பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள்
நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதி லும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவு டனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கி றது. குறிப்பாக பாதா மில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்ப தால், இது இதயத்தை ஆரோக்கியத் துடன் வைப்பதில் பெரிதும் துணை யாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை. இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
இதய நோய்
பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தா ல், இதயநோய் வருவதைத் தடுக்கலா ம். ஏனெனில் இதில் இதயத்தை பாது காக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ள து. அதுமட்டுமின்றி வாரத்திற்கு 5 நாட் கள் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால், 50% இதயநோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வில் கண்டறி யப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ரால்
பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலி அன்சாச்சு ரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கைய ளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறை த்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.
இரத்த அழுத்தம்
பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட் டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட் டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய்
நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதை த் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமி க்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண் டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.
சீரான இரத்த ஓட்டம்
மக்னீசியம், பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச் சத்து இருப்பதால், இரத்தணுக்களின் அளவு அதிகரிக் கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப் புடன் வேலை செய்ய லாம்.
வலுவான எலும்புகள் மற்றும் பற்கள்
பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், மூட்டு வலியை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.
எடை குறைய
பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்ப தால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறை த்து, அடிக்கடி பசி ஏற்படுவதையு ம் தடுக்கும்.
நீரிழிவு
பாதாமில் குறைந்த அளவில் கிளை சீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அது மட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்குபின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை யின் அளவை குறைத்து, சீராக வைக் க உதவும் என்று நிரூபிக்கப்பட்டு ள்ளது.
பித்தக்கற்கள்
பாதாமை தொடர்ந்து சாப்பிட்டால், 25% பித்தக்கற்கள் உருவாவ து குறைந்துவிடும். ஆனால் ஏற்கனவே சிறுநீரகம் அல்லது பித்தப் பையில் பிரச்சனை உள்ளவர்கள், இந்த நட்ஸை சாப்பிடு வதை தவிர்க்க வேண்டும். இதற்கு இதில் உள்ள ஆக்சலேட் பண்பு கள் தான் காரணம்.
எனர்ஜி
பாதாமில் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் கனிமங்களான மாங்கனீசு, காப்பர் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளது.
ஆரோக்கியமான மூளை
ஆய்வு ஒன்றில், பாதாமில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னி டைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கண்டு பிடிக்கப்பட் டுள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலு ம், தினமும் காலையில் நீரில் ஊற வைத்த 5 பாதாம் சாப்பிட்டு வந்தால், மூளையின் சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்படு கிறது.
இரத்த சோகை
காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந் திருப்பதால், அவை ஹீமோகுளோ பின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.
மலச்சிக்கல்
பாதாமில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், அது செரிமான மண்டலத் தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்து விடும்.
அழகான சருமம்
பாதாமில் நல்ல அளவில் மாய்ஸ்சு ரைசிங் தன்மை இருப்பதால், அது வறட்சி, முப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
முடி பிரச்சனைகள்
முடிகளில் பிரச்சனை உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை தடவி வந்தால், சரிசெய்து விடலாம். அதிலும் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, மெல்லிய முடி போன்ற வற்றை குணமாக்க உதவியாக இருக்கும்.
- thanks to tamilboldsky--
*more articles click*
www.sahabudeen.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக