லேபிள்கள்

புதன், 18 மார்ச், 2015

கர்ப்பக் காலத்தில் செய்ய வேண்டியவை…

கர்ப்பக் காலத்தில் செய்ய வேண்டியவை
ஒரு பெண் கர்ப்பமானதும் செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து மூத்த மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர் பாமா நடராஜனிடம் கேட்டோம்
"திருமணம் ஆன உடனேயே ஒரு பெண்ணுக்கு குழந்தைப்பேறு பற்றிய புரிதலை உருவாக்கிவிடுவது அவசியம். கருத்தரித்தலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கும் உடல்நிலைக்கும்  அந்தப் பெண்ணைத் தயார்ப்படுத்த வேண்டும்.
கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பின், முதல் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். கரு, கருப்பையில்தான் உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உள்ளதா என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆறு முதல் ஏழாவது வாரத்தில் குழந்தையின் இதயத்துடிப்பு தொடங்கும். அது நல்ல நிலையில் உள்ளதா என்பதைப் பரிசோதித்து தெரிந்துகொள்வது அடுத்த நிலை. இதன்பிறகுதான் அடிப்படை ஆய்வு என்று சொல்லக் கூடிய பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். இதில், அவர்களுடைய ரத்த வகை, ஆர்.ஹெச். பேக்டர், ஹெச்.ஐ.வி., ஹெபடைட்டிஸ் பி, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத் தட்டுக்களின் தரம், சிறுநீரில் ஏதேனும் தொற்று உள்ளதாஇப்படிச் சகல விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
எங்களின் முதல் ஆலோசனைசாப்பாடுதான். ஏனெனில், குழந்தையின் உருவம், மூளை எல்லாம் உருவாவது முதல் மூன்று மாதத்தில் எடுத்துக்கொள்ளும் உணவில்தான் உள்ளது. அந்த நிலையில் தாய்க்கு நல்ல சத்தான உணவு முக்கியம். காய், கீரை, பருப்பு, முளைகட்டிய பயறு, பழம், பால், மோர் ஆகிய ஏழு பொருட்கள் தினமும் அத்தியாவசியமாக உணவில் இருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் நாட்டுக்கோழி, மீன் அதிகம் சாப்பிட வேண்டும்.
அதேபோல், நல்ல ஓய்வும் அவசியம். நேரத்துக்கு படுக்கச் செல்ல வேண்டும். இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை தூங்குவது நல்ல ஓய்வைத் தரும். படுக்கும்போது இடது பக்கமாகத் திரும்பிய நிலையில் படுக்க வேண்டும். இப்படிப் படுத்தால், இதயத்தில் இருந்து வரும் நல்ல ரத்தம், கர்ப்பப்பைக்கு அதிகமாகச் செல்லும். உடலில் அநாவசியமாக கால், கை, வயிறு வீக்கம் இல்லாமல் இருக்கும்.
அடுத்து, 20-வது வாரத்தில் மீண்டும் ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். குழந்தையின் மொத்த உருவம், தலை முதல் கால் வரைக்கும் எல்லாப் பகுதிகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்து உள்ளதா, அதன் செயல்பாடு சரியாக உள்ளதா என்பதை அறிய இது உதவும்.
குறித்த காலத்திற்கு ஒருமுறை டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் எல்லாம் சிறப்பாக அமையும் பட்சத்தில், பிரசவம் இயல்பானதாக அமைந்துவிடும். பிரசவத்திற்கு 10-15 நாட்களுக்கு முன்பு டாக்டரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் அப்போதுதான் எங்கே, எப்படி, எப்போது டெலிவரி என்பதை டாக்டர் முடிவு செய்து தாயையும்,சேயையும் காப்பாற்றமுடியும்.  மருத்துவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும்!" என்றார் பாமா நடராஜன்.
நன்றி:டாக்டர் விகடன்
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts