நோன்பின் நோக்கம்: மாறாத, நிரந்தரத் தக்வா!
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
"நம்பிக்கையாளர்களே! உங்களுக்குமுன்னிருந்தவர்கள்மீதுகடமையாக்கப்பட்டிருந்ததுபோன்றுஉங்கள்மீதும்நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்)நீங்கள்(உள்ளச்சம் பெற்று)இறைபக்திஉடையவர்கள்ஆகலாம்" (அல்குர்ஆன் 2: 183).நோன்பைப் பற்றி ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறும்போது நோன்பு என்பது உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர் போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருக்கிறது என்று தொடங்குகிறான். உலகில் வாழும் மனிதர்களில் நாத்திகர்களாகிப் போனவர்களைத் தவிர்த்து, எல்லா மதங்களிலும் நோன்பு (விரதம்) ஏதேனும் ஒரு வடிவில் பின்பற்றப் படுவது இங்கு நோக்கத் தக்கதாகும். உலக மாந்தர் அனைவருக்கும் வாழும் வழியாக இஸ்லாம்தான் ஆதியில் இருந்திருக்கிறது என்பதும் "மனிதர்கள்தங்களுக்குள்பிரிந்துகொண்டுபலமதங்களைஉண்டாக்கிக்கொண்டனர்" என்ற (23:52-53) இறைவாக்கும் இதன் மூலம் உறுதியாகிறது.
நோன்பைப் பற்றிய உன்னதமான நோக்கத்தை நமக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்லும்போது,
….لَعَلَّكُمْ تَتَّقُونَ………
"…..நீங்கள்(உள்ளச்சம் பெற்று)இறைபயபக்திஉடையவர்கள்ஆகலாம்" (அல்குர்ஆன் 2:183) என்ற தெளிவை நம் முன் வைக்கிறான்.அதாவது மனிதர்கள் நோற்கும் நோன்பினால் இறைவனுக்கு ஏதும் தேவையோ, இலாபமோ பயனோ ஏற்படாது. இதை நாம் நோற்கத் தவறினால் இறைவனுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படாது. இதனை முறையாக நோற்றால், இதனால் மனிதன் இறையச்சம் உடையவன் ஆகலாம் (அதன் மூலம் அவனுக்கும், அவன் குடும்பத்தினர் அவனைச் சார்ந்துள்ள அவன் வாழுகின்ற சமூகத்திற்கும், சமுதாயத்திற்கும் நிச்சயமாக பலன்கள் உண்டு) என்று கூறுகின்றான். ஆகையால் இந்த நோன்பின் மகத்துவத்தையும் அது நமக்கு ஏற்படுத்த வல்ல பலன்கள் யாவை? என்பது பற்றியும் அதனால் சமூகம் பெறும் நன்மைகள் யாவை? என்பனவற்றையும் ஆய்வு செய்ய நாம் கடமைப் பட்டுள்ளோம்.
"பட்டினி என்றால் என்ன என்பதை அறியாமல் செழிப்பில் வாழும் முஸ்லிம் செல்வந்தர்கள், வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பதன் மூலம் பட்டினியை அறிந்து கொள்வதற்கும் அதன் மூலம் காலமெல்லாம் பட்டினியில் உழலும் வறியவர்க்கு உதவ வேண்டும் என்ற சிந்தனையைச் செல்வந்தர்களிடையே நோன்பு ஏற்படுத்துகிறது" என்றும்
"பதினொரு மாதங்கள் வேளை தவறாமல் நிரம்பிய வயிறுக்கு ஒரு மாத காலம் நோன்பிருந்து சற்றே ஓய்வு கொடுப்பதன் மூலம் உடல் ரீதியான ஆரோக்கியம் கிட்டுகிறது" என்றும்
"வருடத்தில் ஒரு மாதம் நோன்பிருப்பது ஆரோக்கிய வாழ்விற்கு நல்லதொரு பயிற்சி" என்றும்
உலக ரீதியான பல காரணங்கள் மக்களால், மருத்துவர்களால் சொல்லப் பட்டாலும் நோன்பின் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதே இங்கு நம் சிந்தையில் கொள்ளத் தக்கதாகும்
தக்வா தரும் பாடம்
தக்வா எனும் அரபுச் சொல், விகாயா என்ற வேரடி வினையிலிருந்து பிறந்ததாகும். அதற்கு, சொல் வழக்கில் "தற்காத்தல்" என்று பொருளாகும். இறைவன் மீதுள்ள அச்சம் மேலோங்கி, பாவச் செயல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருளில் தக்வா எனும் சொல், இறைமறை வழக்கில் "இறையச்சம் – பயபக்தி" என்று பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது மனிதனையும் இந்தப் பேரண்டத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவனாகிய "அல்லாஹ்" நம்மை எங்கிருந்தாலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான். எனவே, பாவச் செயல்களிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்கிறோம் என்னும் எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்.
நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ, எங்கு நிகழும்போதும் அது அவன் பார்வைக்கு மறைந்தது அல்ல. நாம் நிச்சயமாக நம் அனைத்து செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். நன்மைச் செயல்களுக்குப் பரிசும் தீமைகளுக்கு (மன்னிப்பு இல்லையெனில்) தண்டனையும் பெறுவோம் எனும் எண்ணத்தில் உறுதியாக வாழ்வது என்பது தக்வாவின் விரிந்த பொருளாகும்.
"அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்" என்ற எண்ணத்தில் அல்லாஹ்விற்குப் பயந்து, அவன் ஏவியவற்றை செய்தும், விலக்கித் தடை செய்தவற்றைத் தவிர்த்தும் வாழ்வதன் மூலம் "தக்வா"வைப் பெற்றுக் கொள்ளலாம்; அதிகரித்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு நோன்பாளி அவர் சிறுவனாக இருந்தாலும் வயதான முதியவராக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தனிமையில் இருக்கும்போது பசியிருந்தும், தாகம் இருந்தும், சுவையான ஹலாலான உணவு வகைகள் வீட்டில் இருந்தாலும்கூட அதை நெருங்க மாட்டார். தன்னை யாருமே பார்க்கவில்லையே என்று அதனைச் சாப்பிடவோ குடிக்கவோ எண்ணங்கூட கொள்ள மாட்டார்.
ஏனெனில், தனிமையில் இருந்தாலும் தம்மை இறைவன் (அல்லாஹ்) கண்காணிக்கின்றான் எனும் எண்ணம் ஒரு நோன்பாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஹலாலான உணவை உண்டாலும், "நாம் நோன்பை முறித்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தண்டனை பெறுவோம்" என்று இறைவனுக்கு அஞ்சி, தமது பசியை தமது தாகத்தைக் கட்டுபடுத்தி வைக்கிறார்.
ஹலாலானவற்றையே இறைவனின் கட்டளைக்கு அஞ்சிக் கட்டுப்பாட்டுடன் தவிர்த்துக் கொண்ட நோன்புப் பயிற்சியின் பலனாக, மனதில் இறையச்சம் மிகுந்து என்றும், எங்கும், எந்நிலையிலும் ஹராமானவற்றை அதாவது அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை விலக்கி வாழ்வதோடு, தவறான முறையில் ஏமாற்றித் திருடுதல், மோசடி செய்தல் போன்ற விலக்கப்பட்ட செயல்கள்கள் மூலம் சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு என்று எண்ணம் எற்பட்டு ஹராமானவற்றை விட்டு விலகி நேர்வழியில் வாழவும் நோன்புப் பயிற்சி வழி வகுக்கிறது.
இந்தச் சிந்தனை சிறுவர்களான பள்ளி மாணவ-மாணவியர் முதல் வீட்டில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கணவன், மனைவி, தந்தை, தாய், சகோதரன், சகோதரி, அண்டை வீட்டார், உற்றார், உறவினர், நண்பர்கள் என்று முழுச் சமுதாயத்திற்கும் சீராக நீதமாக சுமூகமாக உண்மையாளர்களாக வாழக்கூடிய ஒரு நல் வாய்ப்பை அளிக்கிறது. இவ்வாறான அனைத்து நற்பண்புகளுக்கும் இறையச்சம் எனும் தக்வாவே அடிப்படையாகத் திகழ்கிறது
மாறாத, நிரந்தரத் தக்வா!
நோன்பின் மூலம் பெறும் தக்வாவினால் சமுதாயத்தில் உள்ள எல்லாவகையான பிரச்சினைகளும் மறைய வாய்ப்புள்ளது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
தக்வா இல்லாத வாழ்க்கை அல்லது நோன்பு மாதத்தில் மட்டும் ஏற்பட்டு, நோன்பு முடிந்ததும் தீர்ந்து போகும் தக்வாதான் சமுதாயத்தில் உருவாகும் எல்லா/பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் என்றால் மிகையாகாது. உலகில் மனிதன் சந்திக்கும் சூழ்நிலைகளும் அதன் மூலம் அவன் எடுக்கும் முடிவுகளும் தக்வாவின் அடைப்படையில் எடுக்கப் படும்போது அவனுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை பயப்பதாகவும் தக்வா அற்ற அடிப்படையில் எடுக்கப் படும்போது தீமையாகவும் அமைந்து விடுகின்றது.
தக்வா என்ற இறையச்சம் இல்லாமல்/குறைந்து போவதே இவ்வுலகில் ஒவ்வொரு தனி மனிதன் முதல், பெரிய நாடுகள் வரை எடுக்கும் நடவடிக்கைகளும் மனித சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடுவதைக் காண்கிறோம். தனிமனிதக் கொலை, தற்கொலை முடிவுகள் முதல் "பிரச்சினைக்குத் தீர்வு" என்ற பெயரில் மனிதர்களைக் கொன்று குவிப்பது வரை இறையச்சம் என்ற தக்வா இல்லாததால், தட்டிக் கேட்கப் படமாட்டோம் என்ற அதீதத் துணிச்சலால் பெறப்படும் முடிவுகள்தாம் எனத் துணிந்து கூறலாம்.
இறையச்சம் நிரந்தரமாக உள்ள ஒருவர், எப்படிப் பட்ட இக்கட்டான, சோதனையான நிலையிலும் தற்கொலைக்கு முயல மாட்டார். ஏனெனில் தற்கொலை என்பது இறைவனால் மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அவர் உணர்ந்திருப்பார். தற்கொலை என்பது இவ்வுலகில் மனிதர்கள் சந்திக்கும் வறுமை, கடன், விரக்தி, ஏமாற்றம், தேர்விலோ வாழ்க்கையிலோ ஏற்படும் தோல்விகள், தாங்க முடியாத நோய்கள், இன்ன பிறவுக்கும் ஒரு தீர்க்கமான முடிவு என்று கருத மாட்டார்.
மரணத்தோடு மனித வாழ்க்கை முடிவு பெறுவதில்லை. மரணித்ததன் பின்னர் இறுதித் தீர்ப்புக் கொடுக்கப்பட்டு மறுமை எனும் நிரந்தர வாழ்க்கை துவங்குகின்றது. இம்மை எனும் இவ்வுலகில் எடுக்கப்படும் அவசர முடிவுகளால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு மாபெரும் இழப்பு ஏற்படும் என்றும் உணர்வார்.
சுருக்கமாக, இன்று மனித சமுதாயம் சந்தித்துவரும் வன்முறைகள், மோசடிகள், பொருளாதாரச் சுரண்டல்கள், காழ்ப்புணர்ச்சி, ஏற்றத்தாழ்வுகள், பற்பல ஊழல்கள், சொத்துத் தகராறுகள், மாமியார்-மருமகள், கணவன்-மனைவி, சகோதரர்கள் பிரச்சனைகள் உட்பட ஏனைய குடும்பப் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமைகள், தேர்வில் முறைகேடு செய்தல், (தேர்வுக்கு முன்பே) கேள்வித்தாள் விற்பனை, பொய்ச்சான்றிதழ்கள் விற்பனை, போதைப் பொருட்கள் வியாபாரம் தொடங்கி, தீய நோய்கள், பெண்களை இழிவு படுத்துதல், வல்லுறவு, விபச்சாரம் போன்ற சமுதாய சீர்கேடுகளும் ஒழிக்கப் படவேண்டும் என்றால் இறையச்சச் சிந்தனை மூலம் மட்டுமே முடியும்.
ரமளானில் நோன்பு நோற்பதன் மூலம் நாம் இந்த அரிய இறையச்சத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். அல்லாஹ் அருள் புரிந்து நாம் பெற்ற இறையச்சச் சிந்தனை இந்த ரமளான் மாத நோன்போடு முடிந்து விடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் வரும் நாட்களில் ஒவ்வொரு நொடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும்.
தக்வா என்ற இறையச்சத்தை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டவர், "தொழுகையை என் மீது கடமையாக்கிய இறைவன் என்னை இன்றும், என்றும் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்" என்ற நினைப்பை ஒருபோதும் மறந்து விடமாட்டார்.
கடந்த காலத்தில் பாவச் செயல்களில் மூழ்கி இருந்தவர், இறையருளால் ரமளானில் தக்வாவைப் பெற்றுக் கொண்டு விட்டால், "அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். கடந்த காலத்தில் ஈடுபட்ட பாவச் செயல்களை நான் மீண்டும் செய்தால் அவன் என்னை நிச்சயமாகத் தண்டிப்பான்" என்ற எண்ணம் மேலிட்டு, பாவச் செயல்களில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்து விடுவார். மேலும் முன்னர் செய்த பாவங்களில் இருந்து அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற முயற்சி மேற்கொள்வார்.
இவையெல்லாம் தக்வா என்பது நோன்புக்கு மட்டும் தற்காலிகமானதாக இல்லாமல் வாழ்நாள் முழுதும் நிரந்தரமாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்
தள்ள வேண்டியவையும் அள்ள வேண்டியவையும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ
"யார்பொய்யானபேச்சையும்பொய்யானநடவடிக்கைகளையும்விட்டுவிடவில்லையோஅவர்தமதுஉணவையும்குடிப்பையும்விட்டுவிடுவதில்அல்லாஹ்வுக்குஎந்தத்தேவையுமில்லை" (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி1903).சிலர் நோன்பு வைத்த நிலையிலும் தீமைகளைக் கைவிடாமல்,பொய் பேசுவது, கெட்ட வார்த்தைகள் பேசுவது, சினிமா வீடியோக்கள் சீரியல்கள், ஆபாச இணையம் என்று பலவிதமான மார்க்க முரணான கேளிக்கைகளில் ஈடுபடுவது ஆகிய செயல்களால் தமது நோன்பையும் நன்மைகளையும் தமது மறுமை வாழ்க்கையையும் பாழாக்குபவர்களாக வாழ்வதையும் பார்க்கிறோம். அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக என்று பிரார்த்திப்பதுடன் அவற்றால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு நல்ல முறையில் உணர்த்தி அவர்களையும் நேர்வழிப்படுத்த நாம் முயல வேண்டும்.
சிலர் இந்த மாதத்திலும் நோன்பு மட்டும் வைத்துக் கொண்டு தொழாமல் பாராமுகமாக இருப்பதும், இன்னும் சிலர் தூங்குவதில் அதிக நேரத்தைக் கழிப்பதும் உண்டு. இதைவிடவும் வேதனை, இன்னும் சிலர் அலட்சியமாக நோன்பும் வைக்காமல் தொழுகைக்கும் செல்லாமல் வெறுமனே ஈத் பெருநாள் அன்று மட்டும் பள்ளிக்கு வருபவர்களும் நம் சமுதாயத்தில் உண்டு என்பது கசப்பான உண்மையாகும்.
அல்லாஹ் அவர்களுக்கும் நேர்வழி காட்டுவானாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ وَهُوَ الْقَطَوَانِيُّ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مَعَهُمْ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَدْخُلُونَ مِنْهُ فَإِذَا دَخَلَ آخِرُهُمْ أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ சொர்க்கத்தில்'ரய்யான்' என்றுகூறப்படும்ஒருவாசல்இருக்கிறது. மறுமைநாளில்அதன்வழியாகநோன்பாளிகள்நுழைவார்கள்.
அவர்களைத்தவிரவேறுஎவரும்அதன்வழியாகநுழையமாட்டார்கள். நோன்பாளிகள்எங்கே? என்றுகேட்கப்படும். உடனேஅவர்கள்எழுவார்கள். அவர்களைத்தவிரவேறுஎவரும்அதன்வழியாகநுழையமாட்டார்கள். அவர்கள்நுழைந்ததும்அவ்வாசல்அடைக்கப்பட்டுவிடும். அதன்வழியாகவேறுஎவரும்நுழையமாட்டார்கள். (அறிவிப்பாளர்: சஹ்ல்(ரலி) நூல்: புகாரி – 1896).
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصِّيَامُ جُنَّةٌ فَلَا يَرْفُثْ وَلَا يَجْهَلْ وَإِنْ امْرُؤٌ قَاتَلَهُ أَوْ شَاتَمَهُ فَلْيَقُلْ إِنِّي صَائِمٌ مَرَّتَيْنِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رِيحِ الْمِسْكِ يَتْرُكُ طَعَامَهُ وَشَرَابَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي الصِّيَامُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا நோன்பு(பாவங்களிலிருந்து காக்கின்ற)கேடயம்ஆகும்.
எனவேநோன்பாளிகெட்டபெச்சுகளைப்பேசவேண்டாம்;
அறிவீனமானசெயல்களில்ஈடுபடவேண்டாம்.
யாரேனும்ஒருநோன்பாளியைத்தீயசொல்லால்திட்டினாலோவீண்வம்புக்குவந்தாலோ"நான்நோன்பாளி" என்றுஅவர்இருமுறைகூறிவிடவும்.
என்உயிரைக்கைவசம்வைத்திருப்பவன்மீதாணை!
நோன்பாளியின்வாயிலிருந்துவீசும்மணம்,
அல்லாஹ்வின்கணிப்பில்கஸ்தூரியின்நறுமணத்தைவிடச்சிறந்ததாகும். அல்லாஹ்கூறினான்:
எனக்காகநோன்பாளிதம்(ஹலாலான)உணவையும்குடிப்பையும்உடலிச்சையையும்துறந்துவிடுகிறார். (அவரது)நோன்புஎனக்குமட்டுமேஉரியது.அதற்குநானேகூலிவழங்குவேன். (நோன்பின்போது செய்யப்படும்)
ஒருநன்மைஎன்பதுபத்துமடங்குகள்பெருகக்கூடியதாகும். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1894) .
பாவங்களிலிருந்து காக்க வேண்டிய நோன்பு பயனின்றிக் கழிவதால் யாருக்கு இழப்பு என்பதை நாம் சிந்திக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் நோன்பை கேடயத்துக்கு உவமையாக்கிக் குறிப்பிட்டுள்ளார்கள். கேடயம் உறுதியாக இருந்தால் அதைத் தாங்கிய ஒருவர் தன்னைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள இயலுவதைப்போல், நோன்பு எனும் இக்கேடயம் உறுதியாக இருந்து இறையச்சத்தை வழங்கினால் இந்த வாழ்க்கையில் சந்திக்கும் பல விதமான தீய காரியங்களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று இதன் மூலம் உணரலாம்.
மேலும் படைவீரர்கள் எவ்வாறு அன்றாடம் பயிற்சிகளும் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுக் கொண்டே எப்போது ஏற்படும் என்று அறியாத, அல்லது சில நேரங்களில் ஒரு போரும் நடைபெறாமல் ஓய்வு பெறும் நிலையிலும், போருக்குத் தயார் நிலையில் இருக்கப் பயிற்சி தொடர்ந்து எடுக்கின்றனரோ அதே போல் நாமும் இந்த ரமளான் மாத நோன்பு மற்றும் திங்கள், வியாழன், மாதம் மூன்று நோன்புகள் போன்ற ஸுன்னத்தான நோன்புகள் மற்றும் உபரியான, நபிலான நோன்புகள், மேலும் இறையச்சத்தை எற்படுத்தும் செயல்கள் மூலம் நமது ஈமானையும் இறையச்சத்தையும் உறுதியாக்கி, சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் வழிகேடுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முயல்வோமாக
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக