லேபிள்கள்

செவ்வாய், 17 ஜூன், 2014

கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய


 கணினியில் ஏற்படும் பல தவறுகளை கண்டறிந்த பின், அதற்கு தீர்வைத் தேடுவது சுலபமான விரைவான முறை ஆகும். இவை எல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்தவைதான் என்பவர்கள் தவிர, மற்றவர்கள் படிக்கலாம். சில தினங்களுக்கு முன்னர் கணினி செயல்முறைப் பரீட்சை ஒன்றில் தரப்பட்ட கேள்விகளில் இருந்து தொகுத்து தரப்படுகிறது.
                                                        
1.event Viwer இல் உள்ள log இல் என்ன error எனக் காட்டப்பட்டுள்ளது என்பதைக் கண்டு திருத்திக் கொள்வது.

Start -Controlpanel – Administrative Tools -Event Viewer (அல்லது View event logs)

அல்லது start – run இல் eventvwr.msc என்பதைக் கொடுக்கவும்.

2.Start -Control Panel -மேலே உள்ள address bar இல் controlpanel ற்குப் அருகே உள்ள அடையாளத்தைக் சொடுக்கி(அல்லது view by பக்கத்தில் உள்ள அடையாளத்தை சொடுக்கி small icons என்பதை தெரிவு செய்யலாம்) வரும் பட்டியலில் Troubleshooting என்பதை தெரிவு செய்யலாம்.

3.முதலில் மால்வெயர் ஸ்கன் செய்து கொள்ளவும். அதற்கு start – run இல் mrt என்பதைக் கொடுக்கவும்.

4.Control Panel -All Control Panel Items-Performance Information and Tools -Advanced Tools இங்கே சென்றால் என்ன தவறு என்பதைக் காட்டும்.Fix error சரி செய்யலாம்.

5.CPU,Disk,RAM,Network போன்றவை எப்படி வேலை செய்கிறது எவ்வளவு பயன்படுத்துகிறது என்பதைக் காண start – run -perfmon.exe /res என்பதைக் கொடுக்கவும்.

6.இங்கே சென்று தற்காலிக சேமிப்புக்களை அழிக்கலாம்..start – run – %temp%

7.OS இன்ஸ்டால் செய்யும் போதே startup disk,repair disk தயாரித்து வைத்திருந்தால் பல தவறுகளை சுலபமாக சரி செய்து விடலாம்.

8.start -run – chkdsk …….disk இல் தவறுகளைக் கண்டறிந்து திருத்துகிறது.

9.start -run – perfmon.msc (perfmon) கொடுத்து அல்லது அங்கே உள்ள open Resource manager சென்று free space,Ram,வேலை செய்து கொண்டிருக்கும் ப்ரொகிராம்களை கண்டறியலாம்.தேவையற்றவற்றை நீக்கலாம்.

இங்கே Reliablity Monitor ஐயும் (expand) Reliability and Performance- Monitoring Tools, -Reliability Monitor. அல்லது start -run- perfmon /rel இங்கே அனைத்து பிழைகளையும் திகதியிட்டுக் காட்டும்.அத்துடன் அதற்குரிய தீர்வையும் காட்டும்.

10.சிஸ்டம் தவறுகளை திருத்திக் கொள்ள- start -run – sfc. /scannow கொடுத்து சரி செய்யலாம்.

11.start – run இல் msconfig கொடுத்து தேவையற்ற startup program களை நீக்கலாம்.இங்கிருந்து safemode ஐயும் தொடங்கலாம்.

12.start – run – cleanmgr கொடுத்து தேவையற்ற files,empty folder,dup.folder போன்றவற்றை அழித்து கணினியை விரைவு படுத்தலாம்.

13.கணினியில் தவறு ஏற்படும் போது அனேகமான சந்தர்ப்பங்களில் error code சேர்ந்து வரும்.அதைக் குறித்துக் கொண்டால் பிழைகளை கண்டறிந்து சுலபமாக சரி செய்து கொள்ளலாம்.

ப்ரௌசரில் 400,403,404,500 இப்படியும்; விண்டொஸ் (உ+ம்.601-உங்களுக்குத் தெரியாமலேயே ஒரு செய்ல் கணினியில் நடந்து கொண்டிருப்பதால் கணினியை மூட முடியாமல்,வேறு ஒன்றை திறக்க முடியாமல்,இணையத்தை தொடக்க முடியாமல்); போன்ற error code தெரிந்து கொண்டால் சரி செய்வது சுலபம்.

14.start – run – devmgmt.msc கொடுத்தால் device manager வரும்.அங்கே view இல் சென்றால் ghosted devices (hidden devices ) காட்டும்.அதில் பல நமக்குத் தேவையில்லாதவை.(எது தேவை எது தேவையில்லாதவை என்று தெரியாமல் களத்தில் இறங்கினால் ஆபத்து.)

15.தேவையற்ற மென்பொருட்களை தரவிறக்காதீர்கள்.அவை கணினி வேகத்தைக் குறைப்பதுடன், மால்வெயர் களும் வந்து விடலாம்.வேகத்தை அதிகரிக்க மென்பொருட்களை நாடாமல்,அவை இல்லாமலேயே, நாமாகவே வேகத்தை அதிகரிக்க முயல வேண்டும்.சிறிய மாற்றங்களை system ,registry இல் செய்வதன் மூலம் வேகத்தை சிறிது,சில bytes,அதிகரிக்கலாம்.

16. மேலே சொன்னவை தவிர,System checkup என்ற மென்பொருள் மூலம் கணினி,நெட்வேர்க் பிழைகளைக் கண்டறிந்து சரி செய்து கொள்ளலாம்.(பணம் கொடுத்து வாங்கும் மென்பொருள் மட்டுமே தானாக சரி செய்யும் வசதி கொண்டது.) இலவச மென்பொருளில் error details முழுவதும் காட்டப்படும்.அவற்றை நாமே சரி செய்து கொள்ளலாம்.


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

பழங்கள் சாப்பிட நேரம் காலம் உள்ளதா?

ஊட்டச் சத்துக்களின் சுரங்கமாகக் காய்கறிகள் , பழங்கள் உள்ளன. உடலுக்கு ஆற்றல் அளிப்பதுடன் , தேவையான ஊட்டச் சத்துக்களும் கொண்டிருப்பதால் ...

Popular Posts