லேபிள்கள்

வியாழன், 5 பிப்ரவரி, 2015

வேர்ட் பாரா பார்மட்டிங்:

 வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் ஒரு பாரா முழுவதும் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்கிறீர்களா? முழு பாராவின் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ விரும்புகிறீர்களா? பாரா இன்டென்ட் எதனையேனும் மாற்ற விரும்புகிறீர்களா? இடது, வலது, நடு என பாரா இணையாக அமைவதை மாற்றி அமைக்க எண்ணமா? இதற்கெல்லாம் முழு பாராவினையும் நீங்கள் செலக்ட் செய்திட வேண்டியதில்லை. பாராவில் ஒரு சிறு பகுதியை செலக்ட் செய்து, தேவையான மாற்றத்திற்கான கட்டளையைத் தரவும். அது அப்படியே பாரா முழுவதும் மேற்கொள்ளப்படும்.

எழுத்தின் அளவை அரைப் புள்ளி குறைக்க: வேர்டில் பயன்படுத்தப்படும் எழுத்து ஒன்றின் அளவைக் குறைக்க பாண்ட் பெயர் கட்டத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பாண்ட் சைஸ் கட்டத்தில் அளவு எண்ணைக் கொடுக்கலாம். எண் பெரிய அளவில் இருந்தால் எழுத்தின் அளவும் பெரிதாகும். இதனை ஒவ்வொன்றாக உயர்த்தலாம். அதே போல அவற்றைச் சிறியதாகவும் மாற்றலாம். ஆனால் ஓரளவிற்கு மேல் மிகவும் சிறியதாக மாற்றினால் அது திரையில் தெரியாது.
எழுத்தின் அளவைப் பாதியாகவும் வேர்டில் குறைக்கலாம். எடுத்துக்காட்டாக, Arial எழுத்து வகையில் சில சொற்களை பாய்ண்ட் 30ல் வைக்கிறீர்கள். அந்த எழுத்து அளவு கொஞ்சம் குறைந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். ஆனால் 29 உங்கள் தலைப்பின் இடத்திற்குச் சிறியதாக இருக்கிறது. இந்நிலையில் அதனை 29.5 ஆகவும் அமைக்கலாம். அப்படியானால் இதனை கால் அளவு, அதாவது எட்டேகால் என, 8.25, என அமைக்கலாமா என்று ஒருவர் கேட்கலாம். அது முடியாது. கொடுத்துப் பார்த்தால் உங்களுக்கே இது தெரிய வரும்.

சில கீ பயன்பாடுகள்: வேர்ட் டாகுமெண்ட்டில் உடனடியாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும். ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும்.

வேர்டில் எப்2 கீ: டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட் செய்கிறீர்கள். எப்படிப் பார்த்தாலும் இது பல நிலைகளில் மேற்கொள்கிற சமாச்சாரமாக இருக்கிறது. இதற்கு ஓர் எளிய வழியை எப்2 கீ தருகிறது. இங்கும் முதலில் நகர்த்த வேண்டிய டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து கொள்ளுங்கள். இங்கும் மவுஸ் வேண்டாம் என்றால் ஷிப்ட் கீயுடன் ஆரோ கீயைச் சேர்த்து இயக்கி டெக்ஸ்ட்டை செலக்ட் செய்திடலாம். செலக்ட் ஆனவுடன் எப்2 கீயை அழுத்துங்கள். அதன் பின் ஆரோ கீ அல்லது பேஜ் அப் அல்லது டவுண் அழுத்தி தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை எங்கு அமைக்க வேண்டுமோ அங்கு செல்லுங்கள். (இப்படிச் செல்லும்போது டெக்ஸ்ட் நகர்த்தும் வேலை வேண்டாம் என்று நினைத்தால் எஸ்கேப் கீயை அழுத்துங்கள்; எல்லாம் ரத்தாகிவிடும்.) இனி எந்த இடத்தில் டெக்ஸ்ட் அமைக்க வேண்டுமோ அந்த இடம் வந்தவுடன் ஜஸ்ட் என்டர் கீயைத் தட்டுங்கள். டெக்ஸ்ட் அந்த இடத்தில் வந்தமர்ந்துவிடும். இது கட் அண்ட் பேஸ்ட் வழிக்கு இன்னொரு செயல்வழியாகும். காப்பி அல்ல


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts