பொதுவாக பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது சம்பந்தமாக முஸ்லிம்களின் நடவடிக்கையை எடுத்து நோக்கினால்; ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி அந்நிய மதத்தவர்களைப் போன்று செல்வதைப் பார்க்கலாம். இன்னும் ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதே பாவம், ஹராம் என்று நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாத்தை எடுத்து நோக்கினால், அது பெண் சமூகத்திட்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத, பொருத்தமான, ஒழுக்கமான ஒரு தீர்வை சொல்லித்தருகின்றது.
பெண்கள் வெளியேறுவது சம்பந்தமாக இஸ்லாம் சொல்லும் போது நபிகளாரின் மனைவியரைப் பார்த்து சுருக்கமான சொன்ன செய்தி;வீணாக மடமைக் கால பெண்கள் சுற்றித் திரிந்தது போன்று வெளியில் திரிய வேண்டாம் என்பதே! அல்லாஹ் கூறுகின்றான்وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُول
(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; ….. (33:33)
எனவே இஸ்லாம் கற்றுத் தந்திருக்கும் ஒழுக்கங்களைப் பேணி வெளியேற முடியும் என்பது இந்த வசனத்தின் மூலம் புலப்படும் செய்தியாகும். அதற்கான அனுமதியை நபிகளாரின் வழிமுறையில் அதிகமாக காணமுடியும்.عَنْ عَائِشَةَ، قال النبي (صل) لسودة (رضي): «قَدْ أَذِنَ اللَّهُ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَوَائِجِكُنَّ»
நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரைப் பார்த்து; ……'(என் துணைவியரே!) நீங்கள் உங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல அல்லாஹ் அனுமதியளித்துவிட்டான்" என்று கூறினார்கள். (புஹாரி:5237)
எனவே இஸ்லாம் வெளியேற அனுமதித்த சந்தர்ப்பங்களையும், ஒழுக்கங்களையும் வரம்புகளையும் நோக்குவோம்.!
பெண்கள் வெளியேறுவதற்கான பொது விதிகள்:-
ஆண் துணை; திருமணம் முடிப்பதற்கு தடுக்கப்பட்ட (மஹ்ரம்) ஒரு ஆண் அல்லது கணவன் போன்றோரின் துணை.عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُسَافِرِ المَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ، وَلاَ يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي تُرِيدُ الحَجَّ، فَقَالَ: «اخْرُجْ مَعَهَا»
இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே அன்றி ஆண்கள் அவளிடம் செல்லக் கூடாது.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர். (புஹாரி: 1862,,,, முஸ்லிம்)عن أبي سَعِيدٍ الخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ: عنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " لاَ تُسَافِرِ المَرْأَةُ مَسِيرَةَ يَوْمَيْنِ إِلَّا وَمَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; "ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருஙகிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! (புகாரி:1995, முஸ்லிம்)
சில ஹதீஸ்களில் மூன்று நாட்கள் நிபந்தனை இடப்பட்டுள்ளது. பொதுவாக பயணம் என்றும் வந்திருப்பதால் அதனையே நிபந்தனையாக ஏற்கவேண்டியுள்ளது.
வாசனைத் திரவியங்களை பாவிக்காமல் வெளியேறல்عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كُلُّ عَيْنٍ زَانِيَةٌ، وَالمَرْأَةُ إِذَا اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِالمَجْلِسِ فَهِيَ كَذَا وَكَذَا يَعْنِي زَانِيَةً.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்யக்கூடியதே! ஒரு பெண் மனம் பூசியவலாக, ஒரு கூட்டத்தை கடந்து செல்வாளாக இருந்தால் அவள் அப்படிப்பட்டவள். (விபச்சாரி) (அஹ்மத், திர்மிதி:2786)عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்மணி வாசனை பூசிவிட்டால், அவள் எங்களோடுஇஷாத் தொழுகையில் கலந்து கொள்ளவேண்டாம். (முஸ்லிம்:1026)عَنْ زَيْنَبَ، امْرَأَةِ عَبْدِ اللهِ، قَالَتْ: قَالَ لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِ
இப்னு மஸ்ஊத் அவர்களின் மனைவியான ஸைனப் (றழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ; உங்களில் ஒரு பெண்மணி பள்ளிக்கு வருவதாக இருந்தால் வாசனையை பாவிக்க வேண்டாம். என்று எங்களுக்கு கூறினார்கள். (முஸ்லிம்: 1025)
அந்நிய ஆண்கள் கலப்படும் நிலை இருந்தால், அரைகுறை ஆடையோடு வெளியேறாதிருத்தல்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நரக வாசிகளான இரண்டு கூட்டத்தவர்கள் இருக்கின்றனர், அவர்களை நான் பார்த்ததில்லை; ஒரு கூட்டத்தார், அவர்களிடம் மாட்டின் வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும், அவற்றின் மூலம் மனிதர்களை அடிப்பார்கள். மேலும் சில பெண்கள், ஆடை அணிந்தும் நிர்வாணிகளாக இருப்பார், (ஆடவர்களை) சாயவைப்பவர்களாகவும், (அவர்கள் பால்) சாய்பவர்களாகவும் இருப்பார், அவர்களது தலைகள் (அலங்காரத்தினால்) ஒட்டகத்தின் சாய்ந்த திமில்ச்சதையைப் போன்று இருக்கும், அந்தப் பெண்கள் சுவனம் நுழையவும் மாட்டார்கள், அதன் வாடையையும் நுகர மாட்டார்கள், அதன் வாடையோ! இவ்வளவு தூரத்திட்கு வீசும். (முஸ்லிம்:5704)عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَيْقَظَ لَيْلَةً، فَقَالَ: «سُبْحَانَ اللَّهِ مَاذَا أُنْزِلَ اللَّيْلَةَ مِنَ الفِتْنَةِ، مَاذَا أُنْزِلَ مِنَ الخَزَائِنِ، مَنْ يُوقِظُ صَوَاحِبَ الحُجُرَاتِ؟ رُبَّ كَاسِيَةٍ فِي الدُّنْيَا عَارِيَةٍ فِي الآخِرَةِ»
உம்மு ஸலமா(றழி) அவர்கள் கூறினார்கள்: நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு விழித்ததும், 'ஸுப்ஹானல்லாஹ்! இந்த இரவில்தான் எத்தனை சோதனைகள் இறக்கப்பட்டுள்ளன? எத்தனை பொக்கிஷங்கள் திறக்கப்பட்டுள்ளன. அறைகளில் உள்ள பெண்களை எழுப்பி விடுவோர் யார்? இவ்வுலகில் ஆடை அணிந்திருந்த எத்தனையோ பேர் மறுமையில் நிர்வாணிகளாக இருப்பார்கள்' என்று குறிப்பிட்டார்கள். (புஹாரி: 1126)عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «المَرْأَةُ عَوْرَةٌ، فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்கள் என்போர் மறக்கப்படவேண்டிய (அவரத்) ஆவர், எனவே அவர்கள் (தன்னை அலங்கரித்து) வெளியேறினால். ஷைத்தான் அவளை (ஆண்கள் பார்க்கும் படி) வெளிப்படுத்தி காட்டுவான். (அஹ்மத், திர்மிதி:1173)அலங்கரித்த நிலையில் என்று கூறுவதற்கான காரணம், நபியவர்கள் "அவ்ரத்" என்றார்கள், மறைக்கும் போது அதன் சட்டம் மாறும் என்பதும், நபியவர்கள் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் வெளியேற அனுமதுயளித்துள்ளார்கள் என்பதுமாகும்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியேற இஸ்லாம் அனுமதி அளித்த சந்தர்ப்பங்கள்.
அறிவைத் தேடுவதற்கு வெளியேறுதல்
عَنْ أَبِي سَعِيدٍ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ، فَقَالَ: «اجْتَمِعْنَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي مَكَانِ كَذَا وَكَذَا»، فَاجْتَمَعْنَ
அபூ ஸயீத் அல்குத்ரீ(றழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்' என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள்…… (புஹாரி:101,7310,,முஸ்லிம்)தொழுகைக்காக செல்லுதல்; பெண்களைப் பொருத்தவரை வீட்டில் தொழுவது சிறந்ததாக இருந்தாலும், விரும்பினால் பள்ளிக்கு செல்ல அனுமதி இருக்கின்றது.
عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَأْذَنَتِ امْرَأَةُ أَحَدِكُمْ إِلَى المَسْجِدِ فَلاَ يَمْنَعْهَا»
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள். (புஹாரி:5238,, முஸ்லிம்)عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: كَانَتِ امْرَأَةٌ لِعُمَرَ تَشْهَدُ صَلاَةَ الصُّبْحِ وَالعِشَاءِ فِي الجَمَاعَةِ فِي المَسْجِدِ، فَقِيلَ لَهَا: لِمَ تَخْرُجِينَ وَقَدْ تَعْلَمِينَ أَنَّ عُمَرَ يَكْرَهُ ذَلِكَ وَيَغَارُ؟ قَالَتْ: وَمَا يَمْنَعُهُ أَنْ يَنْهَانِي؟ قَالَ: يَمْنَعُهُ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ»
இப்னு உமர்(றழி) அவர்கள் கூறினார்கள்: உமர்(றழி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் 'உங்கள் கணவர்) உமர்(றழி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்' என்று கேட்கப் பட்டது. அதற்கு 'அவர் என்னைத் தடுக்காதது ஏன்?. "பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளனர்' என்பதே,"என்று பதிலுரைத்தார். (புஹாரி: 900)أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ، قَالَتْ: «كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ»
ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: 'நபி(ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் ஆடைகளால் (தங்களின் உடல் முழுவதையும்) சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் யார் யார் என்பதை வெளிச்சமின்மையால் யாரும் அறியமாட்டார்கள்" (புஹாரி: 372, 578,, முஸ்லிம்)சமூகப் பணிகளுக்காக, குறிப்பாக யுத்த களங்களுக்காக, பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தல் போன்றவற்றிட்காக.
عَنِ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، قَالَتْ: «كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْقِي وَنُدَاوِي الجَرْحَى، وَنَرُدُّ القَتْلَى إِلَى المَدِينَةِ»
ருபய்யிஃ பின்து முஅவ்வித்(றழி) அவர்கள் கூறினார்கள்: பெண்களாகிய) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (புனிதப் போரில்) இருந்தோம். (புனிதப் போரில்) காயமுற்றவர்களுக்கு நீர் புகட்டியும் மருந்திட்டும் வந்தோம். கொல்லப்பட்டவர்களை (போர்க் களத்திலிருந்து) மதீனாவிற்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம். (புஹாரி:2882, முஸ்லிம்)عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ، انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ، وَأُمَّ سُلَيْمٍ وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ، أَرَى خَدَمَ سُوقِهِمَا تَنْقُزَانِ القِرَبَ، وَقَالَ غَيْرُهُ: تَنْقُلاَنِ القِرَبَ عَلَى مُتُونِهِمَا، ثُمَّ تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ القَوْمِ، ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلَآَنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهَا فِي أَفْوَاهِ القَوْمِ "
அனஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: உஹுதுப் போரின்போது மக்கள் நபி(ஸல்) அவர்களைவிட்டுவிட்டுத் தோல்வியுற்று (பின்வாங்கிச்) சென்றபோது நான் ஆயிஷா பின்த்து அபீ பக்ர்(றழி) அவர்களையும் உம்மு சுலைம்(றழி) அவர்களையும் கண்டேன். அப்போது அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து கொண்டு வேக வேகமாக நடந்து (சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் காலியானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக் கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதுமாக இருந்தார்கள். நான் அவர்களின் கால்களில் அணிந்திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். (புஹாரி: 2880)பணத்தின் போது கணவனுக்கு துணையாக செல்லுதல்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ أَزْوَاجِهِ، فَأَيُّهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُ، قَالَتْ عَائِشَةُ: فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزْوَةٍ غَزَاهَا فَخَرَجَ فِيهَا سَهْمِي، ……
ஆயிஷா(றழி) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்….. (புஹாரி: 4141.. முஸ்லிம்)عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، وَكَانَ يَقْسِمُ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ يَوْمَهَا وَلَيْلَتَهَا، غَيْرَ أَنَّ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ وَهَبَتْ يَوْمَهَا وَلَيْلَتَهَا لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَبْتَغِي بِذَلِكَ رِضَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
ஆயிஷா(றழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய நாடினால் தம் மனைவிமார்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். எவரது பெயர் (குலுக்கலில்) வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்படுவார்கள். தம் மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் பகலையும் இரவையும் பங்கு வைத்து வந்தார்கள். ஆனால், சவ்தா பின்து ஸம்ஆ (றழி) அவர்கள் மட்டும் தம் பங்குக்குரிய நாளை, நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (றழி) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விட்டிருந்தார்கள். அதன் வாயிலாக, அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை அடைவதற்காகவே அவர்கள் அவ்வாறு செய்தார்கள். (புஹாரி: 2593)ஹஜ், உம்ரா போன்ற வணக்கங்களுக்காக செல்லுதல்.
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تُسَافِرِ المَرْأَةُ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ، وَلاَ يَدْخُلُ عَلَيْهَا رَجُلٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ»، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ أَنْ أَخْرُجَ فِي جَيْشِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي تُرِيدُ الحَجَّ، فَقَالَ: «اخْرُجْ مَعَهَا»
இப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணை பெண்னுடன் இருக்கும்போதே அன்றி ஆண்கள் அவளைச் சந்திக்கக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர். (புஹாரி:1862, முஸ்லிம்)பெருநாள் தொழுகைக்காக திடலை நோக்கி கட்டாயம் செல்லுதல். எந்தளவுக்கெனில் முழு உடலை மறைக்கும் சொந்த ஆடை இல்லாவிட்டால் இரவலுக்கு வாங்கி அணிந்து செல்லல்.
عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ: أُمِرْنَا أَنْ نُخْرِجَ الحُيَّضَ يَوْمَ العِيدَيْنِ، وَذَوَاتِ الخُدُورِ فَيَشْهَدْنَ جَمَاعَةَ المُسْلِمِينَ، وَدَعْوَتَهُمْ وَيَعْتَزِلُ الحُيَّضُ عَنْ مُصَلَّاهُنَّ، قَالَتِ امْرَأَةٌ: يَا رَسُولَ اللَّهِ إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ؟ قَالَ: «لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا»
உம்மு அதிய்ய (றழி) அவர்கள் கூறினார்கள்: இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம். நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்" (புஹாரி:351, முஸ்லிம்)உழைப்புக்காக வெளியேறுதல்
பெண்களைப் பொருத்தவரை அவர்களை நிர்வகிப்பது ஆண்களின் கடமை என்ற அடிப்படையில், உழைத்துக் கொடுக்க யாரும் இல்லை என்று வரும் பொது ஒரு பெண் உழைப்புக்காக செல்வதை நபிகளார் அங்கீகரித்து, அனுமதி வழங்கினார்கள். எந்த அளவுக்கெனில் இத்தாவில் இருக்கும் பெண்ணுக்கே அனுமதுயளித்தார்கள்.
جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ: طُلِّقَتْ خَالَتِي، فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا، فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ، فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «بَلَى فَجُدِّي نَخْلَكِ، فَإِنَّكِ عَسَى أَنْ تَصَدَّقِي، أَوْ تَفْعَلِي مَعْرُوفًا»
ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள்: எனது தாயின் சகோதரி தலாக் சொல்லப்பட்டபோது, அவர் ஈத்தம் பலம் பறிப்பதற்கு முற்பட்டபோது, ஒரு மனிதர் அவர் வெளியேறுவதை தடுத்தார், அப்போது அவர்கள் நபிகளாரிடம் செல்லவே, நபியவர்கள்; அப்படியல்ல, நீர் (தோட்டத்திற்கு சென்று) உனது ஈத்தம் பலத்தை பறிப்பீராக ! ஏனெனில் நீங்கள் (அதன் மூலம்) சதகா செய்யலாம், அல்லது நல்லவற்றில் ஈடுபடலாம். என்று கூறினார்கள். (முஸ்லிம்: 3794)இப்படி இஸ்லாமிய வரம்புக்குள் இருந்துகொண்டு ஒரு பெண்ணுக்கு வீட்டை விட்டு வெளியேறலாம். இஸ்லாமிய வரம்பை மீரிச் செயல்படுவது பல வழிகளில் அல்லாஹ்விடம் குற்றவாளியாக்கலாம்.
இஸ்லாம் அனுமதித்த ஒரு விடயத்திற்காக பயணிக்கும் ஒரு பெண், ஆண் துனையின்றியோ, அந்நிய ஆண்களோடு கலக்கும், தனித்திருக்கும் நிலையோ ஏற்படுமானால், அல்லது தன்னை அலங்கரித்த நிலையிலோ, அல்லது அரைகுறை ஆடைகளுடனோ பயணிக்கும் நிலை ஏற்படுமானால் இவை அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.
இறை சட்டங்களை பேணி நடக்கும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக!
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக