Permanent Account Number என்பதின் சுருக்கமே பான் கார்டு. தற்போது வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், மியூச்சுவல் பண்டுகள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் பான் கார்டு அடிப்படைத் தேவை ஆகிவிட்டது. நிரந்தரக் கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
இந்திய குடிமகன்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு 100 ரூபாய்க்குள்தான செலவாகும். புரோக்கர் மூலமாகப் பெறுவதற்கு ரூ. 250 செலவாகலாம். 'பான் கார்டின்' அவசியம்:
1. ரூ. 5 லட்சம் அதற்கு மேல் அசையா சொத்துகள் வாங்கும்போது அல்லது விற்கும்போது பான் கார்டு அவசியம்.
2. மோட்டார் வாகனத்தின் கொள்முதல் அல்லது விற்பனையின்போது (இரு சக்கர வாகனம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட ஊர்தி நீங்கலாக).
3. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் 'பிக்சட் டெபாசிட்' செய்யும்போது அவசியம்.
4. அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் வைக்கப்படும் 'பிக்சட் டெபாசிட்' ரூ. 50 ஆயிரத்தைத் தாண்டும்போது அவசியம்.
5. ஒப்பந்த மதிப்பு ரூ. 1 லட்சத்துக்கு மிகும் போது தேவைப்படும்.
6. வங்கிக் கணக்கு துவங்கும்போது.
7. தொலைபேசி, செல்போன் இணைப்புப் பெற விண்ணப்பிக்கும்போது.
8. தங்கும் விடுதி மற்றும் உணவு விடுதிக்குச் செலுத்தும் கட்டணம் ரூ. 25 ஆயிரத்துக்கு அதிகமாகும்போது அவசியம்.
9. ஒரு நாளில் வங்கியில் பெறப்படும் DD / Pay Order அல்லது வங்கி காசோலையின் மொத்த தொகை ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமாகச் செலுத்தும்போது அவசியம்.
10. வருமான வரிக்கணக்குத் தாக்கல் செய்ய அவசியம்.
11. சேவை வரி மற்றும் வணிக வரித்துறையில் பதிவுச் சான்று பெற Pan Card கட்டாயமாகும்.
12. முன்பு, மியூச்சுவல் பண்டில் ரூ. 50 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யும்போதுதான் பான் கார்டு அவசியமிருந்தது.
ஆனால், தற்போது மியூச்சுவல் பண்டில் எவ்வளவு குறைந்த பணத்தை முதலீடு செய்தாலும் பான் கார்டு எண்ணைக் குறிப்பிட வேண்டும். மேலும், மைனர் பெயரில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்போது, பான் கார்டு எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக, தற்போது மைனர்களுக்கும் பான் கார்டு வழங்கப்படுகிறது
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக