லேபிள்கள்

செவ்வாய், 14 ஜூலை, 2015

ருத்ராட்சமும் அதன் தன்மைகளும்

ருத்ராட்சமும் அதன் தன்மைகளும்

ருத்ராட்சம் இதன் வேதியல் பெயர் எலீயோகார்பஸ்( Elaeocarpus)
எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் இருக்கு, ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது ,அதிலிருந்து குறிப்பிட்ட மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுத்துகிறோம் அவை,
எலீயோகார்பஸ் சொராட்டஸ் (Elaeocarpus serratus)
எலீயோகார்பஸ் ட்யூபர்குலேட்டஸ் (Elaeocarpus tuberculatus)
எலீயோகார்பஸ் கானிட்ரஸ்(Elaeocarpus ganitrus) ஆகியனவாகும்.
ருத்ராட்ச மரம்
இவை தென் கிழக்கு ஆசிய பகுதிகளான இந்தோனேசியா,ஜாவா,சுமத்ரா,போர்னியோ வடக்கே இந்திய இமயமலை சாரல், நேபாளம், வங்கதேசம் அஸ்ஸாம்,ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி ஆகிய பகுதிகளில் விளைகின்றன. இவை 100அடி உயரம் வரை வளர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடியது,
  25லிருந்து 36டிகிரி வரை தட்பவெப்பனிலையில் உள்ள பிரதேசங்களில் மட்டுமே வளரும் . இவை அவ்வளவு எளிதாக முளைக்காது ,இதனை பயிர் செய்தால் 1முதல் 2ஆண்டுகள் வரை முளைப்பே வெளியில் தெரியாது, இதன் இலை 
ருத்ராட்சப்பழம்
மினுமினுப்பான வெளிர் பச்சை நிறம், வெண்மை நிறப்பூக்கள், கருநீலப்பழம் ஆகிய அமைப்பை கொண்டிருக்கும்.
இவை ஏப்ரல்-மே மாதங்களில் பூ பூக்கும், ஜீன் மாதங்களில் காய்க்கும், ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
ருத்ராட்சம் மேற்சொன்னவாறு ஞானிகளும் யோகிகளும் அணிய கூடியது, சுத்த பத்தமாக இருப்பவர்கள் மட்டும் தான் அணியவேண்டும், என்று பரவலாக எண்ணபட்டதால் பலரும் அணியமலிருந்தனர் .ருத்ராட்சத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே
  ருத்ராட்சம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து  ருத்ராட்சம் குறித்து ஆய்வு செய்தனர்.இந்த ஆய்வில் ருத்ராட்சத்திற்கு மூன்று பண்புகள் தன்மைகள் உள்ளதாக கண்டறிந்தனர் அவை
*சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic)
*காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic)
*அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive)
  ஆகியன

ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய ருத்ராட்சத்தையோ அல்லது ஒரு தொகுதி முகங்கள் கொண்ட ருத்ராட்சர மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகிய மாற்றம் பெறுகின்றனர். மேலும்  ருத்ராட்ச மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் ஆய்வில் தெரிவித்தனர்.மேலும் ருத்ராட்ச மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றது என்றும் தெரிவித்தனர்.அன்று முதல் வெளிநாட்டவர் முதல் உள்ளூர்வாசிகள் வரை அணிய தொடங்கினர் . ருத்ராட்ச மணிகளுக்கு ஆழ்ந்த கோடுகள் உண்டு அதனையே முகங்கள் என்று சொல்வர், ஒரு கோடு இருந்தால் ஒரு முகம் என்றும் ,ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம் என்றும் கூறுவர் .இந்த மணிகளுக்கு இயற்கையாகவே துவாரங்கள் உண்டு, ருத்ராட்ச மணிகள் மூன்று நிறங்களில் உண்டு .செம்மை நிறம், கறுப்பு நிறம், வெளிர் மஞ்சள் நிறம்(பொன் நிறம்) ஆகும்.ருத்ராட்ச மணிகளை கொண்டு சித்த மருந்துகளும் தயாரிக்க படுகின்றன.
 ருத்ராட்சமணிகள் எத்தனை முகம் உள்ளதோ அதே போல் அந்த மணிகளுக்குள்ளும் அத்தனை அறைகள் இருக்கும், ஒவ்வொரு அறையிலும்  ஒரு கொட்டை இருக்கும், உதாரணமாக 5முகம் ருத்ராட்சம் என்றால் அந்த 5 முக ருத்ராட்ச மணிக்குள் 5 அறைகளும் 5 கொட்டைகளும் இருக்கும் . ருத்ராட்ச மணிகள் ஒரு முகம் முதல் 21 முகம் வரை கிடைக்கும்
இப்போது சொல்லுங்கள் மருத்துவ குணம் கொண்ட இந்த ருத்ராட்ச மணிகளை அணியலாமா வேண்டாமா என்று , ருத்ராட்சம் அணியுங்கள் .நம்மிடம் இருக்கும் எதிர் மறை எண்ணங்கள் மறையட்டும்.
கொசுரு: 17முகம் ருத்ராட்சம்-99ஆயிரமாம்
15முகம்–37ஆயிரம்
14முகம்–19ஆயிரம்
19முகம்–1லட்சத்து 99ஆயிரம்
ஸ்ஸுப்பா இப்பவே கண்ணகட்டுதே நீங்க கவலை படாதீங்க நம்ம 5முகம் 6முகம் 4முகம் இப்டி வாங்கி போட்டுக்கலாம் அதெல்லாம் விலை கம்மி தானாம் 10ரூ முதல் 100ரூ வரை தாம்.ஒருமுகம் கிடைப்பது ரொம்ப அரிதாம்
நன்றி விக்கிபீடியா,ருத்ராட்சம்
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts