சிலும் ரப்பரும் கொடுத்து இருக்கிறார்கள். இதன் பிறகு இவர் கூறியது தான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதாவது இரவில் குழந்தைகள் படுக்கப் போகும் முன் பால் அருந்துவதால், அதில் உள்ள சக்கரையால் சொத்தைப் பல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருந்தாராம். நம்மில் பெரும்பாலும் குழந்தைகளுக்கு இரவில் தூங்கும் போது அல்லது தூங்கிக் கொண்டு இருக்கும் போது தூக்கத்திலேயே பால் கொடுப்பது வழக்கம். எனவே இது முக்கியமாகப் பட்டது.
குழந்தைகள் சாப்பிட அடம்பிடித்தாலும் எப்படியாவது பால் குடிக்க வைத்து விடலாம். சரியாக சாப்பிடவில்லை என்றால், சரி! பாலையாவது குடித்தால் உடல் தெம்பாக இருக்கும் என்று எண்ணத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் இரவு படுக்கும் முன்பு பால் கொடுப்பார்கள். அதோடு பால் சத்துள்ளது என்ற இயல்பான எண்ணமும் ஒரு காரணம்.
இவர்கள் சென்று வந்த பிறகு இவர்களிடம் தொலைபேசியில் பேசினேன்..
டேய்! டாக்டர் என்னடா சொன்னாங்க
அப்பாபாபாபா! நானுனுஊசி போட்டாங்களா.. அழுகவே இல்லைஸ்ட்ராங் பாய். அதனால எனக்கு டாக்டர் பென்சில், எரேசர் கொடுத்தாங்க
சரி! உனக்கு சாக்லேட் ஏன் கொடுக்கலைனு சொல்லவே இல்ல..
அது.. எனக்கு சொத்தைப் பல் இருக்குனு தரல [தவறு அவனுக்கு புரிந்ததால் அசட்டு சிரிப்பு சிரிச்சான் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை ]
நான் டெய்லி நைட் பிரஷ் பண்ணிட்டு தான் இருக்கேன்.. டாக்டர் என்னை தூங்குறதுக்கு முன்னாடி டெய்லி பிரஷ் பண்ண சொன்னாங்க என்று நீட்டி முழக்கினான்.
எப்போதுமே நல்லதோ கேட்டதோ எது நடந்தாலும் அதோட தொடர்புடைய / அது போல செய்திகள் நாம் கேட்க நேரிடும். இது உங்களுக்கு நடக்கிறதா என்று தெரியலை, எனக்கு அடிக்கடி நடக்கும். இரவு என்னுடைய அக்காவுடன் தொலைபேசியில் பேசிய போது அவருடைய மகளுக்கும் இது போல பிரச்சனை என்று கூறினார். அந்த டாக்டரும், இரவில் பால் குடிப்பதால் சொத்தை வரும் என்று கூறியதாக கூறினார். அதோடு இரவில் பால் குடித்து பல் துலக்கினாலும் இந்தப் பிரச்சனை இருக்கும். எனவே, மாலை மட்டும் பால் கொடுங்கள் இரவில் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகக் கூறினார்.
எனக்கு இது குழப்பமாக இருந்தது. இரவில் பால் குடித்தால் சொத்தைப் பல் வரும் என்பது லாஜிக்காக இருந்தது ஆனால், பல் துலக்கிய பிறகும் எப்படி சாத்தியம் என்று கேட்டேன். அது பல் இடுக்குகளில் இருக்கும், போகாது என்று கூறியதாகக் கூறினார். எனக்கு இது சந்தேகமாகவே இருக்கிறது. இதைப் படிக்கும் உங்களில் யாராவது நிச்சயம் இது பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். எனவே பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு பால் பல் விழுந்து இயல்பான பற்கள் முளைக்கும் போது இந்த சொத்தைப் பல் பிரச்சனை சரியானால் பரவாயில்லை. முன்பே சிகிச்சை எடுக்காமல் வேரிலேயே பாதிக்கப்பட்டு இருந்தால் பால் பற்கள் விழுந்து புது பல் முளைக்கும் போதும் இந்தப் பிரச்சனை தொடரும். சரியாக கவனிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பல் வலி நமக்கு "தலைவலியாக" மாறி விடும் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை . பெற்றோர்கள் கவனமாக இருங்கள்.
இதைப் பற்றி நான் எழுதி இருக்க மாட்டேன் ஆனால், என்னுடைய தளத்தை பல குடும்ப இஸ்திரிகளும் இஸ்திரன்களும் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை படிப்பதால், அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமே என்று இங்கே எழுதுகிறேன். எல்லோருடைய குழந்தைகளும் ஒன்று தானே! அதோட குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்ப விருப்பம். இது வரை சாக்லேட் மற்றும் இனிப்பு சாப்பிடுவதால் மட்டுமே சொத்தைப் பல் வருகிறது என்று நினைத்து இருந்தேன். இது போல ஒரு கோணத்தில் யோசித்தது இல்லை. அதை விட முக்கியம் இது போல யார் கூறியும் இதுவரை நான் கேட்டதில்லை. என்னைப் போல தெரியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பகிர்கிறேன்.
பற்களுக்கு ஆகும் செலவை நினைத்தாலே கண்ணை கட்டுகிறது. தற்போது இருக்கும் விலை வாசி உயர்வில் ஏற்கனவே பலர் திண்டாடிட்டு இருக்காங்க.. அதில் இந்த செலவும் அடிக்கடி சேர்ந்து கொண்டு பலரை பாடாய் படுத்துகிறது. சிங்கப்பூரில் ஒரு பல்லை பிடுங்க ஆகும் செலவை கேட்டு எனக்கு தலை சுற்றி விட்டது. என்னுடைய பரிந்துரை, குழந்தைகளுக்கு அதிகம் சாக்லேட் கொடுத்து பழக்காதீங்க, இரவில் தூங்கப் போகும் முன் பல் துலக்குவதை அவர்களுக்கு ஒரு வழக்கமாக உணர வையுங்கள். இன்று அவர்களுக்கு அது சிரமப் படுத்துவது போல தெரிந்தாலும் அவர்கள் வளர்ந்து நிச்சயம் உங்களை வாழ்த்துவார்கள், பிரச்சனைகள் இல்லாத பற்களுக்காக.
பலரின் அனுபவங்களைக் கேட்கும் போது, பெரியவர்கள் பல் பிரச்சனைகளுக்காக தற்போது செலவு செய்வது ரொம்ப அதிகம் ஆனது போல தோன்றுகிறது. ஒரு முறை சென்று வந்தாலே 4000 சர்வசாதரணமாக வருவதாகக் கூறினார்கள். ஆலோசனைக் கட்டணமே [பெரியவர்களுக்கு] 5000 வாங்கினார் என்று என் அக்கா கூறிய போது மிரட்சியாக இருந்தது. இது போல தற்போது தான் முதல் முறையாகக் கேட்கிறேன். குழந்தைகளுக்கு ஒரு பல்லுக்கு 1000 என்றும், தள்ளுபடியால்!! 750 ருபாய் என்று கூறினார். என்னங்கய்யா நடக்குது?!
அதனால் மக்களே! பற்களை சரியாகப் பராமரியுங்கள் அதோட எதுவும் பிரச்சனை என்றால், உடனே மருத்துவரைப் பார்த்து சரி செய்து கொள்ளுங்கள். செலவாகும் என்று தள்ளிப்போட்டால் பின்னால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செலவை வைக்கும். இதனால் நானும் இப்ப உஷார் ஆகிட்டேன். மனுஷங்க இருவகை, பிரச்னையை கேள்விப்பட்டு தன்னை திருத்திக்கொள்பவர்கள். இரண்டாம் வகை பட்டால் மட்டுமே திருந்துபவர்கள். தம்மடிப்பவர்கள் எல்லாம் இரண்டாம் வகையில் வருவார்கள் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை நான் முதல் வகை நீங்கள் எந்த வகை?
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். உறுதியான பற்களைக் கொண்டவர்கள் கரும்பைக் கடித்து கொண்டாடவும் மற்றவர்கள் பொங்கல் சாப்பிட்டு & கரும்பு ஜுஸ் குடித்து கொண்டாடவும் சிறப்பு வாழ்த்துகள் grey செலவு வைக்கும் பல் பிரச்சனை .


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… கண்களுக்கு மிகப்பெரிய ஆபத்து.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..

உங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து வெளிவரும் நீல ஒளியானது ஆபத்தானதாக தோன்றாது , ஆனால் கண்களுக்கு தீங்கு விளைவிப்பத...

Popular Posts