லேபிள்கள்

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)

பவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களுடைய பெயரில் தாயகத்தில் சொத்துகளை வாங்குவதற்கான வழிமுறை
பெரும்பாலானவர்கள் வேலைக்காக வெளிநாட்டில் வசிக்கின்றனர். இவர்களில் தன்னுடைய பெயரில் வீட்டு மனை அல்லது வீடு வாங்க முயற்சிக்கும் போது வெளிநாட்டில் இருந்து கொண்டே நம்முடைய பெயரில் சொத்துக்களை இந்தியாவில் வாங்க முடியும்.
அதற்கான வழிமுறைதான் இந்த ஜெனரல் பவர் ஆஃப் அட்டார்னி Power of (General Attorney (GPA or GPOA) or Purchase Power.
தேவையான ஆவணங்கள்
பவர் எழுதி கொடுப்பவர் (Principle)
  • புகைப்பட அடையாள சான்று
  • இருப்பிட சான்று
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மட்டும்
  • ரூபாய் 20க்கான முத்திரைதாள்(பத்திரம்)
பவர் ஏஜன்ட் (எழுதி வாங்குபவர்)ன்
  • புகைப்பட அடையாள அட்டை ( Photo Identity proof)
  • இருப்பிட சான்று (Residence Proof)
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மட்டும்
  • இரு அத்தாட்சிகளின் (Two witness)
  • புகைப்பட அடையாள  சான்று (Photo Id proof)
  • இருப்பிட சான்று (Residential proof)
இந்த ஆவணங்களை சொந்த ஊரில்(தமிழ்நாட்டில்) இருக்கும் போதே சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்யலாம்.
செலவு தொகை:
  • ரூபாய் 1100க்கான வரவு காசோலை (டிமாண்ட் டிராப்ட்) உள்ளுரில் மாற்றத்தக்க (லோக்கல் கிலியரன்ஸ்) வாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்கின்றோமோ, அந்த சார்பதிவாளர் அலுவலக‌ பெயரிலே (டிமாண்ட் டிராப்ட்) எடுக்க வேண்டும்.  உதாரணத்திற்கு: Sub Registrar, Tiruchirappalli Joint-III, Trichy
  • ரூபாய் 1100 கட்டணம் தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பவர் கொடுப்பதற்கு மட்டுமே.
  • ரூபாய் 10100 கட்டணம் குடும்ப நபர்கள் இல்லாது நண்பர்கள் அல்லது மாற்று நபர்களுக்கு(Third Party) பவர் கொடுபதற்க்கு பொருந்தும்.
தாக்கல் செய்யும் முறை:
மேற்கண்ட ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கு பத்திரம் எழுதுபவர்களிடம் சென்று ஷரத்துக்களை பத்திரத்தில் டைப் செய்து கொள்ள வேண்டும். (ஆங்கிலம் அல்லது தமிழில் எளிதாக நாமே கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி எழுதலாம்)
அல்லது சிவில் வக்கில்களை கொண்டு பத்திரத்தில் ஷரத்துகளை டைப் செய்து கொள்ளலாம்.
இந்த பவர் ஆஃப் அட்டார்னி எதற்கெல்லாம் உதவும்.
  • சொத்துகளை தனது பெயரில் வேறொருவர் மூலமாக வாங்கலாம்.
  • வெளி நாட்டில் அல்லது வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் போது தன்னுடைய விஜயம்(visit) இல்லாமல் இந்த ஆவணங்கள் மூலம் சொத்துகளை வாங்கலாம் அதை கிரையம் செய்து கொள்ளலாம்.
  • சொத்து வாங்க அக்ரிமண்ட் தனது பெயரில் எற்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஆவணக்களுக்கு காலவாதி ஆகாது.
எழுதி கொடுக்கும் நபர் உயிரோடு இருக்கும் வரை இந்த ஆவணங்கள் செல்லத்தக்கது.
வரன்முறைகள்:
  • இந்த ஆவணத்தின் மூலம் சொத்துக்கல் வாங்க மட்டுமே முடியுமே தவிர சொத்துக்களை விற்க முடியாது
  • சொத்துக்களை விற்பனை செய்ய நினைத்தால் சொத்து விவரங்கள் கண்டிப்பாக பத்திரத்தில் பதிய வேண்டும்.
  • ஆனால் சொத்துக்கள் வாங்கும் போது சொத்து விவரங்களை பதிவு செய்ய அவசியமில்லை.
  • அவ்வாறு சொத்து விவரங்களை வாங்கும் போது பதிய நினைத்தால் அது ஸ்பெஷல் பவர் ஆஃப் அட்டார்னி ஆகிவிடும். அது ஒரே ஒரு சொத்து அல்லது சொத்துக்கல்(பத்திரத்தில் குறிப்பிட்ட சொத்துக்களை மட்டும்) வாங்க மட்டுமே வாங்க செல்லுபடி ஆகும்
இதன் பயன்கள்:
வெளிநாட்டில் இருக்கும் போதே தாயகம் செல்லாமல் முறையாக சொத்துக்களை நம்முடைய பெயரிலே வாங்கிக் கொள்ளலாம். இதனால் அவசர பயணம் தவிர்க்கப்படும்.
இதை தவிர ஷரத்தில் எழுத்தப்பட்ட அத்தனை விவரங்களும் முறைய செயல்படுத்தலாம்.
ஆங்கிலம் மற்றும் தமிழில் ஷரத்த்துகளை பத்திரத்தில் பயன்படுத்தலாம்.
வங்கிகள் மற்றும் வெளிநாடுகளில் இந்த ஆவணங்கள் உதவ ஆங்கிலத்தை ஷரத்தில் உபயோகிப்பது நன்று.
வெளிநாட்டில் இந்த ஆவணங்கள் தாக்கல் செய்ய இந்தியன் கான்சலேட் அல்லது எம்பாசியை அணுகலாம்.
முறை:
ஷரத்துக்களை தாயகத்தில் ஆங்கிலத்தில் வக்கில் அல்லது பத்திரம் எழுதுபவர்கள் மூலம் டைப் செய்து இமெயில் மூலம் பெற்றுக்கொள்ளவும்.
அதனை சாதரன ஏ4 ஷீட்(தாளில்) ப்ரிண்ட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரிஜினல் பாஸ்போர்ட் மற்றும் தங்கள் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டு பவர் ஆஃப் அட்டார்னி கான தொகையை (துபாயில் 115 திர்ஹம்கள்) செலுத்தி த்தூதரக அதிகாரிகள் முன்பு ஆவணங்களில் கையோப்பம் இடல் வேண்டும்.
தூதரக அதிகாரி முத்திரை மற்றும் அவரது கையோப்பம் பெற்றதும்.
அதனை அப்படிய இந்தியாவுக்கு தபால் அல்லது கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து இந்த ஆவணம் வந்ததற்காக அந்த தபால் கவரை அல்லது கூரியர் கவருடன்….
பவர் ஆஃப் அட்டார்னி எழுதி வாங்கிய நபர் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் தாக்கல் செய்ய அதற்கான கட்டணங்களுடன் (ரூபாய் 1100 அல்லது ரூபாய் 10100 கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து கொடுத்தால்.
இதனை 90 நாட்களுக்குள் சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிய வேண்டும். (சட்டம்  என்ன சொல்கிறது என்றால் இப்படி எழுதப்பட்ட ஆவணம் இந்தியாவிற்கு வந்த 90 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். எனவே அங்கிருந்து வந்த தபால் கவர் மிகவும் முக்கியம்!)
அதனை சப் ரிஜிஸ்டர் ஆபிஸில் அட்ஜுடிகேஷன்(adjudication) அல்லது பதிவு செய்து கொள்வார்கள்.
ஒரிஜினல் பத்திரத்தை 7 நாள் அல்லது 10 நாளில் சப்ரிஜிஸ்டர் ஆபிஸில் பெற்றுக்கொள்ளலாம்.
தகவல்:s.முஹம்மதுரபிக் துபை


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

தலைவலி,வயிற்று வலி எனஅடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளைசாப்பிடுவது சிறுநீரகத்தை பாதிக்குமா?

பீன்ஸ் போன்ற வடிவில் நம் உடலில் இருக்கும் சிறுநீரங்கள் , ரத்தத்தில் கலந்திருக்கும் அசுத்தங்கள...

Popular Posts