கர்ப்பிணிகள் அறவே தொடக்கூடாத ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்!!!
கர்ப்பமாக இருக்கும் போது தான் நிறைய உணவுப் பொருட்களின் மீது நாட்டம் எழும். குறிப்பாக கடைகளில் விற்கப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளின் மீது ஏற்படும் ஆசைக்கு அளவே இருக்காது. நிறைய கர்ப்பிணிகளுக்கு நூடுல்ஸ் மீது ஆசை ஏற்படும். ஆனால் அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும், வயிற்றில் வளரும் சிசுவிற்கு மிகவும் ஆரோக்கியமற்றது. அதுமட்டுமின்றி, இந்த உணவுகள் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும்.
எனவே கர்ப்பிணிகள் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தொடாமல் இருப்பதே நல்லது. அதிலும் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட நினைக்காமல் இருப்பது நல்லது. இதனால் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதோடு, பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஏனெனில் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புக்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால், இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
இப்போது பிரசவத்திற்கு முன்பு, கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாத ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளிலேயே மிகவும் மோசமான சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அந்த உணவுகளை தெரியாமல் கூட சுவைத்துவிடாதீர்கள்.
டஃப்நட்ஸ் (Doughnuts)
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிடித்த உணவுப் பொருள் தான் டஃப்நட்ஸ். ஆனால் இது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளாக இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில், இதற்கு பதிலாக ஜெல்லி பன் கூட சாப்பிடலாம்.
நூடுல்ஸ்
நூடுல்ஸில் கலோரிகள் அதிகம் உள்ளதால், இதனை சாப்பிட்டால், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான எடையை பெற நேரிடும். மேலும் இதனை அதிகம் சாப்பிட்டால், மீண்டும் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடியாது.
பாஸ்தா
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் நூடுல்ஸ் போன்றே பாஸ்தாவும் ஒன்றாதலால், இந்த உணவுப் பொருளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பிரெஞ்சு ப்ரைஸ்
எண்ணெயில் பொரித்த எந்த ஒரு உணவுப்பொருளையும் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. குறிப்பாக பிரெஞ்சு ப்ரைஸை தொடவேக் சுடாது.
பர்கர்
ஃபாஸ்ட் ஃபுட் உணவிலேயே மிகவும் மோசமான ஒரு உணவுப் பொருள் என்றால் அது பர்கர் தான். தற்போது நிறைய பேர் உடல் பருமனால் அவஸ்தைப்படுவதற்கு முக்கிய காரணமே, இந்த பர்கர் தான். ஆகவே கர்ப்ப காலத்தில் இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது.
உருளைக்கிழங்கு விட்ஜஸ்
இந்த உணவுப் பொருளில் 280 கலோரிகள் நிறைந்திருப்பதால், இதனை கர்ப்பிணிகள் உட்கொண்டால், கர்ப்பமாக இருக்கும் போது அளவுக்கு அதிகமான எடையை பெற நேரிடும். அதுமட்டுமின்றி, இந்த உணவுப் பொருள் குறை பிரசவத்திற்கும் வழிவகுக்கும்.
பார்பெக்யூ ரோல்ஸ்
பார்பெக்யூ ரோல்ஸை பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும். ஆனால் இந்த உணவு வளரும் குழந்தைக்கு நல்லதல்ல. அதிலும் இது குழந்தையின் எடையை அதிகரித்துவிடும்.
பிட்சா
பிட்சாவின் மேலே தூவப்படும் பொருட்கள், வயிற்றில் வளரும் சிசுவிற்கு மிகவும் மோசமானவை. ஆகவே இதனை கர்ப்ப காலத்தில் அறவே தவிர்க்க வேண்டும்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக