லேபிள்கள்

புதன், 5 மார்ச், 2014

மாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்?

மாற்றுத்திறனாளிகள் பைக் வாங்க என்ன செய்ய வேண்டும்?

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சில சலுகைகளை வழங்கினாலும், அதை அவர்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியாதபடி பல முட்டுக்கட்டைகள் உள்ளன. அதில் முக்கியமானது, மோட்டார் சைக்கிள் வாங்குவது. மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களுக்கு சாலை வரி கிடையாது. ஆனால், அந்த வாகனம் 'அராய்' (Automotive Research Association of India)நிறுவனத்தால் சான்றிதழ் பெற்ற பணிம¬னையில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தச் சலுகையைப் பெற முடியும். 

தமிழகத்தில், மாற்றுத் திறனாளிகளால் பயன்படுத்தப்படும் பெரும்பான்மையான வாகனங்கள், உள்ளூர் வொர்க் ஷாப்பில் மாற்றி அமைக்கப்பட்டவை. அதனால், இந்த வாகனங்களுக்கு வரிச்சலுகை கிடைக்காமல் போவதுடன், ஓட்டுனர் உரிமமும் தருவது இல்லை. அதனால், அந்த வாகனத்துக்கு  இன்ஷூரன்ஸ் எடுப்பதிலும் பல சிக்கல்கள்.

இதற்கு முக்கியக் காரணம், அராய் சான்றிதழ் பெற்ற பணிமனைகள் தமிழகத்தில் மிகச் சில மட்டுமே இருப்பதுதான். அவையும் சில நடைமுறைச் சிக்கல்களினால், சரிவர மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வாகனங்களை உருவாக்கித் தருவதில்லை. இந்தப் பிரச்னைக்குத் தற்போது ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது.

ஆம், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சென்னை டீலரான ராம்கே டிவிஎஸ் நிறுவனம், அராய் சான்றிதழ் பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம் வாங்க என்னென்ன நடைமுறைகள் உள்ளன. அவர்கள் சலுகையைப் பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்று, ராம்கே டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் ஜீ.கே.தினகரிடம் கேட்டோம்.

'முதலில், மாற்றுத் திறனாளிகள் வரிச்சலுகையுடன் வாகனம் வாங்க என்னென்ன சான்றிதழ்கள் வேண்டும் என்பதைச் சொல்கிறேன்.  

மாநில அரசால் வழங்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை முக்கியம். இது இல்லை என்றால், மாற்றுத் திறனாளிகள் வாரியத்தில் விண்ணப்பித்துப் பெற வேண்டும். இரண்டாவது, அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் (Disability  Certificate) சான்றிதழ். இதில் அவர் எத்தனை சதவிகிதம் மாற்றுத் திறனாளி என்பதும் கட்டாயம் பதிவு செய்து இருக்க வேண்டும்.

பொதுவாக, 40 சதவிகிதத்துக்குக் கீழ் இருப்பவர்கள் மாற்றுத் திறனாளிகளின் பிரிவில் வர மாட்டார்கள். அவர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க எந்தச் சலுகையும் கிடைக்காது. மூன்றாவதாக, அதே மருத்துவரால் அவர் இரு சக்கர வாகனம் ஓட்டத் தகுதியானவரா? அவரால் ஒரு வாகனத்தை இயக்க முடியுமா? என்பதையும் சான்றிதழாகப் (Certificate For Ability Driving Motor Vehicle) பெற்று வர வேண்டும். நான்காவதாக, அரசு அவருக்கு ரயில், பஸ் போன்றவற்றில் பயணிக்க சலுகைச் சான்றிதழ் (Concession Certificate) வழங்கி இருந்தால், அதையும் சமர்ப்பிக்கலாம். ஆனால், இது கட்டாயம் இல்லை.

அனைத்துச் சான்றிதழ்களும் தரப்பட்ட பின்புதான் அடுத்தகட்ட வேலை ஆரம்பமாகும். இந்தச் சான்றிதழ்களை எல்லாம் எங்களிடம் சமர்ப்பித்த பின்பு, ஒரு மாதத்துக்குள் அவர்களுக்கான வாகனத்தைத் தயாரித்து வழங்குவோம். அவர்களின் தேவைக்கு ஏற்ப சின்னச் சின்ன மாற்றங்கள் வேண்டும் என்றாலும், அதையும் செய்து கொடுப்போம்.
வாகனத்தை, குறிப்பிட்ட மாற்றுத் திறனாளியின் பெயரில் மட்டுமே பதிவு செய்து தருவோம். இன்ஷூரன்ஸும் அவரது பெயரில்தான் இருக்கும். இதன் பின்பு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று, ஆய்வாளரிடம் ஓட்டிக் காட்டிய பிறகுதான் ஓட்டுனர் உரிமம் பெற முடியும்'' என்றார் தினகர்.


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts