பழகத் தெரிந்தாலே பலே வெற்றி
பழக்க வழக்கங்கள்தான் உறவு வட்டத்தை வலப்படுத்தும். தொடர்புகளை பலப்படுத்த, நம் மீதான நல்ல அபிப்பிராயங்களே கைகொடுக்கும். தனிப்பட்ட முறையில், பிறர் அலுவலகங்களில், விசேஷ வைபவங்களில், பொது இடங்களில் பழகும் முறைகளைப் பண்படுத்தும் போது நம்மீதான நேசம் வளர்கிறது. அதற்கான ஆக்கபூர்வமான டிப்ஸ், இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது. இதுவும் ஒருவகை புதையல் வேட்டைதான்… பலே வெற்றிக்கான பளீர் டிப்ஸ்கள் கீழே உங்களுக்காக..
பழகத் தெரிந்தாலே பலே வெற்றி உங்களுக்குத்தான்.. டிப்ஸ் – 1
நடைப்பழக்கம் மேற்கொள்கிறீர்கள். நன்கு தெரிந்தவர் எதிரே வருகிறார். உற்சாக மிகுதியால் ஓரங்கட்டி அரட்டையை ஆரம்பித்து விடாதீர்கள். தொடர்நடை கலோரிகளை எரிப்பதற்காக. சைகையில் வணக்கம் சொல்லி, புன்சிரித்து நகர்ந்து விடுங்கள். அது, உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். அவருடைய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பழகத் தெரிந்தாலே பலே வெற்றி உங்களுக்குத்தான்.. டிப்ஸ் – 2
உங்கள் வசம் உங்கள் அறிமுக அட்டைகள் நிச்சயம் இருக்கும். அதற்காக அறிமுகமாகும் அனைவருக்குமே அதைத் தர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அந்தச் சந்திப்பின் மூலம் அவர் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அவராகவே கேட்டுப் பெறுவார். பலரும், சந்தித்த அடுத்த நிமிடமே அந்த அட்டையை எடுத்து நீட்டுவார்கள். அலுவலகரீதியான சந்திப்பு களில் மட்டும் உடனே அறிமுக அட்டையைத் தரலாம். சம்பிரதாய மற்ற அறிமுகங்களிலோ, சந்திப்புகளிலோ விடை பெறும்போது தேவைப்பட்டால் மட்டுமே அறிமுக அட்டையைக் கொடுங்கள்.
பழகத் தெரிந்தாலே பலே வெற்றி உங்களுக்குத்தான்.. டிப்ஸ் – 3
நண்பர் ஒருவருடன் பொது இடத்திலோ அல்லது அவருடைய அலுவலகத்திலோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவருக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர் பேசுவதை வைத்தே என்ன விஷயமென யூகித்து விடுகிறீர்கள். அவர் போனை வைத்ததும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு அந்த உரையாடல் பற்றிய கருத்து முத்துக்களை உதிர்க்க வேண்டாம். இது நம்மைப் பற்றி மிகவும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.நன்றி: நமது நம்பிக்கை
--
*more articles click*
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக